Wednesday, December 14, 2005

அதே மெனு


நம்ம வீட்டுல இந்த டிசம்பர் மாசம் ஆம்பிச்சா வருஷம் தவறாம ஒரு நாடகம் நடக்கும்ங்க, ஒண்ணாந்தேதி வாக்குல இருந்தே 'புது சேலை எடுக்கனும்'னு எங்கம்மா ஆரம்பிப்பாங்க, 'ஆமா ஏற்க்கனவே எடுத்து வச்சிருக்கிறதுல எதாவது ஒண்ணு கட்டிக்க வேண்டியதுதான'ன்னு எங்கய்யனும் வழக்கம் போல கடைசி நேரம் வரைக்கும் பிகு பண்ணிகிட்டே இருப்பாரு, எப்படியும் முத நாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும், 'வண்டியில முன்னாடி சீட்டுல ஒரு கவர் இருக்குது பாரு'ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு கைகால் கழுவ போயிருவாரு, எங்கம்மாவும் படபடப்பா ஒரு சிரிப்போட போயி அந்த கவரை எடுக்கிறதும், அதுக்குள்ளார ஒரு புது பட்டுசேலை இருக்கிறதும்..
நானும் நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்த பார்த்துட்டு தாங்க வர்றேன், எப்படியும் அடுத்த நாள் எனக்கு அவ்வளவா புடிக்காத ஆனா எங்கய்யனுக்கு புடிச்ச ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் உண்டு..கூடவே எங்கய்யன் புதுதுணி உடுத்திலைங்கிற புலம்பலோட..
வருஷம் தவறாம இதே 'மெனு' தானான்னு நான் சும்மா அலுத்துகிட்டாலும், நிஜத்துல இன்னும் நிறையா வருஷம் இதே மாதிரி ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் சாப்பிடனும்னு தான் ஆசைப்படுறேன்.
பார்த்தீங்களா எல்லாம் சொன்னேன், ஆனா என்ன விஷேசம்னு சொல்லாமயே விட்டுட்டேன்.. நான் இப்படித்தாங்க சொல்ல வந்தத விட அதை சுத்தி இருக்கிறதுல தான கவனம் போகும் எனக்கு..
விஷேசம் என்னன்னா எங்க வீட்டுல எங்க்கய்னுக்கும், அம்மாவுக்கும் இன்னைக்கி (14-டிசம்பர்) கல்யாண நாள்.. 29வது வருஷம்..

நம்ம சகா ஒருத்தன் காலையில என்கிட்ட 'நீ என்ன கிப்ட் குடுத்தே'ன்னு கேட்டேன்.. 'ச்சே ச்சே, நமக்குத்தான் இந்த கிப்ட் குடுக்கிற பழக்கம் எல்லாம் இல்லையே, வழக்கம் போல 'இதே மெனுவா'ன்னு அலுத்துகிட்டு சாப்பிட வேண்டியதுதான்.. ;-)


--
#126

10 comments:

ILA (a) இளா said...

அப்பா அம்மாவுக்கெல்லாம் பரிசு கொடுத்து அந்நியோன்ய படுத்திரகூடாது ராசா. அய்யனுக்கும், அம்மாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அது சரி எங்கே இவ்ளோ நாள் காணாம் போய்டீங்கன்னு சொல்லவே இல்லியே.

துளசி கோபால் said...

அப்பா அம்மாவுக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லுங்க. நாந்தான் சீனியருன்னும் சொல்லுங்க. எனக்குக் கல்யாணம் முடிஞ்சு முப்பத்தியொன்னரை வருஷமாச்சு. அம்மாடியோவ்!

G.Ragavan said...

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துகள்.

என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் டிசம்பர்-11 திருமண நாள். ஆனா அன்னைக்கு அவங்களுக்கு வாழ்த்தலை. ஒன்னும் சொல்லலை.

டிசம்பர் கடைசி வாரம் பெங்களூர் வர்ரப்ப....ரெண்டு பேருக்கும் கிப்டு கொடுக்கனும். :-) ஒரு சர்ப்பிரைசா இருக்கட்டுமே.

ஜெகதீஸ்வரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெகதீஸ்வரன் said...

Vanga Raasaa... Romba santhosam....
Innikkuthan Selvanayaki Valaipathivai kandu pidichen.... Athe samayathula neengalum ezutha aarambichutteenga.....India vanthutten...Meendum Porathukku munnadi, viraivil unga Thirumana Nalil Santhippom...

Unknown said...

Welcome back Raasaa....
Appa,Ammavukku vazhthukkala sollidunga..seekirame ungaloda kalyana thethiyayum sollunga ;-)

rv said...

ராசா,
29 வருஷமா? என்றென்றும் இன்புற்றிருக்க உங்கள் பெற்றோருக்கு அன்னிவேஸ்சரி வாழ்த்துகள்

Pavals said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி.. :-)

அதென்னங்க இது ஆளாளுக்கு இப்படிஎன் கல்யாண விவகாரத்தையே இழுக்கரீங்க? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நானே படாதாபாடு பட்டு எங்க வீட்டுல சமாளிச்சுட்டு இருக்கேன், நீங்க வேற.. கல்யாணம் எல்லாம் பெரிய சமாச்சாரமாமாங்க, நமக்கு இப்போதைக்கு அதுக்கெல்லாம் நேரமும், பொறுமையும் இல்லைங்க.. எல்லாம் காலாகாலத்துல நடக்கும், நம்ம எதுக்கு சும்மா அதைபத்தியெல்லாம் யோசிச்சுகிட்டு.. நம்ம என்னைக்கு எதைபத்தி யோசிச்சோம்'னு கேட்டீங்கன்னா?.. அதுவும் சரிதான்.. :-)

அப்புறம் இந்த தடவை 'ஜவ்வரிசி பாயாசம்' இல்லை, பருப்பு பாயாசம், நமக்கு புடிச்சது..

தகடூர் கோபி(Gopi) said...

உங்க பெற்றோருக்கு தாமதமான வாழ்த்துக்கள்.

//கல்யாணம் எல்லாம் பெரிய சமாச்சாரமாமாங்க, நமக்கு இப்போதைக்கு அதுக்கெல்லாம் நேரமும், பொறுமையும் இல்லைங்க..//

அதுக்காக வேணாம்னு சொன்னா எப்படிங்க (அதெப்படி நீங்க மட்டும் நிம்மதியா இருக்கலாம்...)

thanara said...

எலே ராசா அய்யனுக்கும்,ஆத்தாவுக்கும்
என்ர வாழ்த்தை சொல்லு ராசா.
தலைக்கு மேல சோலி இத மறந்து
போனேன் அப்பு.