Wednesday, October 10, 2007

ஹாசினி - திரைப்பார்வை

தியோடர்'சார் அவரோட கட்டுரைகள்ல ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று.. அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ தெரியலைங்க.. நமக்கு சினிமா விமர்சனம்ங்கிறது எந்த வகையில பார்த்தாலும் சினிமா பார்க்கிற மாதிரியே புடிச்ச சமாச்சாரமாத்தான் இருக்குது.. சும்மாவா, பள்ளிக்கூடத்துல விளாட்ட்டு பீரியட்ல எவனாவது ஒருத்தன் முதநாள் சாய்ங்காலம் கொட்டாயில பார்த்த ரஜினி படத்துல அவர் எத்தனை குட்டிகரணம் போட்டு வில்லன, சில நேரத்துல சைட்-வில்லன, எப்படி உதைச்சாருன்னு விவரமா சொல்லுவான், அதை வாயப்பொழந்து கேட்டுட்டு விளையாட கூட போகாம இருந்த கூட்டத்த சேர்ந்தவஙக் தான நம்ம எல்லாம்.

கொஞ்சம் வயசு வந்த காலத்துல நமக்கு சினிமா விமர்சனம்ன்னா விகடன்ல மதன் எழுதறது தான் வேதவாக்கு.. அதுவும் மகாநதிக்கு 'காட்டாற்று வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்த கமல் மகாநதியாய் உருவெடுத்திருக்கிறார்'ங்கிற மாதிரி ஆரம்பிச்சு 65 மார்க்கோ என்னமோ குடுத்ததுல இருந்து சினிமா விமர்சனம்னா அது மதன் தான்னு ஆயிப்போச்சு.. அவரும் சில நேரத்துல சொதப்பி வைக்கிறது உண்டு.. 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதுனப்ப எல்லாம்.. 'யூ டூ ப்ரூட்டஸ்'ன்னு தான் தோனுச்சு.. ஆனாலும் விகடன்ல 40'க்கு மேல மார்க் இருந்த தகிரியமா போலாம்னு ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா, அவுங்களும் நடிகன்' டப்பா படம்ன்னாங்க.. மக்கள் அதைய பெரிய ஹிட் ஆக்கிடாங்க.. நமக்கும் புடிச்சு தான் இருந்துச்சு. :)

இப்ப பாருங்க.. சமீப காலத்துல விகடன் எல்லாம் வாங்கறதேயில்லை. ஓசியில இணையத்துல குமுதம் ரிப்போர்டர் படிக்கறதோட சரி..:) "அட்டைய பிரிச்சுட்டு படிச்சு பார்த்தா, எது எந்த புஸ்தகம்னே தெரியலையே நண்பா"ன்னு சொல்லுவான் நம்ம சகா ஒருத்தான்.. இப்பவெல்லாம்.. நம்ம விமர்சனத்தேடல்(!) இணையத்துலயும் டீ.வி. பொட்டியிலயும் தான்..

முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி, ஒரு அக்கா சூரியடீ.வில விமர்சனம் செய்ய்வாங்க.. பல நேரம் பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கும், நடுவால அப்பப்ப அவிங்க காமிக்கற வடிவேலு க்ளிப்பிங்க்ஸ்க்காக அதைய பொறுத்துக்கலாம்ன்னா.. முடிவுல தியேட்டர் வாசல்ல போயி நம்ம மக்கள் கிட்ட மைக்க நீட்டி கருத்து கேப்பாங்க பாருங்க, அது சுவாரசியமா இருக்கும், மைக் கிட்ட எட்டி வந்து 'சூப்பரு'ன்னு ஒரு சில்வண்டு கத்தும், இன்னொருத்தர் அம்பது வயசுல புதுசா வயசுக்கு வந்த புள்ளை மாதிரி வெக்கத்தோட கேமராவ பார்த்து சிரிச்சுகிட்டே நழுவுவாரு, ஒருத்தரு உணர்ச்சிவசப்பட்டு மைக்க புடுங்கி "அற்புதம், அதிசியம்"னு நம்ம 'பொள்ளாச்சி ரயில்வேடேசனை காப்பாத்த வந்த புதுதெய்வம்' வைகோ மாதிரி நரம்பு புடைக்க உணர்ச்சிகரமா பேசுவாரு, பின்னாடி ஒரு புள்ளை துப்பட்டாவுல மூஞ்சிய மூடிட்டு அழுக்கு ஜீன்ஸ் போட்ட பையன் முதுகுபக்கமா ஒதுங்கும்.. நம்ம எஸ்.ஜே.சூரியா படத்த விட அந்த கருத்து கேக்கிற பார்ட்டு தான் படு சுவாரசியமா இருக்கும். அப்புறம் ராஜ்'ல ஜெ'லன்னு வரிசையா ஒரு விமர்சனமும் விளங்கல.. எல்லாம் எழுதி குடுக்கிற ஸ்க்ரிப்ட்டல வர்ற ஒவ்வொரு அரைப்புள்ளி, முழுப்புள்ளிக்கும் ஒரு புன்னகைங்கிற ஒரே ஒரு தியரியோட பார்த்து படிக்கிற விமர்சன்மாத்தான் இருந்துச்சு.. அடப்போங்கய்யான்னு இருந்தா, அப்புறம் விஜய்'ல வந்தாரு மதன்.. ஓகே.. பழைய விகடன் விமர்சனம் படிச்ச திருப்தி, அப்போ நடக்கிற மாதிரியே இப்பவும் அப்பப்போ சில வழிசலான சொதப்பல்களும் உண்டு..(அதுவும் இயக்குனர் - நடிகர் ப்ரவீன்காந்த்'கிட்ட பேசுனது எல்லாம்.. சரி விடுங்க.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் தான்). டீ.வி.டி அறிமுகம் எல்லாம் குடுக்கறாரு.. நம்ம அம்மணி தான் ஞாயித்து கிழமையானா காலையில விஜய் டீ.வி பார்த்துட்டு உடனே போயி அந்த டீவிடிய எடுத்துட்டு வந்து நம்ம செய்யுற அழிச்சாட்டியத்துக்கு எப்படி முடிவு கட்டறதுன்னு தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கறா. :)

வழக்கம் போல சொல்ல வந்த சமாச்சரத்த விட்டுட்டு எங்க எங்கயோ போயிட்டேன்.. இப்ப புதுசா ஜெ'ல நம்ம சுஹாசினி மணிரத்னம் வர்றாங்க.. ஹாசினி திரைப்பார்வை'ன்னு (தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தின தன்னோட தங்கச்சி அனு' டீ.வி'யில கலக்குறாங்களேன்னு இவங்க அவசரமா வந்த மாதிரி இருக்குது). எழுதி குடுத்தத படிக்கிற விமர்சணங்கள விட இவுங்க செய்யுற விமர்சனம் தான் சொதப்பலோ சொதப்பலா இருக்கு.. எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).
பல நேரத்துல அது சினிமா விமர்சனம் செய்யுற நிகழ்ச்சியா இல்ல, பெரிய டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ தன்னோட புள்ளைக்கு இது தெரியும், அது தெரியும்னு ஒரு விசிட்டிங்கார்ட்டா ஒரு படம் எடுத்து தருவாங்களே, அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..

பள்ளிக்கூடம் படம் விமர்சனம், அதுவும் தவளை தங்கர் கிட்ட நேர்முகம்னு வேற சொன்னாங்க, நமக்கு பழைய தமிழன் கொம்பு எல்லாம் மனசுக்குள்ளார வந்து, அடிச்சு புடிச்சு போயி பார்த்தா, அது பள்ளிகூடம் படத்த விட சப்'புன்னு ஆயிருச்சு.

