Tuesday, March 22, 2005

அதிரபள்ளி

நேத்து மறுபடியும் KTVயில 'புன்னகைமன்னன்' போட்டாங்க, அது என்னமோ தெரியலைங்க, அடிக்கடி 'கவிதாலாயா' படமா போட்டு தள்ளுறாங்க.. எப்பவும் போல 'என்ன சத்தம் இந்த நேரம்' பாட்டு பார்த்ததுல இருந்து அதிரபள்ளி போகனும்னு நம்ம மனசு அரிக்க ஆரம்பிச்சிருச்சுங்க. அதென்னமோ தெரியலைங்க எத்தனை தடவை போனாலும் நமக்கு அலுக்காத இடம்ங்க அது, அதுவும் நம்ம ஊர்ல இருந்து வால்பாறை வழியா அப்படியே மலை ரோட்டுல போறதுங்கிறது, அதுவும் எஸ்டீமயோ இல்ல கமாண்டரயோ எடுத்துட்டு போகாம, Rxலயே அழுத்தறது தானுங்க செம கலக்கலான விஷயம்.
எத்தனை படத்துல அந்த அருவிய காட்டிடாங்க, புன்னகை மன்னன்ல இருந்து, லேட்டஸ்ட்டா வந்த 4ஸ்டூடெண்ட்ஸ், வரைக்கும்.. இப்போ நம்ம சித்தப்பா நடிச்சு 'அர்ஜுனா அருஜுனா'ன்னு ஒரு பாட்டு வந்துச்சே, (அது என்ன படம்ங்க்??) அது வரைக்கும் ஒவ்வொரு படத்துலயும் அலுக்காம அதிரபள்ளிய காட்டிட்டே தான் இருக்காங்க. நமக்கும் அலுக்கவே மாட்டேங்குது,
பைக்ல போறதுல ஒரு த்ரில் இருந்தாலும், ஒரு தடவை சிக்கலாகிபோச்சுங்க. வால்பாறையில இருந்து ஒரு 40 கி.மி ரிசர்வ் பாரஸ்டல போகும் போது கூட வந்த சகாவோட பைக் பஞ்சர் ஆகி படாதபாடு பட்டோம்ங்க, யானைகூட்டம் சுத்துற காடு, இந்தபக்கம் அந்தபக்கம் 15கிமி'க்கு ஒரு கடைகன்னி கூட கிடையாதுங்க.. அப்பா..! டயர கழட்டி சோலயார் எடுத்துட்டு போயி ரெண்டு பேரு பஞ்சர் ஒட்டிட்டு வர்றதுக்குள்ள இங்க நடுகாட்டுல உக்காந்த்துட்டு நமக்கு காய்ச்சலே வந்துருச்சுங்க, இருந்தாலும் அதுக்கப்புறமும் ரெண்டுவாட்டி பைக்ல அந்த வழியா போயாச்சு, அந்த அளவுக்கு அதிரபள்ளியும் அந்த ரோடும் நம்மள மயக்கியிருக்க்துங்க..
இப்பகூட நம்ம சென்னைபட்டன, பெண்களுர் பட்டன சகாக்கெல்லாம் இந்த வாரம் சேர்ந்தாப்புல மூணு நாள் லீவு வருதாம், எல்லாப்பயலும் ஊருக்கு வர்றானுக.. 'கிளம்பிருவமா?'ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை..
ஏஞ்சாமிகளா.. என்ன சொல்றீங்க.. அழுத்திருவமா??.. கூட்டா மலையேறி நாளாச்சு...



(வழக்கம் போல 'இந்த வயசுல போகாம எப்பங்கய்யா போறது'ன்னு ஒரு டயலாக்க வீட்டுல அவுத்து விடனும்... ரெண்டு ஏத்து விழுகும்.. சரி அதென்ன நமக்கு புதுசா.. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போறது தானுங்க)

3 comments:

Aruna Srinivasan said...

போட்டோவைப் பார்த்தால் இடம் பிரமாதமாக இருக்கு. உங்கள் அனுபங்களை இன்னும் விரிவாக எழுதுங்களேன்.

இந்த இடம் எங்கே இருக்கு? சென்னையிலிருந்து எவ்வளவு தூரம் எப்படி போகறது, தங்கும் வசதிகள், சாப்பாட்டு வசதிகள், இப்படி கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன். நாங்களும் போய் வந்து ரசிக்கலாமில்லீங்களா :-)

அருணா

Pavals said...

ஆஹா பெரியவங்க எல்லாம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க..

பெரும்பாலும் நிறையா சினிமாக்கள்ல வந்திருக்கிற இடம்.. அருணா மேடத்துக்கே தெரியலைன்னா ஆச்சிரியம்தானுங்க.. இந்த இடத்தை 'புன்னகைமன்னன் பால்ஸ்'ன்னும் சொல்றாங்க..

திருச்சூர்ல இருந்து சுமார் 60 கிமி தூரத்தில சாலக்குடி பக்கத்துல இருக்குதுங்க இந்த இடம்.. திருச்சூர்ல எல்லா விதமான ஹோட்டலும் இருக்குதுங்க.

சாலக்குடியிலயும் ஒரளவுக்கு நல்ல ஹோட்டல்கெல்லாம் இருக்குதுங்க..

மேலும் விவரங்களுக்கு.. http://www.athirappally.com/

கண்டிப்பா போயிட்டு வாங்க மேடம், அதுவும் கொஞ்சம் மழைக்காலத்துல போங்க..

Unknown said...

//இப்பகூட நம்ம சென்னைபட்டன, பெண்களுர் பட்டன சகாக்கெல்லாம் இந்த வாரம் சேர்ந்தாப்புல மூணு நாள் லீவு வருதாம், எல்லாப்பயலும் ஊருக்கு வர்றானுக.. 'கிளம்பிருவமா?'ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை..
ஏஞ்சாமிகளா.. என்ன சொல்றீங்க.. அழுத்திருவமா??.. கூட்டா மலையேறி நாளாச்சு... //

கொடுத்து வச்ச ஆசாமி, நடத்துங்கப்பா.

நாங்க எல்லாம் இங்கே எப்போ வெய்யில் அடிக்கும் எப்போ குளிரும்ன்னு தெரியாம குந்தியிருக்கோம். அங்கே அருவியா, கலக்குங்க.