சன் டி.வி.'காரங்க 'தினகரன்க்ரூப்'பை வாங்கிட்டாங்களாம்??.. புதன்கிழமையே டீல் முடிஞ்சிருச்சாம்.. சன்.டி.வீ'யில இருக்கிற என் சகா ஒருத்தன் கிட்ட மதியம் பேசிட்டு இருந்தப்ப அவன் சொன்னது.. 99% உண்மையா இருக்கக்கூடய வாய்ப்பு இருக்கு..
ஏற்கனவே பாதி மக்களுக்கு சன் நியூஸ் தான் கதி, இனி பேப்பரும்..
scv'n கேபிள் நெட்வொர்க் துணையோட ஏற்க்கனவே எலக்ட்ரானிக் மீடியாவ கையகபடுத்தியாச்சு, இனி ப்ரிண்ட் மீடியாவுமா??
யாராவது உருப்படியா ஒரு போட்டியாளர் வாங்கப்பா.. இல்லாட்டி கூடிய சீக்கிரம் 'Tommorow never dies'ல வந்த மாதிரி கூட ஆகலாம்.. :-)
--
#96
11 comments:
it could be true as kalanidhi maran was planning entry in the newspaper segment of print media
காசு கொடுத்து வாங்க முடிந்தால் ஆட்சியை கூட வாங்கி விடுவார்கள்.
அது மட்டும் முடியவில்லை.
எதிர்பார்ட்டி ரொம்ப ஸ்ட்ராங் ( துட்டுலயும்தான்)
BEST KANNA BEST !!!
//சன் டி.வி.'காரங்க 'தினகரன்க்ரூப்'பை வாங்கிட்டாங்களாம்??.. //
அப்போ, டி.டி.வி.தினகரன,
இன்னிமே, சன்.டி.வி.தினகரன் -னு சொல்றீங்க !
*****************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: உங்கள் அபிமான ஞானபீடம்
*****************
'தினகரன் குரூப்'னா?? உங்க ஊர்காரரா??
'தினகரன் குரூப்'னா?? உங்க ஊர்காரரா??
//அப்போ, டி.டி.வி.தினகரன,
இன்னிமே, சன்.டி.வி.தினகரன் -னு சொல்றீங்க !//
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவேயில்லையா ஞான பீடம்
பிரிண்ட் மீடியா வேறு சிலரின் கையில் உள்ளது... அவ்வளவு சீக்கிரம் அதை கைப்பற்ற முடியாது... தினகரன் ஒன்றும் தினமலர்(?!) அளவுக்கு நடுநிலைப்பத்திரிக்கை கிடையாது...
மன்னிச்சிக்குங்கோ தினமலரை நடுநிலைப்பத்திரிக்கை என்று சொன்னதற்கு... என்ன செய்வது ... தினமலர்தானே நடுநிலை நாளிதழ்னு விளம்பரம் செய்து கொள்வது...ம்...
பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
ராசா சொல்வது சரிதான். மாறனுக்கு ரொம்ப நாளாகவே பத்திரிக்கைத்துறை மீது ஒரு கண். (இன்னொரு கண்ணைத் தான் TV/FM மேல வச்சுருக்காரே!). அதன் ஆரம்பம் தான் இது.
99% இல்லீங்க 100% உண்மை.கலாநிதி மாறன் ஆகஸ்ட்டில் ப்ரிண்ட் மீடியாவில் நுழைவென் என ஏற்கன்வே பேட்டியில் சொல்லியிருந்தார் புதுசா அரம்பிச்சா மார்க்கெட்டிங் தொல்லை அதான் பழசை வாங்கிட்டார் போல...
மேலும் படிக்க
அட...வாரா வாரம் ஓ.சியிலே கெடைச்சது போக இனிமே டெய்லி ஓ.சி.யிலே நெறய பொருட்கள் தமிழக மக்களுக்கு கிடக்கப்போகுதாக்கும்!!!
(ஓ.சியெல்லாம் கெடியாது.. மேற்படி பேப்பரை காசு கொடுத்து தானே வாங்கணும்னு யாரோ சொல்றாப்ல இருக்கு?!)
நம்மாளு ஒருத்தரு டி.வி. எஃப் எம்., இப்ப பத்திரிக்கைன்னு கலக்கிட்டு இருக்காறேன்னு சந்தோசப் படாம?., 20 வருசத்துக்கு முன்னாடி யாருக்கு தெரியும் கலாநிதிய?. எதிர் ஆட்சிதான் எப்போதும் தமிழகத்துல, (கொஞ்ச காலம்தான் அவர்) இருந்தாலும் சளைக்காம இம்புட்டுத் தூரம் வந்திருக்குகாரு., உதாரணமா எடுத்துக்காம, பொறணி பேசிட்டு!!. போங்கப் போங்க!!
குழலி!
ம்க்கும்.....நாம அதச் சொல்லக் கூட முடியாது!!!. தினமலர் நடுநிலையான பத்திரிக்கையா?., சங்கரசாரிகளுக்கு ஜாமீன் கிடைச்சதக்கூட, ஜாமீனில் விடுதலை(?)(இவுகளே குடுத்துட்டாக விடுதலை!). ஆனால் மேம்பால ஊழல்னு கத்தி, கலவரப் படுத்தி, சத்தமே இல்லாம., 4 ஆண்டு கழிச்சு பேருக்கு வழக்குன்னு ஒண்ணு போட்டவொடனே., 'கருணாநிதி, ஸ்டாலின் மீது .ஊழல் வழக்கு.."ன்னு சுத்தி சுத்தி நட்சத்திரமெல்லாம் போட்டு சந்தோசப்பட்ட அற்பங்கள். எதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். திசை திருப்புறேன்., தோசயத் திருப்புறேன்னெல்லாம் நினைக்காதீங்க. நான் இருக்கலாம் ஒரு சார்பா., ஆனா, தமிழ்கத்துலயே அதிகம் பேர் படிக்கிற(?!)., நடுநிலை நாளிதழ்னு விளம்பரப்படுத்திக்கிறவங்க இருக்கக்கூடாது. காசு கொடுத்து வாங்கிப் படிப்பவனை ஏமாற்றும் வேலை ஓட்டுப் போட்டு தெரிந்தெடுக்கும் அரசியல்வதிகளின் ஏமாற்றுதனத்தை விட கண்டிக்கத்தக்கது.
Post a Comment