Monday, May 22, 2006

ப்ளாக்.. !! ?

இந்த.. ப்ளாக் எல்லாம் தெரியுமா?

ம்ம்.. பெரிய மச்சான் வீட்டுல அதானே செய்யறாங்க..

செய்யறாங்களா??

ஆமா, ஹாலோப்ளாக், சிமென்ட் பைப் எல்ல்லாம..., கொழுமம் ரோட்டுல பாக்டரி போட்டிருக்காங்க.. ஆமா அதை பத்தி எதுக்கு கேக்கரீங்க..

ஒன்னுமில்ல சும்மாதான்.. :)


( நல்ல வேளை !! )
(pic :http://www.sayafewwords.com)

---
#174

17 comments:

யாத்திரீகன் said...

:-) நல்லவேளையா... என்ன நீங்க.. இப்போதான் நல்ல சந்தர்ப்பம்.. தெரியும்னு சொல்லியிருந்தா.. என் ப்ளாக்னு ஆரம்பிக்கையில் .. அப்படியானு கேட்காம இருந்தாத்தான் நல்லவேளை.. ;-)

நாகை சிவா said...

இனிமே பிளாக் பத்தி எவன் கிட்ட பேசினாலும் பாத்து தான் பேசனும்

செந்தழல் ரவி said...

ப்ளாக்குன்னா கருப்பா பயங்கரமா இருக்குமே...அதுவா

தேவ் | Dev said...

ஏன் ராசா அவகக் கேட்டாகளா? நீங்க மென்னு முழுங்கி முழிச்சிங்களாக்கும்...பின்னாடி வழியில்லாம அது தான் அதே தான் ராசாத்தின்னு ஆமாம் போட்டீகளாமே உண்மையா :))

அனுசுயா said...

சரி சரி உங்க அம்மணிக்கு தெரியலீனு என்ன வேணா எழுதலாம்னு ரொம்ப சந்தோசப்படாதீங்க.

ILA(a)இளா said...

அட தமிழ் ப்ளாகா இல்லை ஆங்கில ப்ளாகான்னு கேட்டிருந்தா இன்னும் கலாய்ச்சலா இருந்திருக்கும்

கொங்கு ராசா said...

யாத்ரீகன் >> //தெரியும்னு சொல்லியிருந்தா.. // தெர்யும்னு சொல்றத விட தெரியாதுன்னு சொல்றது தான் சில நேரம் சுவாரசியம்'னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.. :)

சிவா >> பத்திரமாவே பேசுங்க

ரவி >> :)

கொங்கு ராசா said...

தேவ் >> அனுபவமா??

அனுசுயா >> கொஞ்சநேரம் சந்தோஷப்பட விடமாட்டீங்களே :)

இளா >> இன்னும் கலாய்ச்சல் வேணுமோ? ம்ம்..

தேவ் | Dev said...

தோடா.. இப்போ நீ தான் மாப்பூ.. சோ உனக்கு தான் ஆப்பூ ஹி...ஹி...

( நம்ம கதையெல்லாம் பொறவு விலாவாரியாப் பேசிகிடலாம்....)

கொங்கு ராசா said...

தேவ் >> அங்கயும் இருக்கா.. சிக்காமயா போயிடுவீங்க

பி.கு : 'சோ' 'ஆப்பு' இது போன்ற அன்-ப்ளாகிமென்ட்ரி வார்த்தையெல்லாம் இங்க உபயோகிக்காதீங்கன்னு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் :) :)
(ஸ்மைலிய கவனிங்கப்பா)

Agent 8860336 ஞான்ஸ் said...

ப்ளாக் = கறுப்பு = திராவிடன்!

ஆகா, தல...

ம்.. நடத்துங்க.. நடத்துங்க!

;-)

(smiley included!)

Udhayakumar said...

ராசா, ராசா... இப்படியா மூக்கு உடைஞ்ச மேட்டர் எல்லாம் வெளிய சொல்லரது...

சரி சரி... வாங்குனது வாங்கியாச்சு... அடுத்தாப்புல என்ன வாங்கினீங்கன்னு அப்புடியே சொல்லிட்டு போறது...

Udhayakumar said...

//ப்ளாக் = கறுப்பு = திராவிடன்!
//

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா

ராசா பாட்டுக்கு அவரு அனுபங்களை வைச்சுகிட்டு புள்ளதாச்சி மாதிரி அலையராரு... சும்மா தட்டி குடுத்தா குடம் குடமா கொட்டுவாரு போல...

இங்க வந்து அவருக்கு சவக்குழி வெட்டிட்டு போயிடுவீங்க போலிருக்கு...

ராசா, உஷார்!!!!!

கொங்கு ராசா said...

ஞான்ஸ் >>
//ப்ளாக் = கறுப்பு = திராவிடன்! //

ண்ணா..! பேச்சே வரலைங்ண்னா எனக்கு... நிசமாலுமே நீங்க ஞான்ஸ் தானுங்ண்ணா..

(இதையத்தான்.. தேரை இழுத்து தெருவுல வுடுறதுன்னு சொல்லுவாங்க.. ஊருகுள்ள)

(no smileys inculded)

கொங்கு ராசா said...

//மூக்கு உடைஞ்ச மேட்டர் எல்லாம் வெளிய சொல்லரது..// யோவ்.. நான் எதோ சந்தோஷமா.. இதெல்லாம் 'அவுங்களுக்கு' தெரியாது இங்கன ஜமாய்க்கலாம் ப்ரச்சணை இல்லைன்னு எழுதவந்தா.. அதுக்கு ஒரு வாழ்த்து சொல்லாம.. அதுக்குள்ளார இருக்கிற 'மூக்கு உடைத்தல்' மேட்டர ஏன்யா கிளர்ற... ?? :(

(எப்படித்தான் கண்டுபுடிக்கறாங்களோ.. !)

சோழநாடன் said...

ஹ¤ம் இதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கனும்.
:-( (இங்கே ஸ்மைலி கிடையாது.)

[ராசா ஒரு சின்ன சங்கதி.
தப்பிதவறி தமிழ்ல எல்லாம் எழுதுறேன்னு சொல்லி வலைத்தல முகவரியெல்லாம் கொடுத்துடாதீங்க. அப்புறம்...வேணாம் உங்களுக்கே தெரியும்.]

பொன்ஸ்~~Poorna said...

அம்மணியப் பத்தி அறிவிப்பு வருவதற்கு முன்னாடி உங்க போட்டோன்னு ப்ரோபைல்ல ஒண்ணு வச்சிருந்தீங்களே, அது பத்தி தான் சொல்றீங்கன்னு நினைச்சேன்!! :)))

மறந்து போனவர்கள் இங்கே போய்ப் பார்க்கலாம்.