Monday, July 31, 2006

நான் ஒரே பிஸி

' நாலு நாள் காய்ச்சல் வந்து படுத்திட்டினா, அப்புறம் தலைய கூட அசைக்க முடியாது'ன்னு உல்லாசம் படத்துல ஒரு வசனம் வரும்ங்க, பாலகுமாரன்னு ஞாபகம். அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன் தயாரிப்புல ஜெடி-ஜெர்ரி இயக்கத்துல வந்த படம்ங்க.. இந்த ஓ போடுற சமாச்சாரத்தை தமிழகம் முச்சூடுக்கும் கொண்டு போய் சேர்த்த படம். அஜித் விக்ரம்'ன்னு ரெண்டு சூப்பர் பரசனாலிட்டிக, அருமையான பாட்டுக, பாலகுமாரன் வசனம், ரகுவரனோட கலக்கல், அருமையான படப்பிடிப்பு எல்லாம் இருந்தும் வெற்றிகரமா தோத்துபோன படம். சரி.. சரி.. நான் சொல்ல வந்தது படத்தை பத்தியில்லைங்க.. அந்த காய்ச்சல் பத்தி.

முழுசா ஆறு வருஷம் ஆச்சுங்க, டாக்டர் கிட்ட போயி மருந்து மாத்திரைன்னு வாங்கி சாப்பிட்டு. இடையில அப்பப்போ எட்டி பார்க்கிற சின்ன சின்ன ஜலதோஷத்துக்கு எல்லாம் குருமிளகு இல்லாட்டி மண்டைன்னே ஒதுங்கிடறது தாங்க வழக்கம். இடையில அந்த பயணக்குறிப்பு (1, 2) சம்பவத்துக்கு கூட மருந்தெல்லாம் வேண்டாங்கன்னு எங்க டாக்டர் கிட்ட பிடிவாதம் புடிச்சு ஒரே நாள் மருநதோட தப்பிச்சவன்ங்க நான். ஆனா, இப்போ ஆறு நாளா எதோ ஒரு வைரஸ் காய்ச்சலாம் ஒன்னுஞ்சாப்பிட முடியாம, வெறுப்போட ரொட்டியும் பாலும் சாப்பிட்டுட்டு நேரத்துக்கு ரெண்டு மூணு'ன்னு ஆன்ட்டிபயாடிக் எடுத்துகிட்டு, இப்பத்தான் ஒரளவுக்கு தேறி வந்திருக்கனுங்க.

வீட்டுல அய்யன், அமுச்சி, அம்மான்னு எல்லாரும் ஒரு வாரம் முறை வச்சு காய்ச்சல்ல படுத்து எந்திருச்சாச்சுங்க, அவுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் சிக்குனியா வைரஸ், நமக்கு சாதாரண வைரஸ்சாம்..

இந்த காய்ச்சல் சமாச்சரம் கூட பரவாயில்லைங்க, ஒரு வழியா சரியாபோச்சு, என்ன இன்னும் ஒரு நாலஞ்சு நாளைக்கு இந்த ஆன்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்ட கிறக்கம் இருக்கும். அது தாண்டுனா சரியாபோகும்னு வச்சுக்கோங்க.. இந்த காய்ச்சல தொடர்ந்தாப்புல இலவச இணைப்பு மாதிரி வர்ற வில்லங்கம் இருக்குது பாருங்க, அது தான் பெரிய இம்சைய குடுக்கும் போல இருக்குதுங்க

குலதெய்வம் கோயல்ல ஒண்ணா போய் பொங்க வைக்கனும், ஆடி முடியறதுகுள்ளார மீன்குளத்தி பகவதியம்மன் கோயிலுக்கு ஒரு வாட்டி போகனும்'ன்னு எங்கம்மா என்னோட அடுத்த மூணு நாலு வாரக்கடைசிக்கான பயண ஏற்ப்பாட்டுல இறங்கிட்டாங்க.

