Wednesday, May 31, 2006

ச்சின்ன சந்தேகம்

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சகலகலா வல்லவ வலைப்பதிவு சமூகத்துக்கு என் பணிவான வணக்கங்கள்..!

என்னடா இது என்னைக்கும் இல்லாத திருவிழாவா இவன் இன்னைக்கு ரொம்ப மரியாதையா ஆரம்பிக்குறானேன்னு பார்க்கரீங்களா.. உண்மையத்தான சொல்றேன். இருந்தாலும் நீங்க இப்படி விஷயமில்லாம இவன் இப்படி எல்லாம் பேசமாட்டானேன்னு தப்பாவே எடுத்துக்ககூடாது.
ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன். நீங்களும் மதிச்சு பதில் சொல்லனுமே அதுக்கு தான் அந்த முதல் வரி.. :)

இப்ப சந்தேகத்துக்கு வருவோம்.. பெருசா ரொம்ப குழப்பமான சந்தேகம் எல்லாம் இல்லீங்க.. ரொம்ப சிம்பிள் தான்.. (ஆனா எனக்கு தெரியலை!)

இந்த லாவன்யா ஐஸ்க்ரீம், 'லாவன்யா' ஐஸ்க்ரீம்'ங்கிறாங்களே அப்படின்னா என்னங்க?

இது தெரியாதான்னுட்டாங்க.. நமக்கு இந்த சமாச்சாரம் எல்லாம் அவ்ளவா பரிச்சயம் இல்லையா.. யூ ஆல் நோ, மீ குட் பாய், சரி.. சரி.. கோவிச்சுகாதீங்க..
ம்ம்.. தெரியலைன்னு சொல்லுறது ஒரு வகைக்கு வசதிதான்னாலும்.. சொல்லி தெரியறதுக்கு முன்னாடி நாமளா தெரிஞ்சுவச்சுகிட்டா நல்லதுன்னு தான் கேக்குறேன்.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லி கொஞ்சம் உதவி பண்ணங்கப்பு, புண்ணியமா போகும். :)


---
#179

Tuesday, May 30, 2006

சிணுங்கல் - நினைவுகள்

அது ஒரு அஞ்சு வருஷம் ஆச்சுங்க. அப்ப நான் சென்னைபட்டணத்துல கையில மூணு அட்டைய வச்சுகிட்டு, எப்பவேணா எப்படிவேணான்னு ரவுண்ட் கட்டி ஆடிட்டு இருந்த காலம். (படிச்ச பையன், புதுசா சம்பாரிக்கிறான் இருக்கட்டும்னு அப்போ விட்டு வச்சிருந்திருக்காங்க.. இப்பத்தான் தெரியுது அது) பட்டணத்துல அவன் அவன் கலர் கலரா, பல சைஸ்ல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்திய கையில புடிச்சுகிட்டு அவ சிணுங்கலுக்கு பதில் சொல்லிட்டே கெத்தா நடந்துட்டிருந்தாங்க. நமக்கும் ஆசை.. தேவையான்னு கூட கேட்டாங்க, கூட இருந்த சகா'எல்லாம். 'ஆசை தான் துன்பத்துக்கு வாசப்படி'ன்னு புத்த தத்துவம் எல்லாம் கூட சொல்லிபாத்தானுக, நாம யாரு, என்னைக்கு அதெல்லாம் காதுல போட்டிருக்கோம், அடப்போங்கடா, நடு ராத்திரியில கட்டுன பொஞ்சாதி, குழந்தை, நம்பி இருக்கிற நாடு, மக்கள், அத்தனையும் விட்டுட்டு போனத விட ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லைன்னு மப்பா சொல்லிட்டு, என் ஆசைய நிறைவேத்திக்க போயிட்டேன்.

அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி, இப்ப மாதிரி இல்லீங்க.. இப்பவெல்லாம் சும்மா ஸ்கூல் போற பையன் கூட தனக்கு புடிச்ச மாதிரி ஒண்னை செலக்ட் பண்ணி கூச்சப்படாம இடுப்புல கோர்த்துகிட்டு போறாங்க.. அப்போ எல்லாம் நல்ல 'ஐட்டமா' வேனும்னா நாலு இடம் சுத்தனும், நாப்பது ஐட்டத்தை பார்க்கனும், நம்ம பர்ஸ் தாங்குமான்னு வேற யோசிக்கனும். அப்படி அத்தனையும் முறையா செஞ்சு, ஸ்பென்ஸர்ஸ்ல ஒரு மூலையில, தலைக்கு கலர் அடிச்ச ஒரு வடநாட்டுகாரன் கிட்ட ஒரு மணி நேரம் ரேட் பேசி, எனக்கு புடிச்ச மாதிரி ஒரு ஐட்டத்தை கூட கூட்டிட்டு வந்தேன். அப்போ நாம வாங்கின சம்பளத்துக்கு அது கிட்டத்தட்ட ஒரு மாச சம்பளம். ஆனாலும் என்ன செய்ய வயசு அப்படி, மனசு ஆசைபட்டுட்டா எப்படியும் செஞ்சுடனும்னு ஒரு வெறி.
நேரா நம்ம சேவல்பண்னைக்கு போனா, அவ்ளோ நேரம் எனக்கு தேவையா ஆசையான்னு வகுப்பு எடுத்தவனுக, என்னைய ஒரு மூலையில அம்போன்னு விட்டுட்டு ஆளாளுக்கு ஷிப்ட் போட்டு வெளையாடிட்டானுக.. பாவம் அவனுக என்ன செய்வாங்க.. சும்மாவாச்சுக்கும் தேவையான்னு தத்துவம் பேசுனாலும், ஆசை எல்லாருக்கு இருக்கிறது தான. அதுவும் புதுசா ஃப்ரஷ்சா கண்ணு முன்னாடி பார்த்தா?? எல்லாப்பயலும் பார்த்து ஓய்ஞ்ச பின்னாடி, அப்புறம் தான் நான் தொட்டேன். ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை. ஒவ்வொரு பாகமுமா ஒவ்வொரு வளைவா தொட்டு தடவி ஒரு பூவை ரசிக்கிற மாதிரி ரசிச்சேன். அந்த சினுங்கல கேக்க கேக்க மனசுல என்னமோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.

அப்புறம் இடுப்போட சேர்த்து கோர்த்துகிட்டு ஊரெல்லாம் சுத்தினது ஒரு பெரிய கதை. ம்ம்.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, நமக்கு ஆசை/தேவைன்னு பாடம் எடுத்தவனுக எல்லாம் நம்மள விட கொஞ்சம் பெரிய ரேஞ்சு பார்டிகள கூட்டிகிட்டு திரிய ஆரம்பிச்சானுக. போக போக அது ஒரு ஸ்டேடஸ் சிம்பளாகிபோச்சு இங்க. அவனவன் கையில காசு வாயுல தோசைன்னு தினம் தினம் ஒரு தினுசு, ஒரு கலருன்னு சுத்திட்டு இருந்தானுக. ஆனா பாருங்க எனக்கு என்னமோ முதல் தடவையா நாம தொட்டது, அதை விட கூடாதுன்னு ஒரு பெரிய கொள்கை ஆயிபோச்சுங்க.. எனக்கு மட்டுமில்லைங்க, அவளுக்கும் நான் தான் முதல் கஸ்டமர். (இந்த வார்த்தையே புடிக்கலை தான்.. இருந்தாலும் சொல்றேன்) அன்னையில இருந்து அவள பிரியாத நேரமே கிடையாதுன்னு ஆகிபோச்சு. எங்க போனாலும் சரி, எப்ப போனாலும் சரி, ராத்திரி பகல்ன்னு இல்லாம எல்லா நேரமும் என் கூடவே இருக்க வச்சு அழகு பார்த்துட்டிருந்தங்க. குளிக்க போனாக்கூட கூடவே வெக்கமில்லாம கூட்டிகிட்டு போய் உக்காரவச்சுகிட்டு தான் குளிப்பேன்.

'ஊர் உலகத்தை பாருடா, இன்னும் இதையே ஏன்டா கட்டிகிட்டு அழுவற'ன்னு எத்தனயோ பேர் சொன்னப்ப கூட, எனக்கு அவளை விட மனசே இல்லீங்க.. எத்தனையே விதவிதமா பல தினுசுல பல கலர்ல பல பேரு நமக்கு ஆசைகாட்டுனப்பவும், நமக்கும் கட்டுபடி ஆகும்ங்கிற நிலமை இருந்த போதும், எனக்கென்னமோ மனசே இல்லீங்க.. 'டேய் பொண்டாட்டிய தான்டா மாத்த கூடாது, இதெல்லாம் மாத்தலாம்'ன்னு நம்ம செந்தான் கூட திட்டுனான். எங்க போனாலும் இதையே கட்டிகிட்டு சுத்துற உனக்கு நல்லாவா இருக்குன்னாங்க.. ம்ஹும்.. நான் எதுக்கு மசியலையே.. யாரு என்ன சொன்னாலும் சரி, எனக்கு இவதான்னு பிடிவாதமா இருந்தேன். இத்தனை நாள் கூட வச்சுகிட்டு இன்னைக்கு வேற ஒன்னு அழகா இருக்குதுங்கிறதுக்காக, வேற ஒருத்தன் கிட்ட குடுக்க மனசுவரலை..

