ஒரு சின்ன வேலையா கோயமுத்தூர்ல பேங்க் வரைக்கும் போக வேண்டியிருந்துச்சுங்க, சரின்னு கிளம்பினேன், நம்மாளுக சும்மா இருப்பாங்களா? கூடவே இன்னொரு வேலையும் சேர்த்து தலையில கட்டி விட்டாங்க, போயிட்டு வரும்போது கோயமுத்தூர்ல இருக்கிற என் சகாவோட அக்கா புள்ளைய பொள்ளாச்சி கூட்டிட்டு வந்து விடனும், புள்ளை அரைப்பரிட்ச்சை லீவுக்கு பாட்டி தாத்தாவோட இருக்கனும்னு பிரியப்படுதுன்னாங்க, சரின்னு கிளம்புனேன்.
என் நேரம் போன வேலை கொஞ்சம் இழுத்திருச்சு, (என் தப்பு இல்ல, ஆனா எங்கய்யன் ஒத்துக்க மாட்டாரு). சரி புள்ளைய கூட்டுட்டு அப்புற்ம் போற வழியில வந்து வேலைய பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு, அவளையும் (ஏழாவது படிக்குது - பேரு சுனிதா) கூட்டிட்டு மறுபடியும் பேங்க்குக்கு போனேன். போன இடத்துல கொஞ்ச நேரம் மறுபடியும் காத்திருக்க வேண்டியதா போச்சுங்க.
'என்னம்மா செய்யிறது காலையில இருந்து அலையவிடுறானுக, இதுக்கு தான் நான் இந்த கவர்மென்ட் பேங்க்காரங்ககிட்ட கொஞ்சம் கொஞ்சமா சவகாசத்தை குறைச்சுட்டிருக்கேன்'னு, புலம்பிகிட்டு இருந்தேன். டக்குனு சுனிதா இப்ப என்ன வேனும் உங்களுக்கு நான் முடிச்சுதர்றேன்னு சொல்லிட்டு என் கையில இருந்த பேப்பர வாங்கிட்டு போயி ஆக வேண்டிய வேலைய 10 நிமிஷத்துல முடிச்சுட்டு வ்ந்திருச்சு, நான் இதுக்கு காலையில அரை மணி நேரம் மறுபடியும் மதியம் அரை மணி நேரம்னி காத்துட்டிருக்கேன் :-(, நம்ம ராசி அப்படி.
முடிச்சுட்டு வந்ததுல விஷயம் இல்லீங்க எப்படி இவ்ளோ சீக்கிரம்ன்னு நான் கேட்டதுக்கு அவ சொன்ன பதில் தான் மேட்டரே'..
'ஒரு புள்ளை போயி சிரிச்சுட்டே கேட்டா, எல்லாம் சீக்கிரம் முடியும்னு சிரிச்சுகிட்டே சொன்னா..
நிசம்தானுங்க..
புள்ளைக வந்து சிரிச்சதும் வேலைய செஞ்சு குடுக்கிறது ஒரு தப்பு, ஆனா அதை விட, இந்த வயசுலயே 'ஒரு எட்டாவது படிக்கிற புள்ளைக்கு, வேலை ஆகனும்னா நம்ம போயி சிரிச்சு பேசுனா போதும்னு யாரு சொல்லி குடுத்தா?
நம்ம கூட்டாளிக கிட்ட பேசினா 'எல்லாம் சினிமா மாப்ளே'ங்கிறாங்க..
எனக்கென்னமோ எல்லாத்தையும் சினிமா மேல பழி போடுறதுல நம்பிக்கை இல்லீங்க.. எங்கயோ கத்துகிட்டிருக்கா.. அதை விடுங்க.. நம்மளும் 'இல்ல கண்ணு இதெல்லாம் தப்பு'ன்னு சொல்ல முடியாது பத்தாம் பசலித்தனமா இருக்கும், ஆனா அதுக்காக அவள பாராட்ட முடியுமா? இதெல்லாம் நல்லதுக்கா?
'ஒன்னுமே புரியல உலகத்திலே'
---
#129
11 comments:
ராசு,
சினிமா கத்து குடுத்ததா இல்லை உலகம் கத்து குடுத்ததா அப்படிங்கிறது முக்கியம் இல்லை
நாம கத்துக்கொடுத்து கத்துக்கிற மாதிரி இல்லை இந்த காலத்து புள்ளைங்க. அதுகளுக்கு கொஞ்சம் அதிப்படியான அறிவுதான். அதிகமா அறிவு இருந்தாலே இப்படிதான் ஏடாகூடமா யோசிக்க வைக்கும், கண்டுகாத ராசு.
ராசா,
என்ன செய்வது??!!
இதத்தே பெரியவங்க கலிகாலமுன்னு சொன்னாய்ங்க.......
விவசாயி >> பல விஷயங்களை இப்படித்தான் கண்டுக்காம போயிட்டிருக்கோம்.. நம்மாள முடிஞ்சது அதுதானே..!!
ரூபா >> சிரிக்கக்கூடிய விஷயமா இருந்தாதாங்க சிரிப்பு வரும், வெறும் தலைப்புகெல்லாம் சிரிக்ககூடாதுங்க.
சங்கரய்யா >> விவசாயி சொன்னத பார்த்தீங்களா? அப்புறம் என்ன சாமி கேள்வி?
அநுசுயா >> எல்லாகாலத்துலையும் அடுத்த தலைமுறை இந்த தலைமுறைய தாண்டித்தான் யோசிக்குது, இந்த தலைமுறை அது சரியாவருமான்னு கவலைப்பட்டுகிட்டே தான் இருக்குது.. ஆனா ஒன்னும் செய்யமுடியாது.. அமைதியா வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.. அது கலிகாலமா இருந்தாலும் சரி.. எந்த காலமாயிருந்தாலும் சரி.. ;-)
காலம் ராசா! காலம். :-).
'ஒன்னுமே புரியல உலகத்திலே'
ஆமா ஆமா... 'ஒன்னுமே புரியல உலகத்திலே'
ஆமாம், எல்லோரும் காலத்தைப் பத்திச் சொன்னீங்களே, யாராவது இப்படி யோசிச்சீங்களா?
நம்மூர்லே 'ஜொள்ளாறு' ஓடுதுன்னு.
//நம்ம கூட்டாளிக கிட்ட பேசினா 'எல்லாம் சினிமா மாப்ளே'ங்கிறாங்க..
எனக்கென்னமோ எல்லாத்தையும் சினிமா மேல பழி போடுறதுல நம்பிக்கை இல்லீங்க.. எங்கயோ கத்துகிட்டிருக்கா.. அதை விடுங்க.. //
ராசா, நீங்க இன்னும "அழகன்" பார்க்கலையா? :-)))
Neenga paadu sirippunnu thalaippu pottuteenga, sangadamaa irukke thavira siruppu varaleeye Raasaa.
Uma
//'ஒன்னுமே புரியல உலகத்திலே'//
நமக்குத்தாங்க ஒன்னுமே புரியல... அவங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கு...
நமக்கு அதுவும் புரியலை...
அண்ணா...இந்த கோயம்புத்தூர் புள்ளைகளை மட்டும் நம்பவே முடியாதுங்ணா...
Post a Comment