Saturday, September 25, 2004

மழைக்காலம்


இந்த மழைக்காலத்தின் முதல் துளி..

சுவாசம் நிரப்பும் மண்வாசம்
எலும்பும் சிலிர்க்கும் குளிர்காற்று
மரக்கிளைகளுக்கு நடுவே தென்றல்
நனைந்துபடி உற்சாகமாய் பூக்கள்
ஜன்னலில் தெறிக்கும் சங்கீதம்..

நீயும் நானும்..

மனதில் ஆயிரம் கனவுகள்
ஒவ்வொரு கனவும்..
மழையில் குளிக்கும் நம் கண்களில் நிஜமாக

...கைகள் கோர்த்துபடி

இன்னும் நடக்கிறோம்..

மழையின் இசைக்கேற்ப்ப..
தூரல்களுக்கு நடுவே...
மனது நிறைய நம்பிக்கையோடு...

ஏன் இந்த மழை தினமும் வருவதில்லை??


rain

(சத்தியமா இதை நான் கவிதைன்னெல்லாம் சொல்லிக்கலீங்க.. !)

2 comments:

Unknown said...

ராசா, இன்னா எதுனா ஒர்க்கவுட்டு ஆகிடுச்சா :-)? கவிதல்லாம் எழுதுறிங்களே, அதான் கேக்குறேன்.

Pavals said...

ஒரு விவசாயி கண்ணுல கனவோட, மனசுல நம்பிக்கையோட, மழையில நனைஞ்சுட்டு போனா... அதுக்கு எதாவது ஒர்கவுட் ஆகிப்போச்சுன்னு அர்த்தமா??.. என்னாங்க ராஜா??