மொத்தத்துல நிறைய எதிர்ப்பார்ப்பை ஆரம்பத்துல குடுத்துட்டு சப்பை நிகழ்ச்சியா போற லிஸ்ட்ல சேர வேண்டிய நிகழ்ச்சி இது.. ஒரு பெரிய படைப்பாளிக்கு மனைவி, சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம், பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினது.. இதெல்லாம் மட்டுமே விமர்சனம் செய்ய தகுதி குடுத்திருமா என்ன?.. ச்சும்மா ச்சும்மா நேம் ட்ராப்பிங்.. 'சீனி-கம்' படத்துக்காக அமிதாப் கிட்ட பேசும்போதெல்லாம்.. வீடாப்போச்சுங்க, தியேட்டரா இருந்தா நல்லா நாலு வார்த்தை சொல்லி கத்தியிருப்பேன்..

ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.

--
#249

17 comments:

பூனைக்குட்டி said...

//எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).//

இந்த மாதிரி ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டுட்டும் நீரெல்லாம் தப்பிச்சிக்கிடுறீரு. தேடி வந்து என்னை உதைக்குறாங்க ஆணாதிக்கவாதின்னு.

இன்னிக்கு விடுறதில்லை அதெப்படி சுஹாசினி அக்கா(கவனிக்கவும்)வை அப்படிச் சொல்லப்போச்சு.

PS: எனக்கும் அந்த(அந்தம்மா போடுற மொக்கை ட்ரெஸ் எல்லாம் தான் - கமலஹாசனுக்கு இப்படி ஒரு பொண்ணு) ட்ரெஸ் ரொம்ப Odd ஆ தெரிஞ்சதுன்னாலும். நாங்கல்லாம் ஆணாதிக்கவாதிங்க எங்களுக்கு தெரியலாம். உங்களுக்குமா?

த.அகிலன் said...

//அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..//
சூப்பர் எனக்கும் இதேதான் தோணிச்சு நானும் எழுதணும்னுநினைச்சேன். இப்போ நீங்க எழுதியிருக்கிறதைப் பார்த்ததும் ரொம்ப மனசு நிறைஞ்சிருச்சு...

விஜே said...

அண்ணாவோ தம்பியோ தெரியாது எனக்கு நீங்கள் வந்து விமர்சனம் பற்றி கூறுவது எண்றால் சுஹாசினியின் டிரெஸ் பற்றி கூறுவதற்கு இயலாது ஏன் என்றதல் அது தனிமனித சுதந்திரம் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதியை விட்டு விட்டு போகவேண்டிய காலம் இப்போது மற்றது எல்லா விரல்களும் ஒரு மாதிரி இல்லை உங்களுக்கு பிடிக்காதது மற்றவர்களுக்கு பிடிக்கும் என்பது எனது கருத்து.......

Anonymous said...

நிஜமாலுமே தெரிஞ்சுக்கணும்னுதாங்க கேக்கறேன். சரிங்க அவங்க எப்படி டிரஸ் பண்ணியிருந்தாதான் ஒத்துக்குவீங்க. கண்ணுக்கு உறுத்தாம இருந்தா போதுமில்லையா?

சில சமயம் நல்லா இருக்கு. சில சமயம் மொக்கையா போயிடற மாதிரியும்தான் இருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி ரொம்ப odd ஆ டிரஸ்சிங் பண்ணியிருக்கற மாதிரி தெரியலையே.

மோகன்தாஸ் நீங்க இந்த வார்த்தை விட்டதுக்காக எல்லாம் உங்களுக்கு அந்த பேரு வந்த மாதிரி தெரியலை. அதுக்கு இதையும் தாண்டி நிறைய்ய காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரியலை.

கொங்குராசா நீங்கள் சொல்லியதன் அடிப்படையில் பார்த்தால் மதனின் விமர்சனமே சில சமயம் ரொம்ப ஓவராய் இருக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில'பஞ்ச்'சுகள் நல்லா இருக்கும். உதாரணத்திற்கு மலைக்கோட்டை படத்திற்கு விமர்சனம் செய்யும் போது சொல்லுவார்: இப்படியே போனால் அடுத்த படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் வில்லன் உனக்கு பின்னாடி யார்டா இருக்காங்காஎன்று கேட்கும் போது விசால் எனக்கு பின்னால இவங்க எல்லாம் இருக்காங்க என்று ஸ்கிரீனைப் பார்த்து பேசுவாரோ என்று தோன்றுகிறது.

