Tuesday, March 22, 2005

மும்பாய் டயரி

அடுத்தவங்க டயரிய படிக்கிறது தப்புன்னு சொல்லுவாங்க.. ஆனா நம்ம கண்ணுல மாடினா படிக்காம விடமுடியலீங்க. ஏற்க்கனவே இப்படித்தான் ஒரு புருஷன்பொஞ்சாதி டயரிய படிச்சு, அதை இங்க போட்டு வாங்கி கட்டிகிட்டேன். ஆனா இந்த தடவை அப்படி பட்ட டயரி இல்லீங்க, மும்பாயில் இருக்கிற (பிறந்து வளர்ந்த) ஒரு தமிழ் பொண்ணோட (கோயமுத்தூர் பூர்வீகங்கோவ்!) weekend diary..
படிச்சு பாருங்க.. ம்ம்..
எல்லாம் குடுத்து வச்சிருக்கனும்.. என்னவோ போங்க, நமக்கு வாய்ச்சது தோப்பும் தேங்காயும் தான்.. :-(

அதிரபள்ளி

நேத்து மறுபடியும் KTVயில 'புன்னகைமன்னன்' போட்டாங்க, அது என்னமோ தெரியலைங்க, அடிக்கடி 'கவிதாலாயா' படமா போட்டு தள்ளுறாங்க.. எப்பவும் போல 'என்ன சத்தம் இந்த நேரம்' பாட்டு பார்த்ததுல இருந்து அதிரபள்ளி போகனும்னு நம்ம மனசு அரிக்க ஆரம்பிச்சிருச்சுங்க. அதென்னமோ தெரியலைங்க எத்தனை தடவை போனாலும் நமக்கு அலுக்காத இடம்ங்க அது, அதுவும் நம்ம ஊர்ல இருந்து வால்பாறை வழியா அப்படியே மலை ரோட்டுல போறதுங்கிறது, அதுவும் எஸ்டீமயோ இல்ல கமாண்டரயோ எடுத்துட்டு போகாம, Rxலயே அழுத்தறது தானுங்க செம கலக்கலான விஷயம்.
எத்தனை படத்துல அந்த அருவிய காட்டிடாங்க, புன்னகை மன்னன்ல இருந்து, லேட்டஸ்ட்டா வந்த 4ஸ்டூடெண்ட்ஸ், வரைக்கும்.. இப்போ நம்ம சித்தப்பா நடிச்சு 'அர்ஜுனா அருஜுனா'ன்னு ஒரு பாட்டு வந்துச்சே, (அது என்ன படம்ங்க்??) அது வரைக்கும் ஒவ்வொரு படத்துலயும் அலுக்காம அதிரபள்ளிய காட்டிட்டே தான் இருக்காங்க. நமக்கும் அலுக்கவே மாட்டேங்குது,
பைக்ல போறதுல ஒரு த்ரில் இருந்தாலும், ஒரு தடவை சிக்கலாகிபோச்சுங்க. வால்பாறையில இருந்து ஒரு 40 கி.மி ரிசர்வ் பாரஸ்டல போகும் போது கூட வந்த சகாவோட பைக் பஞ்சர் ஆகி படாதபாடு பட்டோம்ங்க, யானைகூட்டம் சுத்துற காடு, இந்தபக்கம் அந்தபக்கம் 15கிமி'க்கு ஒரு கடைகன்னி கூட கிடையாதுங்க.. அப்பா..! டயர கழட்டி சோலயார் எடுத்துட்டு போயி ரெண்டு பேரு பஞ்சர் ஒட்டிட்டு வர்றதுக்குள்ள இங்க நடுகாட்டுல உக்காந்த்துட்டு நமக்கு காய்ச்சலே வந்துருச்சுங்க, இருந்தாலும் அதுக்கப்புறமும் ரெண்டுவாட்டி பைக்ல அந்த வழியா போயாச்சு, அந்த அளவுக்கு அதிரபள்ளியும் அந்த ரோடும் நம்மள மயக்கியிருக்க்துங்க..
இப்பகூட நம்ம சென்னைபட்டன, பெண்களுர் பட்டன சகாக்கெல்லாம் இந்த வாரம் சேர்ந்தாப்புல மூணு நாள் லீவு வருதாம், எல்லாப்பயலும் ஊருக்கு வர்றானுக.. 'கிளம்பிருவமா?'ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை..
ஏஞ்சாமிகளா.. என்ன சொல்றீங்க.. அழுத்திருவமா??.. கூட்டா மலையேறி நாளாச்சு...



