Tuesday, June 21, 2005

வருஷமாகிபோச்சுங்க..!

'வணக்கமுங்க..!!! - அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன எழுதறதுன்னு தெரியாம, அதையே புலம்பல்'ன்னு தலைப்பு போட்டு புலம்பி, அதுக்கப்புறம் தமிழ்பதிவுகள் பக்கத்துல நம்ம பேரு வந்ததுக்காக சிவப்பு விளக்கு எரியுது'ன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கப்புறம் பைக்ல இருது கீழ விழுந்து கைய உடைச்சுகிட்டத ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!'ன்னு எழுதி, அதை படிச்சு நல்லா தமாசா எழுதறீங்க ராசா, வலைப்பூ பக்கம் வாங்கன்னு மதி கூப்பிட்டு, அங்க நம்மள கடவுள் என்னும் முதலாளி கொடுத்த தொழிலாளி 'ன்னு அறிமுகப்படுத்தி, வலைப்பூவ நம்ம எழுத்தால ஒரு வாரம் சீரழிச்சுட்டு வந்து, சும்மா வெட்டியா எழுதறமேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்!!ன்னு தலைப்பு போட்டு நான் எழுதின கவிதைய போட்டு, சந்தோஷப்பட்டு, அப்புறம் நமக்கு வலைப்பூவில அறிமுகமான சத்யராஜ்குமார் ஊருக்கு வந்தப்போ என்ன கூப்பிட்டு பேசினத ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!ன்னு எழுதி, அப்படியே ஜாலியா இருந்தப்போ, இந்த காஞ்சி பிரச்சனை வந்து, நான் சும்மா இருக்கமாட்டாம அந்த ஒரு கேள்வின்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு பின்னூட்டம் மட்டுமில்லை, மொத்தம் 6 தனிமடல் வந்துச்சு, நல்லா அழகான தமிழ் வார்த்தையில திட்டி, அப்புறம் அந்த பதிவை பத்தி மரத்தடியில விமர்சனம் ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காக நான் ஒரு பதில் பதிவு போட்டு விளக்கி, கொஞ்சம் கடுப்பாகி, அந்த சமாச்சாரத்தையெல்லாம் விட்டுபுட்டு கொஞ்சம் கலகலப்பா, கவர்ச்சியா எதாவது போடுவோம்னு, ஒரு மும்பாய்ல வளர்ந்துட்டு இருக்கிற , ஒரு கோயமுத்தூர் தமிழ் பொண்னு, அவளோட வார கடைசியல என்னவெல்லாம் செஞ்சான்னு அவ பதிவுல போட்டிருந்தத நான் மும்பாய் டயரி'ன்னு இங்க போட, ரெண்டே நாள்ல எனக்கு மறுபடி ஒரு மடல், இங்க்லீஸ்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு, தமிழ் பொண்ணாச்சே, யாரோ அவளோட உறவுக்காரங்க, என்மூலமா அவளோட பதிவை பார்த்துட்டு, அவளை கண்டிக்க, எனக்கு மெயில்ல வந்தது சனி, (இப்போ அந்த பதிவையே காணோம்.. பாவம் :-( ), அப்புறம் தமிழ்மணம் வந்து, அப்புறம் கொஞ்ச நாள்ல நம்ம இலக்கிய ஆசை கொஞ்சம் ரொம்பவே நம்மள நோண்டிவிட சரி சிறுகதை எதாவது எழுதுவோம்னு வென்னிலா கேக் எழுதி, அதுவேற நல்லாயிருக்குன்னு நாலு பேரு சொல்லி, இப்பொ அடுத்தது எழுதலாமான்னு ஒரு யோசனை இருக்கு, நடுவால கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியானதுல, சும்மா அதையும் இதையும் எழுதி பதிவ ஓட்டிட்டு, கடைசியா நிஜமா..??ன்னு 17ம் தேதி எழுதிட்டு போனது, இன்னைக்கு வந்து பார்த்தா.. அப்பு 19ம் தேதியோட நான் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிருக்கு..

