Tuesday, February 28, 2006

20,000








இப்படிஏத்தி விட்டு, எத்தி விட்டுதாங்க.. இப்படி ரணகளமா இருக்கு..

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..!! அய்யோ.. அய்யோ..!!




---
#148

இப்படி செஞ்சுட்டாங்களே!



ஐஸ்க்ரீம், கலர்சோடா, டால்டா, செருப்பு, காயிதம், காஸ்ஸ்டவ், பீவிசி பைப், கேன்சர் மருந்து.. இத்தனை சாமானத்துக்கு வரியெல்லாம் குறைச்சு, விலைய குறைச்சுட்டு..


கடைசியில சிகரெட் விலைய ஏத்திபுட்டாங்களாமே!!

----
#147

Friday, February 24, 2006

உறங்கு..!


















நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா.. உறங்கு..!



----
#146

Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

நம்மள புடிச்சு ஒரு சங்கிலிதொடர் பதிவுல இழுத்து விட்டுட்டாங்க நினைவுகள் அருணான்னு ஒரு அம்மணி, நான் இதுவரைக்கும் இவுங்க பதிவு பக்கமே போனதில்லைங்க, இப்படி ஒருத்தர் நம்ம பதிவை படிக்கறாங்கன்னும் தெரியாது.. நம்மூருக்காராங்க போல, அதுனால ஒரு பாசத்துல நம்ம்ள இதுல இழுத்து விட்டிருக்காங்க.. நானும் சரி பதிவு போட ஒரு சாமாச்சாரம் கிடைச்சுதுன்னு, அவிய குடுத்த சங்கிலியா கெட்டியா புடிச்சுகிட்டு நம்ம பங்குக்கு எழுதிட்டேன்

tag-க்கு சங்கிலிதொடர் பதிவு'ன்னா சரிதானுங்களே.. தப்புன்னா சொல்லுங்க திருத்திடுவோம்.


Four jobs I have had:
தண்ணி கட்டுறது (தோப்பில்)
மேற்ப்பார்வை (அடுத்தவங்க வேலைய)
ஓட்டுனர் (எங்கய்யனுக்கு மட்டும்)
ஆலோசகர் (நிறைய வெட்டி பசங்களுக்கு)


Four movies I would watch over and over again:
ஆயிரத்தில் ஒருவன்
இன்று போய் நாளை வா
நாயகன்
சதிலீலாவதி
(என்னவொரு டேஸ்ட்(!) ராசா உனக்கு)

Four places I have lived (for years):
பொள்ளாச்சி
தோக்கவாடி
சென்னை
(நாலாவதா.. அட்டகட்டி மலையில போய் கொஞ்ச நாள் உக்காரலாமான்னு ஒரு யோசனை இருக்குதுங்க)

Four TV shows I love to watch:

அனைத்து டீ.வி. விளம்பரங்கள்
விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
ஜெயா டீ.வி காமெடி பஜார்
போகோ.. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்


Four places I have been on vacation:
வேம்பநாடு
அவலான்ஞ்
கபினி
முட்டம்

Four of my favourite foods:
நோ.. இதுக்கு மட்டும் நான் பாகுபாடு காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் ரெண்டு சாப்புடற ஆளுக. எது கிடைச்சாலும் ஒரு புடிபுடிப்போம்.


Four places I'd rather be now:
இன்சூரன்ஸ் கட்ட போயிருக்கலாம்
டீக்கடைக்கு போயிருக்கலாம்
கேரம் ஆட போயிருக்கலாம்
இல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்


Four sites I visit daily
சைட்-- நானா.. ச்சே..சே. ..ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
தமிழ்மணம்
ஜிமெயில்
கூகிள்
யாஹூ