(வழக்கம் போல 'இந்த வயசுல போகாம எப்பங்கய்யா போறது'ன்னு ஒரு டயலாக்க வீட்டுல அவுத்து விடனும்... ரெண்டு ஏத்து விழுகும்.. சரி அதென்ன நமக்கு புதுசா.. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போறது தானுங்க)

Friday, March 18, 2005

9:30 to 10:00

ரொம்ப நாள் இடைவெளிக்கப்புறம் வசந்த், மறுபடியும் ஒரு படம் பண்ண போறாராமங்க, படத்தோட பேரு 9:30 to 10:00.
எனக்கு எப்பவுமே வசந்த் படங்கள் கொஞ்சம் அதிகமா புடிக்குமுங்க, 'நேருக்கு நேர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' மாதிரி படங்கள கூட ரசிச்சு பார்த்திருக்கேன்னா பாருங்களேன்.
ஆளும் ரொம்ப எளிமையான ஆளுங்க, சென்னைபட்டனத்துல இருந்தப்போ உதயம் தியேட்டர்ல 'தில்' படம் பார்க்கும் போது இண்ட்ரவெல்ல பார்த்து பேசியிருக்கனுங்க, சும்மா பெரிய ஆறிவுஜீவி மாதிரியெல்லாம் இல்லாம, நமக்கெல்லாம் புரியர மாதிரி பேசுனாருங்களா, அதுல கொஞ்சம் ஜாஸ்த்தி புடிச்சு போச்சுங்க.

என்னை பொறுத்த வரைக்கும் பாட்டுகள படமெடுக்கிறதில வசந்த் ரொம்ப ரசனையான ஆளுங்க, எனக்கென்னவோ எல்லா பாட்டையும் ரொம்ப ஆர்ப்பாடமா எடுக்கிற ஷங்கர் மாதிரி ஆளுகளை விட வசந்த் எடுக்கிற விதம் ரொம்ப புடிக்குதுங்க. சப்பை படமான 'நேருக்குநேர்'ல கூட அந்த கொல்கத்தா ரோட்டுல சூர்யா (பாவமா முஞ்சிய வச்சுகிட்டு) சிம்ரன துரத்திட்டு பின்னாடியே ஓடுறது ரொம்ப அழகா இருந்துச்சுங்க.
அதே மாதிரித்தான் 'நிவேதா' பாட்டு. ஆனா நிறையா பேருக்கு அந்த பாட்டு புடிக்கலைங்க, என் சகா ஒருத்தன் நான் சொன்னேன்னு அந்த பாட்டை பார்த்துட்டு பாதியிலயே 'பாட்டு முடியறதுக்குள்ள கண்ணு பொத்து போகும் போல'ன்னு நக்கலா சொல்லிட்டு போயிட்டானுங்க, இருந்தாலும் நமக்கு புடிக்குது.. :-)

ஒரு ரெண்டு பேர் வாழ்க்கையில ஒரு அரை மணி நேரம் நடக்கிற விஷயத்தை மையமா வச்சு 9:30 to 10:00 படத்தை எடுக்கிறாரம். ம்ம்..ஏமாத்தமாட்டாருன்னு நம்புவோம், ஹீரொ நம்ம 'சூர்யா'.. அவர் காட்டுல ஏற்கனவே அடை மழை.. அது தொடரும்னு நம்புவோம்.
அய்யா வசந்த்.. சூர்யா எல்லாம் வச்சுகிட்டு மறுபடியும் தேவாகிட்ட போயிடாதீங்க, ரஹ்மான் வெளியூர் போயிட்டாரு, சரி, நம்ம இளையராஜா இருக்காரு, என்னைக்கும் 'இளமை'யா, உங்களுக்கு அவர் தான் சரி.. (எங்களுக்கும் தான்). அப்படி இல்லைன்னா 'யுவன்', தயவு செஞ்சு தேவாகிட்ட போயிராதீங்க, அவர் எதாவது இங்கலீஸ் பாட்டு தான் போட்டுகுடுப்பாரு எப்படியும் :-(

அசோகமித்ரனடோட 'தண்ணீர்' நாவலா படமாக்கிட்டு இருக்கேன்னு சொல்லியிருகாருங்க, நமக்கு அது பத்தியெல்லாம் அதிகம் தெரியாதுங்க, தெரிஞ்சவங்க, யாராவது அதை பத்தி சொல்லுங்க..

Thursday, March 17, 2005

உயர்ந்தது எப்படி??



'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி எப்படி இவ்வளவு உயரத்துக்கு வந்தாரு..??


இப்படித்தான்...














:-)



(இது எதும் கிராபிக்ஸ் வித்தையா? இல்லை நிஜம்தானா?)

Friday, March 11, 2005

ராமரா? பிரகலாதனா?

