Friday, June 16, 2006

சிலகேள்விகள்.

கேள்வி கேட்டா அறிவு விருத்தியாகும்னு சொல்லி வளத்திட்டாங்க போல, நம்மாளுக கேள்வி கேட்டா, அவங்களுக்கு அறிவு விருத்தியாகுதோ இல்லையோ, அதை காது குடுத்து கேக்கிறவங்க அறிவு ஒரு வழியாரும் போல இருக்குங்க..
என்னன்ன கேள்வி கேக்குறாங்க.. ஸ்ஸ்ஸ் அப்பாஆஅ...

இதோ, இங்க உங்க பார்வைக்கு சில சுவாரசியமான கேள்விகள்.


  • கோழி போட்ட முட்டையிலைருந்து கோழி வரும், வாத்து போட்ட முட்டையில இருந்து வாத்து வரும், ஆனா, வாத்தியார் போட்ட முட்டையில இருந்து வாத்தியார் வருவாரா?

  • தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டுனா வலிக்குமா?

  • நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், எஸ்.டி.டி. கால் என்ன ஒரு மிஸ்டு காலாவது நமக்கு குடுக்க முடியுமா?

  • மீன் புடிக்கறவன மீனவன் சொல்லலாம், அதுக்காக நாய் புடிக்கறவன நாய்-அவன்னு சொல்ல முடியுமா?

  • என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், ஒரு அவசரத்துக்கு அவன துப்பாக்கியில போட்டு சுட முடியுமா?

  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம், அதுக்காக அவரால அத்தனை குரல்ல பேச முடியுமா?

(அய்யா.. பொதுஜனங்களே.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் என்னைக்கும் ஆளாகவே மாட்டேன்.. ஏதும் திட்டுறதா இருந்தா, சந்தோஷமா திட்டுங்க, அது அத்தனையும், இதை ஒரு சமாச்சாரம்னு, 'முக்கியமான கேள்விகள்'ன்னு தலைப்பு போட்டு அனுப்புன என் சகா 'பாஸு'க்கு அனுப்பி வச்சிடுறேன்..)


img : http://www.puzzlepress.co.uk/

--
#185

14 comments:

கோவி.கண்ணன் said...

//ன்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், ஒரு அவசரத்துக்கு அவன துப்பாக்கியில போட்டு சுட முடியுமா?//
நான் படித்த கடியிலேயே பெரிய கடி இதுதான் :):):):):):):):):):):):):)

ilavanji said...

ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த அற்புதக் கேள்விகள்!

// முடி கொட்டுனா வலிக்குமா? // மனசு வலிக்கும்யா!!! நாளைக்கு தலை சீவரப்ப எத்தனைன்னு எண்ணிப்பாருங்க! தெரியும்!

அதெல்லாம் இருக்கட்டும்! நீ ஏன் இதுக்கு மட்டும் பதில் சொல்லறன்னு கேட்டீங்கன்னா... ஹிஹி...

Sud Gopal said...

உம்மையெல்லாம்........

Pavals said...

கோவி.கண்ணன் >> //நான் படித்த கடியிலேயே பெரிய கடி இதுதான்// உக்காந்து தனியா யோசிப்பாங்க போலிருக்குதுங்க.. :)

Pavals said...

இளவஞ்சி >> //நீ ஏன் இதுக்கு மட்டும் பதில் சொல்லறன்னு கேட்டீங்கன்னா.// சரி விடுங்க.. போனது போனது தான்.. ***தானே போச்சு.. :)

சுதர்சன் >> //உம்மையெல்லாம்........// கோவில் கட்டு கும்பிடனனும்னு தான சொல்ல வந்தீரு.. முழுசா சொல்லிடுமய்யா.. பார்க்கிறவங்க தப்பா நினைச்சுக்க போறாங்க..

பொன்ஸ்~~Poorna said...