நான் முன்னமே வலைப்பூவில சொன்ன மாதிரி உருப்படியா எதும் எழுதனும்னு ஆசைபட்டு வரலைங்க, சும்மா பதிவுகள் படிக்க வந்த ஆளு தான் நான், சரி, பள்ளிக்கூடத்தோட தமிழ் எழுதறதுக்கு ஜூட் விட்டுடமே, சும்மா ஒரு பதிவுன்னு வச்சு எதாசது எழுதுவோம்னு விளையாட்ட ஆரம்பிச்சது.. இன்னைக்கு ஒரு வருஷம் ஆகிபோச்சு, இன்னமும் ஆரம்பிச்சப்போ என்ன எழுதறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு பாருங்க, அந்த குழப்பம் அப்படியே இருக்குதுங்க.

இவனெல்லாம் பதிவு வச்சுகிட்டு, நம்மள தொல்லை பண்றானே, இதுல ஒரு வருஷம் ஆச்சுன்னு சந்தோஷம் வேற படுறானேன்னு, உங்களுக்கு என் மேல எதும் கோவம் வந்தாக்க.. நான் தமிழ்பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க காரணமான ஐகாரஸ்பிரகாஷ், காசி , கே.வி.ராஜா, பி.கே.எஸ் என் பதிவுல முதல் முதலா பின்னூட்டம் குடுத்த மதி, 'மழை'ஷ்ரேயா, இன்னும் யாருனே தெரியாத ஆதித்யா, இவுங்களயெல்லாம் திட்டிக்கோங்க.


--
#97

25 comments:

நாடோடி said...

வாழ்த்துக்கள் ராசா,

சிப்லா பிச்சிகிட்டு போகுது பாத்தீங்களா?

டி ராஜ்/ DRaj said...

Many many more happy returns of the day ;)

Cheers
Draj

வீ. எம் said...

வாழ்த்துக்கள் ராசா !!
இன்னும் பல ஆண்டுகள் வலைப்பூ சேவை செய்ய வாழ்த்துக்கள்

வீ எம்

Sri Rangan said...

இராசா,வணக்கம்!நல்லாச் சொல்கிறீங்க.மேலும் தொடருங்க,என் வாழ்த்துமுண்டு.

Moorthi said...

கொங்கு ராசா... வாழ்த்துக்கள் ராசா! உடாதீங்க.. தொடர்ந்து எழுதுங்க..

அல்வாசிட்டி.விஜய் said...

ஒரு வருசம் இருக்கட்டும். எப்போ பார்ட்டிக்கு கூட்டிப் போறீங்க?. டிரீட் இல்லாமா ஒரு வருச கொண்டாட்டமா? என்ன கோயம்புத்தூரா? சென்னையா? அட்ரஸ் சொல்லுங்க வந்திருவோம்.

போனாப்போகுதுன்னு ட்ரீட்டுக்கு முன்னாடியே வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy) said...

தொடர்ந்து கலக்குங்க ராசா

-மதி

-L-L-D-a-s-u said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள் ..
-
நான் உங்கள் எழுத்துகளின் விசிறி ..

Agent 8860336 ஞான்ஸ் said...

ஞானபீடம் வாழ்த்தியது:

முதலாம் ஆண்டு நிறைவு விழா காணும் ராசாவுக்கு நான் அடித்த வாழ்த்து போஸ்ட்டரு இங்கே !

Greeting posted by-ஞானபீடம்

அப்டிப்போடு... said...

வாழ்த்துக்கள்

PKS said...

