Monday, April 23, 2007

ஒரு வார இறுதி

ஆறு பைக், பதினோரு தடியனுக, சூரிய உதயத்துல தொடக்கம், 200 கிமீ, நல்ல வெயில், அளவான அருவி, கொஞ்சமா மரங்கொத்தி, சூடா மசாலாவில வறுத்த மீன், கழுத்து ஆழத்துக்கு ஆத்துல தேங்கி போகும் தண்ணியில ஆட்டம், கஞ்சி வடிச்ச சோறு, குருமிளகும் நல்லெண்ணையும் மிதக்கிற கோழிச்சாறு, காட்டுமரத்தடியில தூக்கம்..


வெய்யில் இறங்குது, லேசா தூறல், தூறலோட அருவி குளியல், சுள்ளி போட்டு தணல், பாக்கெட் மசாலா போடாத அக்மார்க் கிராமத்து வறுவல், ஐஸ்க்யூப் செவனப் வகையெல்லாம் இல்லாம ஆத்து தண்ணி கலந்த கருப்புவெள்ளை, ப்ளேயர்ல 'ஆத்தாடி பாவாடை..', வெளி ஆள் யாரும் இல்லாத தைரியத்துல வெக்கம் விட்டு கொஞ்சம் ஆட்டம், நாலுகிலோமீட்டர் தள்ளி போயி வாங்கிட்டு வந்த சுத்து பரோட்டா, தேங்காயும் பட்டையும் அரைச்சு ஊத்தின குழம்பு, அஞ்சு பேருக்கு மிச்சம் இருந்த ரெண்டே ரெண்டு 'ராஜா'....

பத்துக்கு பத்துல அளவுல அம்பதுஅடி உயரத்துல கண்காணிப்பு கோபுரத்துல தூக்கம், அஞ்சரை மணிக்கெல்லாம் உறக்கம் கலைச்சு விட்ட பறவைக சத்தம், நடுவால சேர்ந்த ரெண்டு காட்டு ஓடைய கடந்து ரெண்டுமணி நேரம் அத்தங்கரையோரம் நடை, பாறை மேல் சூரியகுளியல் நடத்திட்டு இருந்த முதலை, ஆறு கிமி தள்ளி வந்து இருவத்து ரெண்டு குடும்பம் குடித்தனம் செய்யுற ஒரு கிராமத்துல சூடா இட்லியும் கதம்பசாம்பாரும், வளைஞ்சு வளைஞ்சு ஓடுற மலைப்பாதையில மறுபடி பயணம், நடுவால கறிசோறும் தாளிச்ச மோரும், சூரிய அஸ்மனத்துக்கு முன்னாடி வூடு , சுடு தண்ணி குளியல், கொஞ்சமா உப்புமாவும் பாலும், நீண்ட தூக்கம்..

அதுக்குள்ளாரயா ஒரு வார இறுதி முடிஞ்சிருச்சு???








--
#223

Friday, April 20, 2007

என்ன பொழப்புடா.. :)

ஏரியா பூராவும் பவர்கட்,
மணி பதினொன்ன நெருங்குது,
சந்தடி எல்லாம் ஓஞ்சாச்சு,
அமாவசை போயி ரெண்டு நாள் தான் ஆவுது,
வெளிய சீரான தாளத்தோட மழை,
திறந்திருக்கிற கதவு வழியா பூத்தூறலா சாரல்,
ப்ளேயர்ல "அந்த அரபிக்கடலோரம்.. " ரஹ்மான்,
தோளைபட்டைய புடிச்சபடி நம்ம சகி...



"என்ன பொழப்புடா பங்கு இது... ".. நகர வாசத்தில வாசன சந்தடியில சலிச்சு போயி சாயங்காலம் சகா சொன்ன வார்த்தை, இப்போ சிரிப்பா இருக்கு எனக்கு.. :)


--
#222

Thursday, April 19, 2007

அழகே அழகு..

நான் பாட்டுக்கு எழுத்துலக சேவை எல்லாம் செய்யாம அமைதியா ஒரு வழிப்போக்கனா பராக்கு பார்த்துட்டு உக்காந்திருந்தா.. நம்ம அனு வந்து அழகை பத்தி எழுதுங்கன்னு இழுத்து விட்டுட்டாங்க.. ம்ம்.. விதி யாரை விட்டுது.. :)


அழகை பத்தி எழுதறதுன்னு நினைச்சதும்.. எல்லாமே அழகா தெரியுதுங்க.. 'என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.."ன்னு பாடாத குறை தான்..

