அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்க பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்
ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் கலவை
இதை உசுரா நினைக்கும் இளமை
காதலில் கடவுளும் நாண
அவன் பூமிக்கு தொட்டுவச்சான் தேன
.....
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது, தோளில சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமே சேர்ந்து
அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
---
---
படம் : பருத்திவீரன்
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
இயக்கம் : அமீர்
பாடல் கேட்க : ம்யூசிக்-இண்டியா
----
யுவன்?? அடப்போடா, கடைசி பத்தியில வர்ற 'அடி ஆத்தி இந்த வயசுல' முதல் சரணத்துல வர்ற 'காட்டுல மேட்டுல கலந்து', இதை கேட்டதுக்கப்புறமும் இது 'யுவன்' பாட்டுன்னுட்டு.. இது அக்மார்க் 'மொட்டை' பாட்டு பங்காளி..
அமீர் படத்துல மெளனம்பேசியதே, ராம் ரெண்டுலயும் பாட்டெல்லாம் சூப்பரா எடுத்திருப்பாங்க.. இந்த பாட்டு.. ம்ம் யாரோ எழுதியிருந்தாங்க.. பாலுமகேந்திர பட காதல்பாட்டு மாதிரி இருக்கப்போகுதுன்னு.. இருக்கலாம்.. கொஞ்சம் 'வேகமான' பாலுமகேந்திராவா இருக்கும்.. இருக்கனும்..
--
#212
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
இயக்கம் : அமீர்
பாடல் கேட்க : ம்யூசிக்-இண்டியா
----
யுவன்?? அடப்போடா, கடைசி பத்தியில வர்ற 'அடி ஆத்தி இந்த வயசுல' முதல் சரணத்துல வர்ற 'காட்டுல மேட்டுல கலந்து', இதை கேட்டதுக்கப்புறமும் இது 'யுவன்' பாட்டுன்னுட்டு.. இது அக்மார்க் 'மொட்டை' பாட்டு பங்காளி..
அமீர் படத்துல மெளனம்பேசியதே, ராம் ரெண்டுலயும் பாட்டெல்லாம் சூப்பரா எடுத்திருப்பாங்க.. இந்த பாட்டு.. ம்ம் யாரோ எழுதியிருந்தாங்க.. பாலுமகேந்திர பட காதல்பாட்டு மாதிரி இருக்கப்போகுதுன்னு.. இருக்கலாம்.. கொஞ்சம் 'வேகமான' பாலுமகேந்திராவா இருக்கும்.. இருக்கனும்..
--
#212
6 comments:
கேட்கவே சுகமா இருந்தது.
யுவன் இசையில மட்டும் மொட்டை பாடுவதன் ரகசியம் என்னவோ?
இந்த பாடலை பதிவா போடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். புது மாப்பிள்ளை நீங்க போட்டுட்டிங்க!
ரெம்ப ஸ்பீடாதாம்யா இருக்கீங்க!
இந்தப்பாட்டை இன்னும் கேக்கலங்க. ஆனா படம் எடுத்தவரைக்கும் இன்னோரு 16 வயதினிலே மாதிரி ஒரு கிராமத்துப் படம் வந்துருக்குன்னு முதல் ரஷ் பார்த்தவரு சொன்னாரு. அமீர் மேல கண்டிப்பா நம்பிக்கைவெச்சு படம் பார்க்கலாம். யுவனும் முதல் ரெண்டு படத்துக்கு இசை கொடுத்தாமாதிரி இதுலயும் நல்லா குடுத்து இருப்பாருன்னு நம்பறேன்
தம்பி >>
//ரெம்ப ஸ்பீடாதாம்யா இருக்கீங்க!// நானே ஒரு வாரம் தாமசம்ன்னு நினைச்சுகிட்டிருக்கேன் நீங்க இப்படி சொல்றீங்க.. :)
//யுவன் இசையில மட்டும் மொட்டை பாடுவதன் ரகசியம் என்னவோ?// பெத்தமனசு!!
இளா >>
இன்னும் கேக்கலையா.. என்னங்க இளா.. அவ்வளவு வேலையா? ம்ம்ம்
நம்புவோம் :)
//அவ்வளவு வேலையா? ம்ம்ம்//
நம்ம தோட்டத்துல கொஞ்சம் வேலை ஜாஸ்திதாங்க, ஆனா உங்களுக்கு வேலை இல்லாம இருக்குறதுதான் அதிசயமா இருக்கு.
நண்பரே!!! இந்த பாடலை
முத்தமிழ்மன்றத்தில் பதியவிடுகிறேன்
நன்றி:- குமரன்.
அப்படியே காந்தி சிலையை தாண்டி ஐசிஐசிஐ பேங்கும் தாண்டி பிரபு மருத்துவ மையம் பக்கம் வந்தீங்கன்னா அதுக்கு எதுத்தாப்ல சில சமயங்களில் அபூர்வமா நம்மளை பார்க்கலாம்
Post a Comment