Friday, May 19, 2006

முடியுமா??

தண்ணீரை தண்ணி'ன்னு சொல்லலாம்
பன்னீரை பண்ணி'ன்னு சொல்ல முடியுமா?

பால்கோவாவை பால்ல செய்யலாம்
ரசகுல்லாவாவை ரசத்துல செய்ய முடியுமா?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்
நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எந்திரிக்கமுடியுமா?

சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சு எடுத்துட்டு போலாம்
டிபன் கேரியர்ல சைக்கிளை வச்சு எடுத்துட்டு போக முடியுமா?

என்னதான் மீனுக்கு நீச்சல் தெரிஞ்சாலும்
குழம்புல மீன் நீந்த முடியுமா?

அயர்ன் பாக்ஸ்ல அயர்ன் பண்ணலாம்
பென்சில் பாக்ஸ்ல பென்சில் பண்ணமுடியுமா?

புயலால கரையை கடக்க முடியும்
கரையால புயலை கடக்க முடியுமா?

பாயசம் வச்ச பத்து நாள்ல பாய்சன் ஆயிடும்
பாய்சன பத்து நாள் வச்சா பாயசம் ஆக்க முடியுமா?

வாயால மூச்சு வாங்க முடியும்
ஆனால் மூக்கால தண்ணி குடிக்க முடியுமா?

(என்ன திட்டாதீங்க.. காலங்காத்தால இப்படி எல்லாம் மயில் அனுப்பறானுவ.. யப்பா.. படுத்தறாய்ங்களே!!. )

---
#172

21 comments:

WA said...

haha

PS: Raasaa, paathu ezhudhunga appuram maatittu muzhikka poreenga

மணியன் said...

ராசா, என்னாச்சு? அதுக்குள்ளேயேவா... ?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O)

சந்திப்பு said...

ராசா திராவிட டென்ஷனை கொஞ்சம் குறைச்சிட்டீங்க....

இளவஞ்சி said...

ம்ம்ம்.. இதெல்லாம் இன்னைக்கு நேத்தா நடக்குது?!

என்னைக்கு கல்யாணம்னு ஒரு சொல்லுக்கு சரிங்கறமோ அன்னைல இருந்த பயக இப்படித்தான் சிந்திக்கறாங்க!!

ஒன்னியும் கவலைப்படாதா ராசா!!! இது சரியாகும்கற நம்பிக்கையெல்லாம் வைக்காதப்பு! இயல்புன்னு வாழப்பழகிக்கங்க!! :)))

அனுசுயா said...

அப்டியே இதயும் சேத்துக்குங்க ராசா :
தூக்கம் வந்தா கண்ண மூடலாம் ஆனா
வாந்தி வந்தா வாய மூட முடியுமா?

கொங்கு ராசா said...

WA >> //appuram maatittu muzhikka poreenga// அதுனால தானே இப்படி மொக்கை மேட்டர போட்டிகிட்டு இருக்கேன் (இல்லாட்டி மட்டும்!)


வாங்க ஷ்ரேயா.. ரொம்ப நாள் ஆச்சு

சந்திப்பு >> //டென்ஷனை கொஞ்சம் குறைச்சிட்டீங்க....// அதுக்குத்தான எங்கள மாதிரி ஆளுக எல்லாம் இருக்கோம்..:)

இளவஞ்சி >> உங்க பதிவுல நான் போட்ட பின்னூட்டத்துக்கு இங்க பதில் போட்டிருக்கீங்க.. காலையில வீட்டுல சொந்தகாரங்க வந்திருந்தாங்களா என்ன? :)


அனுசுயா>> :)

Agent 8860336 ஞான்ஸ் said...

//முடியுமா??
...முடியுமா?
...முடியுமா?
...முடியுமா?
//

'தல' ம்... னு ஒரு வார்த்த சொல்லுங்க!

கொங்கு ராசா said...

//ம்... னு ஒரு வார்த்த சொல்லுங்க!// இங்கயும் இனிமே 'ம்'னு ஒரு வார்த்தை தான் சொல்லமுடியுமா ?? :(

ILA(a)இளா said...

கல்யாணப்பேச்சு வந்தாச்சு இல்லே, அதான் மயிலு எல்லாம் பதிவா வருது. அப்புறம் ஒரு இடைவேளைம்பாங்க, அப்புறமா வர்வேம்ப்பாங்க....
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த....