அன்புள்ள ராசா,

இடைவெளி விட்டு விட்டு வாசிப்பது என்று சில நேரங்களில் ஆகிப் போனாலும், எப்போது வந்தாலும் அதற்கு முன்னர் வாசிக்காமல் விட்டப் பதிவுகளையும் சேர்த்து என்னை வாசிக்கிற வைக்கிற வலைப்பதிவு உங்களுடையது. ஒருவருடம் ஆகிவிட்டதா? சின்னப் பையன் மாதிரி ஜாலியாக எழுதுகிறேன் என்கிற பிம்பத்தை நீங்களே விரும்பி உங்களுக்கு வைத்துக் கொண்டாலும் (அதையெல்லாம் நம்பி விடுவோமா என்ன நாங்கள்? :-) ) உங்கள் எழுத்துகளில் அதை மீறிய விஷயங்கள் தென்படுகின்றன. நீங்கள் முயன்றால் அவற்றை வளர்த்தெடுக்க முடியும்.

உங்கள் எழுத்துகளில் அப்படித் தென்படுவதாக நான் உணர்கிற சில விஷயங்கள்: இயல்பான மண்வாசனை, வட்டார வழக்கு, எதைப் பற்றியும் சொல்வதற்குத் தயங்காமல், politically சரியா தவறா என்று யோசிக்காமல், மனதில் வருவதைத் தங்கு தடையின்றி எழுதிக் கொண்டே போவது (no inhibitions), நல்ல விவரணை, தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிற நடை, அனாவசியமாக ஆனால் அருமையாக எழுதுதல் முதலியன.

சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் நுழைந்தால் உங்களிடமிருந்து இன்னோர் அருமையான கொங்கு வட்டார எழுத்தாளர் கிடைப்பார் என்று பட்சி சொல்கிறது. ஆர். சண்முகசுந்தரம் மாதிரி வருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஊக்கமும் ஆர்வமும் தருவதற்குக் கூடத் தமிழில் (புகழ்பெற்ற) சிலரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. அவற்றையெல்லாம் மீறி தன்னிச்சையாகவே சொல்லப்போனால் அருவி மாதிரி சலசலவென்று புதிதாக விழுந்து கொண்டேயிருக்கிற நடையில் எழுதுகிற உங்களை உற்சாகப்படுத்தியதற்காக நான் எவ்வளவு திட்டு வேண்டுமானாலும் வாங்கத் தயார்! என் பார்வையில் சொல்வதென்றால் எனக்குத் தெரிந்து எழுத ஆரம்பித்தபின், துரிதமான, பாராட்டத்தக்க மற்றும் சீரான வளர்ச்சியடைந்தவர்கள் என்ற பட்டியல் போட்டால் அவற்றில் மீனாக்ஸ், நீங்கள் என்று சிலரே தேறுவர். மற்றவர்கள் எல்லாம் வெற்றிப்பட பார்முலா மாதிரி அரைத்த மாவையே அரைத்த ஸ்டைலிலேயே அரைத்துக் கொண்டோ, கடனுக்கு எழுதிக் கொண்டோ இருக்கிறோம்.

தொடர்ந்து எழுதுங்கள்! சிறுகதை, நாவல் பக்கம் எல்லாம் வாங்க!

அடுத்த வருடம் உங்கள் சிரசில் மேலும் பல வண்ணச் சிறகுகள் சேர வாழ்த்துகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

PKS said...

அன்புள்ள ராசா,

இடைவெளி விட்டு விட்டு வாசிப்பது என்று சில நேரங்களில் ஆகிப் போனாலும், எப்போது வந்தாலும் அதற்கு முன்னர் வாசிக்காமல் விட்டப் பதிவுகளையும் சேர்த்து என்னை வாசிக்கிற வைக்கிற வலைப்பதிவு உங்களுடையது. ஒருவருடம் ஆகிவிட்டதா? சின்னப் பையன் மாதிரி ஜாலியாக எழுதுகிறேன் என்கிற பிம்பத்தை நீங்களே விரும்பி உங்களுக்கு வைத்துக் கொண்டாலும் (அதையெல்லாம் நம்பி விடுவோமா என்ன நாங்கள்? :-) ) உங்கள் எழுத்துகளில் அதை மீறிய விஷயங்கள் தென்படுகின்றன. நீங்கள் முயன்றால் அவற்றை வளர்த்தெடுக்க முடியும்.

