Thursday, August 5, 2004

ஒரு கணவன் மனைவியின் டைரி குறிப்பு..!!!

ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., நானும் எருமைத்தயிர கரைச்சு ஒரு புடிபுடிச்சுட்டு, வேப்ப மர நிழல்ல கயித்து கட்டில்ல போட்டு, மல்லாக்க படுத்துட்டு பல காலமா யோசிக்கிறேன்..ம்ஹூம்..நம்ம புத்திக்கு ஒரு இழவும் விளங்கலை.. எங்க ஊரு மணியகாரர்'ல இருந்து எங்க தோட்டத்துல சாணி அள்ளுற சின்னான் வரைக்கு எல்லார்கிட்டயும் பேசி பார்த்துட்டேன்.. ஒன்னும் புரியல,, யாருக்கும் இதுக்கு காரணம் தெரியல...
ரொம்ப நாளா இருந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சுருச்சு..
நேத்து எத்தேசையா ஒரு புருஷன்-பொஞ்சாதியோட டயிரியை படிச்சு பார்த்தேன்.(சரி.சரி...திருட்டுதனமாத்தான்!!.. தேவைப்பட்டா பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கரு, நான் சொன்னா மட்டும் என்ன நக்கலா ஒரு சிரிப்பு!!)
இதோ அந்த டையிரிலிருந்து .....

---------------------------
மனைவியின் டயிரி:
3/8/04


என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு,
வீட்டுக்கு திரும்பி வரும்போது எவ்ளோ ஆசையா பேசினேன், அதுக்கு அவர் எதாவது பேசியிருக்கலாம், சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்காரு,
ஏந்தான் இப்படி இருக்காரோ, எனக்கு புரியவேயில்லை.. ஆனா ஒன்னு அவருக்கு எம்மேல பிரியம் இல்லைன்னு மட்டும் தெரியுது..
வீட்டுக்கு வந்ததும் அதே கதை தான், அவர் பாட்டுக்கு டி.வியை போட்டு உக்காந்த்துட்டாரு, நானும் எவ்ளோ நேரம் பக்கத்துல உக்காந்த்திருந்தேன், ஆன அவர் என்னை கண்டுக்கவே இல்லைஎனக்கு என்னமோ அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு. ஒரு 15 நிமிஷம் டி.வி பார்த்துட்டு அப்புறம் நான் வந்து படுத்திட்டேன். அவரும் ஒரு 10 நிமிஷத்தில வந்து படுத்துட்டாரு, என்னால தாங்க முடியல, அப்படி என்னதான் பிரச்சனைன்னு கேக்கலாம்னு முடிவு எடுத்து அவர் பக்கம் திரும்பினா, அவர் சுகமா தூங்கிறாரு....
எனக்கு ஒரே அழுகையா வந்துது, ராத்திரி பூராவும் அமைதியா அழுதிட்டு இருந்தேன்..அப்புறம் எப்போ தூங்கினேன்னு தெரியல...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது, அவர் நெனைப்பு வெற எங்கயோ இருக்கு, அவருக்கு எம்மேல அக்கறையே இல்லை..
என் வாழ்க்கையே சூனியமாகி போச்சு....

கணவனின் டயிரி:
3/8/04


இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!!
---------------------------

இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்.. நீங்க..????

5 comments:

Anonymous said...

arumai!!! Arumai raza!!!.You got the right point...
...Adhithya

KVR said...

கற்பன ஜூப்பரா கீது ராசா. சுசாதா கத எதுனா பட்ச்சிங்களா?

கொங்கு ராசா said...

சுஜாதா கதையா??? பக்கத்து தோப்பு ஜானகியக்கா கிட்ட இருந்து, முன்னால நிறையா சுஜாதா புக் வாங்கி படிச்சுட்டு இருந்தேன், ஆனா 'தினம்தோறும்' படம் வந்ததுக்கு அப்புறம் அவுங்க எனக்கு சுஜாதா புஸ்த்தகம் குடுக்கிறதை நிறுத்தீட்டாங்க.. :-(

Chandravathanaa said...

ராசா

நீங்கள் என்ன தெளிவுக்கு வந்தீங்கள்?

நட்புடன்
சந்திரவதனா

விடியலின் கீதம். said...

சுஐதா கதைகளை முன் வீட்டு ஞானகியக்காவிடம் வாங்கிப் படித்ததால் வந்த கற்பனையினு மட்டும் நல்லா புரியுது.

nalayiny thamaraichselvan.