பிரச்சனை என்னன்னா? "ஒருத்தன் கவிதைன்னு எதாவது எழுதறான்னா அவன் கண்டிப்பா காதல்ல விழுந்திருகனும்"ங்கிறது அவனோட அயிப்பராயம், நான் 'கம்'முன்னா இருப்பேன்?, வழக்கம் போல விதன்டாவாதமா எதாவது பேசாட்டி நமக்கு மண்டை வேடிச்சுடுமே, "அப்படியில்லாம் கிடையாது அது மனசும், புத்தியும் சம்பந்தபட்டது"ன்னு நான் சொல்ல, அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பேசி, பேசி, பேசி,.. "அப்ப நீ ஒரு காதல் கவிதை எழுது பார்ககலாம்"னு நம்ம தன்மானத்தை(!) உரசி பார்க்கிற மாதிரி ஒரு இடத்துல வந்து பேச்சுவார்த்தை நின்னுருச்சுருங்க.
"என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை"ன்னு நினைச்சுகிட்டு, நானும் டக்குன்னு சரின்னு சொல்லிட்டனுங்க (எதை சொன்னாலும் செய்யறேன்னு சொல்ற இந்த அதிகப்பிரசங்கித்தனம் தான் எனக்கு ஒரு நாள் குழி வெட்ட போகுது). அப்புறம் என்ன வழக்கம் போல ஒரு காரியம் செஞ்சிரலாம்னு ஒத்துகிட்டு, அப்புறம் மூளை குழம்பி போய் சுத்த வேன்டியது தான் வழக்க்மாகிப்போச்சே, இருக்கிறதே கொஞ்சூன்டு மூளை, அதையும் குழம்ப விட்டா, அப்புறம் கள்ளு குடிச்ச குரங்கு, இஞ்சியையும் கடிச்சுகிட்ட மாதிரி ஒரு நிலைமையாகி போச்சுங்க.
நமக்கு இந்த கவிதைகளுக்கும் பொதுவா ஏழாம் பொருத்தம்தான். காலேஜ்ல மூனாவது வருஷம் படிக்கும் போது, அதுவரைக்கு தன் கிளாஸ்ல படிச்சுட்டு இருந்த ஒரு கேரளா பொண்னு மேல பைத்தியமா இருந்த எங்க BBC Gang மணி, அந்த பொண்ணோட தங்கச்சி பர்ஸ்ட் இயர் வந்து சேர்த்ததும், அவ பின்னாடி போனதை நான் (வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமா) எங்க ஹாஸ்டல் போர்ட்ல எழுதி கலாய்க்க, அதை எடுத்து எங்க MIB* கிளப் ஷங்கர், அங்ககங்க கொஞ்சம் வெட்டி சரி செஞ்சு, 'ஷங்கர்-ராஜா' ங்கிற பேருல அதை எங்க காலேஜ் 'yearbook'ல போடவச்சான், (அது அப்புறம் விகடன்' காலேஜ் காம்பவுன்ட்'லயெல்லாம் வந்து, அந்த நாலு வரி கவிதைக்கு! பதினஞ்சு பாட்டில் பீர் செலவு ஆகிபோச்சு) அந்த கவிதை..
' உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் சிஸ்டரை கண்டேன்
உன்னை மறந்தேன் '
*(MIB - Men in black, கொஞ்சம் கருப்பா, என்னை மாதிரி, இருக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து நடத்துன கேண்டீன் கிளப்)
அதுக்கப்புறம் ரெண்டு மூனு தடவை, அந்த மாதிரி முயற்ச்சியில இறங்கி, அப்புறம் நம்ம கூட்டாளிக கிட்ட இருந்து கிடைச்ச 'பெட்ஷீட்பூசை'க்கு பயந்த்துகிட்டு, நான் அந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுல இறங்கிறது இல்லைங்க, (நாம என்ன 'மீனாக்ஸ்'ஆ?, மனுஷன், பசங்க தண்ணியடிக்கும் போது, சும்மா கூட போய் சும்மா உக்காந்துட்டு வந்து படுற அவஸ்த்தைய பத்தியெல்லாம் கூட அழகாக எழுதறாருங்க).
இருந்தாலும், நம்ம கிட்ட ஒருத்தன் சவால் விட்டுடானேன்னு, இந்த தடவை அந்த ஆபத்தான விளையாட்டுல இறங்கிட்டேன்ங்க. ராத்திரியெல்லாம் யோசிச்சு யோசிச்சு, (பேனாவை கன்னத்துல வச்சுகிட்டு கவிஞர்க மாதிரி யோசிச்சா ஒரு வேளை எதாவது தோனுமோன்னு, அப்படி கூட யோசிச்சேன்) கஷ்டப்பட்டு ஒரு 6-7 வரி எழுதினேன்.. எழுதினதை படிச்சு பார்த்தா எனக்கே ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப ஆர்வமா நம்ம சகா கிட்ட காட்டினேன், அதை படிச்சுட்டு அவன் ஒரு இடியை போட்டான் பாருங்க, நொந்து போயிட்டன் நான். நானா யோசிச்சு எழுதினதை படிச்சுட்டு, அவன் "இது நான் ஏற்க்கனவே படிச்சிருக்கேன், எங்கேன்னு தான் ஞாபகம் இல்லை, எங்க இருந்து சுட்டேன்னு ஒழுங்கா சொல்லு"ன்னு ஒரே அடியா அடிச்சுட்டானுங்க. எதோ பெரிய, கவிதையெல்லாம் எழுதிட்டம்னு ஒரு மிதப்பா இருந்தேன், இப்படி ஒருத்தர்(ன்) எனக்கு முன்னாடியே அதை எழுதியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ 'சத்தியாமா நான் தான் எழுதினேன், எனக்கு யாரும் எழுதி தரலைன்னு' திருவிளையாடல் தருமி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்..
எனக்கு ஒரு உதவி செய்யுங்க சாமிகளா!!
யாரவது இதை படிச்சு பார்த்துட்டு, நம்ம சகா சொன்னது நிசமான்னு சொல்லுங்க... (அப்படி ஏதும் இருக்காதுன்னு இன்னும் எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை!!)
---------------
உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.
ஆனால்,
நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..
மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.
--------------
டேய்! சகா!!.. இப்படி என்னை தனியா புலம்பற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டியே!!
3 comments:
நானும் இதை எங்கேயோ படிச்சி இருக்கேன் ;-)
ராசா, கவித நல்லா இருக்கு. தொரியமா உங்க காதலி கிட்டே கொடுக்கலாம். :) :) வாழ்த்துக்கள்!!
'உன்னைக் கண்டேன்....மறந்தேன்', தூள்னேன்!
அப்றம் "எனக்கு முன்னாடியே அதை எழுதியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ 'சத்தியாமா நான் தான் எழுதினேன்'" - கவலயே படவேண்டாம். இப்படித்தான் கணித மேதை ராமானுசன் ஏற்கனவே மேநாட்டுல கண்டுபுடிசிருந்த தேற்றங்களயெல்லாம் தானாகவே நம்மூர்ல மறுபடியும் கண்டுபுடுச்சாராம்(அப்படி ஒன்னு ஏற்கனவே இருக்குன்னு தெரியாம)! மேதைகளுக்கு இதெல்லாம் சகஜந்தான்னு உங்க சகாகிட்ட சொல்லுங்க!
Post a Comment