ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கே பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண் மூடிக்கொண்டால்..
போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினில் வாழ்கின்றோம்
முற்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையில்
உன் நிழலும் உன்னை விலகிவிடும்
நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துனை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில்..
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்தொடுப்போம்
அந்த தெய்வரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிழலாய் கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு எது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உலகம் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவர் யார் அட கெட்டவர் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தில் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில்
அதை முடித்துகொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
7 comments:
தல உனக்கு போட்டியா ஒரு ஆள் ரெடி,(அட தனுஷ்தாங்க, வரிசையா அத்தனை ப்ளாப் படங்கள்)
கேட்டு கேட்டு சலிச்சு போச்சு,
6 மாசத்துக்கு முன்னாடி பாட்ட கேட்டு, 6 மாசமா இந்த படத்தை எதிர்பார்த்ததுக்கு என்னை.....
enna Ila ipdi sollitenga???
I have not seen this movie. But it has created lot of hype. I am hearing favorable and non-favorable opinion's abt this movie. But It's running well here.
Raasa,
the song is too gud, how abt the pictorial representation of the song?. I feel it will be the same as in kathal konden( thevathaii kandean)
--
Jagan
~
//பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்//
ரொம்ப சரி!
;-)
ஆரம்பிச்சுட்டாங்கப்பா ஆரம்பிச்சுட்டாங்க
பாட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க.
யாராவது இந்த பாட்டை தமிழில் தருவாங்களான்னு கொக்கு மாதிரி ஒத்தை காலில் நின்னதுக்கு இன்னைக்கு பலன் கிடைச்சிருச்சு. இன்னும் படம் பார்க்கலை, அது வரைக்கும் No Comments...
"இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே.."
ஓ.. அப்படிங்களா.. மிஸ் பண்ணிட்டேன்..
thanx for ur correction
Post a Comment