ஆனா பாருங்க.. காலம்னு ஒண்ணு இருக்கு, அது எல்லாத்தையும் மாத்திடுது. நாம விரும்புனாலும் சரி விரும்பாட்டியும் சரி, சில விஷயங்கள் தவிர்க்கவே முடியறதில்லை.. போன வாரம் ஒரு நாள் வழக்கம் போல நம்ம Rxல இன்னர் ரிங்ரோட்டுல விரட்டிகிட்டு இருந்தேன், திடீர்ர்னு இடுப்புல கிச்சுகிச்சு மூட்டின மாதிரி இருந்துச்சு, கவனிச்சா, நம்ம ஆளு தான், எதோ சினுங்கறா.. சரின்னு வண்டிய ஒரு கையால ஓட்டிகிட்டே பேசி சமாதனபடுத்தினேன். அதுவரைக்கு எல்லாம் நல்லாத்தாங்க நடந்ததுது.. அதுக்கப்புறம் தான் விதி விளயாடிருச்சு, நான் பேசி சமாதனபடுத்தின கையோட கொஞ்சம் சரியா கவனிக்காம விட்டுட்டேன், வண்டி ஒரு குழியில இறங்கிருச்சு, உங்களுக்கு தான் தெரியுமே இங்க இருக்கிற ரோட்டை பத்தி, குழியும் குண்டுமா.. குழியில விட்டாலும் நான் சுதாரிச்சிகிட்டேன், ஆனா என்னைய நம்பி வேற எந்த பிடிமானமும் இல்லாம என் இடுப்பை தொட்டுகிட்ட இருந்த அவ அப்படியே ரோட்டுல விழுந்துட்டா.. நான் போன வேகமும், குழியில விட்ட அதிர்ச்சியும், கிழ விழுந்த உடனே அப்படியே அவளோட அழகான உடம்பு அப்படியே துடிச்சு போயிருக்கும். நான் சட்டுன்னு வண்டிய ஓரங்கட்டிட்டு திரும்பறதுகுள்ள, பின்னாடி வேகமா வந்த ஒரு ஆந்திரா லாரிக்காரன், இத்தனை வருஷமா என்னைய சந்தோஷப்படுத்திட்டு இருந்த என் செல்லத்து மேல வண்டிய ஏத்தி.. ம்ம்... நடு ரோட்டுல இப்படி லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போறதுக்கா இத்தனை நாளா உன்னை இப்படி பொத்தி பொத்தி வச்சிருந்தேன்.. என்னோட ஒரு நிமிஷ கவனக்குறைவுனால இப்படி ஆயிருச்சு. அவ்ளோதான் இனி கண்டிப்பா அவ உயிரோட இருக்க மாட்டான்னு தோனுச்சு.. லாரிக்கடியில சிக்கி... அவளை அப்படி பார்க்க கூட எனக்கு மனசு வரலைங்க.. சட்டுன்னு திரும்பி கூட பார்க்காம வண்டிய எடுத்துட்டு வந்துட்டங்க..

வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு மணி நேரம் மனசே சரியில்லைங்க.. அப்படி நடு ரோட்டுல லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போனவள திரும்பி கூட பார்க்காம வந்துட்டமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி .. பார்த்திருந்தா நான் தாங்கியிருக்க மாட்டேன்னு எனக்கு நானே சொல்லி சமாதானப்படுத்திகிட்டேன்.. இனி மேல் இப்படி ஒரு உறவே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன்..
எங்க..?? இங்கயும் காலம் தான் முடிவு செய்யுது. நம்ம கையில என்ன இருக்கு.. :(

ஒரு வாரம் பொறுத்து பார்த்தேன்.. முடியலைங்க.. நிஜம்மா முடியலை.. தினம் தினம் அவ ஸ்பரிசமும் சினுங்கலும் கேட்டே பழகியாச்சு.. காலையில அஞ்சரை மணிக்கு கண்முழிக்கறதே அவ குரல் கேட்டுதான். இப்போ திடீர்ன்னு அவ கூட இல்லைன்னா எப்படிங்க.. ரொம்ப கஷ்டம்.. சரி போனது போயிருச்சு.. அதை நினைச்சு என்ன செய்யன்னு நானே மனசை தேத்திகிட்டு இன்னைக்கு மறுபடியும் ஒரு புது துணை தேடிக்கிட்டேன்..
நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு கட்டுபடியாகுற ரேட்டுல (இன்ஸ்டால்மென்ட் கூட இருக்காம்) எடுத்துக்க இங்க பெங்களூர்ல இப்போ இதுக்கெல்லாம் நிறையா இடம் இருக்குங்க.. ஆனா இந்த தடவை முதல் தடவை மாதிரி ஒரு பரவசமும் இல்லை..எதோ கடமை மாதிரிதான் செஞ்சேன். போனேன், கையகாட்டுனேன், காசைகுடுத்தேன்.. கூட்டிட்டுவந்துட்டேன்..

