Thursday, June 23, 2005

கல்யாணம் - சம்சாரம் - வேலை - சம்பளம்

பிரம்மச்சாரிகளை விட கல்யாணமான, அதுவும் சம்சாரத்தை வேலைக்கு அனுப்பாம வீட்டுலயே வச்சுக்கிற ஆளுக அதிகமா சம்பாரிப்பாங்களாம்..
பொதுவா கல்யாணம் ஆனவங்க அதிகம் சம்பாரிக்கறாங்க, அதுலயும் வீட்டுக்காரம்மா வேலைக்கு எங்கயும் போகாம, வீட்டு வேலைகள பார்த்துகிட்டா, அவுங்க இன்னும் அதிகம் சம்பாரிக்கறாங்கன்னு ஒரு ஆராய்ச்சியில சொல்லியிருக்காங்க..

அனுபவம் உள்ள ஆளுக இதை பத்தி என்னப்பா நினைக்கரீங்க??
சொன்னீங்கன்னா நமக்கும் பிற்காலத்துல உபயோகம் ஆகும்.. :-)

--
#98

9 comments:

தாசரதி/Dhasarathy said...

எல்லாரும் முழு அறிக்கையையும் இந்த சுட்டியில் படிச்சுட்டு...அப்புறம் பின்னூட்டம் போடுங்க!

http://www.iser.essex.ac.uk/pubs/iser-reports/pdf/AR_2004-5.pdf

என்ன ராசா... நாஞ்சொல்றது சரிதான??

Anonymous said...

Enna ennathukku dhaan blog-la customer survey nadathuradhunnu oru varai murai illaama pochu!

oru veLai avunga neraya sambaadhikiradhaala vootukaaramma vellaikku pogama vootla jollyaa irukku mudiyudho ennavo:)

Kalyanam aanavunga neraya sambadhikiradhukkum idhe maadhiri reajon irukkalam, neraya sambaadhikiravunga mattum dhaan kalyanam panikeeraangalo ennavo?

Pavals said...

//oru veLai avunga neraya sambaadhikiradhaala vootukaaramma vellaikku pogama vootla jollyaa irukku mudiyudho ennavo:)//
gud point :-D

NONO said...

காசு மட்டும் போதுமா? எனக் கென்னவோ மனைவிக்கும் ஒரு நன்பர்கள் வட்டாரம் தேவை... இது அனேகமாக வேலைத்தலத்தில் தான் அமையும்... !!!!! (ஏனில் அடிக்கடி சநிப்பதால்... !!!! பழைய சினேகிதர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்பு அதினம் இல்லை...)

Anonymous said...

கல்யாணம் ஆனவங்க நெறய சம்பாதிச்சுதான் ஆகணும் வேற வழி இல்ல. அதும் மனைவி வீட்ல இருந்து செலவு பண்ணினா அதுக்கும் சேர்த்து இல்ல சம்பாதிக்கணும்

Anonymous said...

statistics sari. aana reasoning dhan thalaikeezh.

ippo bill gates pondatti veetle irukaradhaale avaru nerya sambadhikirara, ille avaru nerya sambadhikaranaale andha amma velaiku polayaa?

துளசி கோபால் said...

என்ன நடக்குது இங்கெ?

அது யாருங்க? 'வீட்டுலே மனைவிங்க ஜாலியா' இருக்கறதாச் சொல்றது?

இந்தியாவுலே வேணுமுன்னா இந்த 'ஜாலி' இருக்கும்!

இங்கெல்லாம் வீட்டுலே இருக்கறவங்களுக்குத்தான் டப்பா கிழியுது!

வேலைக்குப் போனா, அப்படியே ஜாலியா நேரத்தைத் தள்ளிட்டு வந்துரலாம்! அப்படியே
வேலை நேரத்துலேயே 'வலை'யையும் மேஞ்சுக்கலாம்!!!

வீட்டுவேலை, புள்ளைகுட்டியைப் பாத்துக்கறது, கடைகண்ணிக்குப் போகறது, வீட்டுலே
கக்கூஸ் கழுவறது, சமையக்காரி, ட்ரைவர் னு இப்படி பலவேஷம் போடறவங்களுக்கு
இதுதானா நீங்க கொடுக்கற மரியாதை!

காலம் ரொம்பக் கெட்டுக்கிடக்கு!

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

Thulasi, sorry sonnadhu naandhaanunga :) Neenga solradhellam saridhaan aana velaikkum poittu veetukku vandhu neenga solra velai ellam panravunga paavam dhaane? Neengale sollunga :)

Pavals said...

எல்லாரும் என்னன்னமோ சொல்றீங்க... ஆனா ஒன்னும் முடிவு பண்ண முடியலயே.... அடபோங்கப்பா.. நடக்கிறது நான் நடக்கும்..