சரி இது எப்பவும் நடக்கிற கதை தான, சரி சரின்னு தலையாட்டிட்டு கடைசி நேரத்துல வழக்கம் போல 'அவனவனுக்கு ஆயிரம் வேலை, இதுல நீங்க வேற'ன்னு சொல்லிட்டு தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சா, வில்லங்கம் வேற பக்கத்துல இருந்து வருதுங்க.

"ம்ம்.. கண்ணு பட்டிருச்சு, அன்னைக்கே சொல்லனும்னு நினைச்சனுங்க, மாப்ள'ய இந்த கருப்பு கலர்ல துணிமணியெல்லாம் போட வேண்டாம்னு சொல்லுங்க, கருப்பு நமக்கு ஆகாத கலருங்க, சும்மாவா சொல்லிவச்சிருக்காங்க பெரியவங்க", "அங்க பக்கத்துல கோயில் எல்லாம் இருக்குதுங்களா, விசாழக்கிழமை விசாழக்கிழமை ஒரு நாலு வாரத்துக்கு போயி விளக்கு வைங்க"ன்னு ஆரம்பிச்சு சும்மா டஜன் கணக்குல நம்ம பழக்க வழக்கத்துக்கு ஆகாத விசயமா கொட்றாங்க... நான் வச்சிருக்கிறதுல பாதி துணிமணி கருப்பு தான், முன்னயாவது வெள்ளிக்கிழமை வெள்ளிகிழமை கோயிலுக்கு போயிட்டிருந்தோம், அதுவும் இப்பெல்லாம் இல்லை, நம்மள போயி வாரவாரம் கோயிலுக்கு போயி விளக்கெல்லாம் வைக்க சொல்றாங்க.. அய்யா சாமிகளா, என்னை விட்ருங்கய்யான்னு கதறனும் போல இருக்குதுங்க, ம்ம்.. இதெல்லாம் எங்க போயி முடியுமோ..

எல்லாத்தையும் நல்ல புள்ளையாட்டம் சரி சரி'ன்னு வழக்கம் போல இந்த காதுல கேட்டு அந்த காதுல விட்டுட்டே இருக்கேன்.

ராத்திரியில நந்தினி பாக்கெட் வாங்கிட்டு வூட்டுக்கு போனா பசங்க ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்குறானுக.. நான் என்னமோ புதுசா இப்போ யாரோ சொல்லி இதெல்லாம் செய்யிற மாதிரி, உடம்பு கொஞ்சம் வீக்காயிடுச்சேன்னு தான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறானுக.. ம்ம்.. உலகம் இப்படித்தான் என்னத்த செய்ய..

அப்புறம், 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கு நடுமனையில வை' ங்கிற கதையா, இந்த வருத்தப்படாத வாலிப சங்கத்துல இருந்து நம்மள ஆகஸ்ட் மாச அட்லாஸ் வாலிபர்ன்னு தட்டி வச்சிட்டாங்க.. இனி அந்த பொறுப்பை வேற தூக்கி சுமக்கனும்.. ம்ம்.. இதுக்கு நடுவால இந்த கிணத்தூர் எம்எலஏ வேற. ஒரெ நச்சு நச்சுன்னு தொந்திரவு பண்ணிகிட்டு, எதோ அவன் வீட்டு கல்யாணமாம், அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..

--
#194

16 comments:

சுதர்சன்.கோபால் said...

சாதரணத் தலவலி வந்தா சாரிடோன் சாப்பிடலாம்,டாக்டர் கிட்ட போகலாம்...
ஆனா எங்க "தலை"க்கே வலி வந்தா என்னத்த செய்ய????

காத்து கறுப்பு எதுனாச்சி அடிச்சிருக்குமோ???

ILA(a)இளா said...

//இந்த கருப்பு கலர்ல துணிமணியெல்லாம் போட வேண்டாம்னு சொல்லுங்க//
அட நாம பொறந்த நாளிலிருந்தே இப்படி தான் சொல்றாங்க. குல தெய்வதோட ஆணையாம். அங்கனயும் அப்படிதானா?

