Tuesday, June 6, 2006
ஒரு தென்றல் புயலாகி வருதே..!
ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே..'ன்னு ஒரு பாட்டு இருக்கு கேட்டிருக்கீங்களா.. ஏவஎம் தயாரிப்புல நம்ம பாரதிராஜா எடுத்த புதுமைபெண் படத்து பாட்டுங்க. மொட்டை இசையில மலேசியா வாசுதேவனோட குரல்ல சும்மா ஜிவ்வுன்னு ஹைபிட்ச்சுல போற பாட்டுங்க.. என்ன நம்ம பாரதிராஜா தான் வழக்கம் போல உணர்ச்சிய தொடுற மாதிரி எடிட் பண்ணி, என்னமோ ரீவைன்ட் செஞ்சு, ரீவைன்ட் செஞ்சு பார்க்கிற எபக்ட்டுல எடுத்திருப்பாரு. ஒரு வேளை படம் வந்தப்போ அதெல்லாம் நல்லா இருந்ததோ என்னமோ.. யாராவது பெருசுக தான் சொல்லனும்.
நமக்கெல்லாம் அந்த படம் தியேட்டர்ல பார்த்த ஞாபகமே இல்லைங்க.. பின்னாடி பொட்டியில பார்த்தது தான். ஏவிஎம்'க்காக தன்னோட சிஷ்யன் குடுத்தத விட தான் ஒரு வெற்றி குடுக்கனும்னு, நம்ம பாக்கியராஜோட முந்தானை முடிச்சு'க்கு அப்புறம் பாரதிராஜா செஞ்ச படம்னு கேள்வி பட்டிருக்கேன். அந்தளவுக்கு வெற்றி குடுத்துச்சான்னு தெரியலை..
சரி.. இப்ப எதுக்கு இந்த கதைன்னு கேக்கரீங்களா.. அந்த பாட்டு ஞாபகம் வந்துச்சு அப்படியே தொடர்ச்சியா அந்த படமும்.. அவ்ளோதான்..
சரி.. பாட்டு எதுக்கு ஞாபகம் வந்துச்சுங்கரீங்களா.. விட மாட்டீங்களே..
வாரக்கடைசியில வேலையிடத்துல கொஞ்சம் அழுத்தம் ஜாஸ்த்தி ஆகி.. அப்படியே அதை தொடர்ந்து நட்பு வட்டத்தோட ஒரு கையெழுத்து சுற்றுலான்னு போயிட்டு, மறுநாள் மதியானாம எந்திருச்சு வெட்டிவேலைகள்ல சுத்தி, சாயங்காலம் ரவுடிகாவியம் படம் பார்க்கும் போது, அடுத்தவங்கள தொந்தரவு செய்யகூடாதுங்கிற ஒரு 'உயரிய' எண்ணத்துல ஆஃப் பண்ண செல்.. வேண்டாம் தமிழ்ல சொல்ல்வோம், தூங்கப்படுத்துன கைப்பேசிய மறந்து போயி ஒரு நாள் பூராவும் மறுபடியும் உயிர்பிக்காம வச்சிருந்து, பொறுமையா மூணு நாளுக்கப்புறம் கூப்பிட்டு ரொம்ப தமாசா 'ஹாய்'ன்னு சொன்னா..
அப்புறம் அந்த பக்கம் இருந்து வந்த பதிலுக்கு 'ஒரு தென்றல் புயலாகி வருதே' ஞாபகம் வராம, 'தென்றல் வந்து என்னை தொடும்'ன்னா ஞாபகம் வரும்..
அடபோங்க நீங்க வேற.. :(
pic : http://www.bradknapp.com/
---
#181
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
.
.
check out side bar கருத்து பொட்டி!
that's the reason for ஒரு தென்றல் புயலாகி வருதே' !!
;-)
அப்ப நல்லா வாங்கி கட்டியிருப்பீங்க பொல இருக்கே, நல்லா வேணும்ங்கண்ணா உங்களுக்கு
ஹா ஹா ஹா.....