நேத்து நம்ம கே. டி.வி.யில நெற்றிக்கண் படம் போட்டிருந்தாங்க, பாத்தீங்களா??.. ஏற்க்கனவே நிறையா தடவை பார்த்த படம்தான். கவிதாலாயாவுக்காக SP.முத்துராமன் டைரக்ட் செஞ்ச முதல் படம், ரஜினி ரெட்டை வேஷத்துல கலக்குன படம்.. ராமனின் மோகனம் மாதிரி சூப்பர் பாட்டெல்லாம் கூட வரும்ங்க, சரி.. சரி.., இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தான, நான் அதைப்பத்தியெல்லாம் சொல்ல வர்லீங்க. அது பத்தி பேசனும்னா அதுக்கெலாம் ரஜினிராம்கி மாதிரி பெரிய ஆளுக இருக்காங்க.. நான் சொல்ல வந்ததே வேற விஷயம்..
அந்த படத்துல 'ராமரா? பிரகலாதனா?'ன்னு ஒரு பட்டிமன்ற காட்சி வருதுங்க, அதைபார்த்தவுடனே நமக்கு வழக்கம் போல குழப்பமாயிடுச்சுங்க..
ராமன மாதிரி இருக்கிறத விட, தனக்கு சரின்னு தோனினத செஞ்ச பிரகலாதனா இருக்கிறது தான் கரெக்ட்டா?
இல்லை..
பிரகலாதன் மாதிரி இல்லாம ராமன் மாதிரி எல்லாத்தையும் கேட்டுகிட்டு என்ன ஆனாலும் அப்படியே நடக்கிறது கரெக்ட்டா??

நீங்க என்ன நினைக்கரீங்க,,

எனக்கென்னவோ எப்படி இருக்கிறதுங்கிறத விட, அதுல எவ்வளவு உறுதியா இருக்க்றோம்ங்கிறது தான் மேட்டருன்னு நினைக்கறனுங்க, ஏன்னா, கொஞ்ச நாள் பிரகலாதனா இருந்துட்டு, அப்புறம் ராமனா மாறின கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கிறவன் நான்..
(மறுபடியும் பிரகலாதனா மாறிடலாமான்னு கூட ஒரு யோசனை இருக்குதுங்க..)

Monday, March 7, 2005

சில பாடல்கள்!! சில கேள்விகள்!!

# மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே.!
# மல மல மல மருதமல...!
# சிரிச்சி சிறுக்கி வரா சீனாதானா டோய்.!

என்னடா திடீர்ன்னு விவகாரமான பாட்டுகளா வரிசை படுத்தறான்னு பாக்கரீங்களா.. இந்த பாட்டெல்லாம் விவகாரமானதா இல்லையாங்கிறது தாங்க இப்ப விவகாரமே..

பொதுவா இந்த பாட்டுகளை பத்தியெல்லாம் படிக்கிற போது, இல்ல, அதை பத்தின விவாதங்கள படிக்கிறப்பவெல்லாம், இதெல்லாம் அசிங்கமான பாட்டுக, 'பெண்களை / பெண்மைய கேவலப்படுத்துமும்' பாட்டுக அப்படின்னு நிறையா எதிர்ப்புகளும், இந்த பாட்டுக எல்லாம் கேவலமான சிந்தனைக்காரங்க எழுதினது, அப்படின்னெல்லாம் சொல்றாங்க. நானும் அதெல்லாம் ஒரளவுக்கு சரின்னு தாங்க நினைச்சுட்டு இருந்தன், இப்ப அதுல எனக்கு ஒரு சின்ன குழப்பமகாகிடுச்சுங்க. நமக்கு எப்பவும் வர்ற மாதிரித்தான்.. இந்த தடவையும் 'ஒன்னுமே புரியல உலகத்தில'ன்னு புலம்பிகிட்டு இருக்கனுங்க..

அப்படி என்ன குழப்பம்ங்கரீங்களா??.. சொல்றேன்..