Four bloggers I am tagging*:
ஞான்ஸ்
இளா
அனுசுயா
டி.ராஜ்




---
#145

Thursday, February 16, 2006

# 70


என்னைக்கும் இல்லாத திருவிழாவா அய்யனும் புள்ளையும் ஒட்டுக்கா கோயலுக்கு வந்திருக்குறீங்க?'ன்னு எங்களை மாசானியம்மன் கோயில்ல பார்த்துட்டு ஆச்சிரியமா கேட்டாரு உடையகுளத்து பெரியப்பா, எங்கய்யனுக்கு காலேஜ்மேட், 70கள்ல வக்கீலுக்கு படிச்சுபுட்டு முழுநேர விவசாயி ஆனவரு, படிச்சது வீனா போககூடாதுன்னு அப்பப்போ கொஞ்சம் உள்ளூர் அரசியல்ல வேற கலந்துக்குவாரு. பையன் புள்ளை ரெண்டும் அமேரிக்காவுல, புள்ளைய கட்டிகுடுத்த ரெண்டா மாசமே மாப்பிளைக்கு அமேரிக்காவுல வேலை அமைஞ்சிருச்சு, எல்லாம் நம்ம புள்ளை போன ராசின்னு பயங்கிற பெருமைவேற.
நம்மள பார்க்கும் போதெல்லாம், லேட்டஸ்ட் சினிமா பத்தி பேசுவாரு, நானும் ஆர்வக்கோளாறா அங்க இங்க படிச்சத எடுத்துவிடுவேன், அவரென்னமோ ரொம்ப விவரமான பையன்னு தான் நினைக்கிறாரு, ஆனா எங்கய்யன் தான் சினிமா, பாட்டு பத்தி பேசினா பேசிட்டே இருப்பான்'னு ஒரு கடுப்பு பார்வை பார்ப்பாரு. ... ஸ்டாப்.. இப்ப நான் எழுத வந்தது அவரை பத்தியோ இல்லை என்னோட சினிமா அறிவை(!) பத்தியோ இல்லீங்க.. இது வேற சமாச்சாரம். ஒரு வேலையா வேட்டைகாரன்புதூர் வரைக்கும் போகவேண்டியிருந்துங்க. நான், எங்கய்யன், எங்கம்மா'ன்னு குடும்பமே கிளம்பிபோயிட்டு வந்துட்டிருந்தோம், வர்ற வழியில புது வண்டி எடுத்ததுல இருந்த இன்னும் கோயிலுக்கே போகலைன்னு எங்கம்மாவோட ஆசைக்காக அப்படியே ஆனமலை மாசானியம்மன் கோயிலுக்குள்ளார விட்டோம், இல்லாட்டி நம்ம என்னைக்கு கோயலுக்கு போனோம், அதுவும் அய்யன் அம்மா கூட, எதாவது விசேஷ நாளன்னைக்கு மட்டும் நம்ம சகா'க்க கூட கோயலுக்கு போயி வேடிக்கை பார்க்கிறதோட சரி. வேடிக்கை பார்க்கிறதுன்னு தப்பான அர்த்தம் அடுத்துக்காதீங்க.. நான் ஒழுங்கான அர்தத்துல தான் சொன்னேன்.. ;-).

(pic:http://www.quin-art.co.za)

அப்படி கோயலுக்கு போனப்ப தான், எங்களை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டாரு உடையகுளத்து பெரியப்பா, அவர் ஊர் பெரிய மனுஷனாச்சுங்க்ளா, அடிக்கடி கோயில், தாலுக்காபீஸ்ன்னு எங்காவது சுத்திகிட்டே இருப்பாரு. நான் அப்படியே சிரிச்சுகிட்டே 'சும்மா அப்படியே'ன்னு ஒரு மாதிரி இழுத்தேன், சடார்ன்னு எங்கய்யன் 'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல, அதான் அப்படியே கோயலுக்கு 'ன்னாரு.
நானா புதுசா வண்டியா?.. ஓ.. என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுத்தத இப்படி சொல்றாறா'ன்னு அப்படியே திரும்பி எங்கய்யன் முகத்த பார்த்தேன்.. எங்கய்யன் முகத்துல அப்படி ஒரு பளீர் வெளிச்சம்.
27 வருஷமா ராஜா மாதிரி என்னை வளத்தி, ஸ்கூலுக்கு போகவே RX100 வாங்கி குடுத்து, கப்பல் மாதிரி வண்டியோட்டிட்டு ஊருகுள்ள போற ஆளு, ஒரு சில்வண்டு வண்டிக்கு, அதுவும் அவரா வாங்க முடிவு செஞ்ச வண்டிக்கு என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுதுதுட்டு, எல்லாம் அவரே குடுத்தது.. இப்போ.. "'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல"வா. பெரியப்பா தோள்ல கைய போட்டுகிட்டு என்னமோ சொன்னாரு, எனக்கென்னவோ உச்சி பூசை சத்ததுல ஒன்னுமே காதுல விழுகலைங்க.

அப்புறம் கோவில்ல இருந்து திரும்பும் போது டர்னிங்க்ல வேகமா திருப்பினேன்னு ஒரு சண்டை.. நமக்கு தினம் ஒரு தடவையாவது அவருகிட்ட வாயை குடுத்து மல்லுக்கு நிக்காட்டி தூக்கம் வர மாட்டேங்குதுங்க.


(தலைப்பு எதுக்குடா 70'ன்னு போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா.. அடபோங்க.. நம்மளே சொன்னா, நல்லாவா இருக்கும்)

---
#144