'நீதான்டா எப்படியாவது சொல்லனும், மத்தவங்களை எல்லாம் கேக்க முடியாது'ன்னு கெஞ்சலா கேட்ட பாபுக்காக, 'நான் முடிச்சு குடுக்கறேன்'னு பந்தாவா சொல்லிட்டு, பஸ்ல கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சி வர்ற வரைக்கும், 'இரு சிட்கோ கேட் தாண்டட்டும், கிணத்துகிடவு வரட்டும், முள்ளுபாடி கேட் தாண்டட்டும்னு' உள்ளார நடுங்கிட்டு வெளிய மிதப்பா உக்காந்திருந்ததா நினைச்சுட்டு இருந்த என்னை பொள்ளாச்சி பஸ்ஸ்டான்ட்ல எறங்கினதும் 'என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே, பாபு எதாவது கேக்க சொன்னானா?'ன்னு நிதானமா சுகன்யா கேட்ட அன்னைக்குத்தான் இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரத்தை நிஜத்துல கிட்டக்க பார்த்ததுங்க.
எப்பவுமே சாயம் போன கலர்ல சட்டையும், ப்ரவுன் கலர் முழுக்கால் டரவுசருமே போட்டுகிட்டு திரிஞ்சவன், திடீர்ன்னு க்ராஸ்கட் ரோடெல்லாம் சுத்தி டீ-ஷர்ட்'ம் ஜீன்ஸ் பேண்ட், ஆக்க்ஷன் ஷு'னு வாங்கினப்ப கூட பெருசா உறைக்கலைங்க, ஆனா, காலங்காத்தால அஞ்சரை மணிக்கு சைக்கிள் மிதிச்சுட்டு வந்து மூச்சு வாங்க எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு 'ராசு, எல்லாம் வாங்கினோம், ஆனா சாக்ஸ் வாங்காம வந்துட்டோம், உன் சாக்ஸ் ஒன்னு குடு'ன்னு கேட்டு வாங்கிட்டு போறவனுக்கு ரகசியமா கட்டைவிரல் காட்டி அனுப்புனேன் பாருங்க அன்னைக்குத்தான், இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரம் நம்மள ரொம்ப நெருங்கி வந்து போனது.
இந்த பொதுசேவை'களுக்கு அப்புறம், பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்ங்கிற மாதிரி நானும் 'தொடதொட மலர்ந்ததென்ன' கேட்டு கண்மூடி உக்காந்த நேரம், 'நாம பெரிய ஆளாயிட்டோம்னு' தோணுச்சுங்க..
அப்புறம் சட்டுன்னு ஒரு நாள் 'நீ கண்டிப்பா இஞ்சினியர் ஆகி, இந்த உலகத்துக்கு சேவை செய்யனும்னு' ஊரை விட்டு தள்ளி கொண்டுபோயி உக்காரவச்சிருச்சுங்க விதி. அங்க போன பின்னாடி 'கண்மூடி' உக்கார வழக்கம் எல்லாம் 'சின்னபுள்ளதனமா' போயி, கழட்டி விட்ட மேல் பட்டனும், துவைக்காத ஜீன்ஸும் சாக்ஸ் போடாத பவர்ஷூவுமா, நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும் மறுகையில ராஜா'வுமா உக்காந்து பண்னாட்டு பண்ணிட்டு இருந்தகாலம் அது. கண்மூடி ஆகாசத்துல பறக்கிறவன லைட்டா உசுப்பேத்தி, அவன் காசுலயே சிந்தாமனி, ராஜம்னு நோம்பி கொண்டாடிட்டு, அப்புறம் சாவுகாசமா ஹாஸ்டலுக்கு வந்து 'இந்த மாதிரி எத்தனைய பார்த்திருக்கேன் போய் பொழப்பா பாருங்கடா டேய்'ன்னு உதாரா சொல்லிகிட்டு இருந்தேன்.