என்ன ராசா, இந்த மாதிரி விஷயங்கள்ளே கொஞ்சம் careful ஆ இருக்க வேணாமா? என்னமோ போங்க :-)
எல்லாஞ் சரி....ரொம்பத் தமாசா யாருக்கு ஹாய் சொன்னீங்க? உங்களுக்கும் சுதர்சன் போட்ட கிசுகிசுவுக்கும் என்ன தொடர்பு? ;-)
ஞான்ஸ் >. அதான் பொட்டிய தூக்கிடனே.. :)அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்க
மஞ்சூர் ராசா >> தெய்வீக சிரிப்பைய்யா உமக்கு... நல்ல எண்ணம்
ஐகாரஸ் >. என்னதான் இளவஞ்சி மாய்ஞ்சு மாய்ஞ்சு பாடம் நடத்துனாலும், பட்டாத்தானே நமக்கு விளங்குது. இப்பெல்லாம் ரிமைண்டர் போட்டு வச்சுகறதுன்னா பாருங்களேன, எவ்ளோ கேர்புல் - ஆயிட்டோம்னு :)
ராகவன் >> என்னங்க இது இப்படி கேட்டுட்டீங்க.. சரி வுடுங்க தனியா சொல்லிடறேன் உங்க கிட்ட..
அப்புறம்.. இந்த கிசுகிசு எல்லாம் நம்பாதீங்க.. அதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு எழுதறது..
(சுதர்ஷன்.. உனக்கு இருக்குயா ஒரு நாளைக்கு)
//கையெழுத்து சுற்றுலான்னு //
ஒருவேள 'கையெழுத்து' போட்டது தெரிஞ்சு போயிருக்குமோ!
;-)
பிரச்சன இல்லேன்னுட்டு எதுக்குப்பு கருத்துபொட்டிய தூக்குனீக!
ராசா: ரிமைண்டர் போடற அளவு மறந்து போனது தெரிஞ்சா அப்புறம் புயல் நெருப்பா ஆயிட போவுது. நீங்க போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். இளவஞ்சி சரியா சொல்லி தரல போல இருக்கு
ஞான்ஸ் >. கருத்துபொட்டியால நிறையா டயல்- அப் காரங்க (என்னையும் சேர்த்து) ரொம்ப அவதிபடுறாங்க.. அது இறங்க ரொம்ப நேரம் ஆகுதுன்னு வருத்தப்பட்டாங்க..
சக விவசாயி போன் போட்டு வருத்தப்பட்டாரு.. அதுக்காகத்தான் அப்பு தூக்கினேன்.
நம்ம இடத்துல இருந்து தான் தூக்கியிருக்கேன்.. மொத்தமா இல்ல..
இன்னும் இங்க இருக்கு http://www.shoutmix.com/box/raasaa/ நீங்க ஆசப்பட்டா அங்க 'கருத்து' சொல்லலாம்.. :) நானும் வந்து பதில் தர்றேன்..
அப்புறம்..
//ஒருவேள 'கையெழுத்து' போட்டது தெரிஞ்சு போயிருக்குமோ!// அதெல்லாம் உத்தரவு வாங்கிட்டு தான்.. :)
தேன்துளி >> //அப்புறம் புயல் நெருப்பா ஆயிட போவுது.// அதெல்லாம் ரகசியமா மெயின்ட்டெயின் செஞ்சுக்கறோம்..
மறக்கறதுன்னு இல்லைன்னாலும்.. ஒரு சேப்டிக்காக தான் அந்த ரிமைன்டர் :)
//இளவஞ்சி சரியா சொல்லி தரல போல இருக்கு//
பசங்க படிக்காததுக்கு வாத்தியார குத்தம் சொல்லி என்னங்க செய்யிறது..
நம்ம குலவழக்கப்படி.. சொல்பேச்சு கேக்கிறதுங்கிறது பெரிய குத்தம் மாதிரிங்க.. அதான் இப்படி.. :)
தென்றல் புயலானது ரைட்டு...
ராசா, நீங்க புரட்சி புயலாகித் தென்றலைத் தாலாட்டிட வேண்டியது தானே:-)
ராசா,
//ஒரு நாள் பூராவும் மறுபடியும் உயிர்பிக்காம வச்சிருந்து, பொறுமையா மூணு நாளுக்கப்புறம் //
தெளியறதுக்கு 3 நாளாச்சா?! என்னப்பு சரக்கு அது?! கையெழுத்து இவ்வளவு பவர்புல்லான்னு டவுட்டாத்தான் இருக்கு! எதுக்கும் உங்களை அப்போலோல செக்கப் செஞ்சு ஒரு ரிப்போர்ட் வாங்கனும்போல! :)))
நேற்று நான், இன்று நீ, நாளை யாரோ??
சும்மாங்காட்டியும் தத்துவம் எழுதி இருக்கேன், உங்க பதிவுக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை
நான் கூட வேற ஏதோ புயலப் பத்தி பேசறீங்கன்னு நினைச்சேன்..