உங்கள் எழுத்துகளில் அப்படித் தென்படுவதாக நான் உணர்கிற சில விஷயங்கள்: இயல்பான மண்வாசனை, வட்டார வழக்கு, எதைப் பற்றியும் சொல்வதற்குத் தயங்காமல், politically சரியா தவறா என்று யோசிக்காமல், மனதில் வருவதைத் தங்கு தடையின்றி எழுதிக் கொண்டே போவது (no inhibitions), நல்ல விவரணை, தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிற நடை, அனாவசியமாக ஆனால் அருமையாக எழுதுதல் முதலியன.

சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் நுழைந்தால் உங்களிடமிருந்து இன்னோர் அருமையான கொங்கு வட்டார எழுத்தாளர் கிடைப்பார் என்று பட்சி சொல்கிறது. ஆர். சண்முகசுந்தரம் மாதிரி வருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஊக்கமும் ஆர்வமும் தருவதற்குக் கூடத் தமிழில் (புகழ்பெற்ற) சிலரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. அவற்றையெல்லாம் மீறி தன்னிச்சையாகவே சொல்லப்போனால் அருவி மாதிரி சலசலவென்று புதிதாக விழுந்து கொண்டேயிருக்கிற நடையில் எழுதுகிற உங்களை உற்சாகப்படுத்தியதற்காக நான் எவ்வளவு திட்டு வேண்டுமானாலும் வாங்கத் தயார்! என் பார்வையில் சொல்வதென்றால் எனக்குத் தெரிந்து எழுத ஆரம்பித்தபின், துரிதமான, பாராட்டத்தக்க மற்றும் சீரான வளர்ச்சியடைந்தவர்கள் என்ற பட்டியல் போட்டால் அவற்றில் மீனாக்ஸ், நீங்கள் என்று சிலரே தேறுவர். மற்றவர்கள் எல்லாம் வெற்றிப்பட பார்முலா மாதிரி அரைத்த மாவையே அரைத்த ஸ்டைலிலேயே அரைத்துக் கொண்டோ, கடனுக்கு எழுதிக் கொண்டோ இருக்கிறோம்.

தொடர்ந்து எழுதுங்கள்! சிறுகதை, நாவல் பக்கம் எல்லாம் வாங்க!

அடுத்த வருடம் உங்கள் சிரசில் மேலும் பல வண்ணச் சிறகுகள் சேர வாழ்த்துகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Anonymous said...

வாழ்த்துக்கள், மென்மேலும் வளர்க!!!
...adhithya

இராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் ராசா! 'வென்னிலா கேக்'-குக்கெல்லாம் காப்புரிமை வாங்கி வச்சுகுங்க; யாராவது சுட்டு குட்டிப் படம் எடுத்தறப்போறாங்க ;-)

நிறைய எழுதுங்க!

சோழநாடன் said...

ராசா,
நான் வலைப்பூக்களின் நீண்ட நாள் வாசகன். உங்கள் வலைப்பூவையும் ஆரம்பித்திலிருந்து படித்து வருகின்றேன். பி கே எஸ் சொன்னதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அப்பாவிபோல் எழுதிய "அந்த ஒரு கேள்வியை" மறக்க முடியாது. :-) . அப் பதிவிற்கு நீங்கள் கொடுத்த பதில் பதிவும் தேவையில்லாதது என்பது என் எண்ணம். விடுங்க. பொதுமாத்து விழுந்ததை பாத்து பயந்துட்டீங்களொ? just kidding...
அதெல்லாம் சரி.. ரெண்டு, மூணு மாதமாய் சும்மா ஜல்லி அடிச்சுகிடு இருக்கீங்களே?(timing sensoda போட்ட கழுதைப்புலியை விட்டுவிட்டால்:-) ) எப்போ அடுத்த (நல்ல) பதிவை போட்றதா உத்தேசம். :-(

2 வருடமாய் வலைப்பூக்களில் வாசகனாய் மட்டும் இருக்கும்:-(
சோழநாடன்

துளசி கோபால் said...

