Monday, November 27, 2006

இதுவும் கடந்து போகும்

வழக்கம் போல பின்னிரவு சாப்பாடா இல்லாம, இன்னைக்கு கொஞ்சம் நேரமே எழரை மணிக்கெல்லாம் உக்காந்தாச்சுங்க. வழக்கமெல்லாம் மாறுது :)
சப்பாத்தி குருமா. சப்பாத்தியுல கொஞ்சம் உப்புதூக்கல், மெதுமெதுன்னு இருக்க சேர்த்துன தயிர் வாசம் கொஞ்சம், முதநாள் ஆச்சே, ஆர்வத்துல தாளிக்கும்போது அள்ளிபோட்ட கடுகு குருமாவுல பட்டானிக்கு சமமா மிதக்குது. சாப்பிட்டுமுடிச்சுட்டு மெல்ல கண்ணை உயர்த்தி சிரிச்சுகிட்டே 'ம்'ன்னு தலையாட்டுறவன, பழிப்பு காட்டி 'அதை வாய திறந்துதான் சொல்லேன், தட்டை வை, நான் எடுத்துக்கிறேன்.. போய் கைய கழுவு'ன்னு சொல்லிட்டு சமையல் ரூம்பக்கம் போறவள பார்த்து சிரிச்சுகிட்டே எழுந்திருக்கும் போது, மேசை மேல இருந்த கைப்பேசியில 'ஆசை நூறு வகை'. நம்ம சகா வட்டத்து ரிங்டோன்..
நம்ம பய தான்..

'சொல்லு மாப்ள'

'டேய், சாப்பிட வரமாட்டேன், கால் இருக்கு.. எனக்கு சேர்த்து செய்யாத.. ' வழக்கம் போல அவசரக்குரல்.

'.... '

'ஹலோ.. ?'

'நான் இப்பத்தான் சாப்பிட்டேன்'

'அதுக்குள்ளயே...... ச்சே.. மறந்துட்டேன் பார்த்தியா.. நீ எங்க கூட இருக்கிற நினப்புலயே கூப்பிட்டுட்டேன்.'

'வேலையா?'

'ஆமான்டா, நை நைங்கிறானுக, அப்புறம் பேசறேன் உங்கிட்ட.. குட் நைட்!'

'டேய், நாளைக்கு இங்க வந்திரு சாப்பிட.'

'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு.. நான்தான் இப்ப வேலை அவசரத்துல மறந்து, தங்கான கூப்பிடறதுக்கு பதிலா உன்னைய கூப்பிட்டுட்டேன்'

'.. சரி.. காலையில கூப்பிடுறேன்'

'ம்ம்.. .. டேய்'

'என்ன?'

'கதவுல ஒட்டி வச்சிருந்தியே..'

'என்னது..?'

' "இதுவும் கடந்து போகும்"ன்னு.. போகுமா.'

'போடாங்க... வாயுல நல்லா வருது.. போ, போய் வேலைய பாரு.. காலையில பேசலாம்... '




அழைப்பை துண்டிச்ச பிறகும்.. கைய கூட கழுவாம அப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்திருக்கறவன, தட்டு கழுவிவச்சுட்டு வந்து, சுவத்துல சாஞ்சுகிட்டு புருவத்தை தூக்கி, கண்ணாலயே 'என்ன?'ன்னு ஒரு கேள்வி..
என்னன்னுங்க சொல்றது..




'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?


pic : http://redshift.shutterchance.com/


--
#213

21 comments:

ramachandranusha(உஷா) said...

ம்ம்ம் நல்லா இருக்கு :-)

ராசுக்குட்டி said...

அம்மணி வகையா சமைச்சுப்போட்டா உப்பு தூக்கல் காரம் கொரச்சல்னுகிட்டு...

நட்பும் கடந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் இந்த "Out of Sight Out of Mind" உலகில், எனவே நாமதான் முயற்சி எடுத்து தக்க வச்சுக்கணும்னா...!

இன்பா (Inbaa) said...

"இதுவும் கடந்து போகும்"

பிடிச்சிருக்கு!

Pavals said...

உஷா >> நல்லாவா இருக்கு?

ராசுகுட்டி >>
//உப்பு தூக்கல் காரம் கொரச்சல்னுகிட்டு...//
கேப்புல வெடி வைக்கரீங்களே தலைவா.. அதான் அமைதியா 'ம்'ன்னு சொல்லி எந்திருச்சுட்டனே.. :)

//நாமதான் முயற்சி எடுத்து தக்க வச்சுக்கணும்னா...!// ரைட்டேய்!!

அனுசுயா said...

என்னதான் நட்ப விட முடியாட்டியும் குடும்ப வாழ்க்கை அப்டினு வரும்போது நட்பு தானா கடந்து போய்த்தான் தீரும்.

Pavals said...

இன்பா >> //பிடிச்சிருக்கு!// என்னங்க எல்லாரும் மணிரத்னம் பட பாணியில கமெண்டரீங்க.. ம்ம் ?

கதிர் said...

//'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?//

நீ உன்னை கடக்கும் வரை நட்பு உன்னை கடந்து போகா.

Pavals said...

அனு >> நான் 'தம்பி' கட்சி.. :)

Sud Gopal said...

ரைட்டேய்....:-)

Anonymous said...

தலை,

பொண்டாட்டியை நண்பியா நெனச்சுக்குங்க.
நட்பு எதையும் கடந்து போகும் :-) ரொம்ப பயம் காட்டுறேனா புதுமாப்பிள்ளை? :-)

சாத்தான்குளத்தான்

Anonymous said...

asusual got the content. but environemt thanunga puriyalenga.. pollachi la enga irunthunga saga vantharu ??

-
Jagan

Pavals said...

சுதர்ஷன் >> தம்பி.. இன்று நான், நாளை நீ.. :)

Pavals said...

ஆசீப்மீரான் >> வரனும், வரனும்..
//ரொம்ப பயம் காட்டுறேனா புதுமாப்பிள்ளை? :-)// இதுக்கெல்லாம் அசந்திருவமா என்னங்க.. :)

ஜெகன் >> வாரக்கடைசி தானே பொள்ளாச்சி.. இது வாரக்கடைசியில நடந்த்து இல்லைங்க..

கோபிநாத் said...

தலை,

'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?

கலக்கிட்டிங்க.........ராச

Anonymous said...

Friends will be there always!!

'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு..
..then Eppadi natpu kadanthu pogum?

Divya said...

நண்பர்கள் கடந்து போகலாம், ஆனால் நட்புணர்வு கடந்து போகுமா??

கப்பி | Kappi said...

நல்ல பதிவு ராசா!

my take

Pavals said...

vimala / திவ்யா / கப்பிபய >> நன்றி.. :)

Unknown said...

:))

Syam said...

எதுவோ கடந்து போய்ட்டு போகுது...காலைல இட்லியும் தேங்காய் சட்னியும் கடந்து போகாம பாத்துக்குங்க :-)

Pavals said...

தேவ் >> என்ன சிரிப்பு.. ம்ம்

ஷ்யாம் >> எது கடந்து போனாலும் சாப்பாடு விசயத்துல நம்ம எப்பவுமே உஷார் தான்.. :)