வலைப்பதிவர் பெயர்:
கொங்கு ராசா (வலைபதிவர்? இல்ல வலைப்பதிவாளர்?)
வலைப்பூ பெயர் :
ராசபார்வை...... (ஆறு புள்ளி இருக்கு, தவற விட்டுறாதீங்க)
உர்ல் :
உர்ல்?? ஓ ஊர்லயா.. ஊர்ல ஒன்னும் விஷேசமில்லீங்க
ஊர்:
மறுபடியும் ஊரா? பொள்ளாச்சி.. பொள்ளாச்சி நகராட்சி
நாடு:
கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.. கொங்குநாடா, திராவிடநாடா, தமிழ்நாடா, இந்துஸ்தானமா, ரிபப்ளிக் ஆப் இண்டியாவா.. இல்ல உலகம் என்னும் சிற்றூரா??
வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
நானே தெரிஞ்சுகிட்டேன் (ஹி.. ஹி.. நாம் என்னைக்கு அடுத்தவங்க பேச்செல்லாம் கேட்டிருக்கோம்)
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
6/19/2004 11:27:22 AM நாங்க எதை சொன்னாலும் கரீட்டா சொல்லுவோம்
இது எத்தனையாவது பதிவு:
175
(எல்லாரும் ஜோரா ஒருதடவை கைதட்டுங்க பார்க்கலாம்.. ச்சே.. கேக்கலாம்)
இப்பதிவின் உர்ல்:
மறுபடியும் உர்ல்.. ஓ URLஆ..ஏங்க பப்ளிஷ் பண்ணாத்தான உர்ல் கிடைக்கும்.. எழுதும்போது எப்படிங்க உர்ல் எழுதறது?
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
ஏன், அவுங்க ஆரம்பிச்சிருக்காங்க, இவுங்க ஆரம்பிச்சிருக்காங்க.. நான் ஆரம்பிக்க கூடாதா,, இன்னா ஞாயம் இது.. ஆரம்பிச்சேன் அவ்ளோதான்..எதுக்குன்னெல்லாம் கேட்ட எப்படிங்க..? கேள்வி கேக்குறது சுலபம்ங்க, ஆனா பதில் சொல்றது அப்படி கிடையாது..
சந்தித்த அனுபவங்கள்:
யாரை சந்திச்ச அனுபவத்தை கேக்கரீங்க?.. மொத்தமா சந்தித்த'ன்னு கேட்டாக்க என்னன்னு சொல்றது போங்க.. நிறையா பேரை 'சந்தி'ச்ச அனுபவம் இருக்கு
பெற்ற நண்பர்கள்:
நம்ம கிட்ட 'பெற்ற' நண்பர்கள் நிறையா இருக்காங்க.. நானும் நிறையா பெற்றிருக்கிறேன்.. அதெல்லாம் இங்க பப்ளிக்ல சொன்னா நல்லாவா இருக்கும். ஒரு கையில குடுக்கிறது அடுத்த கைக்கு தெரியகூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.. ஆமாம்.
கற்றவை:
கைமண் அளவு (கத்துகிட்டது தான மண்டைக்குள்ள இருக்கும்.. அதை வச்சு ரிவர்ஸ் இஞ்சினியரிங் செஞ்சு கண்டுபுடிச்ச்சேன்)
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
சுதந்திரம்ன்னா இந்த காந்தி தாத்தா வாங்கி நேரு மாமா கையில் குடுத்து விட்டாரே அது தானுங்க.. சுதந்துரத்துக்கு என்ன கிடைக்கும்னு கேட்ட சொல்லலாம். முன்னெல்லாம் ஆரஞ்சு மிட்டாய், இப்பவெல்லாம் ஜிலேபி பெங்கால்ஸ்வீட் வரைக்கும் வந்துட்டாங்க.. அது எழுத்துல எப்படி கிடைக்குதுன்னா.. நேர்ல இப்படி பேசுனா, அப்புறம் அது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற மாதிரி ஆயிடாது, (நன்றி: இளவஞ்சி) யாரோ படிச்சுட்டு எங்கயோ கடுப்பா சுத்துவாங்க, நாம இங்க எழுதிட்டு அமைதியா போயி சாப்பிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துட்டு தூங்கலாமில்ல.
இனி செய்ய நினைப்பவை: இதை எழுதினதும் பப்ளிஷ் செய்யனும். அப்புறம் சாப்பிடும் போது தண்ணி கொஞ்சம் நிறையா குடிச்சுட்டேன்......... :)
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஆறடிக்கு ஒரு அங்குலம் கம்மி.. 75கிலோவுக்கு ஒரு கிலோ அதிகம்.. (இதை விட முழுமையா சொல்ல சொல்றீங்களா? வேண்டாங்க எனக்கு ஒரே பப்பி ஷேமா இருக்கு)
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நான் என்ன நினைக்கிறேன்னா..'ன்னு ஆரம்பிக்க நான் ஒன்னும் காடிகலர்ல பூபோட்ட சட்டைக்கு மேல வெள்ளை கோட்டு போட்டு காலர்ல பெல்ட் கட்டியிருக்கிற ஆளு கிடையாதுங்க.. நாங்கெல்லாம் நினைக்காமத்தான் சொல்லுவோம். சொன்னத நினைக்கவும் மாட்டோம்
மூலம் (ரிஷிமூலம்ஙக..) : http://madhumithaa.blogspot.com/2006/05/blog-post.html
--
#175
15 comments:
175 ?? Good.. keep going! congrats!
