Friday, May 26, 2006

ஒரு வனமும் மூன்று வரமும் - புனைவு

அது ஒரு அடர்வனம். ஓங்கிவளர்ந்த மரங்களும், நிறைந்து வளர்ந்த புதர்களும், கூவித்திரியும் பறவைகளையும், ஓடித்திரியும் மிருகங்களையும், ரீங்காரமிடும் வண்டுகளையும், வளைந்து ஓடும் ஓடைகளையும் தன்னுள்ளே அடக்கி, வெளிப்பார்வைக்கு அமைதியாக காற்றாடிக்கொண்டிருக்கும் அது.

நகரம் நரகமாகிவிட்டது என குளிரரையில் துவேஷம் பொழிந்துவிட்டு, வனம் தேடி தங்கள் உந்தூர்தியில் வந்து அந்த காற்றையும் நச்சுபடுத்தி மரங்களையும் மூச்சடைக்க செய்யும் பலரைபோல, அந்த மூவரும் வனம் தேடி வந்திருந்தனர்.

எண்ணிக்கையில் மூவரானாலும், மூவரும் மூன்று திசையை நேசித்தாலும், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. காணக்கிடைக்காதது அல்ல அது, காண்பவர் எல்லாம் கிடைக்கவேண்டுவது.. ஆம், அவர்கள் மூவரும், நம்மக்கள் தினமும் பன்னிரெண்டு மணிநேரம் நெஞ்சாங்கூட்டில் பஞ்சடைக்க கவுரவமான 'மில்' வேலை செய்து வாங்கும் கைநிறைய கூலியில், பாதியை விழுங்கிக்கொள்கிற, அந்த சிகப்புஅழகு களிம்புகளை விற்க்கும் குமரிகளை போல அழகான பெண்கள்.

வாரத்தின் ஐந்து நாட்கள், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், வாய் பிளந்து காத்துகொண்டிருப்பவனின் கனவுகளுக்கு 'சாட்'டில் பசி தீர்த்துவிட்டு, கைத்தொலைப்பேசியில் வாய் பிளந்து கிடப்பவனின் பெருமையை சொல்லி சிணுங்கிவிட்டு, வரவேற்ப்பரையில் பூமத்தியரேகையின் ஒவ்வொரு அங்குலத்தின் நேரத்தையும் சரியாக காட்டும்படி அமைக்கப்பட்ட அந்த கடிகார வரிசையில், உள்ளூர் நேரம் காட்டும் கடிகாரத்தில் ஒலிக்கும் ஒவ்வொரு மணிநேர டிங்டாங்குக்கும் ஒரு தடவை முறைவைத்து, உதட்டுசாயமும், ரூஜும், நகச்சாயமும், ஐலைனரும் போட்டது போக, மீத நேரத்தில் தான் ஒரு நாள் உடன் சென்று காபி குடித்ததற்க்காக இன்று வரை தன் வேலையை செய்து கொடுக்கும் கோயிஞ்சாமியிடம் அன்றைய வேலையையும் ஒப்படைத்துவிட்டு.. அந்த அலுவல் அழுத்தத்தை தொலைக்க, வாரக்கடைசியில் வனம் தேடி வந்தவர்கள் இவர்கள்.

பறவைகளின் பாடல்ககளுக்கு கிளைகளுக்கு இடையில் நுழைந்து பின்னனி வாசிக்கும் காற்றின் லாவகத்தையும், அதற்க்கு ஸ்வரம் கொடுக்கும் வண்டின் ரீங்காரத்தையும், மேகத்தின் நடுவே விழுகின்ற சூரிய ஒளியில் பட்டு தெரிக்கின்ற ஏகாந்தத்தையும் ரசித்து கொண்டே சென்ற அந்த மங்கையரின் வழியில் காட்டாறு ஒன்று குறுக்கிட்டது, ஆயிரம் ஆயிரம் வருடங்களாக கட்டப்பட்டிருந்த தளைகளை களைந்து வெளியே வந்தவர்களுக்கு அந்த ஆற்றையும் கடந்து செல்லும் ஆசை வந்ததில் பிழை ஒன்றுமிருக்க முடியாது. நினைத்ததை செய்வதில் தடை வந்தால் அதை உடைத்து வெல்லும் மன உறுதியிருந்தது அவர்களுக்கு.

திட்டங்கள் தீட்டுவதற்க்காக, பல்கலையில் நுன்கலை படித்தவர்கள் அவர்கள். நான்கு சுவற்றுக்குள் அரைபக்க தாள்களில் கறுப்பு மையில் அச்சிட்டு கொடுக்கப்பட்ட சந்தர்பங்களை, நொடிப்பொழுதில் தீர்த்தவர்கள், இங்கே சற்று குழம்பித்தான் போனார்கள். எப்படி கடப்பது..? அவர்கள் திட்டங்களை நிறைவேற்ற சில வழிகள் இருந்தது, ஒன்று நீந்துவது, மற்றொன்று சிறு ஓடை கட்டி அதில் கடப்பது. இரண்டுக்குமே சுளித்து ஓடும் அந்த காட்டாற்றில் வழியில்லை என்று தவிர்க்கபடவேண்டிய தருணங்களை பற்றி மேலாண்மை பெருங்கிழவன் சொன்னது அவர்களுக்கு இன்றும் ஞாபகம் இருந்தது.