எவனோ திமிருக்கு செஞ்ச ப்ரச்சனைக்காக, வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ, 'பங்கு, ப்ரின்சி பேசிக்கலாம்னு கூப்புடறாரு, நீயும், செல்லானும் போங்க, அது தான் சரிவரும்'ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் விலக்கிட்டு 'ஹோ'ன்னு இரைச்சலுக்கு நடுவால படியேத்தி விட்டப்போ, கண்மூடி ஆகசத்தை பார்க்கிறவங்கள பார்த்து 'நாம அதெல்லாம் தாண்டி வந்துட்டோம்னு' தோனுச்சுங்க.
'டேய், வாழ்க்கை போயிரும்டா, பர்ஸ்ட் க்ளாஸ் கூட வாங்கலைன்னா எப்படி?'ன்னு HOD கூப்பிட்டு, டீ வாங்கி குடுத்து, உக்காரவச்சு பேசினதுல, ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் தேடி எடுத்து, மிச்சமிருந்த மூனு பேப்பரையும் முடிச்சு, எப்பவும் முதல் மார்க் வாங்கற 'காக்ஸ' கடுப்படிச்சு, பர்ஸ்ட்கிளாஸ தொட்டு பார்த்ததுட்டு. ரத்தகட்டும் சஸ்பென்ஷனுமா போயி நின்னப்போ நடந்தத நினைச்சுகிட்டே எங்கய்யன் கிட்ட கொண்டு போயி ஆர்டரை காட்டிட்டு , விழுந்து விழுந்து படிச்சவெனெல்லாம் அப்ரன்டீசா இருக்க, நாம டயர் கம்பெனியில ப்ரடொக்க்ஷன்ல பெருமையா சேர்ந்து, ராத்திரி ஷிப்டுல மலையாள சேட்டங்கிட்ட கத்திரியோட உலகநிகழ்வுகள், நவீனம், சிவப்புகொடின்னு பேசும் போது 'இப்பத்தான் நிசமாவே தாண்டியிருக்கோம்'னு தோனுச்சுங்க..
அப்புறம் சென்னைப்பட்டணதுக்கு வாழ்க்கை பட்டு போயி, சால்ட் பிஸ்கட்டும் டீயும் அடிச்சுட்டு, தினம் தினம் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வீதியெல்லாம் சுத்தி, எப்படியோ 'சாஃப்டா'ன ஆளா மாறி, அதுவரைக்கும் போடாத ப்ளைன் சர்ட்டெல்லாம் போட்டு டக் பண்ணி, ஆகசத்துல பார்த்த ப்ளைட்டெல்லாம் உள்ள போயி பார்த்து, கன்ஸ் அன் பேரல்ஸ்'ல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு, சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு, சந்தோஷமா அவ ரிசப்சனுக்கு போயி போட்டாவுக்கு நின்னு, ஈசிஆர்'ல 100 -110 எல்லாம் சாதரணா தொட்டு, நீலாங்கரை தாண்டி கடல் மணல்ல படுத்துகிட்டு 'மண்டை' எபக்ட்டுல, 'வாழ்க்கை எப்படி மாறுது பார்த்தியா?'ன்னு ஆரம்பிச்சு நான் கோர்வையா பேசுறத வாயத்திறந்து பார்த்துகிட்டு இருந்த சகா'க்க மத்தியில 'நாம ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டோம்'னு தோனுச்சுங்க.
'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா?'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும், 'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், 'திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும், 'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா? லேட்டான கேப் புடிச்சு வா, டூ வீலர் வேண்டாம்'ன்னு நம்ம சகாவுக்கு போன் போட்டு பொறுப்பா பேசிட்டு, ராத்திரியில குக்கர் வைக்கும் போதும் கூட மறுபடியும் தோணுச்சுங்க.. 'நாம அதெல்லாம் தாண்டிட்டோம்'னு.