மேல சொன்னா எல்லாப்பாட்டுகளும் இன்னைக்கு வரைக்கும் டி.வி, ரேடியோவில போடுற எல்லா 'போன் - இன்' ப்ரொகிராம்களோட ஃபேவரிட் பாட்டுகங்க, அதுல ஒண்னு கவனிச்சீங்கன்னா, இந்த பாட்டை எல்லாம் விரும்பி கேக்கிறவங்க எல்லாரும் பொம்பிளைக தான்ங்க, அதுவும் சின்ன வயசு புள்ளைக எல்லாம் இல்லீங்க, எல்லாமே, அம்மாமாருக தான் கேக்கிறாங்க.., நிறைய நேரம் அம்மாவும் பொண்ணுமா கூட கேக்கிறாங்க, வசூல்ராஜா' பாட்டுகூட ஒன்னுரெண்டுதடவை யாரவது பசங்க கேக்கிறாங்க, ஆனா மத்த ரெண்டு பாட்டுகளையும் இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சு ஒரு ஆம்பிளை கூட கேட்டதில்லீங்க. சனிக்கிழமை ராத்திரி இந்த மூணு பாட்டுகளையும் சன்ம்யூசிக்'ல ஒரே நிகழ்ச்சியில மூணு அம்மாக்கள் கேட்டாங்க. (அந்த நிகழ்ச்சியில இப்ப 'ஹேமாசின்ஹா' வர்றாங்க், ம்..ம்.. ஆயிரம் இருந்தாலும் 'அம்மு' மாதிரி வராதுங்க.. சரி அதை பத்தி தனியா பேசுவோம்)
இங்க நம்ம இணையத்துல, பத்திரிக்கையில, எல்லா மீடியாவுலயும் இது பெண்களுக்கு எதிரான விஷயம்னு சொல்லிகிட்டு இருக்காங்க, ஆனா, சராசரி பெண்கள் அப்படி நினைக்கலியோ??
சரி, நல்லது, கெட்டதுங்கிற வரைமுறை ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுமில்லீங்களா.. அப்படியே வச்சுக்கிட்டாலும், எனக்கு இந்த விசயம் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்குதுங்க..
('போன் - இன்'ல கேக்கிறாங்க, ஆனா 'நீங்கள் கேட்ட பாடல்' மாதிரி நேரடியா கேமிரா முன்னாடி யாரும் கேக்கரதில்லைன்னு நினைக்கிறனுங்க)

ச்சே!! அக்கா தங்கச்சியெல்லாம் இல்லாம் தனியா பிறந்து வளர்ந்தா இப்படித்தான்.. இப்பத்தான் கஷ்டம் புரியுது.. (நாளைக்கு ஒருத்தி வர்றதுக்குள்ளயாவது கொஞ்சம் தெளிவுக்கு வரனும்..:-D)

Wednesday, March 2, 2005

மலையாள கரையோரம்..

இந்த மலையாளிக இருக்காங்களே, அவுங்க பொதுவா ஒரு வேலைக்கு சேர்ந்தா கடுமையான உழைப்பளிகள்ன்னு பேர் வாங்கிடுவாங்க'ன்னு சொல்லுவாங்க, ஆனா எல்லா இடத்திலயும் அப்படி கிடையாதுங்க, அவுங்களும் உழைக்காம சும்மா வெட்டியா, இருக்கிறதை கெடுத்துகிட்டு இருக்கிற இடம் ஒன்னு இருக்குங்க, எல்லா ஊருலயும் போயி வேலை செஞ்சு நல்லா இருக்கிறவங்க, ஒரு இடத்துல மட்டும், முக்காவாசி நேரம் வேட்டிய மடிச்சு கட்டவும், அப்புறம் மடிச்ச வேட்டிய கழட்டிவிட்டு மறுபடியும் மடிச்சு கட்டறதுவுமே வேலையா இருக்காங்க,
அது எந்த ஊருன்னு சொல்லுங்க பார்ப்போம்,

அதாங்க, "கேரளா" .

நிசமாதானுங்க, வெளியூருக்கு பொழைக்கபோனா அடிச்சு புடிச்சு வேலை செய்யிற ஆளுக அவுங்க ஊருக்குள்ள ஏன் இப்படி இருக்காங்கன்னே தெரியலைங்க. முன்னையெல்லாம் நான் எர்ணாகுளம் போறப்பவெல்லாம், களமச்சேரி டயர் கம்பெனி முன்னால சிவப்பு கொடிகட்டி, ஒரு பந்தல போட்டு, யாராவது ஒரு தாடிக்காரர் மைக் புடிச்சு பேசிட்டிருப்பாருங்க, கேட்டா 'லாக்அவுட்'ம்பாங்க, இப்ப அந்த கம்பெனி அப்பல்லோ டயர்ஸ்கிட்ட போனதுக்கப்புறம் பரவயில்லைங்கிறாங்க.

இது என்ன விஷயம்னே தெரியலைங்க, வெளியூர்ல போயி நம்மாளுக நாய் படாதபாடு படுறங்க, ஆனா உள்ளூருல அதுல பாதி பாடு பட்டாபோதும், அதுகூட செய்ய மாட்டேங்கிறாங்க.. இதுல உள்ளுர்ல பாடுபடுறவன பார்த்து ஒரு இளக்காரம் வேற இவுங்களுக்கு.. என்னைக்கு தான் இவுங்க மாறுவாங்களோ??.. (இந்த கடைசி பத்தி, மலையாளிகள பத்தி மட்டுமில்லீங்க.. :-D )