நமக்கு எல்லாமே அழகு தான், பதினேழு இன்ச்ல தட்டையா அடக்கமா எதிர்தாப்புல இருக்கிற கணிணி திரை, அதுல ஒரு ஓரத்துல பணியிடம் மாறி வேற தேசம் போன ஒரு தோழி 'மார்க்கர்'ல கிறுக்கி வச்சுட்டு போயிருக்கிற 'bye-bye dumbo'ங்கிற வாழ்த்துரை, பின்பக்கம் விசாலமான நடைபாதையில ஒரு ஓரத்துல இருக்கிற கண்ணாடி தொட்டியில சாவித்ரி, ஜமுனா'ல இருந்து ஷில்பாசெட்டி, சிம்ரன், ஏன் ஷக்கீரா வரைக்கும் எல்லாருமே தோத்துபோற அளவுக்கு நெளிவு சுளிவோட வளையவர்ற சீனத்து தங்கமீன், காலையில வீட்டை விட்டு கிளம்பும்போது, அவசர அவசரமா புத்தகத்தை ஒரு கையால புரட்டிகிட்டு தலைமுடிய ஒதுக்கிவிட்டுகிட்டே நம்ம வூட்டு பக்கம் இருக்கிற மைனா-காலேஜுக்கு போயிட்டிருந்த ஒரு மைனாவோட தொங்கட்டான், நம்ம கண்ணு மைனா பக்கம் போறத தலைக்கவசத்தை மீறியும் கண்டுபுடிச்சு நங்'குன்னு கவசத்துமேல ஒரு கொட்டு கொட்டி 'ஒழுக்கமா போயிட்டு வா'ன்னு நம்ம அம்மணி காமிச்ச செல்லகோவம், அவசரத்துக்கு காலைப்பசிய போக்க போகும் உடுப்பி கடை மசால் தோசை மேல மின்னுற வெண்ணை கட்டி, மாசக்கணக்கா தண்ணியோ துணியோ பார்க்காத என் செல்ல RX, நம்ம சகா கூட்டத்துக்குன்னு வச்சிருக்கிற 'ஆசை நூறு வகைய' தினமும் நாலு தடவையாவது எனக்கு பாடிக்காட்டுற கைப்பேசி, ஒரு விடுமுறையில அதிரப்பள்ளி அருவியில ஒரு நிமிச அஜாக்கிரதையில தண்ணியில அடிச்சுட்டு போயி எதோ ஒரு மரவேரை புடிச்சிட்டு தத்தளிச்சத, கரையில இருந்து என்ன செய்யிறதுன்னு தெரியாம, என் சகா ஒருத்தன் புடிச்ச வச்ச புகைப்படம், 'இதெல்லாம் ஒரு படம், இதையும் பார்க்கிறானுக, ஹிட் ஆகுது'ன்னு புலம்பும் போது, பத்து வருசம் முன்னாடி ஒரு 'குப்பை' படம் பார்க்க முதநா கூட்டத்துல கம்பிய புடிச்சு அடுத்தவன் தோள் மேல ஏறி டிக்கட் வாங்கும்போது பின்னங்கழுத்துல கம்பி அறுத்து ரத்தக்காயத்தோட விடாம போயி படம் பார்த்தத நினப்பக்கூட்டும் பின்னங்கழுத்துதழும்பு, வூட்டு வாசல்ல சீசனுக்கு முதமுதலா பூக்கிற மேஃப்ளவர் மரம், கூடவே போட்டி போடுற வேப்பம்பூ மணம், நல்ல வெய்யில்ல மாறான் வெட்டி தர்ற கீழ்தோட்டத்து செவ்விழநி, தென்னங்கீத்துக்கு நடுவால விழுகற பெளர்ணமி நிலா வெளிச்சம், கூடவே வழிஞ்சு ஓடுற 'மொட்டை', உச்சிவெயில்ல முள்ளுப்பாடி கேட்டுல நிக்கும் போது, வேலை செய்யாத ஏசிக்காக எங்கய்யனை கறுவிக்கிட்டே, சாப்பிடுற உப்புமிளாகாப்பொடி தடவுன வெள்ளரிபிஞ்சு, நம்ம மக்க கூட ஜமா சேர்ந்து பொங்கும் போது மட்டும் வாங்கும் 'சங்கு' ப்ராண்டு லெமன் ஊறுகாய் பாக்கெட், சீக்கிரமா தூக்கம் கலைஞ்ச விடுமுறைகள்ல சூரியன் உதிக்கப்பாக்குற நேரத்துல யாருமே இல்லாம நமக்கே நமக்கு மட்டும்னு சில்லுன்னு தெரிக்கிற ஆழியார் குரங்கு அருவி, வரப்புல நடக்கும் போது ஒரு நிமிசம் பயங்காட்டிட்டு, சரசரன்னு நெளிஞ்சு ஓடி வேலியோரம திரும்பி படம் புடிக்கும் மஞ்சக்கோடு விரியன் பாம்பு, ஊரையே ரெண்டாக்கிட்டு திரியர என் சகா 'செந்தான' சும்மா அடிச்சு மிதிச்சு பணிய வச்சிடுற 'அவன பெத்த' ஒன்னரைவயசு 'மித்து', முன்ன ஒரு நாள் கரண்ட் இல்லாத முன்னிரவுல இடி மின்னல் இல்லாம ஆர்பாட்டமா பெய்ஞ்ச மழை, எல்லா விசேஷத்துக்கும் நான் கட்டிட்டு திரியும் எங்கய்யனோட கல்யாண பட்டு வேட்டி, இப்படி ஒரு வரைமுறையே இல்லாம அரைப்புள்ளி அரைப்புள்ளியா வச்சு நான் எழுதறது.. இதுவும் அழகு தான். (ஒத்துகோங்க.. இல்லாட்டி இன்னும் ஒரு பக்கம் இதே மாதிரி அரைப்புள்ளி தொடரும்.. ஆமா)

