நிஜம்மாலுமே மீடியா மட்டும் தாங்க நாடெங்கும் பரபரப்பு அப்படி இப்படிங்கிறாங்க,,
இங்க ஊருக்குள்ள யாருகிட்டயாவது ஜெயேந்திரர்'ன்னு ஆரம்பிச்சா, 'அட நீ வேற பெரிய வாய்க்கால்ல தண்ணி விட்டுருக்காங்க, நாங்க அதை பத்தி நினைச்சுட்டு இருக்கோம், நீ என்னம்மோ பெரிய சாமியரை பத்தி பேசிட்டிருகே'ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு போயிடறாங்க..
ஒரு வேளை சென்னையில எல்லாம் பரபரப்பு இருக்குமோ என்னவோ, இங்க நம்ம ஊருப்பக்கம் ஒரு பரபரப்பயும் காணோம்.
சரி.. சொல்ல வந்தது விட்டுபுட்டு வழக்கம் போல கதை பேசிட்டிருக்கேன்..
ஒரு 5 வருஷம் முன்னாடி, எங்கய்யனோட கூட்டாளிக ரெண்டுபேரு குடும்பம், எங்கய்யன் அம்மா, நான்னு ஒரு கூட்டம ஒரு புனித யாத்திரை போயிருந்தோமுன்ங்க. புனித யாத்திரைன்னதும் யாரும் எதோ பெருசா காசி (தமிழ்மணம் காசி'யிலீங்க.. இது வேற), இமயமலைன்னு நினைச்சுராதீங்க, இங்க இருந்து அப்படியே கெளம்பி திருப்பதி போயி அப்படியே வரும்போது காஞ்சிபுரம், திருத்தனின்னு வந்தோம் அவ்ளோதான்..
நமக்கு எற்க்கனவே இந்த சாமி, பக்தி.. இதுக்கெல்லாம் கொஞ்சம் தூரம்ங்க, இருந்தாலும் அப்போ காலேஜ் முடிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்த நேரமா, சரின்னு நானும் போயிருந்தனுங்க.
எல்லாம் நல்லத்தான் இருந்துச்சு, இவுங்க ஒவ்வொரு பக்கமா ஓடி ஓடி சாமி கும்பிடறதும் (அதென்னமோ இந்த பொம்பிளைக, எந்த கோயிலுக்கு போனாலும், எல்லாரும் வெளிய வந்த பின்னாடி மறுக்கா ஒரு தடவை உள்ள போயி சாமி கும்பிட்டுட்டு தான் வருவோம்ன்னு அடம் பிடிக்கறாங்க).
கூடவே நானும், செந்தானும் (செந்தில்குமார் - எங்கய்யனோட கூட்டாளி பையன், எனக்கும்தான்), இவங்களுக்கு பாதுகாப்பா போயி எங்களால முடிஞ்சளவுக்கு 'தரிசனம்' செஞ்சுகிட்டு வந்திருவோம்.
அப்படிபோனப்பத்தான் நமக்கு காஞ்சிபுரம் ஜெயேந்திரரை தரிசிக்கிற வாய்ப்பு கிடைச்சது. எங்க அய்யனுக்கு கொஞ்சம் பழக்கமான் சென்னை 'வக்கீல் அங்கிள்' தான் எங்களை கூட்டிட்டு போயி இன்னாருன்னு சொல்லி ஆசிர்வாதம் வாங்கி குடுதாருங்க,
சாமியாரு முன்னாடி உக்காந்திருக்க, ஒவ்வொருத்தரா போயி கும்பிடு போட்டுட்டு வந்தாங்க, நானும் எங்கம்மாவோட 'அக்னிப்பார்வை'ய சமாளிக்க முடியாம போய் அசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே பக்கத்துல நின்னேன்.
எனக்கு அடுத்து செந்தான், அவன் தங்கச்சி, அவுங்க அய்யனம்மா எல்லாரும் ஆசிர்வாதம் வாங்க வந்தாங்க.
(இந்த எடத்துல ஒன்னு சொல்லனும் - நானும் எங்கம்மாவும் கொஞ்சம் திராவிட கலர்.. சரிங்க.. கொஞ்சம் கருப்பு. எங்கய்யன் நல்ல கலரா இருப்பாருங்க, ஆனா செந்தான் குடும்பத்துல எல்லாரும் கொஞ்சம் நல்லாவே பளபளப்பா இருபாங்க, இதுல செந்தானோட அய்யன், மீசையெல்லம் வழிச்சுட்டு ஜம்முன்னு இருப்பாருங்க)
இவுங்க குடும்பமா வந்து சாமியார் முன்னாடி நின்னது சாமியார் வக்கீல் அங்கிள் பக்காமா திரும்பி ஒரு கேள்வி கேட்டருங்க, அது எனக்கு நல்லாவே காதுல விழுத்துச்சுங்க.. அதை நான் வெளிய வந்தததும் எங்க கூட்டத்துல சொன்னேன், ஆனா ஒரு ஆளும் (எங்கய்யனும், அவரோட இன்னொரு கூட்டளி தவிர) யாரும் நான் சொன்னதை நம்பவேமாட்டேனுட்டாங்க.
