Wednesday, February 23, 2005

நலம்தானா??

எல்லாரும் நல்லா இருக்கீங்களா??
கொஞ்ச நாளாவே இணையபக்கம் வர முடியாம போச்சுதுங்க.
தேவையில்லாம ஒரு பஞ்சாயத்துக்கு மத்தியஸ்த்தம் செய்ய போயி, கடைசியில 'இருக்கிறதெல்லம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வை'ங்கிற கதையா, பிரச்சனைய தீர்க்க போனவன்கிட்டயே பிரச்சனைய செஞ்சுட்டாங்க, நாமளும் சாதரண ஆளு கிடையாது பாருங்க, 'நாங்கெல்லாம் பிரச்சனைய போர்வையா போத்திட்டு படுக்கிறவங்க'டான்னு வீராப்பு பேசி.. சரி அதை விடுங்க, எதுக்கு பழைய கதை, இப்போ 20 நாளா ஊரவிட்டு ஒதுங்கி தலைமறைவா இருந்துட்டு,.. மறுபடியும் வந்திருக்கனுங்க.
இங்க அதுக்குள்ள என்னென்னவோ ஆகிப்போயிருக்குதுங்க, புதுசா நம்ம தமிழ்மணத்துல 'நட்சத்திரம்' எல்லாம் குடுக்கிறாங்க, நாமளும் ஒன்னு மாட்டிக்குவோம்னு நினைச்சேன், ஆனா, "நமக்கு எதுக்கு, அதெல்லாம் 'இலக்கியம்' படைக்கிறவங்களுக்கு, நம்ம சும்ம சொந்த கதை எழுதற ஆளுக்கு அது வேண்டாம்"னு விட்டுடனுங்க,.. இன்னும் நிறையா என்னன்ன்வே நடந்திருச்சு.. நம்ம வலைபக்கமா 'ரதி', 'PVS', 'கங்ஸ'ன்னு புதுபுதுசா ஆளுக வந்திருக்காங்க, ம்ம்... நம்ம ஒதுங்கி உக்காந்திருக்கம்ங்கிறதுக்காக, உலகம் நின்னு போயிருமா என்னங்க, அது அது பாட்டுக்கு ஒடிட்டு தான இருக்கும்..
சரி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு அப்புறமா வர்றனுங்க, அது வரைக்கும் நிம்மதியா இருங்க..

Wednesday, February 9, 2005



Monday, January 24, 2005

ஒரு விளம்பரம்.. பாதி சினிமா..

வழக்கமா எங்கய்யன் டீ.வி பார்க்கிற நேரத்துல நான் ஹால் பக்கமேபோறதில்லீங்க, போனா, அவர் எதும் நக்கலா சொல்லுவாருங்க, நாம எதாவது வம்பா பேசுவோம், எதுக்கு வெட்டியா பிரச்சனைனு நான் ஒதுங்கிடறது.
நேத்து starplusல'காக்கி' போட்டாங்களா சரி பார்க்கலாம்னு உக்காந்தேன், எத்தேசையா அந்த ப்க்கம் வந்தவரு அமிதாப்பு படமான்னு கேட்டுட்டு அவ்ரும் கூடவே உக்காந்தாருங்க, அப்பவே மனசுக்குள்ள தோனுச்சுங்க, இனி படம் பார்க்க முடியாது எந்திரிச்சு போயிருவோம்னு, இருந்தாலும் அமிதாப்புக்காக (சரி, சரி... ஐஸ்வர்யாக்காவும் தான்) ரிஸ்க் எடுக்கலாம்னு உக்காந்தனுங்க.
படமெல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது, ஆனா நடுவால போட்ட அந்த விளம்பிரத்துல தானுங்க வந்தது வினை..

அப்படி என்ன விளம்பரம்ங்கரீங்களா??

அதாங்க இந்த UTI Mutual fundக்காரங்களோட புது விளம்பரம்.
பாத்திருக்கீங்களா??
அப்படி என்னடா இருக்குது அந்த விளம்பரத்துலங்கரீங்களா?? பெருசா ஒன்னுமில்லீன்ங்க.. இதுதானுங்க விளம்பரம்.

------------------------

ஒரு சர்தார் வீட்டு பையனுக்கு பிறந்த நாள்..


அப்பா அவனுக்கு வாழ்த்து சொல்லி, அவனுக்கு ஒரு புது போலீஸ் டிரஸ் குடுக்கிறாருங்க..


குஷியான பையன் புதுத்துணி மாத்திக்க ரூமுக்குள்ள போறானுங்க.. வெளிய அவனோட அப்பா அப்படியே சேர்ல சாஞ்சுகிட்டு, பையன் வளர்ந்து பெரியவன் ஆகி பெரிய போலீஸ் ஆபிசர் ஆகப்போறாங்கிற கனவோட அப்படியே பூரிச்சு போய் உக்காந்திருக்காருங்க..



துணிமாத்திக்க போன பையன் வெளிய வரும்போது..
அவனுக்கு அவுங்கப்பா குடுத்த போலீஸ் டிரெஸ்ச, கொஞ்சம் மாத்தி, கொள்ளைக்காரன் மாதிரி போட்டுகிட்டு, "இனிமேல் நான் தான் ஃகப்பர் (ஷோலே!) "ன்னு சொல்லிட்டு துப்பாக்கிய தலைக்கு மேல சுத்திட்டு ஓட..


கொஞ்சம் பெருமிதத்தோட அப்படியே சிரிச்சுகிட்டு சாஞ்சு உக்காந்திருந்த அந்தப்பையனோட அப்பா அப்படியே ஷாக்காகி, அப்படியே பேயடிச்ச மாதிரி முழிக்கிறப்ப்போ, அப்படியே பின்னாடி UTI Mutual fund'ஓட children career plan பத்தி ஒரு குரல் வரும்..

