Wednesday, February 14, 2007

காதலர்தினம் !@#$#@%^@#$$^#

காதலர்தினமாம்.. காதலர்தினம்.. நல்லா வருது வாயுல..
காதலர்தினத்தன்னைக்கு மறக்காம பூவோ, முசுமுசுகரடிகுட்டியோ, முதஎழுத்து பதிச்ச சாவிக்கொத்தோ இல்லாட்டி இதயவடிவுல சாக்லெட் டப்பாவோ வாங்கி குடுத்துதான் என் அன்பை நிலைநிறுத்திக்க வேணும்ங்கிற நிலை எல்லாம் நான் கடந்து வந்தாச்சுன்னு நினைச்சேன்..


ம்ஹும்.. :(
மீ டோட்டல் டேமேஜ்..

மீண்டும் 'ஒரு தென்றல் புயலாகி வருதே..!'.. கதையாயிபோச்சு.. மறுபடியும் 'எப்படித்தான் சகிச்சுக்கறயோ?'ன்னு எதாவது எழுதி கவுத்திரலாமா.. ??

ம்ம்... எத்தனை பேரு குடுத்த சாபமோ.. ஒரு கூட்ட விசேஷத்துக்கு போனா நம்ம முன்னோடி மக்கள் எல்லாம் 'அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை?'ன்னு ஒரு வில்லத்தனமான சிரிப்போட ஏன் கேக்கிறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா புரியுது..


---
#215


18 comments:

நாமக்கல் சிபி said...

//ஒரு கூட்ட விசேஷத்துக்கு போனா நம்ம முன்னோடி மக்கள் எல்லாம் 'அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை?'ன்னு ஒரு வில்லத்தனமான சிரிப்போட ஏன் கேக்கிறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா புரியுது//

:))

அனுபவங்கள்தான் வாழ்க்கை!
வாழ்க்கைதான் அனுபவங்கள்!

- சுவாமி பித்தானந்தா!

Prasannaa said...

வாங்க ராசா. அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை? :)))))))))))

ரொம்ப நாளா ஆளையே காணோமே? நல்லாயிருக்கீகளா?

கொங்கு ராசா said...

சிபி >> //அனுபவங்கள்தான் வாழ்க்கை!
வாழ்க்கைதான் அனுபவங்கள்!// அது சரி...

ப்ரசண்ணா>> நலம்.. நலம்..

ILA(a)இளா said...

'அப்புறம் ராசு? எப்படி போகுது வாழ்க்கை?. இன்னிக்கு எங்கே போறிங்க? எத்தனை முட்டாயி வாங்கி குடுத்தீங்க? வளர்சிதை மாற்றம் இன்னும் நடக்கலையோ?

தேவ் | Dev said...

குடும்ப வாழ்க்கயிலே இதெல்லாம் சாதாரணம்ப்பா... காலையிலே டேமெஜ்ன்னு போட்டா எப்படி சாயங்காலம் தானே புயல் கரையைக் கடக்கும் ...

அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை? :)))

அருட்பெருங்கோ said...

எல்லாரையும் மாதிரி எப்படி போகுது வாழ்க்கைனு கேட்டு உங்கள நோகடிக்க மாட்டேன்….

சோ, “நல்லாதான போகுது வாழ்க்கை?” ;-)))

ராசுக்குட்டி said...

அப்டி போடுங்கய்யா மொக்க அருவாள... என்னடா ஆள் ரொம்ப நாளா காணோமே... சம்சார சாகரத்துல முத்தெடுக்கிறாரோன்னு நெனெச்சோம்... கடல் தண்ணி உப்புன்னு சொல்லிட்டிகளேய்யா...

ஆனா உப்பு ஒடம்புக்கு நல்லதுதேன்! (என்னதான் சொல்ல வர்றேன்னு யோசிக்கிறீகளா... அட போங்கப்பா)

நாமக்கல் சிபி said...

//ஆனா உப்பு ஒடம்புக்கு நல்லதுதேன்! (என்னதான் சொல்ல வர்றேன்னு யோசிக்கிறீகளா... அட போங்கப்பா)
//

ராசுக்குட்டி,

சீக்கிரமே விவாக பிராப்திரஸ்துன்னு கொங்கு ராசா உங்களை வாழ்த்துறார்!