சரியான வழியெதுவென்று மூவரும் குறைநிறைகளையும் கலந்தாலோசனை செய்கையில், அங்கு தான் மனிதமேலாண்மை படித்தவர்களுக்கு, இந்த அண்ட சராசரங்களின் மேலாண்மையை தன்னகத்தே கொண்டவனின் ஞாபகம் வந்தது. அது தான் சிறந்த வழியென்று முடிவுசெய்தார்கள். ஒவ்வொருவராக ஆரம்பிப்பது என்று முடிவு.

முதலாமவர் தேவதூதனிடம் முறையிட்டு 'இந்த நதியை கடக்கும் வலிமையை எனக்கு தாருங்கள்' என கேட்டு, வலிமையை தன்னுள்ளே வாங்கி, சினம்கொண்ட சிங்கத்தைபோல் பின்னோக்கி பாராமல் காட்டாற்று வெள்ளத்தை வலிவுடன் நீந்தி கடந்தார்.

ஒருவர் சென்ற வழியில் அடுத்தவரும் செல்வது மந்தையாடுகளின் வழக்கம், இவர்கள் அப்படியல்லவே, தனக்கென்று ஒரு பாதை தனக்கென்று ஒரு கொள்கை என வாழும் நவீன மாந்தர்கள். அடுத்தவர் தன் வேண்டுதலில் ஒரு மாற்றம் வைத்தார்.. முன்னவர் 'வலிமை'யை கேட்டார்.. இவர் 'ஆற்றை கடப்பதற்க்கு திறமையை கேட்டார்'. திறமை வேறு வலிமை வேறு என்ற தென்கீழை சித்தாந்தங்கள் அவர்கள் சிந்தையில் தெளிவாகவேயிருந்திருக்கிறது. திறமையை பெற்றவர், தன் திறமையால் ஒரு சிறு படகு கட்டி, காட்டாற்றை லாவகமாக கடந்து சென்றார். வலிமையால் சாதித்தவரை விட சுலபமாக திறமையால் சாதித்தார்.

ஒருவர் ஒரு அடி வைத்தால், அதற்க்கு மேல் ஒரு அடி வைப்பவன் தான் வாழமுடியும், வல்லவன் வாழ்வான் என டாவின்சி வகுத்து வைத்ததும் கூட அதை மையமாக வைத்துத்தான் என்பதை கற்றறிந்தவர் மூன்றாமவர். அவர் முதலிருவரில் இருந்து இன்னும் மேன்மையாக வேண்டினார். அவர் வலிமையை கேட்கவில்லை.. திறமையை கேட்கவில்லை..

இம்முறை தேவனுக்கு 'அறிவை'கொடுக்க வேண்டிய முறை. ஆம், 'எனக்கு இந்த ஆற்றை கடக்கும் அறிவை கொடு'என்று கோரிக்கை வைத்தார். அதுவும் கிடைத்தது. மாற்றம் நடந்தது.

மறுகரையில் தோழிக்காக காற்றாற்றின் சுழல் மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி, சற்று தள்ளி இருந்த பாலத்தின் மேல் சொகுசாக நடந்து வரும் ஆண்மகனை கண்டு.


(பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் .. இதெல்லாம் கேள்வி பட்டிருப்பீங்க.. இங்க மேல நான் எழுதியுருக்கிற.. அதென்னாங்க.. ஆங் 'புனைவு' ... 'எகுறுதிசம்'ங்கிற வகைய சேர்ந்தது.. அதை பத்தி தெரியாதவங்க.. தயவு செய்து அதை பற்றி முழுசா வரலாறு புவியியல் எல்லாம் படிச்சுட்டு அப்புறம் விமர்சன்ம் செய்வீங்கன்னு நம்பறேன்.. ..
ஓய்.. யாருப்பா அது அங்க இருந்து செருப்ப கழட்டி வீசுறது... இதெல்லம் நல்லாயில்ல சொல்லிட்டேன்.. உங்களுக்கு புடிக்கலைன்னா பின்னூட்டத்துல நாலு வார்த்தை திட்டிட்டு போங்க. அதுக்காக.. செருப்பெல்லாம் எடுத்துட்டு .. என்ன பழக்கம் இது.. ம்ம்)


:) :) :)


(pic from: www.nirak.net, galegoeswebber.tripod.com)


--
#177

15 comments:

மணியன் said...

பார்த்துங்க, அம்மணிக்கு கோபம் வந்திடப் போகுது.:)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எகுறுதிசமா???? எகிறித்தான் இருக்கீங்கன்றதையும், உங்களுக்கு என்னமோ ஆகிப் போச்சுங்கறதையும் தவிர ஒன்னும் சொல்றத்துக்கில்ல! :O\

யாத்திரீகன் said...

