Friday, June 9, 2006

குடும்ப டைரி

ஆளாளுக்கு மீள்பதிவு போடறாங்க.. அதுனால நாமளும் அப்பப்போ ஒன்னு போட்டு வைப்போம்னு இந்த பதிவு.
ஏற்க்கனவே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் பதிச்ச மேட்டர் தாங்க இது.. நானா சொந்தமா எழுதல, எங்கயோ புடிச்சுபோட்ட சமாச்சாரம் தான். உங்க பார்வைக்காம மறுபடியும் இங்க.

என்னதான் பழைய பாடம்னாலும், பரிட்சை வரும் போது பழைய சிலபஸ் எல்லாம் ஒரு தடவை தூசி தட்டி பார்த்துட்டு போவமே அந்த மாதிரின்னு வைங்களேன். :)
_____________________________

ஒரு கணவன் மனைவியின் டைரி குறிப்பு..!!!

ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., நானும் எருமைத்தயிர கரைச்சு ஒரு புடிபுடிச்சுட்டு, வேப்ப மர நிழல்ல கயித்து கட்டில்ல போட்டு, மல்லாக்க படுத்துட்டு பல காலமா யோசிக்கிறேன்..ம்ஹூம்..நம்ம புத்திக்கு ஒரு இழவும் விளங்கலை.. எங்க ஊரு மணியகாரர்'ல இருந்து எங்க தோட்டத்துல சாணி அள்ளுற சின்னான் வரைக்கு எல்லார்கிட்டயும் பேசி பார்த்துட்டேன்.. ஒன்னும் புரியல,, யாருக்கும் இதுக்கு காரணம் தெரியல...
ரொம்ப நாளா இருந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சுருச்சு..
நேத்து எத்தேசையா ஒரு புருஷன்-பொஞ்சாதியோட டயிரியை படிச்சு பார்த்தேன்.(சரி.சரி...திருட்டுதனமாத்தான்!!.. தேவைப்பட்டா பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கரு, நான் சொன்னா மட்டும் என்ன நக்கலா ஒரு சிரிப்பு!!)
இதோ அந்த டையிரிலிருந்து .....


மனைவியின் டயிரி:
3/8/04

என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு,
வீட்டுக்கு திரும்பி வரும்போது எவ்ளோ ஆசையா பேசினேன், அதுக்கு அவர் எதாவது பேசியிருக்கலாம், சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்காரு,
ஏந்தான் இப்படி இருக்காரோ, எனக்கு புரியவேயில்லை.. ஆனா ஒன்னு அவருக்கு எம்மேல பிரியம் இல்லைன்னு மட்டும் தெரியுது..
வீட்டுக்கு வந்ததும் அதே கதை தான், அவர் பாட்டுக்கு டி.வியை போட்டு உக்காந்த்துட்டாரு, நானும் எவ்ளோ நேரம் பக்கத்துல உக்காந்த்திருந்தேன், ஆன அவர் என்னை கண்டுக்கவே இல்லைஎனக்கு என்னமோ அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு. ஒரு 15 நிமிஷம் டி.வி பார்த்துட்டு அப்புறம் நான் வந்து படுத்திட்டேன். அவரும் ஒரு 10 நிமிஷத்தில வந்து படுத்துட்டாரு, என்னால தாங்க முடியல, அப்படி என்னதான் பிரச்சனைன்னு கேக்கலாம்னு முடிவு எடுத்து அவர் பக்கம் திரும்பினா, அவர் சுகமா தூங்கிறாரு....
எனக்கு ஒரே அழுகையா வந்துது, ராத்திரி பூராவும் அமைதியா அழுதிட்டு இருந்தேன்..அப்புறம் எப்போ தூங்கினேன்னு தெரியல...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது, அவர் நெனைப்பு வெற எங்கயோ இருக்கு, அவருக்கு எம்மேல அக்கறையே இல்லை..
என் வாழ்க்கையே சூனியமாகி போச்சு....

கணவனின் டயிரி:
3/8/04

இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!!

---------------------------

இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்.. நீங்க..????

--
#182

10 comments:

ILA (a) இளா said...

நீங்களுமா? என்ன ஒரு அலை வரிசை..
http://vivasaayi.blogspot.com/2006/06/blog-post_09.html

லதா said...

// என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு, //

மனைவி தன் கணவரின் மூட் அவுட்டை அறிந்துகொண்டு ஒருவேளை தான்தான் காரணமோ என்றுகூட கேட்கிறார். கணவரோ மூடி மறைக்கிறார்.
:-(((

// இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!! //

கணவருக்குத் தன் டயரியில் எழுதிவைக்க நேரம் இருக்கிறது.
ஆனால் அதையே தன் மனைவியிடம் நேரில் சொல்ல எது தடுக்கிறது? மனம் திறந்து சொல்லிவிட்டால் என்ன குறைந்துவிடும்?

// ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., //

தீர்வு கிடைக்கப்பெற்றதற்கு மகிழ்ச்சி.
:-)))

Anonymous said...

he he

ஏஜண்ட் NJ said...

//இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்//


அதாவது, இப்ப இருந்தே ஒரு டைரி வாங்கி டெய்லி டைரி எழுதுறத பழக்கத்த உண்டாக்கிக்கப் போறீங்க, சரியா

வாழ்த்துக்கள்!

:-)

மணியன் said...

தேர்வுக்கு ரொம்ப மும்முரமாக தயார் செய்து கொள்வது போல இருக்கிறது :))

ilavanji said...

ராசா,

இதெல்லாம் நல்லால்ல!

நான் மாங்குமாங்குன்னு எழுதறதை நீர் ஒரே பதிவுல சொல்லி மேட்டரை முடிக்கறது! :)))

Pavals said...

இளா >> இதையத்தான் இங்க்லீஸ்காரன் 'wise men..' வேண்டாம் சொன்னா எல்லாரும் சண்டைக்கு வந்திருவாங்க..

லதா >> நன்றி

அப்பு >> வாங்க.. அப்பு'வா இல்ல ஆப்புவா?

Pavals said...

ஞான்ஸ் >> //டைரி எழுதுறத பழக்கத்த உண்டாக்கிக்கப் போறீங்க,// அப்புறம் அதை நாலு பேரு படிச்சு நம்மள வாட்டி எடுக்கவா.. ?

மணியன் >> ஹீ..ஹி..

இளவஞ்சி >> எல்லா புகழும் வாத்தியாருக்கே :)

பொன்ஸ்~~Poorna said...

ஓகே.. எப்படியோ எல்லாத்தையும் படிச்சு இப்போவே ஒரு தெளிவுக்கு வந்தா சரி.. :). வாத்தியார் சொல்லிட்டாரு கல்யாணத்துக்கு அப்புறம் எந்தத் தெளிவும் இருக்காதுன்னு :)

Syam said...

aama paarunga avan avanuku evalo pirachanai, match la india jaikuma, race la schumacher first varuvaana, Nayanthaara rajini oda adutha padathula nadipaala, indha wives ipdi thaan pesama knives nu vechu irukalaam.....