Wednesday, February 21, 2007

ஒரு கிளி உண்டு


ஒரு மாலையில் பலவித மலருண்டு
ஒரு மனதினில் ஆயிரம் நினைவுண்டு
அந்த ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு
அது காதல் என்றால் அதில் கனிவுண்டு
இந்த நெஞ்சிலும் ஒரு நிழலுண்டு
அதில் நீல பூவிழி மயிலுண்டு
எந்தன் தோட்டத்திலும் ஒரு துணையுண்டு
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு


<<செவிக்கு>>



Pics from:
http://artfiles.art.com
http://www.artbylt.com


---
#217

Thursday, February 15, 2007

பொழுதுபோகாத........


திரைச்சீலை விலகிய ஜன்னல்
அதனூடே பாயும் கதிரவன்


பாதி திறந்து கிடக்கும் கதவு
அதன் மேல் தொங்கும் அழுக்கு 'ந்யூபோர்ட்'


மெல்ல சுழலும் 'கேத்தான்'
மூலையில் சுற்றும் சாம்பல்


கலைந்து கிடக்கும் மேசை
விளம்பர நேரம் காட்டும் கடிகாரம்


கசங்கி கிடக்கும் படுக்கை
கழுத்து வரை போர்வை...

..
..


இது..

'நீ'
இல்லாத ஞாயிறு காலை..






மேற்சொன்ன கவுஜை(?) இந்த 'பொறவிக்கவுஜ'னின் சார்பாக 'கவிமட'த்துக்கு அர்பணிக்க்ப்படுகிறது.. கவிமடத்து கண்மணிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால்.. மீண்டும் மீண்டும் கவுஜை முயற்ச்சி தொடரும்.. (ஸ்மைலி எல்லாம் கிடையாது)

--
#216

Wednesday, February 14, 2007

காதலர்தினம் !@#$#@%^@#$$^#

காதலர்தினமாம்.. காதலர்தினம்.. நல்லா வருது வாயுல..




















காதலர்தினத்தன்னைக்கு மறக்காம பூவோ, முசுமுசுகரடிகுட்டியோ, முதஎழுத்து பதிச்ச சாவிக்கொத்தோ இல்லாட்டி இதயவடிவுல சாக்லெட் டப்பாவோ வாங்கி குடுத்துதான் என் அன்பை நிலைநிறுத்திக்க வேணும்ங்கிற நிலை எல்லாம் நான் கடந்து வந்தாச்சுன்னு நினைச்சேன்..


ம்ஹும்.. :(
























மீ டோட்டல் டேமேஜ்..

மீண்டும் 'ஒரு தென்றல் புயலாகி வருதே..!'.. கதையாயிபோச்சு.. மறுபடியும் 'எப்படித்தான் சகிச்சுக்கறயோ?'ன்னு எதாவது எழுதி கவுத்திரலாமா.. ??

ம்ம்... எத்தனை பேரு குடுத்த சாபமோ.. ஒரு கூட்ட விசேஷத்துக்கு போனா நம்ம முன்னோடி மக்கள் எல்லாம் 'அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை?'ன்னு ஒரு வில்லத்தனமான சிரிப்போட ஏன் கேக்கிறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா புரியுது..


---
#215