எல்லாருக்கும் வணக்கம்ங்க..
ரொம்ப நாள் கழிச்சு, சொந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு, திரும்பவும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கேன்.
நடுவால கொஞ்ச நாள் காணாம போன காலத்துல இங்க நிறைய விஷயம் நடந்திருக்கு, எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து படிக்கனும்.
அப்புறம்.. ஊர்ல மழை பரவாயில்லைங்க.. ஊரெல்லாம் பேய் மழை அடிச்சிருக்கு, நிறையா பேருக்கும் மழைய பத்தி இப்ப பேசுனாலே பத்திக்கிட்டு வரும், ஆனா நம்மூருபக்கம் பக்கம் அந்தளவுக்கு பேய் மழை இல்லீங்க, ஆனா நல்ல மழை..
நாலு வருஷமா தண்ணியில்லாத கிணத்துல, அதுல இருந்த மோட்டார கூட கழட்டி வச்சிருந்தோம், இப்போ அதுல கடை எடுத்துவிட்டு, பொழுதுக்கும் வாய்க்கால்ல தண்ணி வெளியபோயிட்டிருக்கு, அந்தளவுல நல்ல மழை. நாலு அஞ்சு வருஷமா மழையே இல்லாம, என்னாடா இது தெரியாத்தனமா இப்படி விவசாயம்னு வந்து மாட்டிகிட்டமோன்னு நினைச்சேன், ஆனா இந்த மழை இன்னும் ரெண்டு மூனு வருஷம் எல்லாம் ஒழுங்கா போகும்னு தோணுதுங்க..
வேற என்னங்க..
கொஞ்ச நாள் கேப் விட்டுட்டு மறுபடியும் வந்ததுல என்ன எழுதறதுன்னே தெரியலைங்க, இதுக்கு முன்னால மட்டும் அப்படி என்ன உருப்படியா எழுதி கிழிச்ச்னேன்னு கேக்கரீங்களா, அதுவும் சரிதான்..
ஆனாலும் எதாவது எழுதுவேன்.. இப்போதைக்கு இவ்ளோதான்..
மீண்டும் வருவேன்..
என்றும் அன்புடன்
உங்கள்
கொங்கு'ராசா
--
#125
13 comments:
Rasaa,
welcome back...
Vanga Rasaa Vanga.
Vanga vanga...
...adhithya
Raasaa,
Welcome back. Thodarnthu Ezuthunga.
Thanks and regards, PK Sivakumar
ராசா.. வாங்கய்யா. தொடர்ந்து எழுதுங்க.
வாங்கய்யா வாங்க..
ஊர்ல வேற என்னென்ன நடந்துச்சு எடுத்துவிடுங்க.
-மதி
125-ஆவது பதிவோடு திரும்பவும் பதிய வந்ததற்கு நன்றி தல!
இதுக்கும் போஸ்ட்டர் அடிச்சாச்சு தல, ஆனா நிதி உதவி செஞ்சீங்கன்னா பப்ளிஷ் பண்ணலாம்னு இங்கே ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கேன். தீவிர தொண்டர்கள் இந்த போஸ்டரை ஒட்ட அனுமதி இலவசம்; தர்ம அடிகளுக்கு கழகம் பொறுப்பல்ல!
;-)
வாங்க சமா, பண்ணயமல்லா எப்படிங் ?
வாங்க ராசா.
அதான் சொந்தப் பிரச்சனை தீந்துடுச்சுல்லெ, இனி பூந்து வெள்ளாடுறது பாக்க நாங்க எல்லாம் லைன்கட்டி உக்காந்துக்கிட்டோமுல்லெ.
நிலத்துலே இப்ப என்னா போட்டுருக்கீங்க?
வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி.. :-)
ஞானம், போஸ்டர் அடிக்கிறதுல கில்லாடியா இருக்கீங்க, ஆனா நிதி உதவி கேட்டுட்டீங்களே.. காசு குடுத்து எனக்கு நானே போஸ்டர் அடிக்க நான் என்ன அரசியல்ல சேரப்போறேனா இல்ல சினிமாவுல இருக்கனா? நமக்கு எதுக்குங்க அந்த விளம்பரம்..?
ராசா, நீங்க போட்ட பதிவோட தலைப்பின் அடுத்த வரி தெரியுமில்லையா :-))
வாழ்த்தலாம்னு வந்தா, பிரச்சனை என்று சொல்லிட்டீங்களே :-(
ராசா,
ரொம்ப நாளுக்கப்றம் திரும்ப வலைப்பதிய நீங்க வந்ததை ரொம்ப நாளுக்கப்றம் இப்பத்தான் படிச்சேன்...
வாங்க வாங்க... வந்து கலக்குங்க
I missed your jovial and down to earth posts. look forward to many more in 2006.
Navin
Post a Comment