Wednesday, October 5, 2005

இடைவேளை..!!வாழ்க்கையில மாற்றம்ங்கிறது மட்டுமே மாற்றமில்லாதது'ன்னு சொல்லுவாங்க, அதுவும் என்னை பொருத்த வரை மாற்றங்கலுக்கு நடுவால தான் நான் ஓடிட்டே இருந்திருக்கேன்.. முன்னால ஒரு நாள் ஒருநாள் வலைப்பூ'வில அறிமுகத்துக்காக மதி எங்கிட்ட என்னை பத்தி கேட்டப்ப, சும்மா சரசரன்னு ஒரு பக்கம் எழுதிட்டு, அப்புறம் அதை படிச்சு பார்த்ததுல எனக்கே ஒரு மாதிரி சிரிப்பா வந்துருச்சுங்க.. அவ்வளவு 'U' டர்ன் அடிச்சிருக்கேன் நான்.. அந்த மாற்றங்கள் வழியில இப்ப இன்னொரு மாற்றம்.. இந்த முறை ஆசைக்காக இல்லாம, சில சொந்த காரணங்களுக்காக.

என் சகா ஒருத்தன் சொல்லுவான் 'குழந்தையாவே இருந்திருக்கலாம்டா, என்ன அடிக்கடி கீழ மேல விழுந்து கை கால்ல காயம் பண்ணிபோம் அவ்வளவுதான, இப்ப வளர்ந்துட்டு கை கால பத்திரமா வச்சுகறோம், ஆனா மனசுல காயம் பண்ணிக்கறோம்'ன்னு, கரெக்ட்டுதான்.. ஆனா அதுக்காக வளராம குழந்தையாவே இருக்க முடியுமா..என்ன? .. மனவளர்ச்சி குன்றியவன்'ன்னு சொல்லி தூக்கி பைத்தியகார ஆஸ்பத்திரியில போட்டுர மாட்டாய்ங்க.
மாற்றம் என்னதான் வளர்ச்சிய குடுக்குதுன்னாலும் சில நேரம் சங்கடம் தான்.. சரி.. சரி..!! வழக்கம் போல சொல்ல வந்தத சொல்லாம வெட்டி கதை பேச ஆரம்பிச்சுட்டன் பார்ட்தீங்களா... இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேங்குது .. மாற்றமில்லாததும் உண்டுங்கிறதுக்கு இது ஒரு சாட்சி.. ;-)..
சரி.. சொல்ல வந்தத சொல்லிடறேன்..
இந்த மாற்றம் முடிஞ்சு ஒரு மாதிரி செட்டில் ஆகி, அதாவது அடுத்த மாற்றத்த எதிர்கொள்ள தயார் ஆகிற வரைக்கும் ;-), இந்த பக்கம் வந்து என் 'ராசபார்வை'ய செலுத்த முடியாது போல இருக்குங்க.. நானும் எவ்வளவு நாள் தான் வெட்டியா ஒரு படத்தையும் பாட்டையுமே போட்டுகிட்டு இருக்கிறது.. அதான் யாரும் கல்விட்டு எரியறதுக்கு முன்னாடி நானே மரியாதையா உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு போயிரலாம்னு வந்திருக்கேன். நான் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டா அப்புறம் பயபுள்ள இவத்தையே திரிஞ்சுகிட்டு இருந்தான், திடீர்ன்னு காணாத போயிட்டான்னு நீங்க யாரும் விசனப்பட கூடாது பாருங்க, அதான்.. சொல்லிட்டேன். 'ராசபார்வை' வராதே ஒழிய, நான் தமிழ்மணம் மூலமா உங்களை மேல எல்லாம் என் பார்வைய வீசிகிட்டே தான் இருப்பேன்.. ;-)

எப்ப திரும்பி வருவே?ன்னு கேட்டீங்கன்னா..

இந்த சினிமாபடத்துல எல்லாம் கோட்டும் கண்ணாடியும் போட்ட டாக்டருக கோமா பேஷண்ட்டுகள பத்தி சொல்ற மாதிரி.. 'இந்த பதிவு எப்ப வேணா பழைய நிலமைக்கு வரலாம், ஒரு வாரத்துல, ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துல, ஏன் நாளைக்கே கூட அது நடக்கலாம்.. ஒரு வேளை பழைய நிலமைக்கு வராம கூட போயிரலாம்.. நம்ம கையில எதுவுமே இல்லைங்க..'