வாரக்கடைசியில, நம்ம இடுப்பு அளவு உசரம் இருக்கிற பசங்கள கூட்டிட்டு 'அதெல்லாம் இல்ல சிக்ஸ்தான் அது'ன்னு தெரியாத மொழியில அரைகுறையா பேசி சண்டைபுடிச்சுட்டு இருக்கும் போதும், எல்லாரும் ரொம்ப சுவாரசியமா படம் பார்க்கையில 'ஜீசஸோட பேத்தி நீதான்னு' நம்ம ஹீரோ சொல்லும் போது, 'இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது'ன்னு கைபுள்ள கணக்கா சவுண்ட் விட்டு, மொத்த தியேட்டரும் அரை நிமிஷம் சிரிக்கும்போதும், பக்கத்து மாடியில இருக்கிற பொண்ணுக மொட்டைமாடிக்கு போகுற நேரம் பார்த்து நாமளும் மொட்டைமாடிக்கு புஸ்தகமும் ராஜா'வுமா போகலாம்ங்கிற போது தாங்க தோணுது.. 'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..!'ன்னு.
ஒரு வேளை இதையும் தாண்டி போவமோ என்னமோ, ஆனா அதுக்கெல்லாம் விருப்பமில்லைங்க..
'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :).
சமர்பணம் : வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.
(என்ன்டா புலம்பியிருக்கான்னு புரியாதவங்களுக்கு.. இங்க பாருங்க.. சும்மா ஒரு ஆசை.. ஹி.ஹி.. )
---
#184
60 comments:
என்னைய நல்லவன்னு சொல்லிட்டயே ராசா - sam
ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா வளர்சிதை லேசா....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராசா!
//அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..!'ன்னு.//
கலக்கிட்டீங்க ராசா. நல்லா இயல்பா எழுதியிருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
eppavum pola kalakurenga :-) (athavathu yarukum puriyama yelutha, but ippo yellam namma sync agitoom nu nenaikarean, i can able to understand more that what you have written)
wish u good luck!
--
Jagan
sam - நீ அப்போ.. இப்போ.. எப்பவுமே நல்லவன்டா.. :)
ராகவன் >> நன்றி.. நல்லாயிருக்குங்கரீங்க.. ரைட்டு..
அனுசுயா >> நன்றி :)
ஜெகன் >> புரியுதா, அய்யய்யோ.. எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையா இருங்க.. நம்ம எழுத்தெல்லாம் புரியுதுங்கரீங்க.. ம்ம்..
//'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா?'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும்,//
சும்மா நச்சுன்னு இருக்கு...
நல்ல தெளிவான ஓட்டம்... கலக்கிட்டிங்கண்ணா!!!
என்னத்த சொல்றது ராசா, ஜிம்ப்லி சூப்பர்
உதயா >> நன்றி.. resemblanceஆ?? :)
இளா >> //ஜிம்ப்லி சூப்பர்// டாங்க்ஸ்ப்பா!!
வாழ்த்துக்கள் ராசா!
போட்டி மட்டும்தானா?
இல்லை பொண்ணு பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்களா?
அப்படின்னா அதுக்கும் சேர்த்து இன்னொரு வாழ்த்துக்கள்.
போட்டி நல்லா பலமாத்தான் இருக்கும் போல :-)
சிபி >> டச்சுல இல்லையா.. //பொண்ணு பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்களா? // அதெல்லாம் முடிஞ்சு தேதி குறிச்சாச்சுங்க.. பழைய பதிவுகள கொஞ்சம் அப்படியே ஒரு பார்வை வுடுங்க.. :)
பிரகாஷ் >>
bye bye adolosence என்கிற சொற்றொடர் மனசுக்குள்ளே ஏற்படுத்தும் வலிகளையும் சந்தோஷங்களையும் புரிந்துகொள்ளுவார்கள் //இந்த வரிதான் எனக்கு ஆரம்பபுள்ளியே.. நம்ம பதிவு போட்டிய பலமாக்கும்ங்கரீங்க.. ?? ம்ம் பார்ப்போம்..:)
எதை வேணாங்கறீங்க ராசா,
வளர் மாற்றத்தையா, சிதை மாற்றத்தையா?
