Tuesday, May 15, 2007

சுகமோ சுகம்..

மழையை பார்ப்பதும் சுகம்
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..



வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..




அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)

--
#226

5 comments:

Anonymous said...

சொகவாசி அய்யா நீர் :-)

Pavals said...

நைட் ஷிப்ட்டுல ரப்பரும் சல்ஃபரும் கொதிச்சு உருகி குழம்பா ஓடுற இடத்துல ரெண்டு அடி தள்ளி நின்னுகிட்டு வேர்வைய துடைச்சுகிட்டே 'என் இனிய பொன்னிலாவே'ன்னு ஹம் பண்ணிட்டு இருக்கும் போது ஒரு 'சிவப்புகொடி' சேட்டன் இதே வார்த்தையா சொல்லியிருக்காருங்க ப்ரகாஷ் நம்மள பார்த்து ;)

Anonymous said...

கோவை பதிவர் சந்திப்புக்கு வரும் எண்ணம் உண்டா ?

Pavals said...

anony: 50 : 50

இராம்/Raam said...

கல்யாணத்துக்கு அப்புறம் அநியாத்துக்கு உருகுறிங்களே??