வாழ்த்துக்கள் ராசாத் தம்பி!

'தொண்டர்'களை விட்டுப் போஸ்டர் அடிச்சு இருக்கறதும்
நல்லாத்தான் இருக்கு:-))))

என்றும் அன்புடன்,
அக்கா

Anonymous said...

Poster ellam paathen Raasaa, pramaadhamaa irukku. Kalakkunga! VaazhthukkaL

Uma

PVS said...

vazhthukal Raasa

கொங்கு ராசா said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் 'நன்றிங்கோவ்'

//சிப்லா பிச்சிகிட்டு போகுது பாத்தீங்களா? // அதையேங்க கேக்கரீங்க.. இன்னும் ரெண்டு லாட் இறக்கியிருக்கலாம்..

//எப்போ பார்ட்டிக்கு கூட்டிப் போறீங்க?// ஊருபக்கம் வாங்க சாமி, இளநீர் மிக்ஸிங் கேள்வி தான் பட்டிருப்பீங்க.. நான் காட்டுறேன் அதை.. ;-)

//ராசாவுக்கு நான் அடித்த வாழ்த்து போஸ்ட்டரு //
//'தொண்டர்'களை விட்டுப் போஸ்டர் அடிச்சு இருக்கறதும்//
ஆஹா.. நானில்லைங்க அது.. ஞானபீடமா பார்த்து எதோ அன்புல செஞ்சிருக்காரு.. தேரை இழுத்து தெருவுல விட்டுருவீங்க போலிருக்குது..

நன்றி பிகேஎஸ்.. என்ன சொல்றதுன்னு தெரியலை.. எதோ ஹெல்த்ட்ரிங்க் குடிச்ச மாதிரி இருக்கு, நீங்க எழுதினத படிக்கும் போது (உற்சாகபானம்'ன்னு தான் சொல்ல நினைச்சேன், அப்புறம் தப்பர்த்தம் ஆயிடும்னு மாத்திட்டேன்) ...
எல்லாம் அவன் விட்ட வழி.. :-)

...adhithya.. என்னங்க, மின்னல் மாதிரி டக்குன்னு வர்ரீங்க.. வந்த சுவடே தெரியாம போயிடரீங்க..

சோழநாடன் .. சட்டுபுட்டுனு ஒரு பதிவை ஆரம்பிச்சிருங்க.. நானெல்லாம் ஒரு வருஷமா ஓட்டுறேன்..இன்னுமா நம்பிக்கை வரலை உங்களுக்கு

//அப்பாவிபோல் எழுதிய "அந்த ஒரு கேள்வியை// நிஜம்மாலுமே எதும் மனசுல வச்சுக்காம அப்பாவியா தாங்க அதை எழுதினேன்..
//எப்போ அடுத்த (நல்ல) பதிவை போட்றதா உத்தேசம்.// அதுக்கு தானுங்க ராதான்னே நானும் முயற்ச்சி பண்றேன்.. எங்க.. சட்டியில இருந்தாத்தான கரண்டியில வரும்..

மீண்டும்.. வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் 'நன்றிங்கோவ்'

Agent 8860336 ஞான்ஸ் said...

நல்லவேலயா நீங்களே வந்து நன்றி போட்டீங்க.
இல்லாட்டி நானு இப்டி செய்றதா இருந்தேனுங்க!
(எல்லாம் ஒரு அன்புலதாங்க!)

எங்கள் சிங்கம்,
கொங்கு நாட்டுத் தங்கம்,
ஒரு வேலையாக internet connection இல்லாத வெளியூர் சென்றுள்ளதால் இங்கு
வந்து நன்றி சொல்ல தாமதமாகிறது.

எனவே எங்கள் தங்கம், சார்பாக
இங்கு வந்து வாழ்த்திய அனவருக்கும்
மிக்க நன்றி.

