Wednesday, May 31, 2006

ச்சின்ன சந்தேகம்

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சகலகலா வல்லவ வலைப்பதிவு சமூகத்துக்கு என் பணிவான வணக்கங்கள்..!

என்னடா இது என்னைக்கும் இல்லாத திருவிழாவா இவன் இன்னைக்கு ரொம்ப மரியாதையா ஆரம்பிக்குறானேன்னு பார்க்கரீங்களா.. உண்மையத்தான சொல்றேன். இருந்தாலும் நீங்க இப்படி விஷயமில்லாம இவன் இப்படி எல்லாம் பேசமாட்டானேன்னு தப்பாவே எடுத்துக்ககூடாது.
ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன். நீங்களும் மதிச்சு பதில் சொல்லனுமே அதுக்கு தான் அந்த முதல் வரி.. :)

இப்ப சந்தேகத்துக்கு வருவோம்.. பெருசா ரொம்ப குழப்பமான சந்தேகம் எல்லாம் இல்லீங்க.. ரொம்ப சிம்பிள் தான்.. (ஆனா எனக்கு தெரியலை!)

இந்த லாவன்யா ஐஸ்க்ரீம், 'லாவன்யா' ஐஸ்க்ரீம்'ங்கிறாங்களே அப்படின்னா என்னங்க?

இது தெரியாதான்னுட்டாங்க.. நமக்கு இந்த சமாச்சாரம் எல்லாம் அவ்ளவா பரிச்சயம் இல்லையா.. யூ ஆல் நோ, மீ குட் பாய், சரி.. சரி.. கோவிச்சுகாதீங்க..
ம்ம்.. தெரியலைன்னு சொல்லுறது ஒரு வகைக்கு வசதிதான்னாலும்.. சொல்லி தெரியறதுக்கு முன்னாடி நாமளா தெரிஞ்சுவச்சுகிட்டா நல்லதுன்னு தான் கேக்குறேன்.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லி கொஞ்சம் உதவி பண்ணங்கப்பு, புண்ணியமா போகும். :)


---
#179

28 comments:

அருண்மொழி said...

கலாபக்காதலன் படம் பாக்கலீங்களா?

Agent 8860336 ஞான்ஸ் said...

தான் 'கலாபக் காதலன்' அகிவிட்டேன் என்பதைச் சொல்ல
லாவன்யா ஐஸ்கிரீமுடன் வருகிறார் எங்கள் கொங்கு நாட்டு பச்சப் புள்ள!

;-)

மொதல்ல சிணுங்கல்,
இப்ப லாவண்யா ஐஸ்கிரீம்,

ம்... ஜமாய்ங்க தல!

நாமக்கல் சிபி said...

//தான் 'கலாபக் காதலன்' அகிவிட்டேன் என்பதைச் சொல்ல
லாவன்யா ஐஸ்கிரீமுடன் வருகிறார் எங்கள் கொங்கு நாட்டு பச்சப் புள்ள!

;-)

மொதல்ல சிணுங்கல்,
இப்ப லாவண்யா ஐஸ்கிரீம், //

ம். சரி. சரி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

yarungal ankea.. kootungal sabai-i.. who ever finds the answer will get 1000 por-kasual :-)

--
Jagan

கொங்கு ராசா said...

கலாபக்காதலன் ? அதுல இருக்கா சமாச்சாரம்.. நான் மிஸ் பண்ணிட்டனா?.. ஆஹா.. சிடி பார்க்கிறதில்லைங்கிற கொள்கையும் கைவிட வேண்டி இருக்கும் போல இருக்கே..

அருன்மொழி, ஞான்ஸ், சிபி // யாராவது ஒரு ஆள் தெளிவா சொல்லலாமில்ல..

ஜெகன் >> //1000 por-kasual// இது நீங்க குடுத்துருவீங்க தான.. :)

தேசாந்திரி said...

என்ன ராசா உங்க திருமுகம் பார்க்க இத்தனை நாள் காத்திருக்க வச்சுட்டீங்களே. ஓ! இதுதான் பேரா? உங்கள் முந்தைய பதிவு ஒன்று ஞாபக்த்திற்கு வருகிறது.