நன்றி மக்களே.. மீண்டும் சந்திப்போம்..!!--
#124

24 comments:

முகமூடி said...

என்னய்யா ராசா.. என்ன ஆச்சி... கண்ணாலமா?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

போய்த்தான் ஆகணுமா?
ஆமான்னா...

எங்க போறீங்க?ஏன் போறீங்க? எப்பிடிப் போறீங்க? யாரோட போறீங்க?

டி ராஜ்/ DRaj said...

வருத்தமா இருக்கு ராசா...

//நம்ம கையில எதுவுமே இல்லைங்க//

அப்போ அம்மணி கையில இருக்குங்கிறீங்களா ?

icarus prakash said...

ராசா, என்ன ஆச்சுங்க?

இளவஞ்சி said...

அய்யா ராசா!

ஏதோ நம்ப ஊருபேர சில பேரு காப்பாத்திகிட்டு இருக்கீங்க! இப்படி திடுதிப்புன்னு போறன்னா எப்படி?

ஒரே அங்கலாப்பா இருக்கப்பு!

சீக்கிரம் வாங்க!

ஜெகதீஸ்வரன் said...

வருத்தமா இருக்குங்க ராசா...

நாளைக்கே பழைய நிலமைக்கு வர வேண்டுகிறோம்...

Go.Ganesh said...

ராசாவின் பார்வை ஏதேனும் ராணி பக்கம் திரும்பிருச்சா ?
சீக்கரம் வாப்பா !!

விவசாயி said...

ராசா நீயி சொல்றதும் நாயந்தேங்.. கய்யில மம்புட்டிய புடிச்சி கொத்துனாலும் நாலு காசு கேடிக்கும். அத வுட்டுட்டு இப்டி கம்பிபிட்டர்ல குந்திகினு தட்டுனா பய புள்ளியோ சண்டைக்கில்ல வறானுவோ.. சாடை வேற சொல்லி திட்றானுவோ.. எங்க இருந்தாலும் நல்லா இரு சாமி.

inomeno said...

Top photo is nice...

and

எங்க இருந்தாலும் நல்லா இரு சாமி.

Vimala said...

Enjoyed reading ur blogs in kongu style, Good Luck!!

செல்வராஜ் (R.Selvaraj) said...

போய்ட்டு வாங்க. சில சமயம் மாற்றம், ஓய்வு இதெல்லாம் நல்லது தான். ஊர்ப்பக்கம் இருப்பீங்களா?

துளசி கோபால் said...

அய்யோ/அய்யா ராசா,

எங்கெப்பா போறே? 'போறப்ப எங்கே போறன்னு கேக்கக்கூடாதுல்லெ?

போனேன் வந்தேன்னு வாப்பா அய்யா.

சுகந்தி said...

சீக்கிரமா திரும்பி வாங்க ராசா

யாத்திரீகன் said...

hm.. sona maadhiri ungalukum maatram thevai thaan...

maatrathudan vaanga :-) aana viraivil

karthik said...

All the best!!!

ILA(a)இளா said...

ஐப்பசி மாதத்தில் மணக்கோலம் காணும் ராசாவே வாழ்க வளமுடன்

www.ilamurugu.com

Anonymous said...

We'll miss you.

Ardent admirer...

Ram.C said...

U turn...

hope that way is straight without any more turns....

all the best...

Uma said...

Enna Aachu Raasaa? Thiruppiyum seekiramaa vandhu ezhudhunga.

Anonymous said...

still busy with 'U' turns.. we miss u dear.. be back soon..

'kongu' Fan

-L-L-D-a-s-u said...

ஏனுங்க ராசா, இந்த மாதிரி பண்ரீங்க .. எப்போ திரும்புவீங்க..

-L-L-D-a-s-u said...

ஏனுங்க ராசா, இந்த மாதிரி பண்ரீங்க .. எப்போ திரும்புவீங்க..

PKS said...

Hi Raasaa,

Just read this post today.

Hmmm...

Wherever you go,
whatever you do,
my best wishes and goodluck.

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

raasaa
IdaiveLai vittu rombha naaLaachu, seekiram thirumbhi vaanga
Uma