இப்படிக்கு
ஞானபீடம்

கொங்கு ராசா said...

அண்ணாச்சி... நாமெல்லாம் டயலப்வாசிகள்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தாத்தான் கட்டுபடியாகுது.. அதான் லேட்டா வந்திருக்கேன். கோவிச்சுக்காதீங்க.. இப்படி போஸ்டரெல்லாம் அடிச்சு கலக்கிட்டீங்களே.. உங்க அன்புக்கு எப்படி கைம்மாறு செய்யிறதுன்னே தெரியலைங்க.. (இதை 'சிவாஜி' மாடுலேஷன்ல படிச்சுக்கோங்க..)

எனக்கென்னவோ, நம்ம கூட்டளிக, காலேஜ்ல செக்ரட்டரி எலக்ஷனுக்கு இப்படித்தான் போஸ்டரெல்லாம் அடிச்சு, என்னைய இழுத்துவிட்டு, அப்புறம் சஸ்பென்ஷன் வரைக்கும் கொண்டு போய் நிறுத்துனானுக.. அதான் ஞாபகம் வருது..

(பொள்ளாச்சியில என்னைக்கு அகலபாட்டை என்னும் ராஜபாட்டை கிடைக்குமோ.. ச்சே.. )

கோபி(Gopi) said...

எங்கள் கொங்கு தேசத்தின் ராசா தனது வலைப்பூ குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் இந்த வேளையிலே இந்த நன்னாளைக் கொண்ட்டாட ஒரு ப்ரம்மாண்டமான் பேரணியை ஏற்பாடு செய்ய உள்ளோம்.

உண்டியல் வசூல் செய்யும் உரிமை எ.க.சே.க (எக்கச்சக்க இல்லீங்க, "எந்தக் கட்சியிலும் சேராதோர் கட்சி")யின் 322வது வார்டு செயலாளர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் அந்த உரிமையை தலைவர் ராசா அவர்கள், போஸ்டர் அடித்து ஒட்டிய யாருக்கும் கொடுத்தால் வரும் தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் ப்ரச்சனைகள் ஏற்படும் என்பதையும் இந்த வேளையிலே ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி! வணக்கம்! (ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா! சோடா ஒடைங்கப்பா!)

Agent 8860336 ஞான்ஸ் said...

ஞானபீடம் எழுதிக்கொள்வது:
----------------
//..பொள்ளாச்சியில என்னைக்கு அகலபாட்டை என்னும் ராஜபாட்டை கிடைக்குமோ..//-(ராசா)

கெடக்கிறது கெடக்காம இருக்காது;
கெடக்காதது கெடக்காது;
எங்கள் சிங்கத்துக்கு எல்லாம் கெடக்கும் சஸ்பென்ஷன் தவிர!

---
கோபிக்கு பதில் உரைக்கும் விதமாக:

எங்கள் தங்கமே, சிங்கமே,
எமக்கு பொன், பொருள், உண்டியல் எதுவும் தேவையில்லை; தங்களின் மேலான அன்பு ஒன்றே போதும்!
அதை தாங்களும் அறிவீர்கள்!

(நயந்தாரா பாடியது போல்:)
ஒரு போஸ்ட்டர் ஒட்ட ஒரு வருஷம்
நா காத்திருந்தேன்...!


உண்டியல் மேல் கண்/கைவைக்க காத்திருக்கும் சிறு நரிக்கூட்டத்தை,
எங்கள் சிங்கமே, இனம் கண்டு கொள்வீராக!
------------
கோபி, சோடாவ ஒடச்சா கீழ கொட்டிடாதா? அப்பொறம் எப்டி குடிப்பீக?!
உண்டியல ஒடக்கிற ஞாபகத்துல சொன்னீங்களாக்கும்!


- ஞானபீடம்

NONO said...

இனிய வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

Anonymous said...

Hi rasa,

You are a wonderful writer. I am a regular reader of your blog. Keep up the good work. All the best. - Prasannaa Sampathkumar