நல்லா எழுதியிருக்கீங்க!
A+
+ குத்துன வேகத்துல ஸ்க்ரீனே ஓட்டையாயிருச்சு! :)
சொக்கா, இருக்கற ஒரு ஓட்டு வைச்சுக்கிட்டு எத்தன பேருக்கு போடறதுன்னு தெரியலையே?!
ராசா, அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.
நீளமான வாக்கியத்துக்கு இளவஞ்சிக்குப் போட்டியா வந்துருவீங்க போலிருக்கே ! :-)
தல,
எங்கியோ.... போயிட்டீங்க!
:-)
====== ======= =======
இந்த பதிவுல கூடுதலா ஆபாசம் இருக்குன்னு, இதுக்கு A+ rating குடுக்கறாங்களா உஷா!
எனக்கு அப்டி ஒன்னும் தெரியல; எங்க 'தல'யும் அப்டி எழூதற ஆள் கெடயாதே!!
;-)
apdiye reverse gear ah pottu konja naal pinnadi poitu vandha maathiri irundhathu, pollachi bus, cross cut road,action shoe ada ada ada....
சுரேஷ் >> நன்றி.. நல்லாயிருக்குன்னு சொன்னீங்க சரி.. இப்படி கேள்வி எல்லாம் கேட்டா எப்படிங்க. அந்த வயசுக்கான இம்மெச்சூரிட்டிய தொலைக்க விரும்பலைன்னு வச்சுக்கோங்க..
உஷா >> //A+// ம்ம்.. ராசா.. என்னமோ நடக்குது.. நடத்து நடத்து :)
இள்வஞ்சி >> //+ குத்துன வேகத்துல ஸ்க்ரீனே ஓட்டையாயிருச்சு! :)// அப்படியே தேன்கூடு பக்கமும் வந்து கிழிச்சுடுங்க :)
செல்வராஜ் >> //நீளமான வாக்கியத்துக்கு இளவஞ்சிக்குப் போட்டியா வந்துருவீங்க போலிருக்கே ! :-)// வாத்தியாருக்கே போட்டியா... சொக்கா.. நானில்லை..
நமக்கு எப்பவுமே ஒரு விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவே புடிக்காதுங்க, எப்பவுமே அரைபுள்ளி தான் ;)
ஞான்ஸ் >> நல்லாயிருய்யா :)
மூர்த்தி >> மேல செல்வராஜ்'க்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..
ஷ்யாம் >> இன்னும் க்ராஸ்கட் ரோடு, எல்லாம் பயபுள்ளைக கூட்டம் நிரம்பித்தான் வழியுது :)
//நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும்//
ஓ...ரைட்டேய்.
//வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ//
இந்த மேட்டர் எனக்கு ஞாபகம் வர்லையே??
//சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு,//
ஓக்கே.ஓக்கே...
//வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.//
சூப்பர்.
என்னோட ஓட்டு உங்களுக்குத் தான்.
//இந்த மேட்டர் எனக்கு ஞாபகம் வர்லையே??//
அதெல்லாம் நீங்க உள்ள வர்றதுக்கு முன்னாடி நடந்ததுப்பா..
//ஓக்கே.ஓக்கே...//
உமக்கு மட்டும் இந்த மாதிரி ஒன்லைனர் எல்லாம் கரெக்ட்டா புரிஞ்சுடுமே :)
வெற்றி பெற வாழ்த்து(க்)கள், இங்கேயும் அங்கேயும்.
ஆமாம். அம்மாவுக்கு என்ன பதில் சொன்னீங்க?
துளசி >> நன்றிகள் பல.. :)
//அம்மாவுக்கு என்ன பதில் சொன்னீங்க?// வழக்கம் போல.. 'நானே சொல்றங்ம்மா'ன்னு தான்.. ஆனா நம்ம பேச்சை யாரு கேக்கிறா இங்க :(
//சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து //
இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பு
சான்ஸே இல்ல! வழக்கம் போல படிச்சுட்டு போக முடியாம பின்னூட்டம் போட வைச்சுட்டீங்க!