ஆனா, நிஜம்மா சொல்றேனுங்க, அவர் அப்படி கேட்டது உண்மை. சரி என்னை நம்பாட்டி 'வக்கீல் அங்கிள்'கிட்ட கேட்டு பாருங்கன்னு சொன்னேன், வேண்டாம்னு தடுத்துட்டாங்க.. நானும் அதுக்கப்புறம் 'வக்கீல் அங்கிள்'ல பார்க்கிறப்பெல்லாம் கேக்கனும்னு நினைக்கிறது, ஆனா, சரி வேண்டாம், நமக்கு ஆகாதுன்னா விலகிறனும், எதுக்கு சும்மா அதை கிளறிட்டுன்னு விட்டுறது..
அப்படி என்னடா கேட்டாருங்கரீங்களா??
பார்த்தீங்களா.. நான் எப்பவுமே இப்படிதானுங்க.. சொல்ல வேண்டியதை சொல்லாம எல்லாத்தையும் சொல்லுவேன்.. ச்சே.. இந்த பழக்கத்தை எப்படியாவது மாத்தனுமுங்க..
அவர் கேட்டது "இவா நம்மவாளா?"
சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு உடுத்திக்கலாம்..
நெஞ்சு கிழிஞ்சிருச்சே.. எங்க முறையிடலாம்...
9 comments:
I believe you. I read an usenet article in soc.culture.tamil in 1998 which pretty much resembles your experience. Here is the link for that one. If the link doesn't work, search for "Nagereshu Kanchi" in google groups.
http://groups.google.com/groups?hl=en&lr=&c2coff=1&threadm=34D64CEC.2FF1%40geocities.com&rnum=101&prev=/groups%3Fq%3Dkanchi%26start%3D100%26hl%3Den%26lr%3D%26group%3Dsoc.culture.tamil%26c2coff%3D1%26scoring%3Dd%26selm%3D34D64CEC.2FF1%2540geocities.com%26rnum%3D101
ஒன்னுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...
i am not surprised by what u have written.
À¾¢ø ¦¸¡ïºõ ¿£ÇÁ¡¾Ä¡ø.. þíÌ À¾¢ó¾¢Õ츢§Èý..
http://groups.yahoo.com/group/Maraththadi/message/21768
±ý¦ÈýÚõ «ýÒ¼ý,
º£Á¡îÍ...
நேத்தே நான் ஒண்ணு போட்டேன், ஏனோ வலையேறலை. ஏழை சொல் அமபலத்துல ஏறாதாம், மின்னம்பலமுமா?
ஒண்ணும் இல்லை, நான் சொல்லவந்தது அருள்செல்வன் சொல்லிட்டார்.
இந்த பிரச்னையில் எனக்கு என்னென்னமோ எழுதத் தோணுது, ஆனா நேரமில்லையே.
அதுசரி ராசா, ஊர் நிலவரம் என்ன?
-காசி
ஆஹா!! பெரியவங்க எல்லாம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க..
ஆமா. காசி சார், 'அருள்செல்வன்' என்ன சொன்னாரு? எங்க சொன்னாரு?
இந்த பிரச்சனை மரத்தடியில போயி இப்போ அங்க எல்லாரும் 'நீ ஏன்டா அங்க போன. போயிட்டு அப்புறம் சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காத'ங்கறாங்க.. அதை தாங்க நானும் சொல்றேன்.. அந்த இடம் நம்மள மாதிரி 'சாதாரண' ஆட்களுக்கான இடமில்லைங்கிறத தான நானும் சொல்லியிருந்தேன்.. என்னவோ போங்க.. இனி நான் அதை பத்தி பேசறதா இல்லைங்க..
இந்தக் கேள்வியை நடிகர் விஜயகாந்த் ஜெயேந்திரரிடமே கேட்டிருப்ப்பார். அதை வி.காவின் ஒரு பேட்டியில் (குமுதம்/ஆவி) நான் படித்தேன். அதற்கு ஜெ. மழுப்பியிருப்பார். இதெல்லாம் அங்க சகஜமப்பா!
ப்ளாக்கர் சில பதிவுகளை சாப்பிட்டுடுது. சில மறுமொழிகளை வீசிடுது. அதனால் என்னுதையும் எங்கெயே தூக்கி வீசிட்டதை அப்படிச் சொன்னேன்.
சரி, அருள் சொன்னது இங்கே:
http://groups.yahoo.com/group/Maraththadi/message/21774
Post a Comment