அதே சமயம் மடனும் சில மொக்க்கைப் படங்களைப் பாராட்டும் போது அடக் கொடுமையே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அப்புறம் இந்த ஆனந்த விகடன் விமர்சனங்களைப் பார்க்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றும்.

"எப்படி படம் எடுத்தா நீங்க 100 க்கு 80க்கு மேலயாவது மார்க் போடுவீங்க "என்றுதான் தோன்றும்.

ஹாசினி தனது சினிமா அறிவை பிரச்சாரம் செய்யத்தான் இப்படி பேசுகிறார் என்றே இருக்கட்டும்.

போக்கிரி படத்தை 150 நாள் ஓட வைக்கும் ரசிகர்களுக்கு சினிமாவைப் பற்றிய பல விஷயங்கள் போய்ச் சேர அந்த வகை பேச்சுக்கள் கொஞ்சமேனும் உதவியாயிருக்கும் தானே?

ஏன்னா சினிமாவைப் பற்றிய அறிவு கொஞ்சம் கூட இல்லாம குத்துப்பாட்டுக்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் கட் அவுட் வைத்து, கை தட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்து பார்க்கின்ற கலாச்சார ரசிகர்கள் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் இங்கே இருக்கின்றனர்.

இந்த பகுதியைத் தவிர உங்களது பதிவின் மற்ற பகுதிகளை மிகவும் ரசித்தேன். முக்கியமாக சன் டீவியின் ஆடியன்ஸ் கருத்து கேட்பது பற்றிய உங்கள் கமெண்ட். கலக்கல்.

Pavals said...

//ட்ரெஸ் ரொம்ப Odd ஆ தெரிஞ்சதுன்னாலும். நாங்கல்லாம் ஆணாதிக்கவாதிங்க எங்களுக்கு தெரியலாம். உங்களுக்குமா?//

மோகனா.. எங்க வூட்டம்மினிக்கு அது புடிக்கல.. ஒருவேளை அவளும் ஆணாதிக்கவாதியோ??

அகிலன் >> சேம் பிஞ்ச் :)

விஜே >> கண்டிப்ப நீங்க சொல்றது சரி.. எனக்கு புடிக்கலைன்னு தான் நானும் சொல்லியிருக்கேன்

Pavals said...

நந்தா >>

//அவங்க எப்படி டிரஸ் பண்ணியிருந்தாதான் ஒத்துக்குவீங்க.// அவுங்க ட்ரெஸ் எப்படி செஞ்சாலும், அந்த விசயத்துல நான் ஒத்துக்க என்ன இருக்கு.. அது மணிரத்னம் கிட்ட கேட்டா கூட பரவாயில்லை.. எனக்கு புடிக்கலை அவ்ளோ தான்.. :)
(சேலை கட்டுனா சூப்பரா இருக்கற வெகுசில தமிழ் நடிகைகள்ல சுஹாசினியும் ஒன்னு.. சிந்துபைரவி மாதிரி.. அந்த ஏக்கத்துல கூட எனக்கு இப்போ புடிக்காம இருந்திருக்கலாம் :) )

//போக்கிரி படத்தை 150 நாள் ஓட வைக்கும் ரசிகர்களுக்கு சினிமாவைப் பற்றிய பல விஷயங்கள் போய்ச் சேர அந்த வகை பேச்சுக்கள் கொஞ்சமேனும் உதவியாயிருக்கும் தானே?// இவ்வளவு ஓவர் கான்பிடன்ஸ் ஆகாது உங்களுக்கு.. :) அப்படியெல்லாம் நடந்து நம்ம தளபதிக எல்லாம் மாறிடுவாங்கன்னு கனவுல கூட நினைச்சுராதீங்க.

//கலக்கல்.// நன்றி

பூனைக்குட்டி said...

