Tuesday, June 27, 2006

டைமிங்

தலைவர் வாழ்க..!


**********************

ஏங்க பாட்டிமா, இவ்ளோ வயசாகி, இன்னுமா நீங்க பேச கத்துகல..

அதுக்கு பேச வராதுங்க..

அப்ப, பாடுமா?

அட அது ஊமைங்க..


**********************

இதுக்கு பேரு தான் டைமிங் ..

'சும்மா, கோமுட்டி தலையா..ன்னு கத்திட்டு காலை தூக்கிட்டு உதைச்சா அது காமெடியா'ன்னு கேக்கும் 'அறிவாளிகளுக்காக..

:)


படம் : ப்ரம்மா

--
#188

20 comments:

ILA (a) இளா said...

1000தான் இருந்தாலும் தலைவரை இப்படி எல்லாம் ........., டைமிங்க்கு கவுண்டரை மிஞ்ச ஆளே இல்லைங்க ராசா

யாத்ரீகன் said...

டைமிங் மட்டுமில்லங்க.. அந்த வாய்ஸ் மாடுலேஷன்னு சொல்லுவாங்களே.. அதான் அதான் அதேதான் தலகிட்ட பிடிச்சது.. அதுல தெரியுற நக்கல், நையாண்டி... அதாங்க.. :-)

நாகை சிவா said...

ஏனுங்க, யாருச்சும் All in all அழகு ராஜாவை மறக்க முடியுமா..........

முகமூடி said...

கவுண்டரு பஞ்ச், பாடி லேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷனக்கூட ரசிக்க வாய்க்காம "ஆராய்ச்சி" பண்ணும் அறிவிசீவிகளுக்காக பரிதாபப்படுவோம்.

கைப்புள்ள said...

கவுண்டமணியோட சில மறக்கமுடியாத ஒற்றை வரி வசனங்கள்.

1. இங்கே சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் - இந்தியன்
2. அடங்கப்பா - கார்த்திக் படங்களில்
3. தெரியலியேம்மா - செந்தில் உடன் பல படங்களில்

நேரம் கெடச்சா இதையும் பாருங்க.

manasu said...

ராமசாமிங்ற பேருக்கெல்லாம் சைக்கிள் கிடையாதுங்கோ....

Sud Gopal said...

சூரியன்:
ஓமக்குச்சி: "சேலத்தில் முக்கிய பிரமுகர் கைது"
கவுண்டபெல்: "ஏன்,கோயம்தூர்ல முக்குனா கைது பண்ண மாட்டாங்களா???நாராயணா,இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலைடா."
அப்புறம் அந்த காந்தக் கண்ணழகி பிட்."ஸ்டார்ட் த ம்யூசிக்.அங்கே பூசு.ஆ.இங்கே பூசு.ஆ.லெஃப்டில பூசு..."

இந்தியன்:
க்ரேசி மோகன்:"திஸ் இஸ் டூ மச்.நான் இதப் பத்தி இந்துல எழுதுவேன்."
கவுண்டபெல்:"இந்துல எழுதிவியோ.இல்ல சந்தில எழுதிவியோ."

ஒரு படத்திலே குறுக்க வர்ற போலீஸ் ஜீப்பை புடிச்சு நிறுத்தி இன்ஸ்பெக்டரை வாட்ச்மேனா நெனச்சு பேசி, ஸ்டேஷனிலே தர்ம அடி வாங்கிட்டு உட்கார்ந்திருப்பாரு. வெளில வரும் போது ஒரு போலீஸ்காரரு, "இனிமேவாச்சும் இப்படி செய்யாதீங்கப்பா" அப்படீன்னு சொன்ன உடனே, "கருத்து சொல்றாராம்"

Pavals said...

நன்றி இளா, யாத்ரீகன், சிவா, முகமூடி..

வலைஉலகத்துல கவுண்டமணி ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிக்கலாம் போல இருக்கு :)

Pavals said...

கைப்பு.. அதெல்லாம் மிஸ் பண்ணுவமா..

மனசு.. அது ராமசாமி இல்லை ரங்கநாதன்..