--------------

விளம்பரம் முடிஞ்சதும் எங்கய்யன் அப்படியே நம்ம பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க, அதுல ஆயிரம் அர்த்தம்..ஆயிரம் நக்கல்..
நான், எதுக்கு வம்புன்னு அப்படியே பாதிப்படத்துல டக்குன்னு எஸ்கேப் ஆகி ஓடிப்போய் படுக்கைய போட்டுட்டேன்.. 'காக்கி' போனா போகுது இன்னொரு நாள் எப்படியும் போடுவான் அப்ப பார்த்துக்கலாம்...

Saturday, January 22, 2005

இன்றைய பாடம்..

ஒல்லும் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்


என்னடா திடீர்ன்னு திருக்குறள் எல்லாம் போட்டிருக்கான், எதும் கலங்கிருச்சான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் இல்லீங்க, தினந்தினம் நம்ம வாழ்க்கையில புதுசு புதுசா எதாவது ஒரு விஷயம் கத்துகிட்டேதாங்க இருக்கோம், அந்த வரிசையில இன்னைக்கு நான் கத்துகிட்ட விஷயத்துக்கு ஏத்த மாதிரி ஒரு குறள் போட்டிருக்கேன் அவ்வளவுதான்..
சரி, இங்க எதுக்கு அதை போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா?? அடுத்தவங்க அனுபவத்துலிருந்து தன்னை திருத்திக்கிறவன் புத்திசாலிம்பாங்க,..
அப்ப நீங்க??

Friday, January 21, 2005

திருப்பாச்சி

சமீப காலத்துல நான் பார்த்த படங்கள்லயே அற்புதமான ஒரு படைப்புன்னா அது சூப்பர் குட் பிலிம்ஸின் திருப்பாச்சி தானுங்க, என்ன படம், என்ன கதை, பின்னீட்டாங்க, எல்லாரும் சும்மா சொல்லுவாங்க, ஒவ்வொரு படத்துக்கும் 'இது ஒரு வித்தியாசமான' படம்ன்னு, ஆனா நிஜம்மாலுமே சொல்றனுங்க, இந்த படம் ரொம்ப வித்தியாசமான் படம்ங்க.

ஊருல கொல்லம்பட்டரை வச்சிருக்கிற ஒருத்தன் (அதுதான் நம்ம விஜய் - சிவகிரி) பட்டணத்துக்கு தங்கச்சிய கட்டிகுடுத்துட்டு (சென்னை), அப்புறம் அங்க நடக்கிற ரவுடியிசம் பொறுக்க முடியாம தவிச்சு, நடுவால தன்னோட சினேகிதன் ஒருத்தன் அந்த ரவுடியிசத்துக்கு பலிகுடுத்து, .... அப்புறம் பொங்கியெழுந்து, தன் தங்கச்சி வயித்துல வளர 'அந்த சிசு மேல' சபதம் எடுத்து, அந்த குழந்தை பொறக்கறதுக்குள்ளார அந்த ஊருல இருக்கிற எல்லா ரவுடியயும் கொன்னு தன்னோட தங்கச்சி குழந்தைக்கு ஒரு அமைதியான சமுதாயத்த ஏற்படுத்தி குடுக்கறாரு.. எவ்ளோ வித்தியாசமான படம்...

நான் வழக்கமாவே ஒரு படம் பார்த்து, நல்லாயிருந்தா மறுபடியும் படத்து போலாம்னு கிளம்பினா அதே படத்துக்கு போயிருவேன், தேவையில்லாம இந்த மாதிரி ரிலீஸ் படத்துக்கு, அதுவும் ஏற்க்கனவே 'மதுர'ன்னு ஒரு சூப்பர் ஹிட் படம் பார்த்த அனுபவத்துல, இந்த படத்துக்கு போகும் போது கடைசி வரைக்கும், 'டேய் வேணாம்டா, மருபடியும் ஒருதடவை காதல் வேணுமின்னா பார்க்கலாம், இந்த பொங்கல் ரிலிஸ் திருப்பச்சி, ஐயா எதுவும் வேண்டாம்டா"ன்னு கடைசி வரைக்கும் போராடுன்னங்க, அதையும் மீறி "வாடா! காமெடியா இருக்கும் நம்மாளு எதாவது மெசேஜ் சொல்லூவான், கேட்டுட்டு வரலாம்னு"கூட்டிடு போயிட்டானுக.. எல்லாம் என் விதி...

அப்புறம் என்ன வித்தியாசம்ங்கரீங்களா?? சொல்றேன், படத்துல 'பான்ப்ராக்' ரவின்னு ஒரு வில்லன்,இது வித்தியாசம் நம்.1, அவன் கொலஒ செய்யிற ஸ்டயில் இருக்குதே அதுதான் ஹைலைட்டு, நம்ம் வூட்ட்ல கரப்பான் பூச்சி கொல்றதுக்கு வச்சிருப்பமே HIT அதை எதிராளியோட வாயுல அடிச்சே கொல்லுறாம் பாருங்க அது தான் வித்தியாசம் நம்.2..
இதுக்கு மேல இந்த படத்த பத்தி எழுத முடியலைங்க, எனக்கு அதை நினைச்சாலே, ..ம்ம்.. முடியலைங்க, பட்ட கால்லயே படும்பாங்க, எனக்கென்னவோ இந்த தை பிறந்த்தலிருந்தே இப்படியே நடக்குது..

சன் டீ.வி ஸ்டையில்ல சொன்னா : திருப்பாச்சி.. வெறுப்பாச்சி