Friday, March 11, 2005

ராமரா? பிரகலாதனா?

நேத்து நம்ம கே. டி.வி.யில நெற்றிக்கண் படம் போட்டிருந்தாங்க, பாத்தீங்களா??.. ஏற்க்கனவே நிறையா தடவை பார்த்த படம்தான். கவிதாலாயாவுக்காக SP.முத்துராமன் டைரக்ட் செஞ்ச முதல் படம், ரஜினி ரெட்டை வேஷத்துல கலக்குன படம்.. ராமனின் மோகனம் மாதிரி சூப்பர் பாட்டெல்லாம் கூட வரும்ங்க, சரி.. சரி.., இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தான, நான் அதைப்பத்தியெல்லாம் சொல்ல வர்லீங்க. அது பத்தி பேசனும்னா அதுக்கெலாம் ரஜினிராம்கி மாதிரி பெரிய ஆளுக இருக்காங்க.. நான் சொல்ல வந்ததே வேற விஷயம்..
அந்த படத்துல 'ராமரா? பிரகலாதனா?'ன்னு ஒரு பட்டிமன்ற காட்சி வருதுங்க, அதைபார்த்தவுடனே நமக்கு வழக்கம் போல குழப்பமாயிடுச்சுங்க..
ராமன மாதிரி இருக்கிறத விட, தனக்கு சரின்னு தோனினத செஞ்ச பிரகலாதனா இருக்கிறது தான் கரெக்ட்டா?
இல்லை..
பிரகலாதன் மாதிரி இல்லாம ராமன் மாதிரி எல்லாத்தையும் கேட்டுகிட்டு என்ன ஆனாலும் அப்படியே நடக்கிறது கரெக்ட்டா??

நீங்க என்ன நினைக்கரீங்க,,

எனக்கென்னவோ எப்படி இருக்கிறதுங்கிறத விட, அதுல எவ்வளவு உறுதியா இருக்க்றோம்ங்கிறது தான் மேட்டருன்னு நினைக்கறனுங்க, ஏன்னா, கொஞ்ச நாள் பிரகலாதனா இருந்துட்டு, அப்புறம் ராமனா மாறின கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கிறவன் நான்..
(மறுபடியும் பிரகலாதனா மாறிடலாமான்னு கூட ஒரு யோசனை இருக்குதுங்க..)

1 comment:

Pavals said...

//வர வர ஒங்க blog- ரொம்ப போரடிக்குது
அப்ப இவ்வளவு நாள் சுவாரசியமா இருந்துச்சுங்கரீங்களா.. ஆஹா!!.. யாருப்பா அங்க, சாருக்கு நம்ம கணக்குல ஒரு 'டீ' சொல்லு...

---
And ’t is my faith, that every flower
Enjoys the air it breathes.
-wordsworth

:-)
-----