//நாங்க நாலு பேர். எங்க வேணா போவோம். என்ன வேண பண்ணுவோம். இப்போ நான் ஒருத்தன் தான். எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.//

நான் இரசித்த வரிகள்.

கொங்கு ராசா said...

//ஓ! இதுதான் பேரா? // அய்யய்யோ அதில்லைங்க பேரு.. நீங்க பாட்டுக்கு எதாவது கொளுத்திபோட்டுராதீங்க.. :) தேவையில்லாம அப்புறம் நான் தோண்டிபுதைச்சது எல்லாம் கிளர வேண்டியிருக்கும்..

//நான் இரசித்த வரிகள்.// நம்ம பயம் உங்களுக்கு ரசிக்கற மாதிரி இருந்திருக்கு..

பயந்தாலே பாதி உசுரு போயிரும்னு சொல்லுவாங்க.. தெரிஞ்சும் நான் பயந்துட்டேன் :)

நாமக்கல் சிபி said...

// யாராவது ஒரு ஆள் தெளிவா சொல்லலாமில்ல..//

அட! கலாபக் காதல படத்துலே அந்தப் பொண்ணு வெணிலா ஐஸ்கிரீம்ங்கறதைத்தான் லாவண்யா ஐஸ்கிரீம்னு கேக்கும்!

நாமக்கல் சிபி said...

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சகலகலா வல்லவ வலைப்பதிவு சமூகத்திலிருந்து சிபியின் மடல்.

ஐயா! உமது ஐயம் தீர்ந்ததா?

கொங்கு ராசா said...

//ஐயா! உமது ஐயம் தீர்ந்ததா?// தன்யனானேன் சிபியாரே!! உமக்காக 'ஜெகன்' கூடிய சீக்கிரம் ஆயிரம் பொற்காசுகளோடு கோவை வருவார். (இப்போதைக்கு அவர் தான் பக்கத்துல இருக்காருன்னு நினைக்கிறேன்)

சுதர்சன்.கோபால் said...

ஓ..ரைட்டேய்....

கைப்புள்ள said...

//அட! கலாபக் காதல படத்துலே அந்தப் பொண்ணு வெணிலா ஐஸ்கிரீம்ங்கறதைத்தான் லாவண்யா ஐஸ்கிரீம்னு கேக்கும்!//

இப்ப புரிஞ்சுதா?
:)

நாமக்கல் சிபி said...

//உமக்காக 'ஜெகன்' கூடிய சீக்கிரம் ஆயிரம் பொற்காசுகளோடு கோவை வருவார்.//

ஆமா! அது யாருங்க ஜெகன்?
பரிசை நீங்களே பெற்றுங்கொள்ளுங்கள்.

:-)

கொங்கு ராசா said...

சுதர்சன் >> நோட் பண்ணி வச்சுக்கப்பா.. உபயோகப்படும்.

கைபுள்ள >> புரிஞ்சிருச்சு.. புரிஞ்சிருச்சு..

சிபி >> மேல கமெண்ட்ல பாருங்க..
//yarungal ankea.. kootungal sabai-i.. who ever finds the answer will get 1000 por-kasual :-)

--
Jagan//

கைப்புள்ள said...

//கைபுள்ள >> புரிஞ்சிருச்சு.. புரிஞ்சிருச்சு..//

உங்களோட எனக்கு இந்த புரிஞ்சிருச்சு...புரியலை வெளாட்டுத் தாங்க எப்பவும். எப்போ எனக்கு பட்டுன்னு புரியற மாதிரி பதிவு போடுறீங்கன்னு பாப்போம்.
:)

Anonymous said...

/**
//ஓ! இதுதான் பேரா? // அய்யய்யோ அதில்லைங்க பேரு.. நீங்க பாட்டுக்கு எதாவது கொளுத்திபோட்டுராதீங்க.. :) தேவையில்லாம அப்புறம் நான் தோண்டிபுதைச்சது எல்லாம் கிளர வேண்டியிருக்கும்..

**//

onnium puriyalengalea ராசா (Raasa)??

சிபி,
regarding the 1000 por-kasugal, nama pesi theethukalam.

--
Jagan

கோபி(Gopi) said...