ILA(a)இளா said...

// இந்த வருத்தப்படாத வாலிப சங்கத்துல இருந்து நம்மள ஆகஸ்ட் மாச அட்லாஸ் வாலிபர்ன்னு தட்டி வச்சிட்டாங்க.. இனி அந்த பொறுப்பை வேற தூக்கி சுமக்கனும்.. ம்ம்.. இதுக்கு நடுவால இந்த கிணத்தூர் எம்எலஏ வேற. ஒரெ நச்சு நச்சுன்னு தொந்திரவு பண்ணிகிட்டு, எதோ அவன் வீட்டு கல்யாணமாம், அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..
//

சங்கம் பக்கத்துக்கு வரதுக்கு நன்றிங்க ராசா, நிறைய ஆப்பு வாங்க வேண்டி இருக்கும், உடம்ப பத்திரமா பார்த்துக்குங்க.

//நான் ஒரே பிஸிடா..//
தொல்லை தாங்கலைடா சாமி..

நாகை சிவா said...

//அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..//
அரசியல் இது எல்லாம் சதாரணம்ப்பா

ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஆப்புகளை தன் தோளில் தாங்க இருக்கும் ராசாவே வா. வந்து உனக்கே உனக்கான அந்த ஆப்புகளை வாங்கி கொள்.

தேவ் | Dev said...

//இதுக்கு நடுவால இந்த கிணத்தூர் எம்எலஏ வேற. ஒரெ நச்சு நச்சுன்னு தொந்திரவு பண்ணிகிட்டு, எதோ அவன் வீட்டு கல்யாணமாம், அவனாலயே முடியலைன்னு எங்கிட்ட வந்து சொல்லிட்டு.. டேய் நாராயணா, நான் ஒரே பிஸிடா..//

வாங்க ராசா... அண்ணா.. இங்கிட்டு கொசுத் தொல்லை ரொம்ப ஜாஸ்திங்கண்ணா..அதுன்னால்லங்கண்ணா கொசு வண்டி விட்டு இந்த நாரயணனை மருந்து அடிக்கச் சொல்லிருக்கோம்ண்ணா...
யப்பா சாமி இந்தக் கொசுத் தொல்லை தாங்கல்லடா...

ண்ணா... சீக்கிரம் வாங்கண்ணா... யூ நோ..நாங்கல்லாம் ஒரே பசி.. ஆமாங்க உஙக் எழுத்தைப் படிக்கணும்ன்னு அப்படி ஒரு பசி...

இராம் said...

ராசா,

சீக்கிரம் என்னதயாவது சாப்பிட்டு உடம்பை சரி செய்யுங்க....

நிறைய ஆப்புகள் ரெடியாக இருக்குமில்லே நாளைலிருந்து.....
:-))))

ILA(a)இளா said...

அதெல்லாம் சரி ராசா, ஹார்லிக்ஸ் விளம்பரத்துல அந்த மனோ பையன் "அம்மா நாம் ரொம்ப பிஸி"ன்னுதானே சொல்லுவாப்ல. "நான் ஒரே பிஸி"ன்னு சொல்றீங்க. இது என்ன புதுசா இருக்கு

Desperado said...

சிகுன்குனியா இப்போ உங்கூருக்கு போயிடிச்சா? நீங்க எஸ்கேப் ஆயிட்டீங்க. நல்லது. அது வந்து சரி ஆனா கூட‌ கை கால் முட்டி எல்லாம் வலிக்குமாமே? அப்பா, அம்மாவை ரெஸ்ட்ல இருக்கச்சொல்லுங்க.
//'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கு நடுமனையில வை' ங்கிற கதையா, இந்த வருத்தப்படாத வாலிப சங்கத்துல இருந்து நம்மள ஆகஸ்ட் மாச அட்லாஸ் வாலிபர்ன்னு தட்டி வச்சிட்டாங்க//
:-))

பொன்ஸ்~~Poorna said...

