Tuesday, May 16, 2006

நட்புக்காக

இப்போ எதுக்கு ரவுடிப்பய மாதிரி கைய மடிச்சு விட்டுருக்க.. ஒழுங்கா கஃப் பட்டன் போட்டுட்டு வா..

கைய மடிச்சு விட்டா ரவுடியா? அதெல்லாம் முடியாது, இண்டர்வ்யூ போன காலத்துலயே நான் பட்டன் போட்டதில்லை..

இந்த எகத்தாளம் எல்லாம் பேசாத, இப்ப பட்டன் போடப்போறயா இல்லையா.. ரொமப பண்றாங்கப்பா இவன்..

சரி.. விடு.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. ஹாஃப்ஸ்லாக் போட்டுகறேன்.. போதுமா..

ஷூ போட்டுக்க..

டேய்.. இதெல்லாம் ஓவரு, சாத்திட்டு கூட வா.. சும்மா அதை செய், இதை செய்யுன்னு வியாக்கியானம் பேசிட்டு இருக்காத..

நல்லது சொன்னா என்னைக்கு நீ கேட்டிருக்க..

வேண்டாம்டா. எதோ ஒருவருஷம் பெரியவன், கொஞ்சம் சீக்கிரம் காரியம் ஆயிருச்சு, அதுக்காக, ரொம்ப பெருசு மாதிரி பேசாத.. அப்புறம் வீடுன்னு பார்க்க மாட்டேன்.. ஆமா.

சரி என்னத்தையோ செய்யு.

இரு.. அங்க போயி, அம்மா கூட சேர்ந்துகிட்டு எதாவது எச்சு பேசறதா இருந்தா.. நீ இங்கயே இருந்துக்க, வராத.

ஒரு மயிரும் பேசுல.. வா.. எதோ எனக்கு போற மாதிரி இருக்கு

இன்னொரு தடவை வேற ஆசை இருக்கா உனக்கு.. நங்கை கிட்ட வேணும்னா சொல்லவா..

சாமி, நான் ஒன்னும் பேசலை. நீ உன்ற இஷ்டத்துக்கு வாடா கண்ணு..

....

ஏண்டா, நிசமா சொல்லு, உனக்கு கொஞ்சம் கூட டென்ஷன் இல்ல..

எதுக்கு டென்ஷன்?

டென்ஷன் வேண்டாம். ஒரு எக்சைட்மென்ட்?

இப்ப என்னை என்ன செய்ய சொல்ற.. காலரை கடிச்சுகிட்டு, கால்ல தரைய நோண்ட சொல்றியா?

டேய்.. சும்மா உடாத.. நிசம்மா சொல்லு..

என்னடா சொல்ல சொல்ற, உனக்கு போனப்பத்தான், கைகால் எல்லாம் நடுங்கி, வேர்த்து ஊத்துன, அதுக்காக, நானும் அதே மாதிரியா இருக்க முடியும்.

பாவம்டா அந்த புள்ள..

இதைத்தான் ஒரு வருஷம் முன்னாடி, நங்கைய பார்தப்போ நான் சொன்னேன், அப்ப ஒருத்தனும் கேக்கலை

ஜன்னலை ஏத்திவிட்டு ஓட்டு.. தலை எல்லாம் பரபரன்னு போகுது.. .. .. சரி, சரி, முறைக்காம வண்டிய ஓட்டு.
உன்ன தனியா விட்டுருக்கனும், ஒரு மாரல் சப்போர்ட்டுக்காக, நண்பனாச்சேன்னு நான் வந்தன் பாரு. என்னச்சொல்லனும். ம்ம். எல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பார்க்கலாம்..

----
#170

14 comments:

Anonymous said...

Congrats Raasa...innum eppo kalyanamnu solrathu thaan baaki...konjam suspense overa thaan irukku ponka :-)

கைப்புள்ள said...

பாத்தீங்களா ராசா...கரெக்டா ஆட்டை வெட்டி பிரியாணில கொதிக்க வைக்கிற நேரத்துல வந்துட்டேன். வாழ்த்துகள். நீ முந்திக்கிட்டே...நேக்கு தான் பிரியாணி.
:)-
(ஒன்னும் புரியலைன்னா உங்க ஆர்க்கைவ்ஸை கொஞ்சம் ஆராயுங்க)

Anonymous said...

yenka raasa, ponnu yaarunnum solliralam illai...inka irukara unkaloda pen visirihal (nera kodumai panka namma oorla) ellam ore aluhayama rendu naala..irunthalum etho sonthakarankalukku kalyanam nitchayam aana mathiri santhosama thaanka irukuthu...

செல்வராஜ் (R.Selvaraj) said...

அது சரி... அப்ப நேரம் வந்தாச்சு...
வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் !!!
..adhithya

பொன்ஸ்~~Poorna said...

//சரி.. விடு.. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. ஹாஃப்ஸ்லாக் போட்டுகறேன்.. போதுமா..//
இதுக்கும் இன்னிக்கு உஷாக்கா தொடர்ல மீசையைப் பத்தி எழுதியதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?!! :)

கொங்கு ராசா said...

கைபுள்ள >> //நீ முந்திக்கிட்டே...நேக்கு தான் பிரியாணி.// :) இன்று நான் நாளை நீ.. !!

நன்றி செல்வராஜ், ஆதித்யா

பொன்ஸ்>> //இன்னிக்கு உஷாக்கா தொடர்ல மீசையைப் பத்தி எழுதியதற்கும் // இந்த ப்ரச்சனை எனக்கும் என் சகா'வுக்கும் நடுவால நடந்தது.. இன்னும் அந்த பக்கம் இருந்து எல்லாம் ஒரு கோரிக்கையும் வரலை.. பார்ப்போம் :)

ILA(a)இளா said...

அட ஒரு வாரம் ஊருக்கு போய்ட்டு வரதுகுள்ள இவ்ளோ நடந்துருச்சா? காலாகாலத்துல நடக்க வேண்டியது தான இது. நல்லா இரு மாப்ளே.

Udhayakumar said...

எங்க சங்கத்துல இன்னொரு ஆள் குறையுது போல... எல்லாம் இளவஞ்சி வாத்தியார் வகுப்புல உக்காந்த்து பொறுமையா கேட்டப்பவே நெனச்சேன் இந்த மாதிரி யாருக்காவது நடக்கும்ன்னு...

சொக்கா, இது எனக்கில்லை எனக்கில்லை ...

Anonymous said...

Hi Raasaa,

Congrats!!!!!
Kalayanathukku marakkame invite pannidunga....

Appuram, enna appo paarthaalum ore kanavuthaana? Phone bill egira aarambichuducha? Enzoy..Enzoy....

தேவ் | Dev said...

Vaanga appu Vaanga...

Vaazthukkal Naina

Murthi said...

ராசாவுக்கு கத்தி ரெடியாயிடிச்சி டோய்....

ஏனுங்க எப்ப கெடா வெட்டப்போறாங்க.....?

Chenthil said...

வாழ்த்துக்கள் ராசா.

WA said...

Vaazthukal Raasa. Kalyaanam epponnu soneengannaa naanga ellam ticket-a advance-aa book pannuvom.