Monday, April 23, 2007

ஒரு வார இறுதி

ஆறு பைக், பதினோரு தடியனுக, சூரிய உதயத்துல தொடக்கம், 200 கிமீ, நல்ல வெயில், அளவான அருவி, கொஞ்சமா மரங்கொத்தி, சூடா மசாலாவில வறுத்த மீன், கழுத்து ஆழத்துக்கு ஆத்துல தேங்கி போகும் தண்ணியில ஆட்டம், கஞ்சி வடிச்ச சோறு, குருமிளகும் நல்லெண்ணையும் மிதக்கிற கோழிச்சாறு, காட்டுமரத்தடியில தூக்கம்..


வெய்யில் இறங்குது, லேசா தூறல், தூறலோட அருவி குளியல், சுள்ளி போட்டு தணல், பாக்கெட் மசாலா போடாத அக்மார்க் கிராமத்து வறுவல், ஐஸ்க்யூப் செவனப் வகையெல்லாம் இல்லாம ஆத்து தண்ணி கலந்த கருப்புவெள்ளை, ப்ளேயர்ல 'ஆத்தாடி பாவாடை..', வெளி ஆள் யாரும் இல்லாத தைரியத்துல வெக்கம் விட்டு கொஞ்சம் ஆட்டம், நாலுகிலோமீட்டர் தள்ளி போயி வாங்கிட்டு வந்த சுத்து பரோட்டா, தேங்காயும் பட்டையும் அரைச்சு ஊத்தின குழம்பு, அஞ்சு பேருக்கு மிச்சம் இருந்த ரெண்டே ரெண்டு 'ராஜா'....

பத்துக்கு பத்துல அளவுல அம்பதுஅடி உயரத்துல கண்காணிப்பு கோபுரத்துல தூக்கம், அஞ்சரை மணிக்கெல்லாம் உறக்கம் கலைச்சு விட்ட பறவைக சத்தம், நடுவால சேர்ந்த ரெண்டு காட்டு ஓடைய கடந்து ரெண்டுமணி நேரம் அத்தங்கரையோரம் நடை, பாறை மேல் சூரியகுளியல் நடத்திட்டு இருந்த முதலை, ஆறு கிமி தள்ளி வந்து இருவத்து ரெண்டு குடும்பம் குடித்தனம் செய்யுற ஒரு கிராமத்துல சூடா இட்லியும் கதம்பசாம்பாரும், வளைஞ்சு வளைஞ்சு ஓடுற மலைப்பாதையில மறுபடி பயணம், நடுவால கறிசோறும் தாளிச்ச மோரும், சூரிய அஸ்மனத்துக்கு முன்னாடி வூடு , சுடு தண்ணி குளியல், கொஞ்சமா உப்புமாவும் பாலும், நீண்ட தூக்கம்..

அதுக்குள்ளாரயா ஒரு வார இறுதி முடிஞ்சிருச்சு???








--
#223

4 comments:

ILA (a) இளா said...

அம்மணி விட்டுப்புட்டு ஊர் சுத்தல் என்ன வேண்டிகிடக்கு? எங்க ஊருங்கய்யா இது?

Anonymous said...

nalla iru

Anonymous said...

I love to read your post.Feel like we all went with you on this trip.
Wonderful post.

Selvi

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

எந்த ஊர்னு சொல்ல மாட்டீங்களா?