Friday, April 13, 2007

'பொறி'யில் சிக்கியது

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பயணத்தில் வருகின்ற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கின்ற முதல் கூச்சம்

பரிட்ச்சைக்கு படிக்கின்ற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீ தானே!

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீ தானே!

தினமும் காலையில் எனது வாசலில்
எடுக்கும் நாளிதழ் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

தாய்மடி தருகின்ற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல் படும் நகக்கணங்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீ தானே!

பிடித்தவர் தருகின்ற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீ தானே!

எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்



தீனா இசையில் பாடுனது பாலகிருஸ்ணா & மதுஸ்ரீ (கொஞ்சம் கொஞ்சமா அம்மிணி குரல் புடிக்க ஆரம்பிக்குது.. ம்ம் இப்படித்தான் ஹரினி ஹரினி'ன்னு ஒரு காலத்துல கிடந்தோம்.. )

பாட்டு கேட்க..

சஹானா' பக்கம் போக விடமாட்டேங்கிறாங்க..

--
#220

5 comments:

ILA (a) இளா said...

உள்குத்தோன்னு நினைச்சு வந்தேன். இல்லைன்னு சொன்னாலும், நம்ம ஊரு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தியாவே இந்தப்பதிவுல இருக்கு

ilavanji said...

ராசா,

திரைப்படப் பாட்டா?! மொதல்ல படிச்சுட்டு பயந்துட்டேன்! நீங்கதான் கவிதை எழுதி அதை ஒரே லைனை ரெண்டு ரெண்டு தடவையா படிச்சுக்காமிக்கறீரோன்னு... :)))

வழக்கமான பாட்டு லிங்க் மிஸ்ஸிங்!

ILA (a) இளா said...

ஆசானே,(அந்த 7 நாட்கள் -படம் ஞாபகம்) என்ன இந்தப் பக்கம் உங்க சத்தம் பலமா இருக்கு?

Pavals said...

இளா >> உள்குத்தா..?? அடங்க மாட்டீங்களா.
ஆமா.. இதுல என்னத்த குசும்ப கண்டுட்டீங்க.. :)

இளவஞ்சி>> வாத்யாரே.. நம்மள நம்பலாம்.. கவிதை எல்லாம் படிச்சு காட்டி கொலக்கேசுல உள்ள போயிறமாட்டேன் :)
லிங்க் - போட்டாச்சு.. போட்டாச்சு

Kupps said...

hmmm...varuththa padaadha vaalibar sangaththula irundhu 'kadala' pOttavaru, ippidi chavukku chavukkunnu irukkara 'poRi'-la maatikkittaaru.

midday moffussil bus vetti paya vaazhkkaya paththi oru paattu adhukku சாங்கு-ல oru padhivu; kavingar ayyaa kaalam ayya (read it a la Mess viswanathan MSV of kaadhal mannan).