Monday, June 26, 2006

தலைப்புசெய்திகள் ஆறு


முன்ன ஒரு நா இப்படித்தான் நான் நாலு நாலு'ன்னு நாலு பேர இழுத்துவிட்டேன்.. அது அப்படியே ஒரு சுத்து சுத்தி ஓஞ்சு.. இப்ப அடுத்து இது.. ஆரு ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியலைங்க, ஊருகுள்ளார எல்லாரு 'ஆறு, ஆறா' போட்டு தள்ளுறாங்க, நம்மளையும் புடிச்சு, சிறியபார்வை 'நரியா' தள்ளிவிட்டுட்டாருங்க..
நம்மளது பேரு ராசபார்வை, அவரோட பதிவு பேரு சிறியபார்வை.. ரெண்டுலயும் பார்வை இருக்குதேன்னு பாசமா நம்மளையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்க சொல்லிட்டாரு போல இருக்குதுங்க..
அப்புறம் நம்ம்ளும் என்னத்தை எழுதறதுன்னு மண்டைய ஒடச்சுகிட்டு இருக்கும் போது, யாராவது ஒரு தலைப்ப குடுத்தா வுட்ருவமா என்ன :)


ஆளாளுக்கு விதவிதமா ஆறு போட்டிருக்காங்க.. நம்ம பங்குக்கு நம்மளும் எதாச்சும் வித்தியாசமா போடனுமே.. அதுனால 1.1.2010'ல வரப்போற 'தினப்பார்வை'யில இருந்து ஒரு 'ஆறு' முக்கியமான தலைப்பு செய்திகள் மட்டும், உங்களுக்காக ஸ்பெஷலா இங்க--

******************************************
தலைப்புசெய்திகள்
தினப்பார்வை
1.1.2010

1. ஆறு நாள் சுற்றுபயணமாக டெல்லி வந்தார் 'இத்தாலி' பிரதமர் - ஜனாதிபதி 'சோனியாகாந்தி', பிரதமர் 'ராகுல்காந்தி' ஆகியோர் வரவேற்ப்பு.

2. முதலமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் - க.தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் கோரிக்கை.

3. இதுவே எனது கடைசி திரைப்படம் - புதுப்பட பாடல் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூசகம்.

4. தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு நிச்சயம் ஒரு நாள் மருதநாயகம் வரும் - இணையதள பேட்டியில் கலைஞானி கமல்ஹாசன் உறுதி.

5. எனக்கான இடம் இன்னும் அணியில் காலியாகத்தான் உள்ளது, விரைவில் நான் அணியில் இடம் பிடிப்பேன் - முன்னால் இந்தியா கேப்டன் தாதா கங்குலி நம்பிக்கை.

6. வரும் மே 1 'தல'யின் பிறந்தநாள் அன்று 'காட்ஃபாதர்' திரைக்கு வரும் - ரசிகர்கள் மகிழ்ச்சி.


******************************************

நாமளும் ஒரு 'ஆறு' பேரை இழுத்து விடனுமாம்.. இல்லாங்காட்டி சாதரண குத்தமில்லைங்க.. ஸ்பெஷல் தெய்வகுத்தமாயிடுமாம், பயங்காட்டுறாங்க.. நாங்கெல்லாம் 'மாரியாத்தா கண்ணை குத்திரும், ஒழுங்கா ஹார்லிக்ஸ் குடி'ன்னு மிரட்டுன காலத்துலயே, அப்படியே கொஞ்சமா வாயுல அடக்கி வச்சிருந்துட்டு, டக்குன்னு சின்ன கேப்புல சோபா கிழிச்சல விலக்கி துப்பி, அரைடவுசர அரணாகயித்துல கட்டிட்டு சுத்துற காலத்துலயே மாரியாத்தாவ ஏமாத்துன ஆளுக, இதுக்கெல்லாம் பயந்துருவமா என்ன?
இருந்தாலும் ஆசைபட்டு கேட்டிருக்காங்க.. அதுக்கா கூப்பிடலாம்னு பார்த்தா, யாரும் மிச்சமிருக்கிற மாதிரியே தெரியலைங்க, நமக்கு தெரிஞ்ச வரைக்கும் மிச்சம் இருக்கிற ஆளுகல கூப்பிட்டிருவோம்னு.. ஒரு லிஸ்ட்