Agent 8860336 ஞான்ஸ் said...

//இனிமே 'ம்'னு ஒரு வார்த்தை தான் சொல்லமுடியுமா ?? :( //

வருத்தப்பட தேவையில்லை 'தல'

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்!!

பேசாமல் இருந்தால் மூடனும் ஞானி என்று எண்ணப்படுவான்

என்று ஏற்கெனவே சொல்லி வைத்திருக்கிறார்கள்!!!
:-)

பொன்ஸ்~~Poorna said...

இதே மாதிரி வீட்லயும் மொக்க போட்டுகிட்டு இருந்தா, ம் கூட பேச முடியாதுன்னு நினைக்கிறேன்:)

கொங்கு ராசா said...

இளா >> அப்படி எல்லாம் தப்பா நினைச்சுராதீங்க. அவ்ளோ சுளுவா உங்களை எல்லாம் நிம்மதியா விட்டுட்டு போயிருவனா என்ன?


ஞான்ஸ் >> அப்படித்தான் நீங்க ஞானம் வாங்குனதா??


பொன்ஸ் >> நிசமாலுமே பாவம்ங்க.. :) (யாரை சொல்றேன்னு புரியுதா?)

johan -paris said...

நன்றாக இருக்கிறது;இன்னும் யோசியுங்க!
சரி!!!!!!!
அண்ணன் பெண்சாதியை அண்ணி என்பீங்க!
தம்மி பெண்சாதியை தண்ணி என்பீங்களா,,,,?????;

நம்புவீங்களா, ? 25 வருடத்துக்கு முதல் இலங்கையில்; தமிழ் பேசக்கூடிய பெண்ணொன்று ;இதை என்னைக் கேட்டது!
யோகன்
பாரிஸ்

Agent 8860336 ஞான்ஸ் said...

//ஞான்ஸ் >> அப்படித்தான் நீங்க ஞானம் வாங்குனதா??//

தல, இது வேற.. அது வேற...!

இளவஞ்சி said...

//காலையில வீட்டுல சொந்தகாரங்க வந்திருந்தாங்களா என்ன? :) //

உமக்கு எப்படியா தெரியும்!? இன்னைக்கு ஒரு முகூர்த்தம் இங்க!

சரி விடுங்க! கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்! கொஞ்ச நாளாவே எழுத்து, பேச்சு, நடவடிக்கை எதுவும் வெளங்கமாட்டேங்குது! :)

கொங்கு ராசா said...

//உமக்கு எப்படியா தெரியும்!?// சிக்கலான சைனா எழுத்துல கோலம் போட்ட பின்கண்ணாடி, சென்னை பதிவு, எக்ஸ்ட்ரா கூட்டத்தோட ஒரு வண்டிய காலையில நிம்மான்ஸ் கிட்ட பார்த்தேன்.. அம்புட்டுத்தான்.. :)

இளவஞ்சி said...

அடடா ராசா!

ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட கூட்டமா உம்மையும் அள்ளிப் போட்டுக்கிட்டு அசத்தலான ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?!

ம்ம்ம்.. அநியாயத்துக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு தவறிப்போயிடுச்சு பாருங்க!! :)

கொங்கு ராசா said...

//ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?!// ஆஹா.. அப்படியா.. சரி விடுங்க.. வாரக்கடைசிக்கு உங்க வீட்டுக்கு வந்தா மறுபடியும் ஒரு விருந்து குடுக்க போறீங்க :)

சிக்னல்ல வண்டி முன்னால கட்குடுத்து போன RXகாரன கண்டிப்பா திட்டியிருப்பீங்க.. அதைய பெருந்தன்மையா மறந்துட்டு விருந்துக்கு வர்றேன்.. :)

Anonymous said...

// ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட கூட்டமா உம்மையும் அள்ளிப் போட்டுக்கிட்டு அசத்தலான ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?! //

நிம்மான்ஸ்கிட்ட என்பதால்தான் கண்டுக்கல:-)))))))

WA said...

அடாடா ராசா நீங்க mail nnu சொன்னத அரைகுறையா மயில்ன்னு படிச்சுட்டு, அதான் உங்க அம்மணி பேருன்னு நெனச்சுட்டே கமெண்ட்டீட்டேன்.