//odd ஆ டிரஸ்சிங் பண்ணியிருக்கற மாதிரி தெரியலையே.//

நான் புதுசா ஆணாதிக்கவாதின்னு பேர் எடுக்க ஒன்னுமில்லாததால் தொடர்கிறேன்.

நந்தா,

பாட்டிக்கு கொமரி வேஷம் கட்டினமாதிரி தான் இருந்தது அவருடைய ட்ரெஸ்ஸிங். வயசாவது என்பது இயற்கையில் நடக்கும் ஒன்று அதை ரொம்பல்லாம் கட்டுப்படுத்தினால் இப்படித்தான் விகாரமாய்டும்(இப்படி சொல்றேங்கிறதுக்காக, ரசினிகாந்ததோ இல்லை வேறு எந்த ஆணோ கருப்பு கலர் அடிச்சிட்டுத்தானே வாறாருன்னு கேட்டால் அதுவும் தப்புன்னு தான் சொல்வேன்.)

எனக்கு ஒரு விஷயம் நினைவில் வருகிறது எங்கப்பா 'டை' அடிப்பார். ஒரு முறை இப்படி டை அடித்துவிட்டு வந்ததும் அப்பாவைப் பார்த்து 'கோமாளி' மாதிரி இருக்கீங்கன்னு எங்கக்கா நேரா சொன்னாங்க.(நானாயிருந்தா சொல்லியிருக்க மாட்டேங்கிறது வேற விஷயம்) சொல்றேன்.

அது ஆம்பிள்ளை பண்ணினாலும் தப்பு பெண்பிள்ளை பண்ணினாலும் தப்பு அம்புட்டுத்தான்.

---------------------------

//மோகனா.. எங்க வூட்டம்மினிக்கு அது புடிக்கல.. ஒருவேளை அவளும் ஆணாதிக்கவாதியோ??//

அண்ணாச்சி தெரிஞ்சி கேக்குறீங்களோ இல்லையோ தெரியாது! உண்மையில் ஆணாதிக்கம் கொண்ட ஆண்களை விட ஆணாதிக்கம் கொண்ட பெண்கள் நிறைய இருப்பாங்க. இன்னும் விவரமா பெண்ணியவாதிகளின் கண்ணில் இந்த இடுகை பட்டால் அவர்கள் சொல்வார்கள்.

அண்ணி ஆணாதிக்கவாதியா கூட இருக்கலாம் ;)

---------------------------

ஏற்கனவே செய்ய வேண்டியதை செஞ்சாச்சு பெண்ணியவாதியான(!) நந்தா ஒரு காட்டு காட்டியிருக்கிறார். இன்னும் நாலு பேர் கிட்ட நீங்க திட்டு வாங்கினீங்கன்னா திருப்தியா தூங்குவேன்.

வர்ட்டா!

Anonymous said...

அச்சோ... கை அரிக்குதே...

ராகவேந்திரா என்ன காப்பாத்துப்பா :-)

Anonymous said...

//ஏற்கனவே செய்ய வேண்டியதை செஞ்சாச்சு பெண்ணியவாதியான(!) நந்தா ஒரு காட்டு காட்டியிருக்கிறார். //

காட்டு காட்டியிருக்கிறது நீங்களா? நானா??

சைலண்டா பிட்டை போட்டுட்டு அடிச்சுக்கங்கடான்னு போயிடறது. நல்லா இருங்கடே.

Pavals said...

ப்ரகாஷ் >> //அச்சோ... கை அரிக்குதே... // இப்படி எல்லாம் அமைதியா போயிட்டா எப்படி..? :)

ILA (a) இளா said...

//ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.//
:))
பொதுவா வெச்சு இழுத்தாதான் எழுத வருவீங்களோ?

Welcome Back!

லக்ஷ்மி said...

