Monday, June 21, 2004

புலம்பல்...

ஒரு ஆர்வத்தில, தமிழ் எழுதியே பல வருஷம் ஆச்சேன்னு வலைப்பூ ஒண்னு ஆரம்பிச்சாச்சு, இப்போ என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு போனது தான் மிச்சம்.. 2 நாளா நானும் யோசிச்சு பார்த்துட்டேனுங்க.. ஒன்னுமே புடிபடல... யாரவது ஒரு நல்ல (சுமாரா இருந்தாலும் பரவாயில்லை!!!) யோசனை இருந்தா சொல்லுங்கய்யா!!!

(இந்த லொல்லுக்கு எல்லாம் குறைச்சல் இல்லேன்னு நீங்க திட்டுறதும் காதுல கேக்குது...!!!)

4 comments:

ராஜா said...

ராசா நாம என்ன பத்திரிக்கையா நடத்துறோம்.. இவ்வளவு யோசிக்கிறீங்க. சும்மா எதையாவது எழுதுங்க. டைரி போல கூட அன்றாட வாழ்க்கை பற்றி எழுதலாம். ஏதாவது விடாம எழுதிகிட்டு இருக்கணும். அது தான் ஆரம்பகால வலைப்பதிவுகளுக்கு முக்கியம். அப்புறம் போக போக உங்களுக்கே எதை எழுதணும் அப்படின்னு ஒரு தெளிவு வந்துடும். அதனால் மனசில் நினைக்கும் எதையும் ஒரு பதிவு போட்டு வையுங்க. படிக்க நாங்க இருக்கோம். பின்னூட்டம் கிடைக்கலைன்னு எழுதாம விட்டுடாதீங்க. சில நேரங்களில் அவசர அவசரமா படித்து விட்டு போய்டுவோம். விடாம எழுதுங்க. வாழ்த்துக்கள்!!

- ராஜா
http://raja.yarl.net

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வயலும் வயல் சார்ந்த நிலமும் பற்றி எழுதலாமே? அதான், எப்பிடியெல்லம் நெல் விதைத்து -->கதிர் அறுப்பு வரை என்னதான் நடக்குது என்று சொல்லுங்க

SnackDragon said...

அடடே ஐடியாதான இந்தாங்க.
http://karthikramas.blogdrive.com/archive/cm-03_cy-2004_m-03_d-13_y-2004_o-0.html

Anonymous said...

all the best rasa!!!!. really good flow in your writing
..adhithya