Tuesday, February 17, 2009

ஒரு கணம்

விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்

நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து 
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்

மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்

உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்

கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு 
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்

வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்

காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்

இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு

இத்தனையையும் விஞ்சி விட்டது 

நேற்று

அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.

8 comments:

J said...

welcome back raasaa..

-Jagan

Unknown said...

எங்க ஜி போய்ருந்திங்க இவ்வளவு காலம்!!!

கைப்புள்ள said...

வெல்கம் பேக் ஆசானே!

//அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்//
இது எத்தனையாவது கடைசிங்க?
:)

Iyappan Krishnan said...

//KVR said...

எங்க ஜி போய்ருந்திங்க இவ்வளவு காலம்!!!//


எச்சூஸ்மி, நான் ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கலாமா இங்க ?

கோபிநாத் said...

கலக்கல் அண்ணாச்சி ;)

Sai Ram said...

உங்களுடைய வரிகள் கவித்துவமான நினைவுகளை மீட்டெடுத்து ஒரு கணம் நானே அங்கு இருந்தது போல உணர வைத்தது.

Unknown said...

நல்லா இருக்கு..!!

Anonymous said...

Hello Raasa,

Nice Kavithai...Welcome back...
Adikkadi update aagi irukka unga blog nu vanthu paarthu emanthu pona aalugala naanum onnum. now and then write something...Kalyaanam aanavudane rumba bc aaiteengalo..?