சரி சரி.. இதெல்லாம் இல்லைன்னா என்னப்பூ?? .. ரொம்ப போராகிடும்ல.. அப்பப்போ புயல், மழை, மேகம், இடி எல்லாம் இருக்கணும்.. அப்போ தான் (எங்களுக்கும்) போராகாம (bore)இருக்கும்.. என்ன சொல்றீங்க?
என்ன, பெரிய போர் அளவுக்குப் போகாம பாத்துகிடுங்க..
அய்யா ராசா கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி மறந்தா?
அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு ? :(
அட ராசா... இதெல்லாம் ஒரு வெள்ளோட்டம்னு வெச்சுக்குங்க. வருசம் பத்தானாலும் வெதணம்னா (weather)தென்றல், புயல், இடி, மழைன்னு எல்லாம் மாறி மாறி வந்துக்கிட்டுத் தானே இருக்கும்?! தப்பிச்சுரப்போறீங்களா என்ன ? :-)
// ராசா (Raasa) said...
ராகவன் >> என்னங்க இது இப்படி கேட்டுட்டீங்க.. சரி வுடுங்க தனியா சொல்லிடறேன் உங்க கிட்ட.. //
தனியாவா? சரி. சரி. லீலா பேலஸ்ல வெச்சிச் சொல்லுங்க. :-)
// அப்புறம்.. இந்த கிசுகிசு எல்லாம் நம்பாதீங்க.. அதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு எழுதறது.. //
இப்பத்தான்....சுதர்சன் என்னைய ஃபோன்ல கூப்புட்டு ஒன்னும் சொல்லலை. :-)
// (சுதர்ஷன்.. உனக்கு இருக்குயா ஒரு நாளைக்கு) //
ஒரு நாள் போதுமா? அன்றொரு நாள் போதுமா?
ஏன் இப்படி???? வாத்தி சொன்ன மாதிரி காலத்துக்கும் நிக்கற மாதிரி ஏதாவது பண்ணினா சரியா போய்டும்ல்ல...
eiyaaa,
//
ஒரு கையெழுத்து சுற்றுலான்னு போயிட்டு
//
//
சாயங்காலம் ரவுடிகாவியம் படம் பார்க்கும் போது//
ithu yellam ennanga..please enlighten me.
--
Jagan
புயலை தென்றலாக்கும் வேலையில இருந்ததுல யாருக்கும் பதில் சொல்ல முடியாம போச்சு.. இப்பத்தான் திரும்பியிருக்கேன்..
thanx for all ur concerns மக்களே ;)
"thanx for all ur concerns" - Hmmmm comments ellam padichaa makkal rombha concerned-aa dhaan commenteerukka maadhiri theriyudhu :)
தேவ் >> தாலாட்டியாச்சு.. தாலாட்டியாச்சு :)
இளவஞ்சி >> //
தெளியறதுக்கு 3 நாளாச்சா?! // அட அது ஒரு நாள் தாங்க.. நீங்க எதும் தப்பா நினைச்சுகாதீங்க..
இளா >> அனுபவம் பேசுது.. அவ்ளோ தான் சொல்ல முடியும்
பொன்ஸ் >> வாழ்க்கையே போர்களம், வாழ்ந்து தான் பார்க்கனும்
அனு >> ஏது.ஏது.. நீங்க புயலை சுனாமியா மாத்திருவீங்க போல இருக்கு. :)
செல்வராஜ் >> நாலு வெதணமும் கலந்தது தான வாழ்க்கை.. ஒத்துகிட வேண்டியது தான் :)
ஜி.ரா >> சொல்லிட்டாங்களா ..??
உதயா >> அதெல்லாம் செஞ்சிருவொமில்ல.. என்ன கொஞ்சம் லேட்டா செஞ்ட்டோம். அவ்ளோ தான்.
ஜெகன் >> ரவுடிகாவியம் தெரியாது உங்களுக்கு.. 'புதுப்பேட்டை'ங்க..
அப்புறம் கையெழுத்து'ன்னா.. அட இதெல்லாம் போயி பொதுவுல கேட்டுகிட்டு.. எனக்கு ஒரே பப்பி ஷேமா இருக்குதுங்க..
WA >> :)
இப்படிப் பண்ணினா புயலென்ன?
ரீட்டா, கேத்ரீனா, சுனாமி எல்லாமே வரும்.
:)
Post a Comment