# மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே.!
# மல மல மல மருதமல...!
# சிரிச்சி சிறுக்கி வரா சீனாதானா டோய்.!
என்னடா திடீர்ன்னு விவகாரமான பாட்டுகளா வரிசை படுத்தறான்னு பாக்கரீங்களா.. இந்த பாட்டெல்லாம் விவகாரமானதா இல்லையாங்கிறது தாங்க இப்ப விவகாரமே..
பொதுவா இந்த பாட்டுகளை பத்தியெல்லாம் படிக்கிற போது, இல்ல, அதை பத்தின விவாதங்கள படிக்கிறப்பவெல்லாம், இதெல்லாம் அசிங்கமான பாட்டுக, 'பெண்களை / பெண்மைய கேவலப்படுத்துமும்' பாட்டுக அப்படின்னு நிறையா எதிர்ப்புகளும், இந்த பாட்டுக எல்லாம் கேவலமான சிந்தனைக்காரங்க எழுதினது, அப்படின்னெல்லாம் சொல்றாங்க. நானும் அதெல்லாம் ஒரளவுக்கு சரின்னு தாங்க நினைச்சுட்டு இருந்தன், இப்ப அதுல எனக்கு ஒரு சின்ன குழப்பமகாகிடுச்சுங்க. நமக்கு எப்பவும் வர்ற மாதிரித்தான்.. இந்த தடவையும் 'ஒன்னுமே புரியல உலகத்தில'ன்னு புலம்பிகிட்டு இருக்கனுங்க..
அப்படி என்ன குழப்பம்ங்கரீங்களா??.. சொல்றேன்..
மேல சொன்னா எல்லாப்பாட்டுகளும் இன்னைக்கு வரைக்கும் டி.வி, ரேடியோவில போடுற எல்லா 'போன் - இன்' ப்ரொகிராம்களோட ஃபேவரிட் பாட்டுகங்க, அதுல ஒண்னு கவனிச்சீங்கன்னா, இந்த பாட்டை எல்லாம் விரும்பி கேக்கிறவங்க எல்லாரும் பொம்பிளைக தான்ங்க, அதுவும் சின்ன வயசு புள்ளைக எல்லாம் இல்லீங்க, எல்லாமே, அம்மாமாருக தான் கேக்கிறாங்க.., நிறைய நேரம் அம்மாவும் பொண்ணுமா கூட கேக்கிறாங்க, வசூல்ராஜா' பாட்டுகூட ஒன்னுரெண்டுதடவை யாரவது பசங்க கேக்கிறாங்க, ஆனா மத்த ரெண்டு பாட்டுகளையும் இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சு ஒரு ஆம்பிளை கூட கேட்டதில்லீங்க. சனிக்கிழமை ராத்திரி இந்த மூணு பாட்டுகளையும் சன்ம்யூசிக்'ல ஒரே நிகழ்ச்சியில மூணு அம்மாக்கள் கேட்டாங்க. (அந்த நிகழ்ச்சியில இப்ப 'ஹேமாசின்ஹா' வர்றாங்க், ம்..ம்.. ஆயிரம் இருந்தாலும் 'அம்மு' மாதிரி வராதுங்க.. சரி அதை பத்தி தனியா பேசுவோம்)
இங்க நம்ம இணையத்துல, பத்திரிக்கையில, எல்லா மீடியாவுலயும் இது பெண்களுக்கு எதிரான விஷயம்னு சொல்லிகிட்டு இருக்காங்க, ஆனா, சராசரி பெண்கள் அப்படி நினைக்கலியோ??
சரி, நல்லது, கெட்டதுங்கிற வரைமுறை ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுமில்லீங்களா.. அப்படியே வச்சுக்கிட்டாலும், எனக்கு இந்த விசயம் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்குதுங்க..
('போன் - இன்'ல கேக்கிறாங்க, ஆனா 'நீங்கள் கேட்ட பாடல்' மாதிரி நேரடியா கேமிரா முன்னாடி யாரும் கேக்கரதில்லைன்னு நினைக்கிறனுங்க)
ச்சே!! அக்கா தங்கச்சியெல்லாம் இல்லாம் தனியா பிறந்து வளர்ந்தா இப்படித்தான்.. இப்பத்தான் கஷ்டம் புரியுது.. (நாளைக்கு ஒருத்தி வர்றதுக்குள்ளயாவது கொஞ்சம் தெளிவுக்கு வரனும்..:-D)
1 comment:
ஒருவேளை பெண்கள் கேட்பதை மட்டுமே தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புகின்றனரோ? ஆண்களின் விருப்பங்கள் அமுக்கப் படுகிறதோ?
ஒன்னுமே புரியல உலகத்திலே.... :-)
Post a Comment