Monday, May 22, 2006

கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள் - ஒரு மீள்பதிவு

கொஞ்ச காலம் முன்னாடி காலத்தின் கட்டாயத்தினால நான் போட்ட கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்'ங்கிற பதிவை மீள்பதிவாக இங்க மறுபடியும் பதிச்சுவைக்கிறங்க..


----
இந்த கழுதைப்புலி இருக்குதுங்களே.. ஒரு சாயல்ல ஓனாய் மாதிரி, இன்னொரு சாயல்ல பார்த்தா ஊருக்குள்ள திரியுமே சொறி புடிச்சு, எப்பவும் பல்லைகாட்டிட்டு, பார்க்கவே கொஞ்சம் பயமா.. வெறிநாய்ன்னு சொல்லுவாங்களே, அதே மாதிரி தான் இருக்கும், எப்பவாது டிஸ்க்கவரி சேனல்ல பார்த்திருப்பீங்க, அதை பத்தி தான் இந்த பதிவு.

கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.



மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)

---

சரி.. இப்போ இந்த மீள்பதிவு போட வேண்டிய காரணம் என்னன்னு கேப்பீங்களே... நம்மள மட்டும் கேளுங்க.. ஏன்னா நம்மள மாதிரி ஏப்பசாப்பையான் ஆளுகல தான கேக்க முடியும்.. சரி அதை விடுங்க.. நான் விளக்கமாவே சொல்லிடறன்.. 'நானும் கிட்டத்தட்ட மூணு வருஷமா பதிவு எல்லாம் வச்சுகிட்டு எதையாவது கிறுக்கிட்டு தான் இருக்கேன்... ஆனா பெருசா ஒன்னும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது மாப்ளேன்னு நம்ம பய ஒருத்தன் கிட்ட சொல்லி சடைஞ்சுகிட்டனுங்க.. அதுக்கு அவன்.. இந்த மீள்பதிவு, கீள்பதிவு எல்லாம் போட்டாத்தான் பதிவுலகத்துல பெரிய ஆள் ஆக முடியும்ன்னு ஒரு ரோசனை சொன்னான்.. சரி காசா பணமா, நம்மளும்.. கீளு, தாளுன்னு எதையாவது போடுவோம்னு முடிவு செஞ்சு.. போட்டாச்சு..



(டிஸ்க்ளெயிமர் : இந்த பதிவுக்கு நான் எந்த டிஸ்க்ளெமியரும் போடுறதா இல்லீங்கோவ்)

---
#173

6 comments:

ilavanji said...

ராசா,

//இப்போ இந்த மீள்பதிவு போட வேண்டிய காரணம் என்னன்னு கேப்பீங்களே... நம்மள மட்டும் கேளுங்க.. ஏன்னா நம்மள மாதிரி ஏப்பசாப்பையான் ஆளுகல தான கேக்க முடியும்.. //

உம்ம குசும்பு இருக்கே! அதுக்கு அளவே இல்லை! :))))))))

ஏஜண்ட் NJ said...

//நம்மள மட்டும் கேளுங்க..

நம்மளும்.. கீளு, தாளுன்னு எதையாவது போடுவோம்னு முடிவு செஞ்சு.. போட்டாச்சு..

//



தல நீங்கள் ஆள் கூட்டத்தில தனியே இருக்க வேண்டியவர்!

Not just one in the crowd!

;-)

Pavals said...

இளவஞ்சி >> குசும்பு.. மீ?? நோ.. மீ குட்பாய்!

ஞான்ஸ் >> நாம எப்பவுமே 'தனி' தான்.. கேள்விப்பட்டிருக்கீங்கள்ல.. நரிகள் தான் கூட்டமா போகுமாம்.. :)

Muthu said...

///////////////////
(டிஸ்க்ளெயிமர் : இந்த பதிவுக்கு நான் எந்த டிஸ்க்ளெமியரும் போடுறதா இல்லீங்கோவ்)
////////////////////
தல,
இது அல்டிமேட்....
:-))))
(எதுக்கும் ஒரு சிரிப்பானை போட்டு வச்சுக்கிறேன். பின்னாடி யாரும் கேட்டா இது சாதாரண நக்கல் யாரையும் குறிப்பதல்லன்னு statement வுடலாமில்ல)

ILA (a) இளா said...

அதான் ராசு போன பதிவிலேயே சொன்னேன் இல்லே, இனிமே மயிலு பதிவா வரும், மீள்பதிவு, அப்புறம் இடைவேளை இதெல்லாம் இனிமே வரும். என்ன பண்ண போன் பில் எகிரும், தூக்கத்தில சிரிப்பு வரும்...

Pavals said...

சோழநாடன் >> உங்களுக்காக மீண்டும் ரஒரு :) :)

இளா >> ஆனாலும் உங்களுக்கு..:)
(நீங்க பரவாயில்ல இளா.. உங்களுக்கு 'கால்' இருக்கு)