என்னமோ பாலிபோனிக், mp3tunes'ங்கிறாங்க.. ஆயிரம் இருந்தாலும் அவ சிணுங்கல் மாதிரி வராதுங்க.. கீழ உள்ள படத்துல வட்டம் போட்டு காட்டியிருக்கேன் பாருங்க அது தான் அவ.. stable 3310 model :(
---
#178

Friday, May 26, 2006

ஒரு வனமும் மூன்று வரமும் - புனைவு

அது ஒரு அடர்வனம். ஓங்கிவளர்ந்த மரங்களும், நிறைந்து வளர்ந்த புதர்களும், கூவித்திரியும் பறவைகளையும், ஓடித்திரியும் மிருகங்களையும், ரீங்காரமிடும் வண்டுகளையும், வளைந்து ஓடும் ஓடைகளையும் தன்னுள்ளே அடக்கி, வெளிப்பார்வைக்கு அமைதியாக காற்றாடிக்கொண்டிருக்கும் அது.

நகரம் நரகமாகிவிட்டது என குளிரரையில் துவேஷம் பொழிந்துவிட்டு, வனம் தேடி தங்கள் உந்தூர்தியில் வந்து அந்த காற்றையும் நச்சுபடுத்தி மரங்களையும் மூச்சடைக்க செய்யும் பலரைபோல, அந்த மூவரும் வனம் தேடி வந்திருந்தனர்.

எண்ணிக்கையில் மூவரானாலும், மூவரும் மூன்று திசையை நேசித்தாலும், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. காணக்கிடைக்காதது அல்ல அது, காண்பவர் எல்லாம் கிடைக்கவேண்டுவது.. ஆம், அவர்கள் மூவரும், நம்மக்கள் தினமும் பன்னிரெண்டு மணிநேரம் நெஞ்சாங்கூட்டில் பஞ்சடைக்க கவுரவமான 'மில்' வேலை செய்து வாங்கும் கைநிறைய கூலியில், பாதியை விழுங்கிக்கொள்கிற, அந்த சிகப்புஅழகு களிம்புகளை விற்க்கும் குமரிகளை போல அழகான பெண்கள்.

வாரத்தின் ஐந்து நாட்கள், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், வாய் பிளந்து காத்துகொண்டிருப்பவனின் கனவுகளுக்கு 'சாட்'டில் பசி தீர்த்துவிட்டு, கைத்தொலைப்பேசியில் வாய் பிளந்து கிடப்பவனின் பெருமையை சொல்லி சிணுங்கிவிட்டு, வரவேற்ப்பரையில் பூமத்தியரேகையின் ஒவ்வொரு அங்குலத்தின் நேரத்தையும் சரியாக காட்டும்படி அமைக்கப்பட்ட அந்த கடிகார வரிசையில், உள்ளூர் நேரம் காட்டும் கடிகாரத்தில் ஒலிக்கும் ஒவ்வொரு மணிநேர டிங்டாங்குக்கும் ஒரு தடவை முறைவைத்து, உதட்டுசாயமும், ரூஜும், நகச்சாயமும், ஐலைனரும் போட்டது போக, மீத நேரத்தில் தான் ஒரு நாள் உடன் சென்று காபி குடித்ததற்க்காக இன்று வரை தன் வேலையை செய்து கொடுக்கும் கோயிஞ்சாமியிடம் அன்றைய வேலையையும் ஒப்படைத்துவிட்டு.. அந்த அலுவல் அழுத்தத்தை தொலைக்க, வாரக்கடைசியில் வனம் தேடி வந்தவர்கள் இவர்கள்.

பறவைகளின் பாடல்ககளுக்கு கிளைகளுக்கு இடையில் நுழைந்து பின்னனி வாசிக்கும் காற்றின் லாவகத்தையும், அதற்க்கு ஸ்வரம் கொடுக்கும் வண்டின் ரீங்காரத்தையும், மேகத்தின் நடுவே விழுகின்ற சூரிய ஒளியில் பட்டு தெரிக்கின்ற ஏகாந்தத்தையும் ரசித்து கொண்டே சென்ற அந்த மங்கையரின் வழியில் காட்டாறு ஒன்று குறுக்கிட்டது, ஆயிரம் ஆயிரம் வருடங்களாக கட்டப்பட்டிருந்த தளைகளை களைந்து வெளியே வந்தவர்களுக்கு அந்த ஆற்றையும் கடந்து செல்லும் ஆசை வந்ததில் பிழை ஒன்றுமிருக்க முடியாது. நினைத்ததை செய்வதில் தடை வந்தால் அதை உடைத்து வெல்லும் மன உறுதியிருந்தது அவர்களுக்கு.

திட்டங்கள் தீட்டுவதற்க்காக, பல்கலையில் நுன்கலை படித்தவர்கள் அவர்கள். நான்கு சுவற்றுக்குள் அரைபக்க தாள்களில் கறுப்பு மையில் அச்சிட்டு கொடுக்கப்பட்ட சந்தர்பங்களை, நொடிப்பொழுதில் தீர்த்தவர்கள், இங்கே சற்று குழம்பித்தான் போனார்கள். எப்படி கடப்பது..? அவர்கள் திட்டங்களை நிறைவேற்ற சில வழிகள் இருந்தது, ஒன்று நீந்துவது, மற்றொன்று சிறு ஓடை கட்டி அதில் கடப்பது. இரண்டுக்குமே சுளித்து ஓடும் அந்த காட்டாற்றில் வழியில்லை என்று தவிர்க்கபடவேண்டிய தருணங்களை பற்றி மேலாண்மை பெருங்கிழவன் சொன்னது அவர்களுக்கு இன்றும் ஞாபகம் இருந்தது.

