Wednesday, March 14, 2007

நினைத்து பார்க்கிறேன்..


விடியால ஏழரை மணிக்கு திருச்சி ஒலிபரப்புல எட்டு மணிவரைக்கும் 'நம்ம மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ்'க்கு நடுவாலயும் அப்புறம் எட்டரையில இருந்து எட்டு அம்பது பஸ்ஸுக்கு அம்மாவோட கிளம்பற வரைக்கும் 'கேரம் போர்டு விளையாடு பாப்பா'க்கு நடுவால மறுபடியும் சினிமா பாட்டு கேக்கிறதுக்காக (மட்டுமே) எட்டரைக்கு வர்ற பொதுஅறிவு வினா-விடை'யும் எட்டேகாலுக்கு வர்ற டெல்லி ஆங்கில செய்தியும் கேக்கிற மாதிரி எங்கய்யனுக்கு காட்டிக்க ஆரம்பிச்ச காலத்துல (அதெல்லாம் கேட்டலாவது நமக்கு அறிவு விருத்தியாகும்னு எங்கய்யன் நம்பினாரு.. ஆனா அவரு நம்பிக்கைய நம்ம என்னைக்கு காப்பாத்துனோம்) இருந்து நமக்கு பாட்டு கேக்கிறதுங்கிற விசயத்துல ஒரு மாதிரி கிறக்கம் இருந்துகிட்டே தாங்க இருக்குது..

என்னன்னமோ சொல்றாங்க.. ராகம்'ங்கிறாங்க, சங்கதி'ங்கிறாங்க.. கமகம'ங்கிறாங்க.. இன்னும் நிறையா.. ஆலாஃப், ப்ரிலூட்'ன்னு நிறையா மிரட்டறாங்க.. ஆனா நமக்கு அது ஒன்னும் விளங்கறதில்லைன்னாலும், பாட்டு கேக்கிறதுல இருக்கிற கிறக்கம் குறையவே இல்லை.. என்ன 'மர்ஃபி' ரேடியோவுல ஆரம்பிச்சு டெல்லி பெட் டேப்ரிக்கார்டர், சோனி அல்ட்ரா ஃபாஸ் ஆடியோ சிஸ்டம்'ன்னு போயி இப்போ w550i, ஐபாஃட் ஷஃப்புல்'ன்னு ஓடிக்கிட்டே கிறங்கி திரியறேன்..

இப்படி என்னதான் மாறுனாலும் எங்கய்யனோட வண்டியில இன்னும் பழைய கேசட் செட்டு தான், நம்மளும் டீ-சீரீஸ், சோனிமெட்டாலிக்'ன்னு வாங்கி பதிவு செஞ்ச காலம் எல்லாம் மாறி இப்ப எல்லாம் வட்டதகடு சமாச்சாரம், இணையம்'ன்னு ஆகிப்போனதுனால, நானும் ஒரு சீப் சைனா ப்ளேயராவத வாங்கி மாட்டலாம்னு தலையால நின்னு தண்ணி குடிச்சு பார்க்கிறேன், வழக்கம் போல 'அதுவே இருக்கட்டும்'னு தான் நமக்கு பதில் கிடைக்குது. சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோதான்னு ஊருபக்கம் சுத்தும் போது 'சூரியன்', 'வானவில்'ன்னே மனச ஆத்திக்கிறது.

போன வாரம், நம்ம அம்மிணி வூட்டுக்கு கிளம்பற நேரம், இடத்த அடைச்சுகிட்டு கிடக்குதுன்னு எங்கய்யன் ஒரு குப்பைய தூக்கி போட்டாரு.. அதுல இருந்து ஒரு TDKவ தூக்கி வண்டியில போட்டுகிட்டு கிளம்புனேன்..

குப்பையில மாணிக்கம்ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி ஒரு புதையல் அதுல.. இத்தனை நாளா நான் அதுல நிறைய பாட்டு கேட்டதே இல்லைங்க.. ஒரு வேளை முன்ன கேட்டிருப்பனோ என்னவோ, ஆனா ஞாபகம் இல்லை..
சமீபத்துல எந்த அலைவரிசையிலும் கேட்டதில்லை நம்ம பொட்டியில இருக்கிற கலெக்ஷன்லயும் இல்லாத ஒரு பாட்டு.. ஆரம்ப கால எஸ்.பி.பி. பாடுன பாட்டு. இசை மெல்லிசை மன்னரா இருக்கும்னு நினைச்சேன். அருமையான பாட்டு. எங்கய்யனுக்கும் ஞாபகம் இல்லையாம்..

----

நினைத்து பார்க்கிறேன்..
என் நெஞ்சம் இனிக்கின்றது
நினைத்து பார்க்கிறேன்..
என் நெஞ்சம் இனிக்கின்றது

சிரித்து பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது
சிரித்து பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது

ஓ ரிமம்பர் ஸீவ்ஹார்ட்
ஓ ஓ ஓ ரிமம்பர் ஓ மை டார்லிங்.. ரிமம்பர்

நடன சாலைகளில்
மலையின் சோலைகளில்
நடன சாலைகளில்
மலையின் சோலைகளில்

நதியின் ஓரங்களில்
நதியின் ஓரங்களில்
இடங்கள் இருக்கின்றன

கடந்த காலங்களில்
கடந்த உள்ளங்களில்
தடங்கள் இருக்கின்றன

ஓ ஓ ஓ ரிமம்பர் ஓ மை டார்லிங்.. ரிமம்பர்

இரவு மேடைகளில்
மழையின் சாரல்களில்
இரவு மேடைகளில்
மழையின் சாரல்களில்

உறவு கோலம் இடு
உலகம் அழைக்கின்றது

வசந்த புஷ்பங்களில்
அசைந்த சந்தங்களில்
பிறந்த சொந்தங்கள் தான்
கனவை வளர்க்கின்றது

ஓ ஓ ஓ ரிமம்பர் ஓ மை டார்லிங்.. ரிமம்பர்

நினைத்து பார்க்கிறேன்..
என் நெஞ்சம் இனிக்கின்றது

சிரித்து பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது

ஓ ஓ ஓ ரிமம்பர் ஓ மை டார்லிங்.. ரிமம்பர்

--

வேற ஒரு சகா'கிட்ட தேடிபுடிச்சுஇங்க வச்சிருக்கேன், கேட்டு பாருங்க..
கேட்டுட்டு என்ன படம்.. யாரு படம்னு தெரிஞ்சா சொல்லுங்க..

நினைத்து பார்க்கிறேன்.. என் நெஞ்சம் இனிக்கின்றது.. :)


--
#218

Friday, March 2, 2007

..(நல்ல தலைப்பா சொல்லுங்க.. )


ஈர்ப்புகள் குறைகிறதோ..?
மயக்கம் தெளிகிறதோ..?
கலக்கமாய் இருக்கிறது.

பகிர்ந்து கொள்ள நிறைய உண்டு
அத்தனையும் வேண்டுமா என்ன..??
யோசிக்கிறேன்..
க்ரீடங்களும் தேவைப்படுகிறதே..

முரண்பாடுகளின் கூட்டணியாய் இருப்பது
பிடிக்கத்தான் செய்கிறது
எனக்கு(மட்டும்)..






Pics:
http://www.arta.neonet.md

--
# 218