:)

வித்யாசாகரன் (vidyasakaran) said...

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!
காதலர் தின வாழ்த்துக்கள், உங்க ரெண்டு பேருக்கும்!

ரொம்ப நல்ல பதிவு அய்யா!!!!
கல்லூரில ரெண்டு நண்பர்களுக்கிடையில ஓர் உரையாடல்...
அ: டேய், ப்ராஜக்ட் விஷயமா சென்னை போகணும், நீ போய்ட்டு வர்றியா?
ஆ: உனக்கென்னடா அரியர் இருக்கு, கடைசி செம்ல பாஸ் ஆனாப் போதும். நான் பெர்சன்டேஜ் எடுக்கணுமே, படிக்கணும்டா. நீ போயேன்!
அ: ???

செந்தழல் ரவி said...

ஆமாம்...!!! வேலை அதிகமோ ?

அப்புறம், எப்படி போகுது !!!

கொங்கு ராசா said...

இளா >> வளர்சிதை மாற்றம் தான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டமே :)

தேவ் >> புயல் கடல் கடக்குதுன்னா, குடையெடுத்துட்டு போயி வேடிக்கை பார்க்கிற ஆளுக நம்ம... இதெல்லாம் தூசுங்க.. :)

கொங்கு ராசா said...

அருட்பெருங்கோ >> //நல்லாதான போகுது வாழ்க்கை// பாயிண்ட்டை புடிச்சிட்டீங்க.. :) நல்லாவே போகுதுங்க..

ராசுகுட்டி >> சிபி சொன்னதை கேட்டிங்கள்ல.. //சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து//

கொங்கு ராசா said...

வித்யா> நன்றி நன்றி.. அப்புறம் நீங்க என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..
(அதான் எல்லாம் பாஸ் பண்ணிடமே.. அதைஎதுக்கு இப்ப ஞாபகப்படுத்தரீங்க)


ரவி>> ம்ம்ம்.. களை புடுங்கிற வேலை தான நமக்கு.. அது பாட்டுக்கு போகுது.. :)

இளவஞ்சி said...

ராசா,

இதுவும் கடந்து போம்!

முதல் கல்யாண காதலர் தின வாழ்த்துக்கள்! (இந்த வருசமாச்சும் ஒரே ஒரு ப்ரசெண்டு/பூச்செண்டு தான் வாங்கியிருப்பீர்னு நம்பறேன்! :) )

வித்யாசாகரன் (vidyasakaran) said...

//நீங்க என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..
அதான்! அதேதான்!!
ஆசையாக் காத்திட்டிருந்த அண்ணிக்கு நல்ல புள்ளையா காதலர் தினப் பரிசு வாங்கிக் குடுக்காம, 'எங்களை'ப் பார்த்து, காதலர் தினத்துக்கும் மத்த 364 நாளுக்கும் வித்தியாசம் தெரியாம புலம்பிட்டிருக்கிற எங்களைப் பாத்து, 'இப்படித்தாண்டா வருசா வருசம் வாங்கிக் குடுத்தோம்'னு புலம்பறீங்களே, இது நல்லாருக்கா?
:)

கொங்கு ராசா said...

இளவஞ்சி >> //இந்த வருசமாச்சும் ஒரே ஒரு ப்ரசெண்டு/பூச்செண்டு தான் வாங்கியிருப்பீர்னு நம்பறேன்! :) )// ஒன்னே ஒன்னா?? என்னங்க விளையாட்டா இருக்கு.. அப்புறம் அடுத்தவங்க கோவிச்சுக்குவாங்களே :)


வித்யா>> மேல ராசுகுட்டிக்கு ஆசிர்வதித்ததே உங்களுக்கும்.. :)

முத்தமிழ் குமரன் said...

//'அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை//


பாவம் பையனுக்கு பர்ஸ் காலியா இருக்கும்போல..அப்படீன்னா வாழ்க்கை கட்டவண்டி மாதிரித்தேன் போகும் வேற எப்படி போகும்

WA said...

LOL