1.உதை
2.இளா
3.வித்யா
4.விட்ச்சி
5.கண்ணன்
6.ச்சிப்பர்

யப்பா.. பேரை காப்பாத்துங்கப்பா ;)

--
#187

10 comments:

ILA (a) இளா said...

உங்க பேர இழுத்து விடலாம்னு உங்க பக்கம் வந்தா .. இப்படி,

Already பேர காப்பாத்தியாச்சு

நரியா said...

ராசா ஆறு போட்டதுக்கு நெம்ப நன்றிங்கோ!.

தயானிதி மாறன், அடுத்து பிரதமர் ஆவார்ன்னு கொஞ்சம் பேரு சொல்லுறாங்க. நீங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆக்கிட்டீங்க. நல்லது தான்.

உங்க விதியாசமான ஆறு ரொம்ப நல்ல இருக்குதுங்க. வாழ்த்துக்கள்.

நன்றி,
நரியா

நாகை சிவா said...

1,2,3,4, - நக்கலு நடந்தாலும் நடக்கலாம்
5 - குசும்பு
6 - மெய்யாலுமா..........

ilavanji said...

ஏழாவது நியூசு "ஞானபீட விருதினை பிரபல எழுத்தாளர் ராசா வாங்க மறுப்பு! டெல்லி குளிர் ஒத்துக்கொள்ளாததால் தவிர்த்தார்" ங்கற முக்கியமானதை விட்டுட்டீங்களே!! :)

Pavals said...

இளா >> வேவ்ஸ் ஒரே மாதிரி ஓடுது, அதான் :)

நரியா >> நன்றி..

Pavals said...

நாகைசிவா >> //மெய்யாலுமா..........// போற போக்க பார்த்தா மெய்யாலுமே அப்படித்தான் ஆகும் போல..

இளவஞ்சி >> //ஞானபீட விருதினை பிரபல எழுத்தாளர் ராசா வாங்க மறுப்பு! // அட நீங்க வேற, நான் 'நோபல்' பரிசு ரேஞ்சுக்கு எழுதலாம்னு பார்த்தேன், ஆனாப்பாருங்க.. 'ஆறு' தான் எழுதனும்னு சொல்லிட்டாங்க..

நம்ம ஞான்ஸ் இருந்தா இப்பவே குடுத்திருப்பாரு.. ஆளா காணலை.

Pavals said...

நன்றி துளசி.. :)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ராசா!
நானும் இந்த ஆறுல குதிச்சிட்டேன்! பேரைக் காப்பாத்தினேனா?
http://vidyasa.blogspot.com/2006/06/blog-post_27.html
- வித்யா

Udhayakumar said...

தினப்பார்வை எனக்கும்தான் வந்தது, முந்தீட்டீங்ளே....

இப்போத்தான் லைட்டா, லெஃப்ட்ல ரெண்டு, ரைட்டுல ரெண்டுன்னு வாங்கிட்டு வேலை செஞ்சுட்டு இருக்கேன். கோர்த்து விட்டுடீங்க, நான் ஆறு பேரு புடிக்க கொஞ்ச நாளாகும், பரவாயில்லையா?

Unknown said...

என்னத்த பத்தி எழுதுறதுன்னும் சொல்லிட்டீங்கன்ன எழுதுறதுக்கு சுளுவா இருக்கும், நானும் ரெண்டு நாளா போட்டு தலை உடைச்சுட்டு இருக்க்கேன் ஒண்ணும் தோண மாட்டேங்குதே :(