கண்களுக்குள் வெதுவெதுப்பாக சூடு பறவுகிறது
மனது எதோ இருப்பில்லாமல கொஞ்சம் மிதப்பாக சுற்றுகிறது
ஒரு நாளைக்கு இரண்டு என்று உத்திரவாதத்தை
வழக்கம் போல இல்லாமல் இன்று மதிக்க தோன்றுகிறது
நேரம் ஆக ஆக,
உடம்புக்குள் எதோ புகுந்துவிட்டதை போல நடுக்கம்
அக்வாஃபினா கூட ஏனோ கசப்பாக உள்ளே இறங்குகிறது
'டேய் கொதிக்குது, இங்க ஏ.சி'யில உக்காந்து என்னடா செய்யுற, வூட்டுக்கு போ'
எத்தேசையாக தொட்டு பார்த்த சகா சொன்னதும் தான் புரிந்தது
இது 'காய்ச்சல்'. ;)
ஒரு டோலொ சாப்பிட்டு தூங்கனும்.. :(
---
#193
14 comments:
Hope you feel better soon.
இன்னோரு சந்தேகம், why would a person be able to see the fonts properly in your blog but not on other Tamil blogs. ஏன்னு தெரிஞ்சா சொல்லவும்.
udambai paarthukkanga raasa... oorukku solli anuppunaa vanthuttu pooranga????
காய்ச்சலுக்கு இவ்வளவு பில்டப்பா? ம்.. உடம்ப பாத்துக்கோங்க.
நல்லா இருக்கீங்களா ராசா? ஒரு 2 மாசம் ஆகட்டும் இத்ல்லாம் உணராத மாதிரி பார்த்துக்குவாங்க. உங்க படிவ ஒரு 1 1/2 வருஷமா படிக்கிற அப்படிங்கிற தகுதியில உங்களுக்கு"பில்ட் அப்" ராசா அப்ப்டிங்கிற பட்டத்த சங்கம் சார்பா அளிக்கப்படுகிறது.
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.
இப்பவே இப்படி பயந்தா எப்படி ராசா? ஆம்பிளையாப் பொறந்துட்டா கொஞசம் தைரியம் வேணும் சாமி.... சரி சரி இப்போ நல்லாயிருக்கியளா சாமி?
நன்றி மக்களே.. அப்படி இப்படி போத்தி தூங்கி இப்போ ஒரளவுக்கு தேவலை..
சாப்பிட்ட ஆன்ட்டிபயாடிக்' எல்லாம் உடம்புல இருந்து ஒருவழியா வெளிய போற வரைக்கும் இன்னும் ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் தான் :)
//கண்களுக்குள் வெதுவெதுப்பாக சூடு பறவுகிறது
மனது எதோ இருப்பில்லாமல கொஞ்சம் மிதப்பாக சுற்றுகிறது
ஒரு நாளைக்கு இரண்டு என்று உத்திரவாதத்தை
வழக்கம் போல இல்லாமல் இன்று மதிக்க தோன்றுகிறது//
எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! இதப் பத்தி சங்க இலக்கியத்துல கூட சொல்லியிருக்கு...இதுக்கு பேரு தான் பசலை நோயாம்.
கொஞ்சம் பயந்துட்டீங்க போல இருக்கு(கல்யானத்த நினைச்சு)...அது எல்லாம் போக போக பழகி போய்டும்... :-)
அப்பா ஒரு காய்ச்சல கூட இவ்வளவு கலக்கலா சொல்லியிருக்கிங்க.. சிக்கிரம் தேறி வாங்க.. வருத்தப்படாத வாலிப மக்கள் கலாய்கிறதுக்கு தயாரா இருக்காங்க.. அட்லாஸ் வாலிபருக்கு வாழ்த்துக்கள்.
- ஸ்ரீதர்
Ayya Raasa..
Romba nalla irunthuchu unga Blog..
Enakku oru Erode pakkamunga...
Ippo Pune-la velai pakkurenga..
Naanum ithai pola Blog eluthanumnu try panrenga..
Tamil font-la epdi Blog elutharathunnu konjam solli thantheenganna romba punniyama Bogum-ga
நன்றி மக்களே மீண்டு வந்தாச்சு... :)
//எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! இதப் பத்தி சங்க இலக்கியத்துல கூட சொல்லியிருக்கு...இதுக்கு பேரு தான் பசலை நோயாம்.
posted by: கைப்புள்ள//
கை கொடுங்க கைப்புள்ள..
கலக்கல் பதில்
ஆனந்த்.. ஒரு தனி மடல் போடுங்க.. சொல்லிகுடுத்திருவோம்..
//கை கொடுங்க கைப்புள்ள..//
கைப்பூ... இதெல்லாம் ஓவரு ஆமாம்..
Post a Comment