கல்யாணம் கட்டிக்கற தேதியைக் கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங்க. அந்த சாக்கிலயாச்சும் கோயம்புத்தூருக்கு ஒரு விசிட் அடிக்கத்தான்!
ராசா, நல்லா இருக்குங்க.. ஆட்டோகிராப் படம் பார்த்த பீலிங் தான் எனக்கும்.. ஆமாம், வழக்கமாக் கேக்குற கேள்வி தான்
//'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது//
அம்மணிக்குத் தெரியுமா? ;)
cipher >> //கொடுப்பினை வேணுமப்பு// இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. :)
நிர்மலா >> //பின்னூட்டம் போட வைச்சுட்டீங்க! // நன்றி.. நன்றி
//கல்யாணம் கட்டிக்கற தேதியைக் கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங்க. // கண்டிப்பா
பொன்ஸ் >> //அம்மணிக்குத் தெரியுமா? ;)// எங்க சுத்துனாலும் அங்கயே வந்து நிக்கறீங்களே.. ம்ம்.. இதெயெல்லாம் சொல்லிட்டு அப்புறம் அவஸ்த்தை படுறது யாரு.. அங்கெல்லாம் 'அமைதி.. அமைதி.. ஒரே அமைதி'தான் ;)
நல்லா எழுதியிருக்கீங்க ராசா!
PS: சிடிசி பக்கம் 12 செண்ட் இருக்குங்களா? பெரிய ஆளுங்க நீங்க! இப்போ காளப்பட்டியிலயே செண்ட் 50 தாண்டியிருச்சு :-(
கண்ணன் >> நன்றி.
அப்புறம்.. நான் சொன்ன சிடிசி.. பொள்ளாச்சியிலைங்க.. கோவையில இல்லை.. :)
//காளப்பட்டியிலயே செண்ட் 50 தாண்டியிருச்ச// நான் பார்த்த வரைக்கும் 1, 1 1/2 சொன்னாங்க ரெண்டு மாசம் முன்னாடி.. காளப்பட்டி ரேட்டெல்லாம் பார்த்து மிரண்டு போயித்தான் பொள்ளாச்சியே போதும்னு முடிவு செஞ்சுட்டேன்..
சோக்கா கீது தல
கேவிஆர் >> என்னப்பா கொசப்பேட்டை கிங்'கு.. இந்தாண்ட ஆளயே பாக்க முடியல..
இந்த மாறி எதாவது பழையகத வுட்டாத்தான் எட்டிபார்க்கிறதுன்னு எதுனா வேண்டுதலா.. ?
ஆகா ஆளாளுக்கு இப்படி போட்டி போட்டுட்டு கலக்குங்க. எல்லாமே நல்லா இருக்கு, இருக்கது ஒரு ஒட்டு வம்பே இல்லாம யாருக்குமே போடாமா எஸ்கேப் ஆவுறது உத்தமம்னு தோணுது. கள்ள வோட்டு போட முடியுமானு பாத்துட்டு திரும்பி வரேன். பதிவு சூப்பர் ராசா.
ராசா: இனிமையான பதிவு. வாழ்த்துக்கள்.
தேன்துளி >> வாழ்த்துக்கு நன்றி
இலக்கியன் >> வாங்க வாங்க.
//ila ennaku advisor
aaana neenga enaku role model// ஆஹா.. புல்லரிக்க வச்சுட்டீங்களே.. சரி சரி..
பேரை காப்பாத்துனா சரி ;)
//parata varthai thedi googlea tired aayiduchu// நன்றி இளவளே.. நன்றி..
WA >> //யாருக்குமே போடாமா எஸ்கேப் ஆவுறது உத்தமம்னு தோணுது// வோட்டை போடாம இருக்கிறது ரொம்ப தப்புங்க.. கண்டிப்பா யாருக்காவது ஒருத்தருக்கு போட்டிருங்க..