ராசா, கொஞ்ச நாளா உங்க கேள்வி அறிவு ரொம்ப ஷார்ப்பாத் தான் இருக்கு.. Scientist-aப் போயிருக்க வேண்டியவரு.. ம்ம்.. நாங்க மாட்டிகிட்டோம்..

ஒருவேளை எல்லா கேள்வியும் இப்போவே கேட்ருவோம், ஐப்பசிக்கப்புறம் கேள்வியாவது, பதிலாவது மூச்னு தானே?? ;)

Pavals said...

பொன்ஸ் >> எது போஸ்ட் பண்ணினாலும் எப்ப்டிங்க ஒரே இடத்துல லிங்க் பண்றீங்க???

//Scientist-aப் போயிருக்க வேண்டியவரு// நான் இப்பவும்
Scientist-aத்தாங்க இருக்கேன்.. தெரியாதா உங்களுக்கு..

//ஐப்பசிக்கப்புறம் கேள்வியாவது, பதிலாவது மூச்னு தானே?? ;)// ஐப்பசி வரைக்குமாவது பேச்சு இருக்குமான்னே தெரியலைங்க.. இப்பவே வெறும்.. 'உம்.. உம்' தான்.. :) கழுத்து தான் அப்பப்போ சுளுக்கிக்குது..

Syam said...

காதுல இருந்து ரத்தம் வருது...இருங்க இருங்க உங்களுக்கும் சேம் பிளட் வர மாதிரி ஏற்பாடு செய்யரேன்... :-)

மு.கார்த்திகேயன் said...

கடிக்கலாம்..ஆன ஒரு வரைமுறை இல்லாம இப்படி கடிக்ககூடாது, ராசா

Unknown said...

வர எரிச்சல ஐப்பசிக்கு அப்புறம் நல்லா பூம்பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கு தலைய ஆட்ட கடவதுன்னு வாழ்த்த தோணுது.

Pavals said...

ஷ்யாம் >> //சேம் பிளட் வர மாதிரி ஏற்பாடு செய்யரேன்...// :)

கார்த்திகேயன் >> வாங்க.. என்னங்க செய்யிறது நம்ம கூட இருக்கறவங்களும் இப்படி வரைமுறை தெரியாத ஆளுகளாவே இருக்காங்க..

WA >> ஐப்பசி'க்கு அப்புறம் தானா என்ன ? :)

நரியா said...

வணக்கம் ராசா!
உங்கள் பதிவில் நான் தெரிந்துக் கொள்ள நிறைய விஷயம் இருக்கின்றன.

"ஆறு" விளையாட்டிற்கு நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நீங்க மாட்டுனீங்க :)).

உங்களை ஆறு விளையாட்டிற்கு அழைக்கிறேன். இதோ இந்த தளத்திற்கு சென்று 10 ஆவது பதிவின் கீழ் பாருங்கள்.

http://siriyapaarvai.blogspot.com/

உங்களின் விருப்பமான "ஆறு" களைப் பற்றி நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

நன்றி!!
நரியா

Pavals said...

நம்மளையும் புடிச்சு 'ஆறு'ல தள்ளிட்டீங்க.. ம்ம்.. போட்டுருவோம்..

ஆமா, அதென்னங்க நரியா??

நரியா said...

யாருக்குங்க தெரியும். சும்மா அரட்டைக்காக வைத்த புனைப் பெயர்ங்க. நீங்க தான் சரியா "நரியா"ன்னு சொல்லுறீங்க. மக்கள் நிறைய பேரு "நாரியா"ன்னு தான் சொல்லுராங்க. இன்னும் சில பேரு, "இது என்னங்க நரியா, பூனையான்னு பெயர் வைக்குறீங்க. நரி ன்னா வீட்டு நரியா, காட்டு நரியா இல்ல குள்ள நரியா" ந்னு வேறு கேட்க்குறாங்க :)). என்னாத பதில் சொல்லி என்னாத புரிய வைக்க :))