Sunday, August 8, 2004

ஒரு வித்தியாசமான பதிவு..!!!

என்ன எழுதறதுன்னு யோசிச்சுகிட்டே நிறையா வலைப்பூக்களை வாசம் பார்த்ததில.. எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்துல 'எனக்கு பிடித்தவை' அல்லது 'எனக்கு பிடித்த தருணங்கள்'ன்னு ஒரு பதிவு செஞ்சிருக்காங்க (இப்பத்தான் வேலை வெட்டியில்லாமல் வலை மேய்பவர்கள்ன்னு ஒரு பிரிவு இருக்கிறதா நம்ம 'நியோ' வலைப்பூவில சொல்லியிருக்காரு, அதுக்கு ஆதாரம் கிடைச்சிருச்சா!!).....
சரி, நாம தான் ரொம்ப வித்தியாசமான ஆளாச்சே(என்ன சிரிப்பு..??.. ம்.. எல்லா சினிமாக்காரங்களும் படம் ரிலீசு பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் சொல்றாங்க.. படம் வந்தா ஒரு வெங்காயமும் வித்தியாசம் இருக்கறது இல்ல.. அது மாதிரித்தான் இதுவும் .. சும்மா ஒரு விளம்பரம்....) அதுனால நமக்கு புடிச்சதெல்லாம் லிஸ்ட் போடுறதுக்கு முன்னாடி 'எனக்கு பிடிக்காதவை/பிடிக்காத தருணங்கள்'ன்னு ஒரு பதிவு எழுதியிருவோம்னு முடிவு செஞ்சு.....

எனக்கு பிடிக்காதவை:
1. தினமும் ஷேவ் செஞ்சுக்கறது. ரொம்ப பேஜார் புடிச்ச வேலைங்க இது.. ஒரு நாள் ஷேவ் பண்ணாட்டியும்.. "என்ன பங்காளி டல்லா இருக்கே"ன்னு ஆரம்பிக்குற என்னோட ஒண்னு விட்ட அண்ணன்ல இருந்து.. உரக்கடை முதலியார் வரைக்கும் பதில் சொல்லி தீராம, வெறுப்போட தினமும் செய்யிர வேலை.. (படிக்கிற காலத்துல சந்தோஷமா தாடி விட்டுட்டு சுத்துனது ..ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!)
2. சில நேரங்கல்ல கரெக்ட்டான நேரத்துக்கு கிளம்பிடுற 'நீலகிரி எக்ஸ்ப்பிரஸ்' (நாம லேட்டா போகும் போது மட்டும் அவுரு கரெக்ட்டா கிளம்பிடுவாரு.. )
3. நல்லா ஒரு விடைக்கோழி அடிச்சு, பெரியாத்தா புண்ணியத்துல ஒரு புடிபுடிச்சுட்டு தூங்ககுற ஞாயித்துகிழமை மத்தியானம் வர்ற ராங்கால்கள். ( நல்ல தூக்கம் கலைஞ்சு போய் போன் எடுத்தா யார் பேசாறாங்கன்னு தெரியாமலே 'நான்தான் பேசுரேன்'னு ஆரம்பிக்குற ஆளுக மட்டும் என் கையில கிடைச்சா......!@$$@!)
4. எப்ப பாரு யாரவது ஒரு பொண்ணு நிறையா நகை போட்டுகிட்டு (ஒரு கூலிங்கிளாசஸ் வேற!!) லேடி நம்பியார் மாதிரி வசனம் பேசுற.. டி.வி சீரியல்கள். (இதுக்கு பயந்துகிட்டு தான் நான் ராத்திரி 10 மணி வரைக்கு வீட்டுக்கே போறதில்லை.. சத்தியமா . வேற ஒரு காரணம் எதுவும் இல்லை :-) )
5. நேரம் காலம் இல்லாம.. எப்பப்பாரு சூரியன் எப்.எம்'ல எதாவது ஒரு போன்'இன். நிகழ்ச்சியை சத்தமா அலற விட்டுடிட்டு டி.வி.எஸ்'ல பறக்குற எங்க ஊரு மைனர்கள். (இந்த மொபெட்டுல ரேடியோ மாட்டிக்கிற ஸ்டைல யாருங்க கணடுபுடிச்சாங்க)
6. 3 ஜோக்கர் கையில இருந்தும், 4-5 ரவுண்ட் போயும், ஒரிஜனல் சேராமா ஆட்டம் காட்டும் ரம்மியாட்டம் ( எனக்கு மட்டும் எனுங்க இப்படி.. ச்சே..நமக்கு எப்பவுமே அப்படி ஒரு ராசி..!!!)

இப்படி பல விஷயம் இருக்குதுங்க......
எங்க ஊருபக்கமெல்லாம் 'கொங்க'மழை சும்மா விடாம அடிச்சுட்டுருக்கு,
"வெட்டாப்பு விட்ட நேரத்தில காய் புடுங்கி போட்டுரலாம்ன்னு பார்த்தா.. இவன் எங்க கானாமபோயிட்டான்"ன்னு எங்கய்யன் குரல் வெளிய கேக்குது.. அதுனால இப்போதைக்கு.. நீங்க தப்பிச்சுடீங்க.. காய் புடுங்கி பொட்டுட்டு வந்ததும் மீண்டும் தொடரும்.... (இந்த மாதிரி நேரத்துல எங்கய்யன் குரல் கூட.... பிடிக்காதவை லிஸ்ட்டுல சேர்க்க வேண்டிய விஷயம் தான்)

3 comments:

KVR said...

//3 ஜோக்கர் கையில இருந்தும், 4-5 ரவுண்ட் போயும், ஒரிஜனல் சேராமா ஆட்டம் காட்டும் ரம்மியாட்டம் ( எனக்கு மட்டும் எனுங்க இப்படி.. ச்சே..நமக்கு எப்பவுமே அப்படி ஒரு ராசி..!!!)// - உங்களுக்குமா? ஒரு வேளை ராஜா என்ற பேருக்கு அப்படி ஒரு ராசி இருக்கா என்ன?

பாண்டி said...

/* 3 ஜோக்கர் கையில இருந்தும், 4-5 ரவுண்ட் போயும், ஒரிஜனல் சேராமா ஆட்டம் காட்டும் ரம்மியாட்டம் ( எனக்கு மட்டும் எனுங்க இப்படி.. ச்சே..நமக்கு எப்பவுமே அப்படி ஒரு ராசி..!!!)
*/

public property ellam sondham kondaada koodathu :(

யெய்யா ராசா,
நம்ம பக்கத்துலெ உம்ம பேரெ போட்டிருக்கொம் ..
pandianpakkam.blogspot.com
சொல்லாமெ போட்டுட்டோம்னு சண்டைக்கி கிண்டைக்கி வராதீரும்.

கொங்கு ராசா said...

அய்யோ.. பேரு ராசியா??? அப்போ எதுக்கும் பார்த்து இருங்க KVR.. முதல்ல நான் விழுந்தேன், அப்புறம் நாமக்கல் ராஜா.. பேரு ராசி இதுல ஒர்கவுட் ஆகிறபோகுது..

பாண்டியண்ணே.. இதென்ன காப்பிரைட்டு சமாச்சரமா.. இதுக்கு எதுக்குங்க அனுமதி...