சரியான வழியெதுவென்று மூவரும் குறைநிறைகளையும் கலந்தாலோசனை செய்கையில், அங்கு தான் மனிதமேலாண்மை படித்தவர்களுக்கு, இந்த அண்ட சராசரங்களின் மேலாண்மையை தன்னகத்தே கொண்டவனின் ஞாபகம் வந்தது. அது தான் சிறந்த வழியென்று முடிவுசெய்தார்கள். ஒவ்வொருவராக ஆரம்பிப்பது என்று முடிவு.

முதலாமவர் தேவதூதனிடம் முறையிட்டு 'இந்த நதியை கடக்கும் வலிமையை எனக்கு தாருங்கள்' என கேட்டு, வலிமையை தன்னுள்ளே வாங்கி, சினம்கொண்ட சிங்கத்தைபோல் பின்னோக்கி பாராமல் காட்டாற்று வெள்ளத்தை வலிவுடன் நீந்தி கடந்தார்.

ஒருவர் சென்ற வழியில் அடுத்தவரும் செல்வது மந்தையாடுகளின் வழக்கம், இவர்கள் அப்படியல்லவே, தனக்கென்று ஒரு பாதை தனக்கென்று ஒரு கொள்கை என வாழும் நவீன மாந்தர்கள். அடுத்தவர் தன் வேண்டுதலில் ஒரு மாற்றம் வைத்தார்.. முன்னவர் 'வலிமை'யை கேட்டார்.. இவர் 'ஆற்றை கடப்பதற்க்கு திறமையை கேட்டார்'. திறமை வேறு வலிமை வேறு என்ற தென்கீழை சித்தாந்தங்கள் அவர்கள் சிந்தையில் தெளிவாகவேயிருந்திருக்கிறது. திறமையை பெற்றவர், தன் திறமையால் ஒரு சிறு படகு கட்டி, காட்டாற்றை லாவகமாக கடந்து சென்றார். வலிமையால் சாதித்தவரை விட சுலபமாக திறமையால் சாதித்தார்.

ஒருவர் ஒரு அடி வைத்தால், அதற்க்கு மேல் ஒரு அடி வைப்பவன் தான் வாழமுடியும், வல்லவன் வாழ்வான் என டாவின்சி வகுத்து வைத்ததும் கூட அதை மையமாக வைத்துத்தான் என்பதை கற்றறிந்தவர் மூன்றாமவர். அவர் முதலிருவரில் இருந்து இன்னும் மேன்மையாக வேண்டினார். அவர் வலிமையை கேட்கவில்லை.. திறமையை கேட்கவில்லை..

இம்முறை தேவனுக்கு 'அறிவை'கொடுக்க வேண்டிய முறை. ஆம், 'எனக்கு இந்த ஆற்றை கடக்கும் அறிவை கொடு'என்று கோரிக்கை வைத்தார். அதுவும் கிடைத்தது. மாற்றம் நடந்தது.

மறுகரையில் தோழிக்காக காற்றாற்றின் சுழல் மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி, சற்று தள்ளி இருந்த பாலத்தின் மேல் சொகுசாக நடந்து வரும் ஆண்மகனை கண்டு.


(பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் .. இதெல்லாம் கேள்வி பட்டிருப்பீங்க.. இங்க மேல நான் எழுதியுருக்கிற.. அதென்னாங்க.. ஆங் 'புனைவு' ... 'எகுறுதிசம்'ங்கிற வகைய சேர்ந்தது.. அதை பத்தி தெரியாதவங்க.. தயவு செய்து அதை பற்றி முழுசா வரலாறு புவியியல் எல்லாம் படிச்சுட்டு அப்புறம் விமர்சன்ம் செய்வீங்கன்னு நம்பறேன்.. ..
ஓய்.. யாருப்பா அது அங்க இருந்து செருப்ப கழட்டி வீசுறது... இதெல்லம் நல்லாயில்ல சொல்லிட்டேன்.. உங்களுக்கு புடிக்கலைன்னா பின்னூட்டத்துல நாலு வார்த்தை திட்டிட்டு போங்க. அதுக்காக.. செருப்பெல்லாம் எடுத்துட்டு .. என்ன பழக்கம் இது.. ம்ம்)


:) :) :)


(pic from: www.nirak.net, galegoeswebber.tripod.com)


--
#177

Thursday, May 25, 2006

:(

என்னைய நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா.. !!

--
# 176

Wednesday, May 24, 2006

வரலாற்று சிறப்புமிக்க பதிவு

வலைப்பதிவர் பெயர்:
கொங்கு ராசா (வலைபதிவர்? இல்ல வலைப்பதிவாளர்?)