:-))))))))))

ராசா... கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இந்த பார்ம்ல இருக்கீங்க..

Anonymous said...

Thaliva,
cant even read it for 5 seconds :-),, epdi itha yeluthneenga :)

--
Jagan

Agent 8860336 ஞான்ஸ் said...

{{

மூவரும்... அழகான பெண்கள்

முதலாமவர்... காட்டாற்று வெள்ளத்தை வலிவுடன் நீந்தி கடந்தார்.

இரண்டாமவர்... சுலபமாக திறமையால் சாதித்தார்.

மூன்றாமவர்... அறிவை கொடு என்று கோரிக்கை வைத்தார். .... மாற்றம் நடந்தது... காத்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி, சற்று தள்ளி இருந்த பாலத்தின் மேல் சொகுசாக நடந்து வரும் ஆண்மகனை கண்டு.

}}

சுருக்கமா ராசா சொல்ல வந்தது என்னன்னா...
பெண் புத்தி pin புத்தி!

:-)))

கொங்கு ராசா said...

மணியன் >> அவுங்க இந்த பக்கமெல்லாம் வர மாட்டாங்கங்கிற தைரியத்துல தான் இதெல்லாம் :)


ஷ்ரேயா >> யூ நோ எகுறுதிசம்'' ம்ம் வெரி பேட்.. தட் ஈஸ் க்ரேட் எளக்கியம்.. :)

தேவ் | Dev said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ப்படியா ராசா? ஏஜென்ட் சொல்லுறது நெசமாய்யா

கொங்கு ராசா said...

யாத்ரீகன் >> சுத்தி சுத்தி அங்கயே ஏன்யா போறீங்க?


ஜெகன் >> ரொம்ப தூக்ககலக்கமா இருந்துச்சு.. தூக்கத்தை போக்கலாமேன்னு எழுதிட்டேன்.. இனி அது உங்க பாடு

கொங்கு ராசா said...

ஞான்ஸ் >> இப்ப இங்க யாராவது இதுக்கு கோணார் பொழிப்புரை குடுக்க சொன்னாங்களா.. யாருக்காவது புரியாட்டியும் கூப்பிட்டு சொல்லி அடி வாங்க வைக்கனும்.. நல்ல ஆசை (இருங்க இருங்க.. புலி'க்கும் ஜூஸுக்கும் நான் வந்து விளக்கம் தர்றேன் :))

கொங்கு ராசா said...

தேவ் >> உங்களுக்கு தெரியாதது இல்ல.. அடுத்தவங்க சொன்னாங்கன்னு நாம ஏன் கேக்கனும்.. நீங்களே இன்னொருவாட்டி பதிவை முழுசா ஒரு தடவை படிச்சு பாருங்க புரியும்
(படிச்சதுக்கப்புறம் மறுபடி கேள்வி கேப்பீங்க :) )

கைப்புள்ள said...

ராசாவைக் காத்துகறுப்பு அடிச்சிருச்சு டோய். :)

கொஞ்ச நாளைக்கு அப்புறம் வரேங்க...நீங்களும் நம்மள மாதிரின்னு நம்பி ஏமாந்துட்டேன் போலிருக்கே...

//நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க... //

???

பொன்ஸ்~~Poorna said...

ராசாஆஆஆ (அது என்னோட கொட்டாவி சத்தம் தான்..:) ),
நாலு லைனுக்கு மேல என்னாலயும் படிக்க முடியலை.. இருந்தாலும் ஞான்ஸ் சொன்னது தான் மேட்டரா? வர்றேன்.. உங்க கல்யாணத்துக்கு வந்து அம்மணிகிட்ட போட்டுக்குடுக்கலைன்னா, நானெல்லாம் வலிவு, திறமை, அறிவு உள்ள பொண்ணா இருந்து என்ன பிரயோசனம்?!!! ;)

பெத்த ராயுடு said...

கண்ணு...,

டார்வின் டாவின்சியானது தூக்க கலக்கத்துலயா?
அம்மிணிகூட 24மணி நேரமும் chatting தானா?

கொங்கு ராசா said...

கைபுள்ள >> //நீங்களும் நம்மள மாதிரின்னு நம்பி ஏமாந்துட்டேன் போலிருக்கே...//
அப்படி தப்பா எதும் நினைச்சிற வேண்டாம்.. அதே ராசா தான்.. சும்மானாச்சுக்கும் ஒரு வேஷம் கட்டி பார்த்தேன் அவ்ளோ தான் :)

பொன்ஸ் >> மூச்!!.. நோ டாக்கிங் மீ!! பர்கிவ் ப்ளீஸ்!!


ராயுடுகாரு >> அதெல்லாம் கண்டுக்கபடாது.. ஆமாம் :)

ஜெகதீஸ்வரன் said...

Elakkiyavaathi aagitteengannu nenachen... ippadi pin vankitteengale.. :-(...

aanalum superunngov..