-sam
175 க்கு வாழ்த்துக்கள் :)
(இனியாவது ஏதாவது மேட்டர் வருதானு பாப்போம்) :)
நன்றி சாம்.
அனுசுயா >> நன்றி.. //(இனியாவது ஏதாவது மேட்டர் வருதானு பாப்போம்)// ச்சேச்சே.. என்னைய போயி இப்படி நினைச்சுட்டீங்களே :)
கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.. கொங்குநாடா, திராவிடநாடா, தமிழ்நாடா, இந்துஸ்தானமா, ரிபப்ளிக் ஆப் இண்டியாவா.. இல்ல உலகம் என்னும் சிற்றூரா??
குழப்பமா இருக்கா? இதப்பாத்து பலப்பேர் குழம்பப்போறாங்க... ஏற்கனவே நீங்கள் திராவிடரா இல்லையென்றால், நீங்கள் யார்? அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு....
ipdi ellaam epdi dhaan badhil solla thonudhu raasaa :)
நன்றி கொங்குராசா
வாழ்த்துகள்
//கைமண் அளவு (கத்துகிட்டது தான மண்டைக்குள்ள இருக்கும்.. அதை வச்சு ரிவர்ஸ் இஞ்சினியரிங் செஞ்சு கண்டுபுடிச்ச்சேன்)//
அருமை! அருமை! :)
நன்றி: இளவஞ்சி - ஏயப்ப்பா! அது நான் சொன்னதில்லை. இங்கதான் இங்கயோ படிச்சது.. கெரகம் வாயவிட்டு போகமாட்டேங்குது!
//இது எத்தனையாவது பதிவு: 175//
ஒரு கேள்வி விட்டுட்டீங்களே!!
இதுவரை மொத்தம் எத்தனை வார்த்தை எழுதி இருப்பீர்கள் : 176??!! :)
அப்படியே தொடருங்க, கல்யாணத்துக்கப்புறம் விட்ராதீங்க!! :) அதுக்கப்புறம் நீங்க பேசறத (புலம்பறதை?) கேக்க நாங்க மட்டும் தான் இருப்போம் :)
//கெரகம் வாயவிட்டு போகமாட்டேங்குது! //
அந்த லைனை பிக்கப் பண்ணின நேரம் சரியில்லை இளவஞ்சி :)
ராசா வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுல உங்க கிட்ட ஒரு இண்டர்வியூ - சண்டக்கோழி சண்டக்கோழிங்கற படத்துல மீரா ஜாஸ்மின்ங்கிற புள்ளயோட நடிச்சது நீங்க தானுங்களே?
(இந்த கேள்விக்கு References:)
1. உங்க ப்ரொஃபைலில் உள்ள போட்டோ
2. //ஆறடிக்கு ஒரு அங்குலம் கம்மி.. //
ரொம்ப நாளா கேக்கணுமின்னு இருந்தேன் :))-
சந்திப்பு >> அந்த மாதிரி பெரிய விஷயமெல்லாம் நமக்கு புரியறதேஇல்லீங்க
WA >> இதெல்லாம் அதுவா வர்றதுங்க :)
மதுமிதா >> 'நன்றி'ங்கிறத பயங்கிற கோவத்தோட சொல்லியிருக்கீஙகன்னு நினைக்கிறேன்.. (நம்ம பதிவெல்லாம் உங்க ஆராய்ச்சிக்கு உபயோகப்படும்?)
இளவஞ்சி >> உங்களுக்கு எங்க கிடைச்சுதோ.. எனக்கு உங்க கிட்ட இருந்து தான் (மண்டையில மண் சமாச்சாரம் மட்டும் தான் உங்க கண்ணுல படுது.. ம்ம்)
பொன்ஸ் >> நான் பேசறத கேக்க நீங்க மட்டும் தான் இருப்பீங்ககிறதுக்காக இல்லாட்டியும், நான் இங்க மட்டும் தான் பேச முடியும்ங்கிறதுக்காகவாது தொடருவேன் :)
கைப்புள்ள >> இங்க கூட நம்ம பாசக்கார பசங்க அப்படித்தான் சொல்றாங்க.. (ம்ம் நானும் மீராஜாஸ்மின் மாதிரி கனவெல்லாம் கண்டேன்.. எங்க அதெல்லாம் சினிமா படத்துல தான் போல) :)
(ஸ்மைலி போடாட்டி ப்ரச்சனை ஆயிடும். ஆன்னா ஊன்னா நம்மாளுக போன் போட்டுடறாங்க)
//ஆன்னா ஊன்னா நம்மாளுக போன் போட்டுடறாங்க)//
இது சுலபமாவே புரிஞ்சிருச்சு(for a change)
:))-
//இது சுலபமாவே புரிஞ்சிருச்சு// நிசமா புரிஞ்சிருச்சா?? அய்யோ ராசா உனக்கு என்ன ஆச்சு.. அடுத்தவங்களுக்கு புரியற மாதிரி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட
கலாய்ச்சுட்டீங்க தல..
Post a Comment