வலைப்பூ பெயர் :
ராசபார்வை...... (ஆறு புள்ளி இருக்கு, தவற விட்டுறாதீங்க)

உர்ல் :
உர்ல்?? ஓ ஊர்லயா.. ஊர்ல ஒன்னும் விஷேசமில்லீங்க

ஊர்:
மறுபடியும் ஊரா? பொள்ளாச்சி.. பொள்ளாச்சி நகராட்சி

நாடு:
கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.. கொங்குநாடா, திராவிடநாடா, தமிழ்நாடா, இந்துஸ்தானமா, ரிபப்ளிக் ஆப் இண்டியாவா.. இல்ல உலகம் என்னும் சிற்றூரா??

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
நானே தெரிஞ்சுகிட்டேன் (ஹி.. ஹி.. நாம் என்னைக்கு அடுத்தவங்க பேச்செல்லாம் கேட்டிருக்கோம்)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
6/19/2004 11:27:22 AM நாங்க எதை சொன்னாலும் கரீட்டா சொல்லுவோம்

இது எத்தனையாவது பதிவு:
175
(எல்லாரும் ஜோரா ஒருதடவை கைதட்டுங்க பார்க்கலாம்.. ச்சே.. கேக்கலாம்)

இப்பதிவின் உர்ல்:
மறுபடியும் உர்ல்.. ஓ URLஆ..ஏங்க பப்ளிஷ் பண்ணாத்தான உர்ல் கிடைக்கும்.. எழுதும்போது எப்படிங்க உர்ல் எழுதறது?

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
ஏன், அவுங்க ஆரம்பிச்சிருக்காங்க, இவுங்க ஆரம்பிச்சிருக்காங்க.. நான் ஆரம்பிக்க கூடாதா,, இன்னா ஞாயம் இது.. ஆரம்பிச்சேன் அவ்ளோதான்..எதுக்குன்னெல்லாம் கேட்ட எப்படிங்க..? கேள்வி கேக்குறது சுலபம்ங்க, ஆனா பதில் சொல்றது அப்படி கிடையாது..

சந்தித்த அனுபவங்கள்:
யாரை சந்திச்ச அனுபவத்தை கேக்கரீங்க?.. மொத்தமா சந்தித்த'ன்னு கேட்டாக்க என்னன்னு சொல்றது போங்க.. நிறையா பேரை 'சந்தி'ச்ச அனுபவம் இருக்கு

பெற்ற நண்பர்கள்:
நம்ம கிட்ட 'பெற்ற' நண்பர்கள் நிறையா இருக்காங்க.. நானும் நிறையா பெற்றிருக்கிறேன்.. அதெல்லாம் இங்க பப்ளிக்ல சொன்னா நல்லாவா இருக்கும். ஒரு கையில குடுக்கிறது அடுத்த கைக்கு தெரியகூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.. ஆமாம்.

கற்றவை:
கைமண் அளவு (கத்துகிட்டது தான மண்டைக்குள்ள இருக்கும்.. அதை வச்சு ரிவர்ஸ் இஞ்சினியரிங் செஞ்சு கண்டுபுடிச்ச்சேன்)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
சுதந்திரம்ன்னா இந்த காந்தி தாத்தா வாங்கி நேரு மாமா கையில் குடுத்து விட்டாரே அது தானுங்க.. சுதந்துரத்துக்கு என்ன கிடைக்கும்னு கேட்ட சொல்லலாம். முன்னெல்லாம் ஆரஞ்சு மிட்டாய், இப்பவெல்லாம் ஜிலேபி பெங்கால்ஸ்வீட் வரைக்கும் வந்துட்டாங்க.. அது எழுத்துல எப்படி கிடைக்குதுன்னா.. நேர்ல இப்படி பேசுனா, அப்புறம் அது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற மாதிரி ஆயிடாது, (நன்றி: இளவஞ்சி) யாரோ படிச்சுட்டு எங்கயோ கடுப்பா சுத்துவாங்க, நாம இங்க எழுதிட்டு அமைதியா போயி சாப்பிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துட்டு தூங்கலாமில்ல.

இனி செய்ய நினைப்பவை: இதை எழுதினதும் பப்ளிஷ் செய்யனும். அப்புறம் சாப்பிடும் போது தண்ணி கொஞ்சம் நிறையா குடிச்சுட்டேன்......... :)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஆறடிக்கு ஒரு அங்குலம் கம்மி.. 75கிலோவுக்கு ஒரு கிலோ அதிகம்.. (இதை விட முழுமையா சொல்ல சொல்றீங்களா? வேண்டாங்க எனக்கு ஒரே பப்பி ஷேமா இருக்கு)

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நான் என்ன நினைக்கிறேன்னா..'ன்னு ஆரம்பிக்க நான் ஒன்னும் காடிகலர்ல பூபோட்ட சட்டைக்கு மேல வெள்ளை கோட்டு போட்டு காலர்ல பெல்ட் கட்டியிருக்கிற ஆளு கிடையாதுங்க.. நாங்கெல்லாம் நினைக்காமத்தான் சொல்லுவோம். சொன்னத நினைக்கவும் மாட்டோம்

மூலம் (ரிஷிமூலம்ஙக..) : http://madhumithaa.blogspot.com/2006/05/blog-post.html

--
#175

Monday, May 22, 2006

ப்ளாக்.. !! ?