//கள்ள வோட்டு போட முடியுமானு பாத்துட்டு திரும்பி வரேன்// அதுக்கும் வழி இருக்கு.. உங்களுக்கு தனியா சொல்றேன்.. ஆனா அந்த மாதிரி ஓட்டு போட்டா, கண்டிப்பா எனக்கு தான் ஓட்டு போடனும்.. ஆமா :)
//பதிவு சூப்பர் ராசா.// நன்றி.. நன்றி..
வேணாம்ய்யா அதுக்கு எதுக்குய்யா டாட்டாவெல்லாம் காட்டிகிட்டு இருக்கட்டும்ய்யா அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:)
//வேணாம்ய்யா அதுக்கு எதுக்குய்யா டாட்டாவெல்லாம் காட்டிகிட்டு இருக்கட்டும்ய்யா அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:) //
அதே அதே..
வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாங்க தேவ்..
//அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:)
அதேதான இன்னாத்துக்கு டாட்டா எல்லாம் காட்டிட்டு..
மனதின் ஓசை >> வாழ்த்துக்கு நன்றி.
கலக்கிட்டீங்க.
All the best
- Pranni
நன்றி pranni
(இதை எப்படிங்க படிக்கிறது? ப்ரனி? பி.ரன்னி?)
சும்மா தாண்டிட்டீங்க போங்க...
ரவி >> //தாண்டிட்டீங்க போங்க...// தாண்டவேண்டாம்னு நான் சொல்றேன்.. தாண்டிட்டேன்னு சொல்றீங்க :)
'பிரானி' - ன்னு படிங்க :-)
//'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :). //
நம்ம மனசில் என்ன இருக்கோ அதை அப்படியே சொல்லிட்டிங்க ராசா.......
கலக்கிட்டீங்க அப்படீங்கறத தான் அப்படி சொன்னேனாக்கும் ஹி ஹி
நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..
உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
pranni>> //'பிரானி' - ன்னு படிங்க :-)// :) னி'யா இல்லை ணியா? :)
நாகை சிவா >> நன்றி.. :)
tamilatamila >> //உங்களுக்குத் தான் poduvenanu கேள்வி எல்லாம் கேட்டா எப்படிங்க?!// அட, நீங்க வேற நானே எனக்கு ஓட்டு போடலை.. இதுல நீங்க போடுங்கன்னு வேற கேக்கபோறனாக்கும்..
ரவி..>> சும்மா தமாசுங்க அது.. (நான் தமாசு செஞ்சா, அதுக்கு நானே விளக்கம்வேற குடுக்க வேண்டியிருக்குது..:( )
யாத்ரீகன் >> ம்ம். வந்திருவோம்..
உங்க கதை படிக்க வந்து, அப்புறம் கடந்த ரெண்டு நாளா, நீங்க போட்ட எல்லா பதிவையும் படிச்சிட்டு இருக்கேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. Like your writing style a lot:)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்....
நன்றி குமாரி.. :)
நன்றி.. தமிழா(2) .. நன்மனம்..
எல்லாம் உங்க அதரவு தாங்க..
மாறவேண்டாம்னு மக்களே சொல்லிட்டாங்க ராசா.. என்சாய்:)
பொன்ஸ்>>
நான் சொன்னத மக்கள் ஒத்துகிட்டாங்களா.. இறைவா, இது என்ன சோதனை
btw : உங்க யானைய கொஞ்சம் மெதுவா ஓடச்சொல்லுங்க.. மானிட்டரே ஆட்டம் காணுது..
வாழ்த்துக்கள் ராசா!!
ஒரு ஓட்டில முந்தீட்டீங்களா..?
அடுத்த மாதப் போட்டியில ஒரு கை பார்த்திடுவோம்.
ம்ம்ம்...ராசா கலக்கிட்டீங்க.....
போட்டியில் வெற்றி பெற்றதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...
அன்புடன்,
அருள்.
Post a Comment