Sunday, June 27, 2004

BBC நண்பர்கள்

மூக்கன்'ணன் மாறும் மதிப்பீடுகள்'ல அவர் கூட படிச்ச 'பெரிய செட்டு' பசங்களை பத்தி எழுதினதை படிச்சதும் நமக்கும் பழைய நினைப்பு வந்திருச்சுங்க.. எங்க காலேஜுல 'பெரிய செட்டு' கிடையாது.. BBC நண்பர்கள் தான்..அதென்ன BBCன்னா... அதாங்க Back Bench Commitee .
எந்த புரபஸர், என்ன பாடம், எப்படி எடுத்தாலும்..நாங்க பாட்டுக்கு எங்கேயோ இடி இடிக்குது எங்கேயோ மழை பேய்யுதுங்கர மாதிரி உக்காந்திருப்போம். அவுங்களும் இதுகளை எந்த கொம்பன் வந்தாலும் திருத்த முடியாதுன்னு விட்ருவாங்க.
நாலு வருஷமும்....,
பக்கத்து தியேட்டர்ல ஓடுற எல்லா படமும் 2-3 வாட்டி பார்த்ததும்.. வேற வழியில்லம கிளாஸ் பக்கம் போய்..
சரளமா கானா எடுத்து விடும் எங்க சபையின் 'ஆஸ்த்தான புலவர் திரு.டகால்டி' (இப்போ அவன் செக்க்ஷன் இன்ஜினியர்...), எங்க ஹால் வழியா அடிக்கடி போற PG dept'ன் கேரளத்து பைங்கிளிகளை பத்தி மெல்லிய குரலில் பாட்டு எடுத்து விடுறத கேக்கிறதும்,
எல்லா பாடத்திலும், எல்லா நேரத்திலும், டவுட் கேக்கும் முன்பெஞ்ச்சு பார்ட்டிகளை வம்பிழுப்பதும்,
கொஞ்சம் நம்மள மதிக்கிற வாத்தியாரா இருந்தா..'இதா தண்ணி குடிச்சுட்டு இப்போ வந்திருவோம்'னு சத்தியம் பண்ணி நேரா தம் அடிக்கபோறதுமாவே போச்சு..
நாலு வருஷம் படிச்சு.. கடைசி கடைசியா ஒவ்வொருத்தருகிட்டேயும் ஆட்டோக்ராஃப் வாங்கும் போது, 'உன் கூடவெல்லம் contact வெச்சு என்ன செய்ய போறேன்?'னு முன்பெஞ்ச்சு பார்ட்டி ஒருத்தன் ஆட்டோக்ராஃப் எழுதாம போனபோதுதாங்க.. நேர நடுமண்டையல ஒரு தேங்காய்குலையே நச்சுன்னு விழுந்த மாதிரி இருந்தது..
ஆனா, அதுக்கப்புறம் அப்படி சொன்னவனே ஒரு வருஷத்தில, சென்னப்பட்டனதுல புதுசா வேலைக்கு வந்து எங்க எங்கேயோ சுத்தி ரூம் சவுகரியப்படாம, நிகழ்ச்சியாளரா (அதாங்க programmer) வேலையில இருந்த என்கூட வந்து தங்கினது தான்ங்க தமாசு.. (ஒரே ரூம்ல இருந்த்துட்டு ஆபீஸ் போய் thanq & sorry'ன்னு கார்ட் அனுப்பினத சொல்லி இன்னும் அவன கலாய்ச்சுட்டு தான் இருக்கோம்)

ஒன்னு மட்டும் எனக்கு புரியலீங்க..!! BBC'ல பாதி பேருக்கு மேல அமேரிக்கா, ஐரோப்பான்னு, இருந்துகிட்டு யாஹூல வந்து hi buddy!ன்னு, இங்கே இருக்கவனுக கூட பீட்டர் வுட்டுகிட்டு இருக்கும் போது.. முன்பெஞ்ச்சு பார்ட்டிக சிலர் இன்னும் apprenticeஆகவும், traineeஆகவும் இருக்காங்களே அது ஏன்?? ...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

5 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

அது Back Bench Comitteeஇல்லங்கோ Back Bone Comittee அதுதான் அவர்களால் மட்டும் நிமிர்ந்து நிற்க முடிகிறது இதோ உங்களை மாதிரி(நானும் தான்)

BALA said...

வாங்க ராசா, வணக்கம். நல்லாருக்கீங்களா? நானும் கோவையில தான் இருக்கேன்.

என்னத்தையாவது எழுதுங்க. படிக்கிறோம்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நானும் உங்க ஊட்டுப் பக்கம் வந்து போனேன். தொடர்ந்து எழுதுங்க. மறுபடியும் வருகிறேன்.

செல்வராஜ்.

Pavals said...

நன்றி பாலாண்ணே!! என்னத்தயாவது எழுதித்தொலைங்கறீங்க..!!
நானும் உங்களை விடுறதா இல்லை... கண்டிப்பா எதையாவது எழுதத்தான் போறேன்.. (இறைவா!!! இந்த மக்களை என்கிட்ட இருந்து காப்பாத்திடாதே!!)

நம்ம ராஜ்ஜியத்துக்கு.. வந்து போன எல்லாருக்கும்.... இனிமேல் வரப்போறவங்களுக்கும் ஒரு பெர்ரீய.. வணக்கமுங்கோ!!!

Unknown said...

ராசா, எங்க க்ளாஸ்ல ஒரு நண்பன் எல்லோருக்கும் பரிட்சை நேரத்திலே பாடமெல்லாம் சொல்லிக்கொடுப்பான், நல்ல மதிப்பெண்ணும் வாங்குவான். அவனோட CV இப்போ கொஞ்ச நாள் முன்னே என் நண்பன் ஒருத்தன் எனக்கு அனுப்பி வச்சிருந்தான், பாவம் அந்தப் பையனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலை. மனசு கஷ்டமா தான் இருக்கு.

இதுல என்ன ஒரு கூத்துன்னா எனக்கு மட்டும் அவன் சொல்லிக்கொடுக்க கொஞ்சம் யோசிப்பான். ஏன்னா அவன் சொல்லிக்கொடுத்ததை கவனிச்சிட்டு நான் ரெண்டு மூணு டைம் அவனை விட மார்க் அதிகமா எடுத்துட்டேன்.