இந்த.. ப்ளாக் எல்லாம் தெரியுமா?

ம்ம்.. பெரிய மச்சான் வீட்டுல அதானே செய்யறாங்க..

செய்யறாங்களா??

ஆமா, ஹாலோப்ளாக், சிமென்ட் பைப் எல்ல்லாம..., கொழுமம் ரோட்டுல பாக்டரி போட்டிருக்காங்க.. ஆமா அதை பத்தி எதுக்கு கேக்கரீங்க..

ஒன்னுமில்ல சும்மாதான்.. :)


( நல்ல வேளை !! )
(pic :http://www.sayafewwords.com)

---
#174

கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள் - ஒரு மீள்பதிவு

கொஞ்ச காலம் முன்னாடி காலத்தின் கட்டாயத்தினால நான் போட்ட கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்'ங்கிற பதிவை மீள்பதிவாக இங்க மறுபடியும் பதிச்சுவைக்கிறங்க..


----
இந்த கழுதைப்புலி இருக்குதுங்களே.. ஒரு சாயல்ல ஓனாய் மாதிரி, இன்னொரு சாயல்ல பார்த்தா ஊருக்குள்ள திரியுமே சொறி புடிச்சு, எப்பவும் பல்லைகாட்டிட்டு, பார்க்கவே கொஞ்சம் பயமா.. வெறிநாய்ன்னு சொல்லுவாங்களே, அதே மாதிரி தான் இருக்கும், எப்பவாது டிஸ்க்கவரி சேனல்ல பார்த்திருப்பீங்க, அதை பத்தி தான் இந்த பதிவு.

கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)

---

சரி.. இப்போ இந்த மீள்பதிவு போட வேண்டிய காரணம் என்னன்னு கேப்பீங்களே... நம்மள மட்டும் கேளுங்க.. ஏன்னா நம்மள மாதிரி ஏப்பசாப்பையான் ஆளுகல தான கேக்க முடியும்.. சரி அதை விடுங்க.. நான் விளக்கமாவே சொல்லிடறன்.. 'நானும் கிட்டத்தட்ட மூணு வருஷமா பதிவு எல்லாம் வச்சுகிட்டு எதையாவது கிறுக்கிட்டு தான் இருக்கேன்... ஆனா பெருசா ஒன்னும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது மாப்ளேன்னு நம்ம பய ஒருத்தன் கிட்ட சொல்லி சடைஞ்சுகிட்டனுங்க.. அதுக்கு அவன்.. இந்த மீள்பதிவு, கீள்பதிவு எல்லாம் போட்டாத்தான் பதிவுலகத்துல பெரிய ஆள் ஆக முடியும்ன்னு ஒரு ரோசனை சொன்னான்.. சரி காசா பணமா, நம்மளும்.. கீளு, தாளுன்னு எதையாவது போடுவோம்னு முடிவு செஞ்சு.. போட்டாச்சு..(டிஸ்க்ளெயிமர் : இந்த பதிவுக்கு நான் எந்த டிஸ்க்ளெமியரும் போடுறதா இல்லீங்கோவ்)

---
#173

Friday, May 19, 2006

முடியுமா??

தண்ணீரை தண்ணி'ன்னு சொல்லலாம்
பன்னீரை பண்ணி'ன்னு சொல்ல முடியுமா?

பால்கோவாவை பால்ல செய்யலாம்
ரசகுல்லாவாவை ரசத்துல செய்ய முடியுமா?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்
நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எந்திரிக்கமுடியுமா?

சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சு எடுத்துட்டு போலாம்
டிபன் கேரியர்ல சைக்கிளை வச்சு எடுத்துட்டு போக முடியுமா?

என்னதான் மீனுக்கு நீச்சல் தெரிஞ்சாலும்
குழம்புல மீன் நீந்த முடியுமா?

அயர்ன் பாக்ஸ்ல அயர்ன் பண்ணலாம்
பென்சில் பாக்ஸ்ல பென்சில் பண்ணமுடியுமா?

புயலால கரையை கடக்க முடியும்
கரையால புயலை கடக்க முடியுமா?

பாயசம் வச்ச பத்து நாள்ல பாய்சன் ஆயிடும்
பாய்சன பத்து நாள் வச்சா பாயசம் ஆக்க முடியுமா?

வாயால மூச்சு வாங்க முடியும்
ஆனால் மூக்கால தண்ணி குடிக்க முடியுமா?

(என்ன திட்டாதீங்க.. காலங்காத்தால இப்படி எல்லாம் மயில் அனுப்பறானுவ.. யப்பா.. படுத்தறாய்ங்களே!!. )

---
#172

Thursday, May 18, 2006

அந்தி மழை!