சுதர்சன்.. "ஹூ இஸ் தட் டிஸ்டர்பன்ஸ்".. விட்டுடீங்களே..
நம்ம வாயுல ஒரு நாளைக்கு பத்து தடவையாவது வந்துடும் அது..

Anonymous said...

thai mamam comdey yellarum vittutengaleappa. :)

--
Jagan

அனுசுயா said...

சத்யராஜ் கூட ஒரு படத்துல வருமே "உலக நடிப்புடா சாமீ"
மறக்க முடியாது

Syam said...

"வாங்க ஆப்பீஸர்", "திஸ் பேப்பர் ரோஸ்ட்?" இது மாதிரி எத்தன இருக்கு, அவர் டைமிங்க அடிச்சுக்க இன்னொருத்தர் பொறந்து வரனும்...

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

If you are in orkut!
http://www.orkut.com/Community.aspx?cmm=1005882

ILA (a) இளா said...

மிஸ்டர் பாரத் - DOESN'T மோட்டார்னா?
நடிகன் - உல்லான்,பாட்டிம்மா
மாமன் மகள் - ரீல் அந்துபோச்சுடா சாமி, அட்ரா சக்கை
மலபார் போலிஸ் - கப்பை+சக்கை
????? - ஒரு ராத்திரி முழுசும் நாய் கிட்ட அரெஸ்ட்
சிங்கார வேலன் - மனோ கருவாடு வந்திருக்கு, தில்லான் லங்கடி," MAY I HELP YOU"
கரகாட்டகாரன் - நாதஸ், சொப்பன சுந்தரி, வாழப் பழம்...
இன்னும் எவ்வளவோ இருக்கு..

ilavanji said...

சுதர்சன் ஜீ,

// போலீஸ்காரரு, "இனிமேவாச்சும் இப்படி செய்யாதீங்கப்பா" அப்படீன்னு சொன்ன உடனே, "கருத்து சொல்றாராம்" //

புத்தி சொல்ராறாமாம்!!! :)

வானம்பாடி said...

மெயின் பதிவில் உள்ள வசனத்தை நானும் வெகுவாக ரசித்திருக்கிறேன். :)

bharat said...

பெட்ரோமாக்ஸ்

கூட வெச்சுற்கறவங்களுக்கெல்லாம் குடுக்கற்தில்ல.

Anonymous said...

சிங்காரவேலனில் ஜெய்சங்கர் பெரிய மீசையுடன் கமல் தங்கியிருக்கும் வீட்டுக்கு வருவார். கவுண்டமணி: வேலா, இங்க ஒரு புல்புல்தாரா மீசைக்காரரு உன்னப் பாக்க வந்திருக்காரு.

ஜெய்சங்கர் தவறிப் போய் கவுண்டர் காலை மிதித்து விடுகிறார். கவுண்டமணி அலறிவிட்டு: வேலா, இங்க வராதே, வந்தா கால மிதிச்சுடுவாரு!

மாயவரத்தான் said...

மன்னன் படத்தில் : "இங்க வேலை செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்"

"புண்ணாக்கு விக்குறவன், பருத்தி கொட்டை விக்குறவனெல்லாம் தொழிலதிபரா ஆகிட்டானுங்கப்பா.. இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா"

*****

சின்னக்கவுண்டரில் மனோரமாவைப் பார்த்து : "ஆத்தா.. நீ அந்த வாய தொறந்து மட்டும் சிரிச்சிடாத ஆத்தா"

*****

சிங்கார வேலனில் : "கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை?!"

*****

"ராமசாமிங்கிறவனுக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்லப்பா"

*****

"சங்கு ஊதுற வயசில.. சங்கீதாஆஆஆஆஆ"

*****

சின்னத்தம்பி : "கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டேன்"

"டேய்...அப்பா.. நீ என்ன என்ன கருமாந்திரத்தை செஞ்சு தொலச்சியோ?"

*****

"அரசியலிலே இதெல்லாம் சாதாரணப்பா"

*****

உங்கள் நண்பன்(சரா) said...

நல்லாக் கேட்டுகங்க மகா ஜனங்களே... இந்தப் பாவத்துக்கெல்லம் நான் ஆளாக முடியாது,


அன்புடன்...
சரவணன்.