//அவுங்க ட்ரெஸ் எப்படி செஞ்சாலும், அந்த விசயத்துல நான் ஒத்துக்க என்ன இருக்கு.. அது மணிரத்னம் கிட்ட கேட்டா கூட பரவாயில்லை//
// எனக்கு புடிக்கலை அவ்ளோ தான்// இந்த ரெண்டு வரிகளுக்கும் இடையே இருக்கும் முரண் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவங்க எப்படி ட்ரஸ் செஞ்சாலும் அதை பத்தி விமர்சிக்க உங்களுக்கு ஒன்னுமில்லைன்ன்றதை தெளிவா சொல்றீங்க. அப்புறம் நிகழ்ச்சிய பத்தி பேசிக்கிட்டிருக்கையில் ஊடால சம்பந்தமே இல்லாம அவங்க ட்ரஸ்ஸிங் ஆட்-ஆ இருக்குன்னு எதுக்கு ஒரு ஸ்டேட்மென்ட்? அதுக்காக ஆணாதிக்கம், பெண்ணீயம் ரெண்டுத்துக்குமே அர்த்தம் தெரியாம சிலர் உளறுவது போல இது ஆணாதிக்கம்னெல்லாம் நான் சொல்லலை. இப்போ நீங்க மதனோட தாடி பிடிக்கலை -அவர் மீசை மட்டும் வச்சுகிட்டு விமர்சனம் பண்ணினா நல்லா இருக்கும்னு சொல்றீங்கன்னா எப்படியிருக்கும்? அவர் விமர்சனத்துக்கும் தாடிக்கும் என்ன அய்யா சம்பந்தம்னு கேப்போமா இல்லையா? அப்படித்தான் என்னோட இந்தக் கேள்வியும். அதே போல நந்தாவும் அவங்களோட ட்ரஸ்ஸிங் அவங்க தனிப்பட்ட விஷயம்னு மட்டும்தான் சொல்லியிருக்கார். இதுல எங்கயும் பெண்ணியமெல்லாம் வரலை. சிலரோட காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாவே தெரியலாம். நோய் ரொம்ப முத்தின ஸ்டேஜுக்கு போயிகிட்டிருக்கு போல. அவங்க சீக்கிரம் மருத்துவரை சந்திக்கறது நல்லது... :)

Pavals said...

//ந்த ரெண்டு வரிகளுக்கும் இடையே இருக்கும் முரண் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவங்க எப்படி ட்ரஸ் செஞ்சாலும் அதை பத்தி விமர்சிக்க உங்களுக்கு ஒன்னுமில்லைன்ன்றதை தெளிவா சொல்றீங்க. அப்புறம் நிகழ்ச்சிய பத்தி பேசிக்கிட்டிருக்கையில் ஊடால சம்பந்தமே இல்லாம அவங்க ட்ரஸ்ஸிங் ஆட்-ஆ இருக்குன்னு எதுக்கு ஒரு ஸ்டேட்மென்ட்?//

நீங்க உங்களுக்கு புடிச்சத சாப்பிடறீங்க, அந்த ஐட்டம் எனக்கு புடிக்கலைன்னு சொல்றதுக்கும், அதை எப்படி நீ சாப்பிடலாம், அதுல இது நிறை, இது குறைன்னு'ன்னு சொல்றதுக்கும் இருக்கிற முரண் தான்.. உங்களுக்கு ஆச்சிரியமா படுது, எனக்கு ரொம்ப எதார்த்தமா படுது..

அப்புறம்.. ஒரு டீ.வி நிகழ்ச்சிய பத்தி பேசும் போது.. உடைகளை பத்தி பேசறதுல என்ன தப்புன்னு எனக்கு புரியல.. ஒரு வேளை நம்மள(!) மாதிரி சுஹாசினியும் வலைப்பதிவுல விமர்சணம் எழுதியிருந்தா, அதை பத்தி பேசியிருக்க மாட்டேன். டீ.வி. நிகழ்ச்சியில உடை கண்டிப்பா கவனிக்கபட வேண்டிய factor தான்..