பகல் பூராவும் வெய்யில் போட்டுத்தாக்குனாலுன், அஞ்சாறு நாளா, தினமும் சாயங்காலம் அஞ்சரை ஆறு மணியானா அலாரம் வச்ச மாதிரி மழை அடிச்சு தள்ளுதுங்க.. வூடு திரும்பற நேரத்துல மழை பேய்ஞ்சு தொல்லை குடுக்குதேன்னு வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்..


மழை அழகுதான்.! நம்மள மாதிரி சவுரியமான இடத்துல இருந்துட்டு பார்த்தா..

சும்மா எதாவது கிறுக்கி வைப்பமேன்னு யோசிச்சேன்.. ஒன்னுமே தோனலைங்க (தப்பிச்சீங்க!), அதுனால படம் மட்டும்..

நான் எழுதறத விட இந்த படம் நல்லா இருக்குதா ??

(படம் நான் புடிச்சதில்லீங்ண்ணா..!)

--
#171

Tuesday, May 16, 2006

நட்புக்காக

இப்போ எதுக்கு ரவுடிப்பய மாதிரி கைய மடிச்சு விட்டுருக்க.. ஒழுங்கா கஃப் பட்டன் போட்டுட்டு வா..

கைய மடிச்சு விட்டா ரவுடியா? அதெல்லாம் முடியாது, இண்டர்வ்யூ போன காலத்துலயே நான் பட்டன் போட்டதில்லை..

இந்த எகத்தாளம் எல்லாம் பேசாத, இப்ப பட்டன் போடப்போறயா இல்லையா.. ரொமப பண்றாங்கப்பா இவன்..

சரி.. விடு.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. ஹாஃப்ஸ்லாக் போட்டுகறேன்.. போதுமா..

ஷூ போட்டுக்க..

டேய்.. இதெல்லாம் ஓவரு, சாத்திட்டு கூட வா.. சும்மா அதை செய், இதை செய்யுன்னு வியாக்கியானம் பேசிட்டு இருக்காத..

நல்லது சொன்னா என்னைக்கு நீ கேட்டிருக்க..

வேண்டாம்டா. எதோ ஒருவருஷம் பெரியவன், கொஞ்சம் சீக்கிரம் காரியம் ஆயிருச்சு, அதுக்காக, ரொம்ப பெருசு மாதிரி பேசாத.. அப்புறம் வீடுன்னு பார்க்க மாட்டேன்.. ஆமா.

சரி என்னத்தையோ செய்யு.

இரு.. அங்க போயி, அம்மா கூட சேர்ந்துகிட்டு எதாவது எச்சு பேசறதா இருந்தா.. நீ இங்கயே இருந்துக்க, வராத.

ஒரு மயிரும் பேசுல.. வா.. எதோ எனக்கு போற மாதிரி இருக்கு

இன்னொரு தடவை வேற ஆசை இருக்கா உனக்கு.. நங்கை கிட்ட வேணும்னா சொல்லவா..

சாமி, நான் ஒன்னும் பேசலை. நீ உன்ற இஷ்டத்துக்கு வாடா கண்ணு..

....

ஏண்டா, நிசமா சொல்லு, உனக்கு கொஞ்சம் கூட டென்ஷன் இல்ல..

எதுக்கு டென்ஷன்?

டென்ஷன் வேண்டாம். ஒரு எக்சைட்மென்ட்?

இப்ப என்னை என்ன செய்ய சொல்ற.. காலரை கடிச்சுகிட்டு, கால்ல தரைய நோண்ட சொல்றியா?

டேய்.. சும்மா உடாத.. நிசம்மா சொல்லு..

என்னடா சொல்ல சொல்ற, உனக்கு போனப்பத்தான், கைகால் எல்லாம் நடுங்கி, வேர்த்து ஊத்துன, அதுக்காக, நானும் அதே மாதிரியா இருக்க முடியும்.

பாவம்டா அந்த புள்ள..

இதைத்தான் ஒரு வருஷம் முன்னாடி, நங்கைய பார்தப்போ நான் சொன்னேன், அப்ப ஒருத்தனும் கேக்கலை

ஜன்னலை ஏத்திவிட்டு ஓட்டு.. தலை எல்லாம் பரபரன்னு போகுது.. .. .. சரி, சரி, முறைக்காம வண்டிய ஓட்டு.
உன்ன தனியா விட்டுருக்கனும், ஒரு மாரல் சப்போர்ட்டுக்காக, நண்பனாச்சேன்னு நான் வந்தன் பாரு. என்னச்சொல்லனும். ம்ம். எல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பார்க்கலாம்..

----
#170

Monday, May 15, 2006

!


:( ??

:) ??

---
#169

Wednesday, May 10, 2006

அடிமை சாசனம்
ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது..

மறுநாள் காதல் என் வீட்டுக்கு
அடிமை சாசனம் நீட்டுது..


---
# 168