இது அத்தனையும் விட "எம்பத்துமூணு வயசாச்சு, இதுல இந்த சிக்கன்குனி வேற வந்து படுத்திபோடுச்சு, உக்காந்தா எந்திருக்க முடியல.. ரொம்ப நேரம் கால தொங்கப்போட்டவாக்குல உக்கார முடியல"ன்னு ஆயிரம் வேதனை இருந்தாலும் பேரன் குடித்தனம் செய்யுற அழகை பார்க்கனும்னு புடிவாதமா சில நூறு கிலோமீட்டர் பயணஞ்செஞ்சு வந்து, 'நம்மூட்டு ஆசாரத்தை வுட வூடு சிறுசா இருக்கு, இதுக்கு இத்தனை வாடகையா'ன்னு அங்கலாய்ப்போடவே சமையக்கட்டுல சேர் போட்டு உக்காந்து வெங்காயம் உரிச்சுகிட்டே 'உம்மச்சானுக்கு பருப்புஞ்சோத்துக்கு கத்திரிக்கா பொரியல் வச்சீன்னா நொம்ப புடிக்கும்'னு நம்ம அம்மணிக்கு 'டிப்ஸ்' குடுத்துகிட்டே நம்ம சின்னவயசு அடாவடிகள 'போட்டுகுடுத்துட்டு' இருக்கிற எங்க அம்முச்சி எனக்கு "அழகு .. பேரழகு".





----


மூணு பேரை கூப்படனுமா..??
யாரு சிக்குவா.. ??
ரைட்டு நம்ம பங்குக்கு இவுங்க..

-வித்யாசாகரன் (ஆளையே காணோம்.. இழுத்து விடுவோம்)
-மோகன்தாஸ (நல்ல அழகான் சினிமா எதாவது கிடைக்கலாம்)
-ஆசிஃப்மீரான் (நல்ல 'அழகான' படம் கிடைக்கலாம்.. ஹீ..ஹி)

--
#221

Friday, April 13, 2007

'பொறி'யில் சிக்கியது

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பயணத்தில் வருகின்ற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கின்ற முதல் கூச்சம்

பரிட்ச்சைக்கு படிக்கின்ற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீ தானே!

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீ தானே!

தினமும் காலையில் எனது வாசலில்
எடுக்கும் நாளிதழ் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

தாய்மடி தருகின்ற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல் படும் நகக்கணங்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீ தானே!

பிடித்தவர் தருகின்ற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீ தானே!

எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்



தீனா இசையில் பாடுனது பாலகிருஸ்ணா & மதுஸ்ரீ (கொஞ்சம் கொஞ்சமா அம்மிணி குரல் புடிக்க ஆரம்பிக்குது.. ம்ம் இப்படித்தான் ஹரினி ஹரினி'ன்னு ஒரு காலத்துல கிடந்தோம்.. )

பாட்டு கேட்க..

சஹானா' பக்கம் போக விடமாட்டேங்கிறாங்க..

--
#220