ராசா,

எப்பவுமே க்ரிப்டிக்கா பதிவு போட்டா இப்படித்தானுங்க...

நிஜமாவே சந்தேகம் வரும்போது நம்ம ஜனங்க கிட்ட இருந்து பதில் எக்குதப்பா வரும்.

ஏதோ சிபியால இந்த முறை தப்பிச்சீங்க.

:-)

நாமக்கல் சிபி said...

ஜெகன்!

பேசுறது சரி!
யாரைத் தீர்க்கலாம்?
:-)

Syam said...

raasa ஐஸ்க்ரீம லாவன்யா வாங்கி குடுத்தா அது லாவன்யா ஐஸ்க்ரீம், ஆனா அத லாவன்யா வாங்கி குடுக்க அவங்க அப்பா ஒன்னும் சொல்ல கூடாது ..

பொன்ஸ்~~Poorna said...

//உமக்காக 'ஜெகன்' கூடிய சீக்கிரம் ஆயிரம் பொற்காசுகளோடு கோவை வருவார். //
சிபி, நான் கூட நம்ம ராசா, உங்களையே உங்ககிட்டயே பொற்காசு வாங்கிக் கிட சொல்லி, "அரசியல்வாதிஷிப்"புக்கு அப்ரன்டைஸ் எடுக்கிறாரோன்னு நினைச்சேன்.
பாவம் ராசாவுக்கு "லாவண்யா ஐஸ்கிரீம்" மாதிரி சிபியோட இயற்பெயர் ஜெகன்னும் தெரியாது போலிருக்கு..

ஆமாம், இந்த ஐஸ்கிரீம் பத்தி நீங்க சொன்னது சரிதானே? தைரியமா கடைக்குப் போய் கேட்கலாம் தானே?

கொங்கு ராசா said...

கைப்புள்ள >>
//எப்போ எனக்கு பட்டுன்னு புரியற மாதிரி பதிவு போடுறீங்கன்னு பாப்போம்.//
நெவர்ர்ர்ர்!!.. அந்த மாதிரியெல்லாம் கனவுல கூட எதிர்பார்க்காதீங்க..

ஜெகன் / சிபி >>
//யாரைத் தீர்க்கலாம்?//
ண்ணா நம்மள யாரும் பொடாவுல உள்ள தள்ளீர போறாங்க.. பார்த்து பேசுங்ண்ணா..

கொங்கு ராசா said...

கோபி >> அப்போ நம்ம எழுதறது 'க்ரிப்டிசம்'ங்கிற இலக்கிய வகையில வருதுங்கரீங்களா? :)

ஷ்யாம் >> :)

கொங்கு ராசா said...

பொன்ஸ் >>
சிபி - ஜெகன் குழப்பத்தை சிபி தனி மயில்ல தீர்த்துட்டாருங்க..

//"அரசியல்வாதிஷிப்"புக்கு அப்ரன்டைஸ//
சுதர்ஷன்.. கையில சிக்காமயா போயிருவீரு.. ம்ம் அப்ப வச்சுக்கறன்.

Jagan said...

//ஜெகன் குழப்பத்தை சிபி தனி மயில்ல தீர்த்துட்டாருங்க..
//

naaa..athu ennanga naaa..enakum konjam e-mail la sollunga naa..

--
Jagan

லதா said...

// ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன் //

சிபி ஜெகன் ஒருவரா / இரண்டு பேரா இல்லை இரண்டும் வெவ்வேறா ?
:-)

நாமக்கல் சிபி said...

//சிபி ஜெகன் ஒருவரா / இரண்டு பேரா இல்லை இரண்டும் வெவ்வேறா ?
//

லதா அவர்களே!

சிபி மற்றும் ஜெகன் இருவரும் வேறு வேறு நபர்கள்!

இதில் சிபி என்பரின் இயற்பெயரும் ஜெகன் என்பதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அவ்வளவே!

நாமக்கல் சிபி said...

// ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன் //

ஆமா! இதென்ன ராசபார்வையா? இல்லை சந்தேகப் பார்வையா?

பெருசு said...

ராசா அது ஒண்ணூமில்லப்பா

பொள்ளாச்சில இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவுல
கேட்டுப்பாருங்க கிடைக்கும்