என்ன ராசா,
விளக்கா? நீங்க ஏத்தப் போறீங்களா?! வீட்ல அவங்க கிட்ட சொன்னா போதாது? ;)

கொங்கு ராசா said...

சுதர்சன் >> //காத்து கறுப்பு எதுனாச்சி அடிச்சிருக்குமோ???// கருப்பா இல்லை கறுப்பா? சரியா சொல்லுங்கப்பு.. இனிமேல் புதுசா எந்த காத்திகருப்பும் அடிக்க வேண்டிய நிலமையில நான் இல்லை..

இளா >> ஒரேஅடியா கருப்பு கலரை விட சொல்லுவாங்க போல இருக்குது.. அதெல்லாம் நடக்காதுன்னு சொல்லியிருக்கேன்.. பார்ப்போம்..

சிவா >> வந்துட்டோமில்ல..

கொங்கு ராசா said...

தேவ், ராம் >> எல்லாரும் ஒரு முடிவோட தான் இருப்பீங்க போல..

Desperado >> அதையேங்கேக்கரீங்க. இங்க வூட்டுக்கு ரெண்டு பேரு விந்தி விந்தி தான் நடந்துட்டிருக்காங்க,, நம்மாளுக எல்லாம் சித்தவைத்தியம் பக்கம் போயிருக்காங்க.. ஆனாலும் இன்னும் வலியிருக்காம்.. :(

பொன்ஸ் >> அங்க ஏற்கனவே ஏத்திட்டு தான் இருக்காங்களாம்.. ஹி..ஹீ.. :)

இலவசக்கொத்தனார் said...

நீங்கதான் ஆகஸ்ட்டா? சீக்கிரம் வாங்க சாமி தொந்தரவு தாங்கலை சாமி!

கைப்புள்ள said...

ஒடம்பைப் பாத்துக்கங்ணா! அட்லாஸ் வாலிபருக்காக அங்கிட்டு ஒரு குரூப்பு காத்து கெடக்கு. தெடகாத்திரமா இருந்தாத் தான் எங்களை மாதிரி ரத்தம் பாயுற பூமியில வெளாட முடியும்.

இராம் said...

//அங்க ஏற்கனவே ஏத்திட்டு தான் இருக்காங்களாம்.. ஹி..ஹீ.. :) //

பொன்ஸ்க்கு மேட்டர் தெரியாதோ.... ராசாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்திலே கல்யாணம், அவரு ரொம்ப வெக்கப்பட்டு வெக்கப்பட்டு லால்பார்க்கிலருந்த புல்லை அம்புட்டேயும் பிச்சுப்பிட்டாரு....
:-)))

நம்பிக்கையில்லன்னா அவரோட போட்டோ'வை பாருங்க...

Udhayakumar said...

உங்க உடம்புக்கு ஏதாவது ஒன்னுன்னு நீங்கதான் பார்த்துக்கணும். அவங்க உடம்புக்கு ஏதாவது ஒன்னுன்னாலும் நீங்கதான் பார்த்துக்கணும். நல்லா நந்தினி பாலா குடிச்சு உடம்பை தேத்திக்குங்க...

அப்புறம், அட்லஸ் வாலிபரா வழக்கம் போல. ஃபில்ட் அப் குடுத்துட்டு வந்துராதீங்க... சும்மா பின்னி பெடலெடுக்கணும்...

செந்தழல் ரவி said...

எனக்கு தெரிஞ்ச தத்துவத்தை சொல்லட்டா...

இந்த ஆப்பு ஆப்புங்கறது - யாரும் யாருக்கும் வக்கிறதில்லைங்க...

அதது அந்த அந்த எடத்துல இருக்கு...நாமளா போயி நடு செண்டரா பாத்து - உக்காந்துக்கிறதுங்க...

பிரிஞ்சதா ??