(முக்கியமா அந்த 'ஆட்'ங்கிற வார்த்தை நான் சொல்லலை.. யோவ் மோகனா இப்ப சந்தோசமா தூங்கய்யா :) )

//அவர் மீசை மட்டும் வச்சுகிட்டு விமர்சனம் பண்ணினா நல்லா இருக்கும்னு சொல்றீங்கன்னா எப்படியிருக்கும்? // கண்டிப்பா அப்படி தோணுனா சொல்லுவேன் தான். ஆனா பாருங்க தாடி தான் அவருக்கு ஒரு மரியாதையான லுக் தருது, அதனால அதை விட்டிருவோம். முன்ன ஒரு பதிவுல கால் மேல கால் போட்டுட்டு ஒரு 'ஆம்பிளை' பையன் விமர்சனம் செய்யிறது கூட 'எனக்கு புடிக்கலை'ன்னு எழுதியிருக்கேன்.

(லிங்க் தேட சோம்பேறித்தனம்.. ஐம் பேசிக்கலி வெரி சோம்பேறி யூ நோ:))

//ோய் ரொம்ப முத்தின ஸ்டேஜுக்கு போயிகிட்டிருக்கு போல. அவங்க சீக்கிரம் மருத்துவரை சந்திக்கறது நல்லது... :)// over to the concerned ::)

எனக்கென்னமோ காமாலை அவருக்கு மட்டும்னு தோணலை :)

பூனைக்குட்டி said...

//யோவ் மோகனா இப்ப சந்தோசமா தூங்கய்யா :) //

கும்பகர்ண தூக்கம் தூங்கப்போறேன் பாருங்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கேன். ;)

-------------------

////ோய் ரொம்ப முத்தின ஸ்டேஜுக்கு போயிகிட்டிருக்கு போல. அவங்க சீக்கிரம் மருத்துவரை சந்திக்கறது நல்லது... :)// over to the concerned ::)

எனக்கென்னமோ காமாலை அவருக்கு மட்டும்னு தோணலை :)//

எனக்காக சப்போர்ட் பண்ணின அண்ணன் ராசாவுக்கு நன்றிகள். கோவை ராஜா முருக்குக் கம்பிகள்னு விளம்பரம் வருதே - அதாங்க அந்த 9/11 மாதிரி ஒரு அட்டாக்கையே தாங்குற மாதிரி - அந்த கம்பெனியோட முதலாளி நீங்கதானா? (இது சும்மா டைவர்ஷனுக்கு ஹிஹி)

Anonymous said...

எனக்கு மதனோட தாடி புடிக்கல. கண்ணாடி புடிக்கல. மொத்தத்துல அவர் டிவில விமர்சனம் பண்றதே புடிக்கல.

ஏனா? அது அப்படித்தான். ஏனோ புடிக்கல. சும்மா காரணமெல்லாம் கேக்கப்படாது.. ஆமா..

உஸ்ஸ்ஸ்... அப்பாடா... நடுநிலமைய நிலைநாட்டறது கஷ்டம்டா சாமி..

பிகு1: சுஹாசினி ஹோட்டலுக்கோ, டிஸ்கோவுக்கோ எப்படி உடையணிந்து சென்றாலும், யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் தொலைக்காட்சியில் தோன்றும்போது தோற்றம் பற்றிய விமர்சனம் எழுவது இயற்கையே.

பிகு2: கருத்து சொதந்திரம் அப்படிங்கறத இந்த நாடு புரிஞ்சிக்க இன்னும் எத்தனை பத்தாண்டுகள் தேவையோ.

பிகு3: கருத்து சொதந்திரம் பத்தி தெரிஞ்சிக்கணும்னா ஜே லெனோ, டேவிட் லெட்டெர்மென் அப்புறம் கார்லோஸ் மென்சியா போன்றோரின் நிகழ்ச்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

உடு ஜூட்டேய்...

Anonymous said...

/முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி/

I love it. I love it. I agree with you 100%.

Rumya

Karthik said...

http://woohhaa.blogspot.com/2007/09/hasini-pesum-padam-sucks.html

யார் முன்னாடி எழுதினார் ன்னு தெரியல .ஆனா என் கருத்தும் அதுவே.
வரி மாறாமல்.