Tuesday, June 7, 2005

கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்

இந்த கழுதைப்புலி இருக்குதுங்களே.. ஒரு சாயல்ல ஓனாய் மாதிரி, இன்னொரு சாயல்ல பார்த்தா ஊருக்குள்ள திரியுமே சொறி புடிச்சு, எப்பவும் பல்லைகாட்டிட்டு, பார்க்கவே கொஞ்சம் பயமா.. வெறிநாய்ன்னு சொல்லுவாங்களே, அதே மாதிரி தான் இருக்கும், எப்பவாது டிஸ்க்கவரி சேனல்ல பார்த்திருப்பீங்க, அதை பத்தி தான் இந்த பதிவு.

 


 


கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.

 


 


மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)

பி.கு. :

இந்த பதிவுக்கும் தற்போது தமிழ்வலைப்பதிவுகள்ல பரவலா எல்லாரும் அலசிட்டு இருக்கிற 'கழுதைப்புலி' சமாச்சாரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை

--
# 90

10 comments:

மாயவரத்தான் said...

உங்களுக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸ்திங்கண்ணா!

ஏஜண்ட் NJ said...

கழுதைப்புலின்னு சொன்னதும், எனக்குக் கூட, 80-களில் வந்த Jacky Chan-நடித்த 'The Fearless Hyena' மற்றும் அதன்பின் வந்த part-II எல்லாம் நினைவுக்கு வருதுங்க !

என்ன ஆக்ரோஷமா பழிவாங்குவாங்க... யப்பா... மயிர் கூச்செரியும் காட்சிகள் நெறஞ்ச action படம்.

(கழுதைப்புலி = Hyena.)

இந்தப் பின்னூட்டம் யாரையும் பொதுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ, சாதி பற்றியோ, தரக்குறைவாகவோ, இழிவுபடுத்தும் நோக்கத்துடனோ எழுதப்படவில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதற்கும் வலைப்பதிவில் நடக்கும் கழுதைப்புலி விவாதத்திற்கும் துளியூண்டு கூட சம்பந்தமில்லை.

-/பெயரிலி. said...

The Lion King இலே வருமே

சுந்தரவடிவேல் said...

கழுதைப் புலியின் குணாதிசயங்களை விளக்கிய மாரிசாமிக்கும் உங்களுக்கும் நன்றி.

Anonymous said...

Yellarum ennathukku ongallukku lollu nakkallunnu ellam solraangannu enakku pureeliye! Adhaiyum vilakkama soleerunga raasa

Pavals said...

அய்யோ.. பின்னூட்டத்துல எல்லாரும் என்ன சொல்லியிருக்கீங்கன்னே புரியலையே...
இதுல என்னங்க லொல்லு இருக்கு.. ?
எனக்கும் புரியலைங்க உமா.. சுந்தரவடிவேல் தான் எதோ பொடி வெச்சி பேசியிருக்கிற மாதிரி தோனுது..

--அப்பாவி 'ராசு'

Anonymous said...

//நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும்//

நெசமாச் சொல்லுங்க, இதில உள்நோக்கம் இல்லைன்னு.

Pavals said...

//நெசமாச் சொல்லுங்க, இதில உள்நோக்கம் இல்லைன்னு.

நிசமாலுமே அப்படியேல்லாம் ஒன்னுமில்லீங்க.., அய்யோ யாராவது நான் சொல்றத நம்புங்களேன்.. :-(

Anonymous said...

//The Lion King இலே வருமே

//

ஏம்பா, hyena தான் கழுதைப் புலியா ?

யாராவது சொல்லுங்கபா !

ரவியா

Anonymous said...

hyena தான் கழுதைப் புலி.. குழப்பமே வேண்டாம் ரவியா