Tuesday, July 4, 2006

காற்றினிலே வரும்...


ஜன்னலின் வழியே சுற்றி தவழும் காற்றில்
காதருகே மெலிதாக கேட்கிறது அந்த குரல்.
நான் கண்களை மூடிக்கொண்டதும்
சற்று சுதந்திரமாக, கொஞ்சம் சத்தமாகவே..

இரவும் பகலும் காற்றில் கலந்து
நான் போகுமிடமெல்லாம் பரவுகிறது.
கண்களை மூடிக்கொண்டு காதை திறந்துவைக்கிறேன்
காற்றில் வரும் அந்த குரலை கேட்க.

என் நினைவுகளை புரட்டி போட்டு,
அனுமதியின்றி இதயத்தில் நுழைந்து
என் எண்ணங்களை அள்ளிச்சென்ற பின்னும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது காதருகில் வீசும் காற்றில்.

நடுச்சாமத்தை நெருங்குகையில்
தென்றலாய் என்னை அமைதிப்படுத்திவிட்டு
சட்டென்று காதருகே ஒலித்துவிட்டு போகிறது..
'உடனே போகனுமா..?' ... காற்றில் அதே குரல்

மீண்டும் ஒரு தென்றலுக்காக காத்திருக்கிறேன்..
ஜன்னலருகிலேயே!

pic: http://www.bastet.it/

--
#189

13 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்... :O)

என்னமோ நடக்குது..மர்மமில்லாமே தெளிவா இருக்குது! :O))

Jayaprakash Sampath said...

ரிஜெக்டெட் ( கவுண்டர் ஸ்டைலில் வாசிக்கவும்)

ஓவர் ஃபீலிங்ஸு நாட் அலவ்ட்

அனுசுயா said...

இது பாட்டுங்களா? இல்ல கவிதைங்களா?

கைப்புள்ள said...

புள்ளையை மொதல்ல கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு வுடனும்பா... என்னன்னமோ சொல்லுது...என்னன்னமோ எளுதுது.

:)

//ஜன்னலின் வழியே சுற்றி தவழும் காற்றில்
காதருகே மெலிதாக கேட்கிறது அந்த குரல்.
நான் கண்களை மூடிக்கொண்டதும்
சற்று சுதந்திரமாக, கொஞ்சம் சத்தமாகவே..
//

ஒரு வேளை காணாம போன நம்ம ஏஜெண்டோட கொரலோ?

ramachandranusha(உஷா) said...

//என்னமோ நடக்குது..மர்மமில்லாமே தெளிவா இருக்குது! :O)) //

புரியுதுபா புரியுது :-)

Pavals said...

'மழை' ஷ்ரேயா >> //மர்மமில்லாமே தெளிவா இருக்குது!// அவ்ளோ தெளிவா இருக்குதுங்கரீங்க..?

ஐகாரஸ்>> //ரிஜெக்டெட்//
ஹூ ஈஸ் தட் டிஸ்டர்பன்ஸ்..!! :)

Pavals said...

அனுசுயா >> // இது பாட்டுங்களா? இல்ல கவிதைங்களா?// தெரியலையேம்மா..!!

கைபுள்ள >> //கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு வுடனும்பா..// ஏற்க்கனவே மந்திரிச்சு வுட்ட மாதிரி தான் இருக்குது.. :)

உஷா >> :)

Udhayakumar said...

அய்யோ...அய்யோ...

Pavals said...

உதையா >> //அய்யோ...அய்யோ...// என்னாச்சு..
என்னைய வச்சு எதும் காமெடி கீமெடி பண்ணலையே... :)

Udhayakumar said...

காமெடியேதான்... நல்லா இருந்த மனுஷன் இந்த மாதிரி எல்லாம் எழுதுனா அப்புறம்....

பொன்ஸ்~~Poorna said...

//
சட்டென்று காதருகே ஒலித்துவிட்டு போகிறது..
'உடனே போகனுமா..?' ... காற்றில் அதே குரல்
//
ஐப்பசி வரையா? அப்புறம் என்னாகுதுன்னு பார்க்கணும்

Pavals said...

உதையா>> //நல்லா இருந்த மனுஷன் இந்த மாதிரி எல்லாம் எழுதுனா // இப்படியெல்லாம் எழுதலைன்னா ஒத்துக்கமாட்டேங்கிறாங்க.. அதான்.. மத்தபடி இன்னும் 'நல்லா'த்தான் இருக்கேன். :)

பொன்ஸ் >> //அப்புறம் என்னாகுதுன்னு பார்க்கணும// நாளைக்கு என்ன நடக்கும்னு எல்லாம் பயப்படறதே இல்லைங்க..

(ஆனாலும் எதுக்கு இப்படி ஆளாளுக்கு பயங்காட்டுரீங்க..)

ILA (a) இளா said...

ஆரம்பத்துல நான் கூட ஏதோ கொத்துபரோட்டா மாதிரி நினைச்சுட்டேன். ராத்திரி இதையெல்லாம் நடக்கிற மாதிரியாவா உங்ககிட்ட பேசாம இருக்காங்க? யோசனை பண்ண நேரம் கூட தராங்களா அம்மணி? இதை யெல்லாம் அம்மணிகிட்ட சொல்ல சொல்லி தானே பதிவு போடறீங்க?